எல்லைப் பாகுபாடு காட்டாமல் அனைவரும் ஒன்றிணைவோம்- ஐரோப்பிய யூனியன் தலைவர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா ஒழிப்புக்காக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இதில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஐரோப்பிய…

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு

யோஷிஹைட் சுகா ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். டோக்கியோ: ஜப்பானில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வந்தவர் ஷின்ஜோ அபே. இதன் மூலம் ஜப்பான் வரலாற்றிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்கிற…

அமெரிக்க காட்டுத்தீ பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

வாஷிங்டன்:  அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒருமாத காலமாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 30.20 லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது,மேலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின. பரவி வரும் பெரும் தீ காரணமாக மின்சாரம்…

பாகிஸ்தானில் பருவ மழையால் 300 பேர் பலி

பருவ மழை பாகிஸ்தானில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் சிக்கி இதுவரை 135 ஆண்கள், 107 குழந்தைகள், 70 பெண்கள் உள்பட 310 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பருவமழை காலமாக உள்ளது. இந்தப் பருவமழை…

உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு – 9.27…

உலகளவில் 2.91 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9.27 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.27 லட்சத்தை தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,27,984 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 29,175,454 பேர்…

கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருங்கள்: இந்திய மாணவர்களுக்கு சீனா அறிவுரை

ஆன்லைன் கல்வி சீன கல்வி நிறுவனங்களில் படிக்கும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள், சீனாவுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு சீனா அறிவுறுத்தி உள்ளது. பீஜிங் : சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு…

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வாஷிங்டன்,  அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனிடையே கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை…

சிங்கப்பூரில் ஆட்குறைப்பு: நாடு திரும்ப 11,000 இந்தியர்கள் விண்ணப்பிப்பு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதால், மீண்டும் 11 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் தெரிவித்துள்ளதாவது: கடந்த மே மாதம் முதல் 17,000 இந்தியர்கள் 120 சிறப்பு விமானங்களில் இந்தியா திரும்பியுள்ளனர். தற்போது நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து…

ரஷியா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கியது

மாஸ்கோ, கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசியை வருகிற நவம்பர் 1-ந் தேதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக…

43 சிப்பந்திகள், 6 ஆயிரம் கால்நடைகளுடன் ஜப்பானில் சரக்கு கப்பல்,…

43 சிப்பந்திகள், 6 ஆயிரம் கால்நடைகளுடன் நியூசிலாந்தில் உள்ள நேப்பியர் துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல், வழியில் ஜப்பானில் புயலில் சிக்கி மாயமானது. இந்த கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த ஜப்பான் கடலோர காவல்படையினர் ஒரு…

பாக்.,குக்கு ஆயுதங்கள் வழங்க கூடாது: இந்திய கோரிக்கையை ஏற்றது ரஷ்யா

மாஸ்கோ : 'பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யக் கூடாது என்ற இந்தியாவின் கோரிக்கையை, ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது. எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்நிலையில், ரஷ்ய தலைநகர்…

அமெரிக்க தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசியை வெளியிட…

தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசியை வெளியிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். வாஷிங்டன், உலகில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி, லட்சக்கணக்கில் உயிழப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. வரும் நவம்பர் 3 - ஆம் தேதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி…

ஜப்பான் பிரதமராக யோஷி ஹைட் சுகா நியமிக்கப்பட வாய்ப்பு

யோஷி ஹைட் சுகா ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. டோக்கியோ : ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில்…

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி…

தங்கள் நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்புவதற்கு அந்த நாடு அனுமதி மறுத்து உள்ளது. பீஜிங்: சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி சீனாவில் உள்ள…

அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி…

ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள்…

உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் அதிபர் கூறிய 400 தலிபான்…

தலிபான் பயங்கரவாதிகள் உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் அதிபரால் கூறப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காபுல்: ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி…

பிரணாப் முகர்ஜி ஒரு சிறந்த தலைவர் – டொனால்டு டிரம்ப்…

பிரணாப் முகர்ஜி - டொனால்டு டிரம்ப் (கோப்பு படம்) வாஷிங்டன்: இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். அந்த பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருப்பதும், கொரோனா வைரஸ் தொற்றும்…

அமைதி ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலி; இஸ்ரேல் புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு…

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின் எதிரொலியாக இஸ்ரேல் புறக்கணிப்பை ஐக்கிய அரபு அமீரகம் முறைப்படி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அபுதாபி, 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக், சிரியா ஆகிய மத்திய கிழக்கு நாடுகளும்,…

சீனாவின் உகானில் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

சீனாவின் உகான் நகரத்தில் தொற்று முற்றிலும் குறைந்ததால் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங், சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்"…

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிச.31 ஆம் தேதி வரை…

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலேசிய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமா் முஹைதீன் யாசின்…

இஸ்ரேல்: 1,100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்கப்புதையலை கண்டுபிடித்த…

தங்கப்புதையல் இஸ்ரேல் நாட்டில் 1,100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்க நாணய புதையலை ஒரு இளைஞர் கண்டுபிடித்துள்ளார். ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவுக்கு அருகே தொல்லியல் துறையினர் பல நாட்களாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தன. இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக தங்களை…

அரசு கொடுத்த நிதியுதவி அனைத்தும் காலி – 19 ஆயிரம்…

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அமெரிக்க அரசு கொடுத்த நிதியுதவி அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் 19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும்…

8 லட்சத்து 22 ஆயிரம் பேர் பலி – புரட்டி…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித…