சௌதிக்கு பிரான்ஸ் அதிபர் திடீர் பயணம்: காரணம் என்ன?

சௌதி அரேபியா மற்றும் லெபனான் அரசுகளுக்கு இடையே உள்ள மோதல் முற்றி வரும் நிலையில், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங், சௌதி அரேபியாவுக்கு முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி லெபனான் பிரதமர் பதவியில் இருந்த சாத் ஹரிரி, கடந்த…

மனித முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் செம்மறி ஆடுகள்

பிரபலமான மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனை செம்மறி ஆடு வெளிப்படுத்தியது என்று ஓர் ஆய்வு கூறுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செம்மறி ஆடுகளுக்கு, திரைப்பட நடிகர் ஜேக் ஜில்லன்ஹாவ்ல், எம்மா வாட்ஸன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிபிசி செய்தி வாசிப்பாளர் ஃபியோனா…

எங்கள்வலிமை பற்றி உங்களுக்கு தெரியும் சவுதி அரேபியாவிற்கு ஈரான் எச்சரிக்கை

ஏமனில் கடந்த 2015ம் ஆண்டு முதல் சன்னி பிரிவை சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஜனாதிபதிக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி படைக்கு ஈரானும் ஆதரவளித்து வருகிறது. ஹவுத்தி படையை குறிவைத்து சவுதி தாக்குதல்…

உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏமனில் மிகப்பெரிய பஞ்சம்:…

ஏமனில் உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் உலகில் கடந்த சில தசாப்தங்கள் காணாத மிகப்பெரிய பஞ்சத்தை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநாவின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மனிதாபிமான கொள்கைகளுக்கான ஐநாவின் மூத்த அதிகாரி மார்க் லோகாக், போரினால் சின்னாபின்னமான ஏமன் நாட்டில் படைகளின் முற்றுகை நிலையை…

கைது செய்யப்பட்ட செளதி இளவரசர்களின் சிறைச்சாலையான ஆடம்பர ஹோட்டல்

"உலகின் சிறந்த இடங்களில் மறக்க முடியாத பயண அனுபவங்கள் தரக்கூடிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள்" என்ற பெயரை பெற்றது ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்கள். அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய நபர்கள் உயர்வகுப்பு சங்கிலி ஹோட்டல்களான ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் தங்குவார்கள். பணக்காரர்களின் இரண்டாவது வீடு போல இந்த ஹோட்டல்கள்…

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: சிரியா கையெழுத்திடுகிறது; தனிமைப்படும் அமெரிக்கா

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கு சிரியா தயாராகி வருவதாக தெரிவித்த பிறகு, அமெரிக்கா மட்டும் தனிமைப்பட்டு நிற்கிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகநாடுகளை ஒன்றிணைக்கிறது பாரிஸ் ஒப்பந்தம். நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மட்டுமே, 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும் , அதற்கு…

ஆப்கானிஸ்தான்: காபூலில் உள்ள தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல்

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷம்ஷத் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. இந்த தொலைக்காட்சி அலுவலகத்திற்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த மூன்று மர்ம நபர்கள், கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையடுத்து, ஷம்ஷத் தொலைக்காட்சி ஒளிபரப்பு முடங்கியுள்ளதாக, …

ஏமனில் இருந்து சௌதிக்கு ஏவப்பட்ட ஏவுகணை: இரானை குற்றம் சாட்டும்…

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளை வழங்கி உதவுவதன் மூல தங்கள் நாட்டுக்கு எதிரான 'நேரடி ராணுவத் தாக்குதலில்' இரான் ஈடுபட்டுள்ளது என்று சௌதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் கூறியுள்ளார். இதை ஒரு 'போரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகக் கருதலாம்' என்று சல்மான் பிரிட்டன் வெளியுறவுச்…

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட கேட்டலோனிய முன்னாள் தலைவர்

கேட்டலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் அமைச்சர்களை நிபந்தனையுடன் விடுவித்தார், பெல்ஜியம் நீதிபதி. அனுமதியின்றி அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும், அவர்கள் எங்கே தங்க உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நீதிபதி,…

டெக்சஸில் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 26 பேர் பலி

டெக்சஸ் மாகாணத்தின், வில்சன் கவுண்டியில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு, தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைக்கான பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர், மக்களை நோக்கி சுடத்துவங்கியுள்ளார்.…

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக சௌதியில் 11 இளவரசர்கள் கைது

ஊழலுக்கு எதிரான புதிய குழுவின், களையெடுப்பில், சௌதியின் 11 இளவரசர்கள், ஆட்சியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜன்களுக்கு அதிகமான முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசாணையின்படி, சௌதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னெடுத்து செல்லும், இந்த புதிய குழு, அமைக்கப்பட்ட சில…

பெல்ஜியம் போலீஸிடம் சரணடைந்த கேட்டலன் முன்னாள் தலைவர்

பதவியில் இருந்து அகற்றப்பட்ட கேட்டலோனியா தலைவர் சார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் ஆலோசகர்களும் தானாக பெல்ஜியம் போலீஸார் முன்பு ஆஜராகியுள்ளதாக பெல்ஜியம் அரசு வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமையன்று ஸ்பெயின் நீதிபதி ஒருவர் பிறப்பித்த ஐரோப்பிய ஒன்றிய அளவிலான கைதாணையை செயல்படுத்துவதா என்பதைத் திங்கட்கிழமை காலை…

கேட்டலோனிய தேர்தல்: பிரிவினைவாத கட்சிகள் ஒன்று சேர முன்னாள் அதிபர்…

சுதந்திரத்துக்கான அழுத்தத்தை தொடர்ந்து அளிக்கும் வகையில் பிரிவினைவாத கட்சிகள் ஒன்றிணைந்து நடைபெறவுள்ள பிராந்திய நாடளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கேட்டலோனியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் பூஜ்டிமோன் அழைப்பு விடுத்துள்ளார். கேட்டலன் நாடாளுமன்றம் சுதந்திரத்தை அறிவித்தவுடன், ஸ்பெயினின் மத்திய அரசாங்கம் அங்கு நேரடி ஆட்சியை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்கு டிசம்பரில்…

உயிருக்கு அச்சுறுத்தல்: லெபனான் பிரதமர் பதவி விலகல்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, மத்திய கிழக்கு நாடான லெபனானின் பிரதமர் சாத் அல்-ஹரிரி பதவி விலகியுள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர், இரான் நாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான ரஃபிக் அல்-ஹரிரி கடந்த 2005-இல் படுகொலை செய்யப்பட்டார்.…

ஒசாமா ரகசியங்கள்: மகன் திருமண விடியோ உள்பட 5 லட்சம்…

அல் காய்தா ஒசாமா பின் லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கொய்தா தலைவரின் கணினியில் இருந்ததை கண்டறிந்துள்ளதாக சிஐஏ தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நான்காவது முறையாக இத்தகைய கோப்புகளின் தொகுதி வெளியிடப்படுகிறது. பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில்…

ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. "பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து அந்த நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது," என்று அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவின்…

20 பயங்கரவாத இயக்கங்கள் பெயரை பாகிஸ்தானிடம் அமெரிக்கா வழங்கியது

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கையை எடுக்கவேண்டும் இல்லையெனில் அமெரிக்காவே நேரடியாக களமிறங்கும் என டொனால்டு டிரம்ப் அரசு எச்சரிக்கையை விடுத்து உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் தலிபான், அல்-கொய்தா, ஹக்கானி நெட்வோர்க், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் தாக்குதல்களை…

கேட்டலோனிய தலைவர்களை சிறை வைத்தது ஸ்பெயின் நீதிமன்றம்

ஸ்பெயினில் உள்ள கேட்டலோனிய தன்னாட்சிப் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிப்பதற்காக, கடந்த அக்டோபரில் கேட்டலோனியாவின் பிராந்திய அரசு நடத்திய பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்காற்றியதற்காக, கலைக்கப்பட்ட பிராந்திய அரசில் அங்கம் வகித்த எட்டு தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் சிறை வைத்துள்ளது. கலகம் செய்தல், தேச துரோகம் மற்றும்…

கேட்டலோனிய பிரச்சனை: ஏன்…எதற்கு? அடிப்படை விவரங்கள்

சுதந்திரத்துக்கான கேட்டலோனியாவின் முன்னெடுப்பு கடந்த நாற்பது வருடங்களில் ஸ்பெயின் நாட்டை மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இது சிக்கலான பிரச்னை. ஆகவே அதன் அடிப்படைகளைப் பார்ப்போம். கேட்டலோனியா என்பது என்ன? ஆயிரம் ஆண்டுகளாக தனித்த வரலாறு கொண்டிருக்கும் கேட்டலோனியா வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு தன்னாட்சி பகுதியாகும். வளமான…

நியூ யார்க் தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த டிரம்ப் உறுதி

நியூ யார்க் டிரக் தாக்குதலுக்கு பிறகு, உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மான்ஹாட்டன் பகுதியில், சைக்கிள்கள் செல்லும் பாதையில், டிரக் ஓட்டுநர், சைக்கிளில் சென்றவர்கள் மீது ஏற்றியதில், குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 11 பேர்…

சௌதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதல்: ஏமனில் 26 பேர் பலி

  சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹூதி கிளர்ச்சியாளர்களிள் வலுவிடமான ஏமனின் வட மாகாணமான சாதாவில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஏமனில் இருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. சஹார் மாவட்டத்தில் ஒரு ஹோட்டலையும், மக்கள் நெரிசல் மிகுந்த சந்தையையும் பாதித்த இந்த வான்…

ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆறு மாணவிகளுக்கு மரணதண்டனை! –…

ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆறு மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கோரிக்கை வலுத்துள்ளது. சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியதற்காக ஆறு மாணவிகளுக்கு கடந்த…