கேரளாவில் ஓணம் பண்டிகையை தொடங்கி வைத்துள்ளார் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி.
கேரளாவின் வசந்த கால திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை (16ம் திகதி) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கேரள அரசு சார்பில் ஓண திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்கான தொடக்க விழா திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் விழாவில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் திரையுலக அரசியல் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.