வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

மியான்மர்: ரோஹிஞ்சா போராளிகள் இந்துக்களை கொன்றதாக அம்னெஸ்டி அறிக்கை

மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம் போராளிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் டஜன் கணக்கான இந்துக்களைக் கொன்றதைக் கண்டறிந்திருப்பதாக மனித உரிமைகள் குழுவான அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. அர்சா என அறியப்படும் ரோஹிஞ்சா போராளிகள் குழு 99 இந்துக்களைக் கொன்றதாக அம்னெஸ்டி கூறியுள்ளது. ஆனால், அர்சா இதனை மறுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட்…

அணு ஆயுத சோதனைத் தளத்தை ’அழித்தது’ வட கொரியா

அண்டை நாடுகளுடனான பதற்றத்தை குறைக்க தனது அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வட கொரியா வெடிக்கச் செய்ததாக தெரிய வருகிறது. ’பங்யீ ரீ’ அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள செய்தியாளர்கள் தாங்கள் மிகப்பெரிய வெடி சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். தென் கொரியா மற்றும் அமரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தும்…

சீன அதிபருடனான சந்திப்புக்கு பின் கிம் ஜாங் அன் நடவடிக்கையில்…

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய…

ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள்…

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின்…

‘வடகொரிய அதிபரை சந்திப்பது தாமதமாகலாம்’ – டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடன் அடுத்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு தள்ளிப் போகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் வெள்ளை மாளிகை வந்துள்ளார். அவரை வரவேற்கும்போது டிரம்ப் இந்த தகவலை…

பாகிஸ்தானில் அனல் காற்றுக்கு 3 நாட்களில் 65 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 3 நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது.  நேற்று வெப்பநிலை 44 டிகிரியை தொட்டது.  இந்த நிலையில், கராச்சி நகரில் இதுவரை 114 உடல்கள் தொண்டு நிறுவன பிணவறைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றில் 65 உடல்கள் அனல் காற்றால் பலியாகி உள்ளனர் என…

தங்கச் சுரங்கம் தோண்ட எங்களுக்கு முழுஉரிமை உள்ளது: சீனா..

இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் அருணாசலபிரதேச எல்லையையொட்டி…

சிரியா போர்: ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது டமாஸ்கஸ்

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின், டமாஸ்கஸை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் ஒன்றரை லட்சம் பாலத்தீன அகதிகளுக்கு அடைக்கலமாக திகழ்ந்த யார்மூக் (Yarmouk) மாவட்டத்தையும் மற்றும் அதன் அண்டை மாவட்டமான ஹஜர்…

வெனிசுவேலா தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் நிக்கோலஸ் மதுரோ

வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாட்டின் நிலவி வரும் உணவு பற்றாக்குறைகளுக்கு இடையே நடந்த தேர்தலில் வெறும் 46% ஓட்டுகளே பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகப்…

செளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயற்பாட்டாளர்கள் கைதா?

செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி கோரும் இயக்கத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ஒருவர், தன் மீதும் தனது சக பெண் செயற்பாட்டாளர்கள் மீதும் போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகக் கூறியுள்ளார். செளதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை நீக்கப்படவுள்ள நிலையில், இணையத்தின் தனக்கு கொலை மிரட்டல்கள்…

முடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை, தற்கொலை செய்தது உறுதியானது..

ஜெர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் பெர் லினில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பதுங்கு குழியில் தனது காதலி ஈவா பிரயுனுடன் அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் அர்ஜென்டினாவுக்கு தப்பி சென்றார். அண்டார்டிகா…

தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா…

சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில்…

காசா வன்முறை குறித்து ஐநா விசாரணை

இஸ்ரேலிலுள்ள காசா எல்லைப்பகுதியில் நடந்த வன்முறை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு வாக்களித்துள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் வாக்களித்துள்ளன. முன்னதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன், திங்கட்கிழமையன்று போராட்டத்தில்…

செளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது

செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கான தடை இன்னும் ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ள நிலையில், ஏழு பெண்கள் உரிமை வழக்கறிஞர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், இதனைப் பெண்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சி என செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பு…

கோர விமான விபத்து! 100 இற்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலி!

கியூபாவவில் ஏற்பட்ட விமான விபத்தில் 100 இற்கு மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேருடன் பயணத்தை ஆரம்பித்தது. இந்நிலையில்,…

இஸ்ரேல்- பாலத்தீன மோதல்: காஸா எல்லையில் மக்களின் வாழ்க்கை எப்படி…

25 மைல். அதாவது 41 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அளவுக்கு அகலமும் கொண்டு இஸ்ரேல், எகிப்து, மத்திய தரைக்கடல் ஆகியவற்றுக்கு இடையே சூழப்பட்டிருக்கும் ஓர் உறைவிடம்தான் 19 லட்சம் பேருக்கு வீடாக இருக்கிறது. அப்பகுதிதான் காஸா. எகிப்தால் முதலில் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1967-ல் நடந்த…

அமெரிக்கா: டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிசூடு – 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 8 முதல் 10 பேர் வரை இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளிக்கூடம் தற்போது பூட்டிவைக்கப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நகருக்கு தெற்கே 40 மைல்களுக்கு அப்பால் உள்ள சாண்டா ஃபே ஹை ஸ்கூல் என்ற இந்த பள்ளியில் நடந்த…

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு…

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள்…

‘தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற நாடு’ : வட கொரியா…

இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்று வட கொரியா அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கும் மூத்த வட கொரிய தலைவர் ஒருவர் தென் கொரிய அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற மற்றும் அறிவற்றவர்கள் என்று வர்ணித்துள்ளார். தென் கொரியா மற்றும்…

பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா நம்பிக்கை

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யப் போவதாக வட கொரியா தெரிவித்திருந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா வலியுறுத்தினால், பேச்சுவார்த்தையை ரத்து செய்து விடுவதாக…

மீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர் பலி

காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். அந்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மீண்டும் பெரும் அளவில் எபோலா பரவுவதன் அறிகுறியாக இது உள்ளது. பண்டகாவிலிருந்து 150கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம…

சிரியா: ரசாயன தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விவரங்கள் வெளியீடு

கிளர்ச்சியளர்கள் பிடியில் இருந்த வட சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரசாயன தாக்குதலில் குளோரின் பயன்படுத்தப்பட்டதற்கான வாய்ப்பு உள்ளது என உலக ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பக அமைப்பு கூறியுள்ளது. ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு சாராகேபில் இயந்திர தாக்கத்தால் சிலிண்டரில் இருந்து குளோரின் வெளியேற்றப்பட்டது என்பதை…