இளம் வயதில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் இதயநோய் வாய்ப்பு அதிகம்

லண்டன் : குழந்தை பருவம் மகிழ்ச்சியாக அமையாதவர்களுக்கு, நடுத்தர வயதில் இதய நோய் வர வாய்ப்பு அதிகம் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் 377 பேரிடம் நடத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்களுக்கு அவர்கள் நடுத்தர வயதாகும் போது…

சிறுமி மலாலாவின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

ஆஸ்லோ : பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்ததால் தலிபான்களால் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய், அந்நாட்டு பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர். தலிபான்களால் பெண்களின் கல்வி…

ஒரு பள்ளிச் சிறுமிக்கு துணையாக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

துபாய்: பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல்…

மாலியில் கிடால் நகருக்குள் நுழைந்த பிரெஞ்சுப் படைகள்

மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்திவந்த பிரெஞ்சுப் படைகள், ஆயுததாரிகளின் Read More

மூன்றாவது அணுச் சோதனை : வடகொரியா எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் கடுமையாக்கப்பட்டதற்கான பதில் நடவடிக்கையாக தாம் மூன்றாவது அணுச் சோதனையையும், மேலும் ராக்கட் சோதனைகளையும் செய்யப்போவதாக வடகொரியா கூறியுள்ளது. அமெரிக்காவை மனதில் வைத்தே இந்தச் சோதனைகள் செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலத்தின் மூலம் மாத்திரமே அமெரிக்காவை கையாள முடியும் என்றும் அது…

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்பு

செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும்…

வங்கதேச போர் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

தாகா : வங்கதேச விடுதலைப்போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட நபருக்கு தூக்கு தண்டனை விதித்து தாகா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வங்கதேச விடுதலைப் போர், பாகிஸ்தானுக்கு எதிராக 1971ல், நடந்தது. இதில், வங்கதேசத்திற்கு இந்திய இராணுவத்தினர் பெருமளவில் உதவிகளை செய்தனர். இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த, அபுல் கலாம்ஆசாத்…

பிணைய கைதிகளை மீட்க பயங்கரவாதிகளுடன் சண்டை: அல்ஜீரியாவில் 81 பேர்…

அல்ஜியர்ஸ் : ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், எண்ணெய் நிறுவன ஊழியர்களை மீட்க, பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில், 81 பேர் கொல்லப்பட்டனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.…

பணத்தால் எனக்கு பயன் இல்லை: சொல்பவர் பில்கேட்ஸ்!

"பணத்தால் எனக்கு பயன் இல்லை" என, உலகின் பெரும் கோடீஸ்வரரான, பில்கேட்ஸ் தெரிவித்து உள்ளார். உலகின், பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில்கேட்ஸ் இது குறித்து கூறியதாவது: உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளை பொறுத்தவரையில், நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுக்கு மேல்என்னிடம் பணம் இருந்து…

தலைமை நீதிபதி நீக்கப்பட்டது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது

இலங்கையின் தலைமை தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயக்காவை , ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கியது குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியினை தெரிவித்துள்ளது. பதவியிறக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நிபந்தனைகளின் அடிப்படையில் திருப்திகரமானவை அல்ல என்று அமெரிக்க அரசுத்துறையின் பேச்சாளரான விக்டோரியா நூலண்ட்…

பாகிஸ்தான் பிரதமரை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப்ஐ கைதுசெய்யுமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமரையும் அவருடன் சேர்த்து இன்னும் 15 பேரையும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தபோது, அரச செயற்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பெருமளவு…

மாட்டிறைச்சி பர்கரில் குதிரை மாமிசக் கலப்பு

பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து குடியரசில் உள்ள பல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாட்டிறைச்சி பர்கர்களில் குதிரை மாமிசம் கலந்திருப்பது குறித்து உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் இந்த இரு நாடுகளுக்கும் மாட்டிறைச்சி என்று விற்ற உணவுப் பொருட்களில், குதிரை மற்றும்…

மாலியில் பயங்கரவாதிகளை ஒடுக்க பிரான்ஸ் படைகள் விமான தாக்குதல்

பாமகோ: ஆப்ரிக்க நாடான மாலியில், பயங்கரவாதிகளை ஒடுக்க பிரான்ஸ் நாட்டு படைகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன. ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, கடந்த…

உலகின் அதிக வயதான ஜப்பான் மூதாட்டி மரணம்

டோக்கியோ: உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை பெற்ற ஜப்பான் பாட்டி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 115. உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி. 115 வயதான இவர் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம்…

சிங்கப்பூர் நாடாளுமன்ற முதல் பெண் சபாநாயகராக ஹாலிமா நியமனம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாலிமா யாக்கோப் (வயது 58), அறிவிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர், நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த மைக்கேல் பால்மர், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரின் காரணமாக, கடந்த மாதம் பதவி விலகினார். தற்போது சபாநாயகர் பதவி காலியாக இருப்பதால், அமைச்சராக…

செவ்வாய் கிரகத்தில் பூ பூத்ததா?

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவமுள்ள படத்தை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த மாதம் அனுப்பிய புகைப்படத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற…

மேற்கத்திய நாடுகளின் கைப்பாவைகளுடன் பேச முடியாது: சிரியா அதிபர்

"பயங்கரவாதத்தை மட்டும் புரிந்து கொள்பவர்களுடனும், மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுபவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த முடியாது,'' என, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தெரிவித்து உள்ளார். சிரியா அதிபர், பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள், 22 மாதங்களாகப் போராடி வருகின்றனர். இவர்களை, சிரிய இராணுவம்…

பிரிய மறுக்கும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்!

ஒட்டிப் பிறந்து உயிராபத்து விளைவிக்கக் கூடிய அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள், அந்த அறுவை சிகிச்சை நடைபெற்று 3 வருடங்களாகியும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாது எப்போதும் இணைந்த நிலையில் காணப்படும் விசித்திர சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. அன்ஜி என்பவருக்கும் அல்ஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவரது…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தாலிபான்களால் சுடப்பட்ட சிறுமி

பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்விக்காக குரல்கொடுத்துவந்த நிலையில் தாலிபான்களால் தலையில் சுடப்பட்டிருந்த பதின்ம வயதுச் சிறுமி மலாலா யூஸுஃப்ஸயீ, பிரிட்டனில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் இருந்து உடல் நலம் தேறியதால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இவரின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக வதிவிடத்தில் இவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழும் சிகிச்சையின்…

நேபாள நாட்டின் போர்க் குற்றவாளி பிரித்தானியாவில் அதிரடியாகக் கைது

நேபாளத்தில் 2005ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரின்போது சித்ரவதைகளைச் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரித்தானியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிழக்கு சஸ்ஸெக்ஸ் கவுண்டியில் செயிண்ட் லெனார்ட்ஸ் ஆன் சீ என்ற கடலோரத்து ஊரில் 46 வயதான இந்த நேபாளி வியாயழனன்று மெட்ரொபாலிடன் போலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின்…

லூயி மன்னனின் ரத்தக்கறை படிந்த துணி கண்டெடுப்பு

பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி…

பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் ஒபாமாவின் கனவு மசோதா நிறைவேறியது

வாஷிங்டன்: பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே இம்மசோதா செனட் சபையிலும் நிறைவேறியுள்ளதால், நிதிநெருக்கடியில் இருந்து அமெரிக்கா விரைவில் விடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வர்ணிக்கப்படும் அமெரிக்கா தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது. இதை தவிர்ப்பதற்காக,…

இந்திய மாணவி மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் கைபாவை பான் கீ…

இந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக…