ஹாங்காங் போராட்டம்: சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டதாக’ ஹாங்காங் தலைவர் அறிவிப்பு

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டது’ என ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கூறியுள்ளார். செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த கேரி லேம், இந்த மசோதா தொடர்பாக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் ’தோல்வியில் முடிந்தது’ என கூறினார். ஆனால் இந்த மசோதா…

ரஷ்யா தலைமையிலான தாக்குதலில் ‘544 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்’

வடமேற்கு சிரியாவிலுள்ள எதிரணியின் இறுதியிடம் மீதான ரஷ்யா தலைமையிலானதொரு தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததிலிருந்து குறைந்தது 544 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மனித உரிமைகள் குழுக்கள், மீட்புப் பணியாளர்கள் கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். எதிரணியின் கட்டுபாட்டிலுள்ள இட்லிப் மாகாணப் பகுதிகள் மற்றும் அதனுடன் இணைந்த…

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க மறுத்த சவுதி…

சவுதி அரேபியாவின் விலைகுறைந்த விமான சேவை நிறுவனமான ஃப்ளையடீல், 30 போயிங் 737 ரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இந்த முடிவு போயிங் 737 ரக விமானங்களுக்கு ஏற்பட்ட விபத்துகளால் எடுக்கப்பட்டுள்ளது. இந்தோனீசியாவில் கடந்த அக்டோபர் மாதமும், எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் மாதமும் விபத்துக்கள் ஏற்பட்டன.…

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அறிவிப்பு: செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை…

அணு ஆற்றல் உற்பத்தியை குறைத்துக்கொள்ள சர்வதேச நாடுகளுடன் 2015இல் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இரான் அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து ஒப்பந்த விதிமுறைகளை மீறிவிட்டதாக அந்நாடு கூறியுள்ளது. இன்னும் ஒப்பந்தத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் இரானுக்கு உள்ளதாக குறிப்பிட்ட அந்நாட்டின்…

துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக…

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என அஞ்சப்படுகிறது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்த படகில் 80க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். துனிசியா…

சீன முஸ்லிம்கள்: குழந்தைகளை குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கும் ஜின்ஜியாங் பள்ளிகள்

சீனாவில் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று புதிய புலனாய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேசமயத்தில் பல நூறாயிரம் மக்கள் பிரமாண்டமான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் உறைவிடப் பள்ளிகளைக்…

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் இரானுக்கு இடையேயான அணு ஒப்பந்தத்தை பாதுகாப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க பிரான்ஸ் மற்றும் இரான் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதனை பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் அணு…

ஈரான் எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால் இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்படும்;…

ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால், பதிலுக்கு இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் சிறை பிடிக்கப்படும் என ஈரான் நாட்டு படைகளின் மூத்த தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி, ஈரானின் எண்ணெய் கப்பலான சூப்பர்டேங்கர் கிரேஸ் 1, சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக, கிப்ரால்டர் கடற்பகுதியில்…

இரவில் ஈரான் நாட்டு டாங்கர் கப்பலை எப்படி பிரிட்டன் கமாண்டோக்கள்…

ஈரான் நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதில் ஒன்று அன் நாடு தனது எண்ணையை விற்க்கும் போது, சில கடல் மார்கமாக செல்ல முடியாது என்பதாகும். இதனை மீறி பெருய ஒரு டாங்கர் கப்பல் மூலம் பல்லாயிரம் லீட்டர் மசகெண்ணையை ஏற்றிக்கொண்டு சிரியா நோக்கி…

செயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி – உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன. அட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க…

737 மேக்ஸ் விமான விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 100 மில்லியன்…

இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம். அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 346. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப…

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் விரோதத்தோடுதான் அமெரிக்கா உள்ளது – வட கொரியா

அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்தார். மேலும், கொரிய…

தலாய் லாமா : பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு…

தன்னுடைய இடத்துக்கு எதிர்காலத்தில் வருகின்ற 'பெண் தலாய் லாமா' பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். பிபிசியிடம் கடந்த மாதம் பேசிய திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா, "எதிர்காலத்தில் வரக்கூடிய பெண் தலாய் லாமா ஈர்ப்பு மிக்கவராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.…

பிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி: ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு சென்றது…

துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து…

புகைப்பழக்கம்: கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிகரெட் பஞ்சுகள்

அமெரிக்கா ப்ளோரிடா கடற்கரையில், ப்ளாக் ஸ்கிம்மர் பறவை தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர் கரென் மேசன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "நீங்கள் புகைக்கிறீர்கள் என்றால், பட்ஸை கீழேபோட்டுவிட்டு செல்லாதீர்கள்" என்றும்…

மாலி கிராமங்களில் ஆயுதக்குழுவினர் ஆக்ரோஷ தாக்குதல்- 23 பேர் உயிரிழப்பு!

மாலியில் ஆயுதக்குழுவினர் கிராமங்களில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 23 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், பதற்றம்…

ஹாங்காங் நாடாளுமன்றம் சூறை: “தீவிர வன்முறை செயல்” – ஹாங்காங்…

போராட்டக்காரர்கள் ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சூறையாடியதை "தீவிர வன்முறை செயல்" என ஹாங்காங் தலைவர் கேரி லேம் கண்டித்துள்ளார். திங்கள் இரவு போராட்டக்காரர்கள் ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து 1 மணி நேரம் அதை ஆக்கிரமித்தனர். ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவரை தைவான் மற்றும் சீனாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தொடர்பான…

ஹாங்காங்: தலைவர்கள் இல்லாத போராட்டத்தை செயலிகள் ஒருங்கிணைப்பது எப்படி?

நவீனகால உலகம் இதுவரை பார்க்காத போராட்டத்தை மீண்டுமொருமுறை ஹாங்காங் மக்கள் முன்னெடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள், தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் படியாக யாருமே இல்லாததே இப்போராட்டத்தின் சிறப்பம். ஆனால், ஹாங்காங் முழுவதும் போராட்டங்களில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் குறைந்தது ஒரு டெலிகிராம் (குறுஞ்செய்தி செயலி) குழுவில் இருப்பதாகவும், அவற்றை நிர்வகிப்பதற்கு பலர்…

சூடான் போராட்டம்: ராணுவ ஆட்சிக்கு எதிராக சாலைகளில் திரண்ட மக்கள்

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சாலைகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களில் குறைந்தது 5…

இரான் அணுசக்தி ஒப்பந்தம் – ஒப்பந்த விதிகளை இரான் மீறியதை…

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரம்பை மீறியதை சர்வதேச கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது. 300 கிலோவுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருக்கக்கூடாது எனும் ஒப்பந்தம் மீறப்பட்டதை தனது மேற்பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்துள்ளது.…

ஹாங்காங் நாடாளுமன்றம் சூறையாடல்: கண்ணாடிகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர்

பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம்…

ஈரானை சுற்றி பெருகும் பதற்றத்தை தணிக்க ஜி-20 தலைவர்கள் முடிவு!

பாரசீக வளைகுடாவில் பெருகிவரும் பதற்றம் தவிர்க்கப்பட வேண்டும் என ஜி20 நாடுகளின் தலைவர்கள் இன்று வலியுறுத்தினர். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு…

ஆப்கானிஸ்தான் – தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் அரசுக்கு ஆதரவான தன்னார்வலர்கள் படையை சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை…