பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
என்எப்சி மீது போலீஸ் விசாரணை
நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன்(என்எப்சி) நம்பிக்கை மோசடிச் செயலில்(சிபிடி) அல்லது ஏமாற்றும் செயலில் ஈடுபட்டதா என்று போலீஸ் விசாரணை செய்து வருவதை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார். வணிகக் குற்ற, புலன்விசாரணைத்துறை அவ்விசாரணையை மேற்கொண்டிருப்பதாக த ஸ்டார் ஆன் லைன் செய்தித்தளம் கூறுகிறது. “சம்பந்தப்பட்ட அனைவரையும்…
என்எப்சி: அது விலகிச் சென்றவர்கள் செய்த சதி
நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன்(என்எப்சி) தலைமச் செயல் அதிகாரி முகம்மட் சாலே இஸ்மாயில், தம் நிறுவனத்தின் நிதி விவகாரங்கள் தொடர்பில் சர்ச்சை உண்டானதற்கு நிறுவனத்தைவிட்டு விலகிச் சென்றவர்கள்தான் காரணம் என்கிறார். சினார் ஹரியான் இதனைத் தெரிவித்துள்ளது. “என்எப்சி-யை விட்டு விலகிச் சென்றவர்கள் நிறுவனத்தின்மீது ஆத்திரம் கொண்டு அதைக் கீழறுக்கும் முயற்சியில்…
என்எப்சி சிலருக்கு மட்டும் “கௌகேட்” மீதான மௌனத்தை கலைக்கிறது
அரசாங்கம் வழங்கிய எளிய நிபந்தனைகளைக் கொண்ட 181 மில்லியன் ரிங்கிட் கடன் தொடர்பான சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தனது மௌனத்தைக் கலைத்து பிரச்னையைத் தெளிவுபடுத்த முன் வந்துள்ளது. என்றாலும் இன்று காலை நெகிரி செம்பிலான் கெமாஸில் உள்ள என்எப்சி தலைமையகத்துச்…
என்எப்சி மீது ராபிஸி-உடன் வாதாட கைரி தயார்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட விவகாரம் தொடர்பில் விவாதம் நடத்த வருமாறு பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடுத்த சவாலை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் ஏற்றுக் கொண்டிருக்கிறார். "நான் யாருடனும் விவாதம் நடத்தத் தயார்," என கைரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம்…
ஷாரிஸாட் பதவி விலக வேண்டும் என பாங் மொக்தார் விருப்பம்
என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பதவி துறக்க வேண்டும் என பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்கள் மன்றத் துணைத் தலைவர் பாங் மொக்தார் இன்று மக்களவையில் கேட்டுக் கொண்டிருக்கிறார். போக்குவரத்து அமைச்சர் கொங் சோர் ஹா 2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவில் தமது…
கிட் சியாங்: என்எப்சி கடனை நஜிப் திரும்பப் பெற வேண்டும்
தேசிய விலங்கு வளர்ப்பு நிறுவனம் (என்எப்சி) தவறான நடவடிக்கைகளின் வழி பெரும் ஊழல்களில் உட்பட்டுள்ளதால் அரசாங்கம் அளித்த ரிம181 மில்லியன் கடனை திரும்பப் பெறுவதற்கு நஜிப் ரசாக் தலையிட வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டுள்ளார். "ரிம10 மில்லியன் 'கால்நடைக்கு கொண்டோமினியம்' ஊழல்…
கைரி: என்எப்சி தாமதத்தால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட ஆடம்பர அடுக்கு…
நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒன்று 10 மில்லியன் ரிங்கிட் பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றைக் கொள்முதல் செய்தது ஒரு வியூக நடவடிக்கை என ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் கூறுகிறார். என்எப்சி உற்பத்தி தாமதமடைந்ததால் National…
“என்எப்சி கடனில் ஓர் ஆடம்பர கொண்டோ வாங்கப்பட்டது”
அரசாங்க நிதியில் செயல்படும் National Feedlot Corporation (என்எப்சி)-னில் நிதி தவறாக பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறைகூறிவரும் பிகேஆர் , என்எப்சி அதன் துணை நிறுவனமொன்றுக்குக் கடனாகக் கொடுத்த பணத்தில் கோலாலம்பூர், பங்சாரில் ரிம9.8மில்லியனுக்கு ஓர் ஆடம்பர கொண்டோமினியம் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறியது. கொண்டோ வாங்கப்பட்ட பணம், கூட்டரசு அமைச்சர் ஒருவரின் கணவர் மற்றும்…
பிகேஆர்: என்எப்சி விவகாரத்தில் பிரதமரும் விவசாய அமைச்சரும் பொய் உரைத்தனர்
தேசிய விலங்கு தீவன ஊட்டல் நிறுவனத்திற்கு (என்எப்சி) வழங்கப்பட்ட கடன் குறித்து பிரதமர் நஜிப்பும் விவசாய-அடிப்படை தொழில்கள் சார்ந்த அமைச்சர் நோ ஒமாரும் நாடாளுமன்றதிடம் பொய் கூறினர் என்று பிகேஆர் கூறிக்கொண்டது. "நஜிப்பும் விவசாய அமைச்சரும் (நோ) நாடாளுமன்றத்திடம் பொய் உரைத்தனர். பிரதமரின் எழுத்து மூலமான பதிலில் ரிம181…