அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
போரில் பாதிப்படைந்துள்ள உக்ரைனை சீரமைக்க 750 பில்லியன் டாலர் தேவை…
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 4 மாதத்தை தாண்டியுள்ளது. போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் உறுதியளித்தன. உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய தாக்குதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரு…
இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் திடீர் ராஜினாமா
இங்கிலாந்தின் நிதித்துறை மந்திரி ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை மந்திரியான சஜித் ஜாவிதும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர்…
ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் சரிந்து 6 பேர் பலி
மலை தொடரில் அமைந்துள்ள மர்மலாடா சிகரத்தில் நேற்று பலர் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். பனிப்பாறைகள் சரிவில் இன்னும் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. ஐரோப்பியாவில் மிகப் பெரிய மலை தொடராக ஆல்ப்ஸ் மலை தொடர் விளங்குகிறது. இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8…
பிரான்சில் இன்று புதிய அமைச்சரவை மாற்றம்
பிரான்ஸ் அமைச்சரவையில் இன்று மாற்றம் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சில அமைச்சர்கள் தோல்வியடைந்ததை அடுத்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இந்த அமைச்சரவை மறுசீரமைப்பை கண்டனம் செய்த அதிதீவிர வலதுசாரி தலைவர் மறீன் லு பென் அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் வெளிப்பட்ட மக்கள் தீர்ப்பை…
அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு- 6…
அமெரிக்காவின் சிகாகோ (Chicago) நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் மாண்டனர்.குறைந்தது 25 பேர் காயமுற்றனர். சந்தேக நபரான 22 வயது ராபர்ட் இ கிரிமோவைக் (Robert E Crimo) காவல்துறையினர் தேடிவருகின்றனர்.HighlandPark எனும் புறநகர்ப் பகுதியில் நடந்த அந்தத் தாக்குதல், குறிப்பிட்ட…
உக்ரைனின் பிவோடல் நகரை கைப்பற்றியது ரஷியா
உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை ரஷியா ஏற்கனவே கைப்பற்றியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. மாஸ்கோ: நேட்டா நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர்…
வங்காளதேசம் – கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக…
வங்காளதேசத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவு பேய் மழை கொட்டியது. கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிக மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டது. வங்காளதேசத்தில் கடந்த மே மாதம் முதல் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தன. கடந்த 122…
டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி
டென்மார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் படுகாயமடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் விமான நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.…
லிபியா பாராளுமன்றத்துக்கு தீ வைப்பு – ஐ.நா. கண்டனம்
அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் லிபியா பாராளுமன்றத்தை சூறையாடினர். பாராளுமன்ற தீ வைப்பு சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாஃபியின் மறைவுக்குப் பிறகு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து…
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா – முத்தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும்…
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முத்தரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையை வடகொரியா சாடியிருக்கிறது. ஸ்பெயினில் நடைபெற்ற நேட்டோ கூட்டணியின் கூட்டத்தில் அந்த மூன்று நாடுகளும் அரிதாகத் தனிப்பட்ட சந்திப்பை நடத்தின. முத்தரப்புக் கூட்டு ராணுவப் பயிற்சி பற்றி அந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.ஐரோப்பாவை ராணுவமயமாக்கி ரஷ்யாவையும்,…
உக்ரைனில் பாம்பு தீவு மீது ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை
கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷிய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது. ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 5-வது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த…
உலகமெங்கும் கொரோனா அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகளவில் 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஏழைகளில் தடுப்பூசி போடும் விகிதம் 13 சதவீதமாகத்தான் இருக்கிறது. இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவர அறிக்கையை…
உக்ரேனின் துறைமுக நகரைத் தாக்கிய ரஷ்யா
ரஷ்யா கருங்கடல் ஓரத்தில் இருக்கும் உக்ரேனின் ஒடேசா (Odesa) துறைமுக நகரைத் தாக்கியுள்ளது. அதில் 20க்கும் அதிகமானோர் மாண்டனர், மேலும் பலர் காயமுற்றனர். ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் குடியிருப்புக் கட்டடமும் உடற்பயிற்சி நிலையமும் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர். கருங்கடல் ஓரம் இருக்கும் ஒடேசா துறைமுகத்தையும் மற்ற துறைமுகங்களையும் தடுக்க அருகாமையில்…
கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பீர்… மதுபிரியர்கள் வரவேற்பு
கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சிறப்பு பீர் தயாரிக்கப்படுகிறது சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டு, 'நியூப்ரூ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர்…
நேட்டோ அமைப்புதான் பிரச்சனைகளை உருவாக்குகிறது- ரஷியா, சீனா பதிலடி
எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளதாக நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் பேச்சு நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில்…
அனைத்து மதங்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் – ஐ.நா. சபை…
அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால் வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் அமைதியாக வாழலாம் என ஐ.நா. தெரிவித்தது. மக்கள் பரஸ்பரம் பிற மதத்தினரையும், சமூகத்தினரையும் மதிக்கவேண்டும் என ஐ.நா. சபை கூறியது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை…
இஸ்ரேலில் மீண்டும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் – 4 ஆண்டுகளுக்குள் ஐந்தாவது…
இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து 4 ஆண்டுகளுக்குள் ஐந்தாம் முறையாக நாடு தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. வெளியுறவு அமைச்சர் யாயிர் லபிட் (YayirLapid) இன்று நள்ளிரவு முதல் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்பார்.பிரதமர் நப்டலி பென்னெட்டுக்கு (Naftali Bennett) எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்தனர். அதனையடுத்து, கொள்கைகளால் வேறுபட்ட அவரது 8 கட்சிக் கூட்டணி ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. எதிர்வரும் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும்.அதிலும் முடிவுகள் நிச்சயமற்றதாகவே இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. திரு. பென்னெட்…
விண்ணைத் தொடும் எரிசக்தி விலை… விறகை நாடும் போலந்து மக்கள்
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து எரிசக்தி விலை உலகெங்கிலும் கிடுகிடுவென உயரத் தொடங்கிவிட்டது. போலந்தில் இன்னும் சில மாதங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும்.அதைச் சமாளிக்க விறகை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் மக்கள்.நிலக்கரியின் விலை சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது மும்மடங்காகியுள்ளது. ஒரு டன் நிலக்கரியின் விலை சுமார் 620 வெள்ளி.இந்நிலையில் எரிபொருளுக்கு…
கடினமான நேரத்தில் இந்தோனேசியாவின் ஆதரவுக்கு நன்றி: உக்ரேனிய அதிபர்
இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைத் (Volodymyr Zelenskyy) தலைநகர் கீவில் சந்தித்துள்ளார். இந்தக் கடினமான நேரத்தில் இந்தோனேசியாவிடமிருந்து ஆதரவு பெற்றிருப்பது குறித்துத் திரு. ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். போரால் அவதியுறும் உக்ரேனுக்குச் சென்றுள்ள முதல் ஆசியத் தலைவர் திரு. விடோடோ.…
சீனா அனைத்துலக விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் எதிர்க்க முனைகிறது: நியூஸிலந்துப் பிரதமர்
சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்குக் குறித்து நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். நேட்டோ கூட்டணியின் உச்சநிலைச் சந்திப்பில் குறிப்பிட்டுச் சீனாவைப் பற்றி அவர் பேசினார். பசிபிக் வட்டாரத்தில் அதிகரிக்கும் பதற்றத்தையும் அங்குள்ள நிலைத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் அவர் சுட்டினார். அனைத்துலக…
ஜோர்டனில் ரசாயன டாங்க் வெடித்து விபத்து- நச்சு வாயு கசிவால்…
199 பேர் ரசாயான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது. ஜோர்டனின் அகபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பில் கிரேன் மூலம் குளோரின் டாங்குகள் ஏற்றப்பட்டது. அப்போது, திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்த, ஒரு குளோரின்…
ஃபின்லந்தும் சுவீடனும் நேட்டோவில் இணையத் துருக்கி தடையாக இருக்காது
ஃபின்லந்தும் சுவீடனும் நேட்டோ கூட்டணியில் இணைவதை ரத்து அதிகாரத்தால் தடுக்கப் போவதில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. 4 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், 3 நாடுகளும் ஒன்று மற்றதன் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒப்புக்கொண்டன அதை அடுத்து, ஃபின்லந்தும் சுவீடனும் நேட்டோவில் சேருவதற்கான தங்கள் விண்ணப்பத்தைத் தொடரலாம். அவை நேட்டோவில்…
அமெரிக்கா: கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 40 சடலங்கள் மீட்பு
கண்டெயினரில் 50-க்கும் அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் கிடைந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல்…