அகதிகள் முகாம் மீது ராணுவம் கொடூர தாக்குதல்: ரத்த வெள்ளத்தில்…

சிரியாவில் அகதிகள்முகாம் மீது ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவின் 2வது பெரிய நகரமான அலெப்போ மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது.…

ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

சவுதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நான்கு பேரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் சவுதி அரேபியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. நாடெங்கிலும் பொலிசார் அதிரடி சோதனை நடத்தி…

உலகளவில் மோதல் காரணமாக கடந்த வருடம் 167,000 பேர் பலி

உலகளவில் கடந்த வருடம் நடந்த மோதல்களில், சுமார் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மரணங்களில் மூன்றில் இரண்டு, சிரியாவில் நடந்த மோதலில் கணக்கிடப்பட்டவை என கேந்திர ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த…

பெண்களை அசிங்கமாக படமெடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள்! கொடூர முகம் அம்பலம்

சிரியா, ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தலைத்துண்டிப்பு, பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கைகோர்த்துள்ளன, இவர்களுடைய கருவூலங்களை தாக்கி அழித்து வருகின்றன. அவ்வப்போது இவர்களிடமிருந்து தப்பி வரும்…

சூரியனை பார்க்க வேண்டாம்- எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

நமது சாதாரண கண்களினால் சூரியனைப் பார்த்தாலே சில நிமிடங்களுக்கு கண்ணே இருட்டாகிவிடும். இது தொடர்பாக விஞ்ஞானிகள் ஏற்கனவே தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். அதேபோன்று சூரிய கிரகண நாட்களிலும் வெறும் கண்களினால் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்றே எச்சரிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தொலைநோக்கியின் ஊடாக சூரியைனைப் பார்ப்பது எல்லாவற்றினையும் விட…

12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்- உலகில் நடக்கும் கொடூரம்!

ருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட…

ஐரோப்பிய விமானத்தை சுட்டு வீழ்த்த சதி: சினிமா பாணியில் கண்டுபிடித்த…

ஐரோப்பிய நாட்டை சேர்ந்த விமானத்தை சுட்டு வீழ்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதை ஊடகவியலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அந்த ஊடகவியலாளரின் உண்மையான பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், தன்னை ஒரு இஸ்லாமியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு Said Ramzi…

’’ஜேர்மனிக்குள் இஸ்லாமியர்கள் நுழையக்கூடாது’’ போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சி

அகதிகளுக்கு எதிரான ஜேர்மனியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான வலது சாரி கட்சி அந்நாட்டிற்குள் இஸ்லாமியர்களை நுழைவதற்கு அனுமதிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் கடந்த ஆண்டு வரை சுமார் 40 லட்சம் இஸ்லாமியர்கள் குடியேறியுள்ளனர். அதாவது, ஜேர்மனியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 5…

போலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

போலி தயாரிப்புகளில் சர்வதேச அளவில் சீனா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆய்வு…

நாங்கள் வளர்கிறோம்: மிரட்டும் குட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள்!

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசமுள்ள இளம் வயதினர் வளர்ந்து வருகிறார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர், இளம் வயதினரை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்ட தீவிரவாதிகள், அவர்களுக்கு ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது, கழுத்தறுத்து கொலை செய்வது என போன்ற பயிற்சிகளை வழங்கினர். பயிற்சிகள் தொடர்பான…

“68 மில்லியன் யூரோ” மதிப்பிலான யானை தந்தங்கள் தீயிட்டு எரிப்பு:…

கென்யாவில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடி பணம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுமார் 68 மில்லியன் யூரோ மதிப்பிலான யானை தந்தங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. ஆப்ரிக்க கண்டத்தில் தந்தைக்காக நாள்தோறும் பல காட்டு யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இதற்கு முள்ளிபுள்ளி வைக்க வேண்டும் என்ற…

வங்கதேசத்தில் ‘இந்து’ மதத்தைச் சேர்ந்த நபர் அடித்து கொலை: ஐ.எஸ்…

வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த தையல்காரர் ஒருவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று மத்திய வங்கதேசத்தில் உள்ள Tangail என்ற மாவட்டத்தில் உள்ள நிகில் என்ற தையல்காரரை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் அவரது…

உக்ரைன் உள்நாட்டுப் போரில் 9,333 பேர் பலி: ஐ.நா. தகவல்

உக்ரைன் உள்நாட்டுப் போரில் இதுவரை 9,333 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உக்ரைன் பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் டாயேபுரூக் ùஸரீஹூன் கூறியதாவது: உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுச்…

சீனாவின் ராணுவத் திட்டங்கள் குறித்து ஆசிய நாடுகள் கவலை

சீனாவின் ராணுவத் திட்டங்கள் குறித்து ஆசிய நாடுகள் கவலை கொண்டிருக்கின்றன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கூறினார். பாதுகாப்புப் படையினர் விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: சீனாவின் சில செயல்பாடுகள் அமெரிக்காவுக்கு கவலை அளிப்பதாக…

பெண்களை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிபர்- வடகொரிய சர்வாதிகாரியின் சொகுசு…

அணு ஆயுத சோதனையால் உலக நாடுகளையும், தனது சர்வாதிகார ஆட்சியால் வட கொரியா மக்களையும் மிரட்டி வரும் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தையின் ரகசிய வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிங் ஜாங் இல் ஆவார்,…

வங்கதேசத்தில் இதழாசிரியர் படுகொலை: கல்லூரி மாணவர் கைது

வங்கதேசத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த இதழாசிரியரும் அவரது நண்பரும் படுகொலை செய்யப்பட்டனர். தலைநகர் டாக்காவில் திங்கள்கிழமை நிகழ்ந்த படுகொலைகளுக்கு அல்-காய்தா பொறுப்பேற்றது. ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி "ரூப்பான்' என்ற பத்திரிகையை நடத்தி வந்த ஜுல்ஹாஷ் மன்னான் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன்…

பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பிரான்ஸிடம் ஒப்படைப்பு

பாரீஸ் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாம் பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாமை பொலிசார் தீவிரமாக…

பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்க மறுத்த சவூதி இளவரசர்

சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு உள்ள தடையை நீக்க அந்நாட்டு இளவரசர் மறுத்துள்ளார். சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது என்பது தொழில்நுட்ப ரீதியாக சட்டத்துக்கு எதிரானது இல்லையென்றாலும் சாலைகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. பெண்கள் வாகன ஓட்டுனர் உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்கு…

முதலாளியை தேடி 386 கி.மீ தூரத்தை கடந்து வந்த அதிசய…

பிரித்தானிய நாட்டில் தன்னுடைய உண்மையான முதலாளியை தேடி 12 நாட்களாக நடந்து 386 கி.மீ தூரத்தை கடந்து வந்து உரிமையாளருடன் சேர்ந்துள்ள அதிசய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸில் உள்ள Penrhyncoch என்ற நகரை சேர்ந்தவர்ஆலன் ஜேம்ஸ். விவசாயியான இவர், தனது பண்ணையில் உள்ள ஆடுகளை கவனித்துக்…

நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: மீண்டும் மிரட்டும் வடகொரியா!

நீர் மூழ்கி கப்பலில் இருந்துகண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதுகுறித்துவடகொரிய அரசால் நடத்தப்படும் கேசிஎன்ஏசெய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர்கிம் நேரில் பார்வையிட்டு உறுதிசெய்தார். மேலும்தென்கொரியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டால், அவற்றைத்தாக்கும் திறன் வடகொரியாவுக்கு…

ஈக்வடாரில் தொடர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 650ஐ நெருங்குகிறது

தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து 700 பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகப் புவியியல்…

ஐ.எஸ் தீவிரவாதிக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பிய யாஸிதி சிறுமி

ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் தனது பாதுகாவலனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தப்பியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டை சேர்ந்த 12 வயது யாஸிதி சிறுமி உள்பட 5 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 மாதங்களுக்கு முன்னர் கடத்தி சிறை வைத்து…

ஈக்வாடர் நிலநடுக்க சேதாரத்தை ஈடுசெய்வது எப்படி?: அதிரடி முடிவு எடுத்த…

ஈக்வாடர் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேதாரங்களை ஈடுசெய்ய அந்நாட்டு ஜனாதிபதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈக்வாடர் நாட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட 7.8 அளவுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 570 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், நிலநடுக்கத்தில் ஏராளமான…