கனேடிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபுத் திங்கள்! பிரேரணை சமர்ப்பிப்பு

'கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோக பூர்வமாக பிரகடனம்செய்யக் கோரும் மனுவை, ஸ்காபரோ -றூஜ் றிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சமர்ப்பித்துள்ளார். இந்தப் பிரகடனமானது, நாடு பூராகவும் தமிழ் மக்கள் தமது செழுமைவாய்ந்த தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி மற்றும் வரலாற்றை சார்ந்து…

வங்கி அதிகாரியின் கணனி வழியாக ரூ.535 கோடி திருட்டு: வங்கதேசத்தில்…

வங்காளதேசத்தில் மத்திய வங்கி அதிகாரி ஒருவரின் கணனி வழி சட்டவிரோதமாக புகுந்து 81 மில்லியன் டொலர் திருடப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் மத்திய வங்கி அதிகாரி ஒருவரின் கணனியில் சட்டவிரோதமாக புகுந்து 81 மில்லியன் டொலர் (சுமார் ரூ.535 கோடி) திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மணிலாவில் வங்காளதேச தூதர் ஜான் கோம்ஸ்…

புகலிடம் கோரி வரும் அகதிகளை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் முதல் 10…

சர்வதேச அளவில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அன்புடன் வரவேற்று ஏற்றுக்கொள்ளும் முதல் 10 நாடுகளின் பட்டியலை சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி வெளியிட்டுள்ளது. உலகளவில் 27 நாடுகளை சேர்ந்த 27,000 நபர்களிடம் இது தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், சுமார் 80 சதவிகித மக்கள்…

ஈக்வடாரில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8…

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு தற்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்அளவுகோலில்…

அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு: ஐஎஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஈராக்கில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சாப் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் குண்டுவெடித்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து…

இராக், சிரியாவில் ஐ.எஸ்.ஸுக்கு பின்னடைவு

இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் திங்கள்கிழமை கூறியதாவது: இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் சுமார்…

GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு ஏரிக்குள் காரை ஓட்டிய பெண்!

கனடாவின் ஒண்டாரியோ மகாணத்தில், பெயர் குறிப்பிட விரும்பாத இளம்பெண் ஒருவர் GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு காரை ஏரிக்குள் ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டாரியோ தலைநகர் டொராண்டோவில், பெயர் குறிப்பிட விரும்பாத 23 வயதான இளம்பெண் ஒருவர், கடும் மூடுபனி பொழியும் இரவு…

ஆவி மகனுக்கு பெண் பிணத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்

சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் பிணத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக நாடுகளிலும் மூட நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இப்படியான நிலையில், சீனாவில் இறந்து போன தமது…

பென்டகன் இருத்தரப்பு நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளது- சீனா

சீன இராணுவம் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையானது இருத்தரப்பு நம்பிக்கை சேதப்படுத்தியுள்ளதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2016–ம் ஆண்டுக்கான சீனாவின் இராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகனில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான…

அகதிகள் முகாம்கள் மீது தொடரும் தாக்குதல்: விழிபிதுங்கும் ஜேர்மன் நிர்வாகம்

ஜேர்மனியில் அகதிகள் முகாம்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களால் அங்குள்ள நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளதுடன் அதை கட்டுப்படுத்துவதில் பிந்தங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஜேர்மனியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்கள் மீது 45 முறை திட்டமிட்டே நெருப்பு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து…

பிணைக்கைதிகளுக்கு தண்டனை வழங்கிய சிறுவர்கள்: வெளியான வீடியோ

பிரான்ஸ் நாட்டு சிறுவர்கள் இருவர் ஐ.எஸ் குழுவினரின் பிணைக்கதிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.குழுவினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பிரான்ஸ் நாட்டவரான இரு சிறுவர்கள், ஒற்றர்கள் என ஐ.எஸ்.அமைப்பால் குற்றம்சாட்டப்பட்ட சிரியா நாட்டவரான இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.…

வங்கதேசத்தில் பௌத்தத் துறவி வெட்டிக் கொலை

வங்கதேசத்தில் 70 வயது பௌத்த மதத் துறவி அவரது மடாலயத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த நாட்டின் பந்தர்பன் மாவட்டம், நாயக்காங்சாரி என்ற பகுதியில் இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். வங்கதேசத்தில் மதச்சார்பற்ற கருத்துகளை வெளியிடுவோர், சிறுபான்மையினர் ஆகியோர் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில்…

இந்திய எல்லையில் சீனப் படைகள் குவிப்பு: அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவையொட்டிய எல்லைப் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டில் சீனாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை பெண்டகன் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திலுள்ள கிழக்கு ஆசிய விவகாரத்துறை துணை அமைச்சர் ஆபிரகாம்…

பகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் சோயிப்அஹ்மது (13), அப்துல் ரஷீத் (9) சகோதரர்கள் வசித்து வருகின்றனர். பிறந்ததிலிருந்தே இவர்கள் பகலில் இயல்பாகவும் இரவில் அசைவுகளற்று ஜடப்பொருள் போலவும் மாறி விடுகின்றார்கள். சூரியன் மறையத் தொடங்கியதும் பேசவோ நடக்கவோ கண்விழிக்கவோ முடியாமல் அசைவின்றிக் கிடக்கின்றனர். தமது மகன்மார் இருவரும்…

கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சிறை!

சவுதி அரேபியாவில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனிமனித சுதந்திரத்தை இது பாதிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே புதிதாக…

தப்பிக்க முயன்ற குடும்பம்: உயிருடன் எரித்து கொலை செய்த ஐ.எஸ்

ஐ.எஸ்.குழுவினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுவர்கள் உள்ளிட்ட குடும்பம் ஒன்றை உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிர்கூக் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த…

4 கோடியைத் தாண்டியது உள்நாட்டு அகதிகளின் எண்ணிக்கை: அதிர்ச்சி அறிக்கை

போர் காரணமாக உள்நாட்டிலே அகதிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 4 கோடியைத் தாண்டியதாக சுவிஸ் உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவைச் சேர்ந்த "உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம்' வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- உள்நாட்டுப் போர் காரணமாக சொந்த…

அகதிகள் முகாம்களில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்

ஜேர்மனியில் அகதிகள் முகாம்களில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ அகதிகள் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1955ம் ஆண்டு தொடங்கப்பட்ட Open Doors என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு, திங்கள் கிழமையன்று பெர்லினில் வெளியிட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதில், அகதிகள் முகாம்களில்…

பாக்தாத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 64 பேர் பலி

ஈராக் தலைநகரான பாக்தாத் மார்க்கெட் ஒன்றில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 64 பேர் பலியாகியுள்ளனர், ஈராக் தலைநகரான பாக்தாத்தின் ஷியா முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த Sadr நகரில் உள்ள மார்க்கெட் ஒன்றில் இன்று காலை மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில்…

ஆப்கான் பெண்ணுக்கு கொடூர தண்டனை வழங்கிய தலிபான்: காரணம் என்ன?

ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவரை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளது அங்குள்ள தலிபான் அமைப்பு. இந்த தண்டனையை நிறைவேற்றும் முன்னர், குறிப்பிட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக தெருவில் இழுத்து வந்து முழங்காலின் மீது நிற்கவைத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இச்சம்பவத்தின்போது திரளான ஆண்கள் அந்த இளம்பெண்ணை வட்டமிட்டு நின்றுகொண்டு அவருக்கு…

போர் குற்ற நடவடிக்கை: ஜமாத் கட்சி தலைவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய…

வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாத் கட்சியின் தலைவர் ரஹ்மான் நிஜாமிக்கு பாலியல் வன்முறை, இன அழிப்பு, படுகொலைகளுக்கு தூண்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலைக்கு எதிராக போர் குற்றத்தில் ஈடுபட்டதாக நிஜாமி கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.…

சட்ட விரோத சொத்துப் பதுக்கல்: 3.68 லட்சம் பேரின் பெயர்களை…

வாஷிங்டன்: பல்வேறு நாடுகளின் அதிபர்கள், அவர்களின் உறவினர்கள், பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்து சட்ட விரோதமாக பதுக்கிய சொத்துகள் விவரங்களை பனாமா பேப்பர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபொன்சேகா என்ற சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான…

ஆப்கனில் பயங்கர விபத்து.. பெட்ரோல் டேங்கர் லாரி மீது பேருந்து…

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் கான்ஸி மாகாணத்தில் இன்று டேங்கர் லாரி மீது 2 பேருந்துகள் மோதி வெடித்து சிதறிய விபத்தில், 73 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றான கான்ஸியில் உள்ள கந்தஹார்-காபூல் இணைப்பு நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென…