சின் பெங்: வரலாற்று வீரர் வரலாற்று நாளான இன்று விடை பெற்று விட்டார்!

Chin Peng passed away2ஜீவி.காத்தையா, செம்பருத்தி.காம். பிடிக்கிறதோ, இல்லையோ, அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் மலேசிய நாட்டின் வரலாறு எழுதப்பட முடியாது என்ற அளவிற்கு நாட்டை கைப்பற்றிய ஜப்பானியர்களையும், நாட்டை ஆண்டு வந்த பிரிட்டீஷ் காலனித்துவவாதிகளையும் எதிர்த்துப் போராடி நாட்டின் வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் இன்று தமது 89 ஆவது வயதில் நாடற்றவராக தாய்லாந்து நாட்டின் தலைநகர் பேங்கோக் மருத்துவமனை ஒன்றில் காலை மணி 6.20 அளவில் காலமானார்.

தென்ஆப்ரிக்காவில் பிரிட்டீஷாருக்கு ஆதரவாக போராடிய மகாத்மா காந்திக்கு பிரிட்டீஷ் பேரரசு தங்கப் பதக்கம் அளித்து கௌரவித்தது. அவர் பிரிட்டீஷாரை எதிர்த்துப் போராடிய போது, மகாத்மா காந்தியை அதே பிரிட்டீஷ் பேரரசு “பயங்கரவாதி” என்று பிரகடனம் செய்தது.

அதே பிரிட்டீஷ் பேரரசின் பிரதிநிதி லார்ட் லூய்ஸ் மவுண்ட்பேட்டன் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் சிங்கப்பூரில் நடந்த வெற்றிப் பேரணியில் சின் பெங்கிற்கு தங்கப் பதக்கம் அளித்து கௌரவித்தார். லண்டனில் நடந்த வெற்றிப்Chin Peng-Batten பேரணியிலும் சின் பெங் பங்கேற்றார். அவரின் சேவைக்கு பிரிட்டீஷ் பேரசு அத்தகையச் சிறப்பை அளித்தது. ஒபியி (Order of the British Empaire) என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்க முன்வந்தது.

பிரிட்டீஷ் பேரரசின் வரலாற்றில் அதனை ஆதிர்ப்பவர்கள் புனிதர்கள். எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள்! மலாயவில் பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்த சின் பெங் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டு அவரின் தலைக்கு $25,000 விலை என்றும் அறிவிக்கப்பட்டது. காந்தியை பயங்கரவாதி என்ற பிரிடீஷ் நாக்கிற்கு சின் பெங்கை ஒரு பயங்கரவாதி என்று கூறுவது ஒரு பெரிய விவகாரமல்ல.

சின் பெங்கின் போராட்டமும், அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவர் எஸ். எ. கணபதியின் தலைமையிலான தொழிலாளர்களின், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின், போராட்டமும் மலாயாவில் பிரிட்டீஷ் பேரரசின் ஆட்சியை நிலைகுலையச் செய்தது. அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடிய பிரிட்டீஷ் அரசாங்கம் மலாயாவை தங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெறியேறும் திட்டத்தை  வகுத்தது.

நாடு சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர், டிசம்பர் 2, 1989 இல் மலேசியா மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டன.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், நாட்டிற்கு திரும்ப விரும்பும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைக்களுக்கு ஏற்ப திரும்பி வர வகைசெய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 300 க்கு மேற்பட்ட முன்னாள் Abdullah CD with Sultan Azlan Shahஉறுப்பினர்கள், எம்சிபியின் தலைவர் அப்துல்லா சிடி, இதர உயர்மட்ட தலைவர்களான ரஷிட் மைடின் மற்றும் பத்தாம் ரெஜிமெண்டின் பெண்கள் பிரிவு கமாண்டர் ஷம்சியா பாக்கே போன்றோர் உட்பட, மலேசியாவுக்கு திரும்பி வந்து நிரந்தரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், சின் பெங்கிற்கு மட்டும் அந்த அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மலாயாவில் பிறந்தவர் என்பதற்கு அத்தாட்சி பத்திரம் வேண்டுமாம்!

உலகிற்கே தெரியும் சின் பெங் சித்தியவானில் பிறந்தவர் என்று. அதன் அடிப்படையில்தான் முன்னாள் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த அமைதி ஒப்பந்தத்தில் மலேசிய அரசின் சார்பில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான முன்னாள் போலீஸ் படைத்Ex-Police chief Rahim Nor தலைவர் அப்துல் ரஹிம் நோர் மலேசிய அரசாங்கம் சின் பெங் நாட்டிற்கு திரும்பவதற்கு அனுமதி கொடுக்க மறுப்பதைக் கடுமையாகக் குறைகூறியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அப்துல்லா சிடி, இதர உயர்மட்ட தலைவர்களான ரஷிட் மைடின் மற்றும் பத்தாவது ரெஜிமெண்டின் பெண்கள் பிரிவு கமாண்டர் ஷம்சியா பாகே ஆகியரோடு 300 க்கும். மேற்பட்டோர் நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதோடு பேராக் மாநில சுல்தான் அவர்களில் சிலருக்கு தரிசனம் அளித்திருந்ததை ரஹிம் நோர் சுட்டிக் காட்டினார். அவர்களுடைய பிறப்புப் பத்திரம் கேட்கப்படவில்லையே என்றும் அவர் கூறினார்.

தமக்குத் தெரிந்த வரையில், சின் பெங் தரப்பினர் அமைதி ஒப்பந்தத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் கடைபிடித்துள்ளனர் என்று கூறிய ரஹிம் நோர் மலேசியா அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்றார்.

“சின் பெங்கிற்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது”, என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

ஏன்? அவர் மலாய்க்காரர் அல்ல என்பதுதான் காரணம் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அவர் நாடு திரும்பினால், அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதுதான் அவரை நாட்டிற்குள் விடாமல் இருப்பதற்கான உண்மையான காரணம். சின் பெங் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

முறையாக, முத்தரப்பினரால் கையொப்பட்ட ஓர் அமைதி ஒப்பந்தத்தை மீறியது மலேசிய அரசுக்கு ஒரு பெருங்களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய அரசாங்கம் கையொப்பமிடும் ஓர் ஒப்பந்தத்தை எப்படி நம்புவது? இதுதான் சின் பெங்கின் இறுதி சவால்!

களங்கப்பட்டு நிற்பது சின் பெங் அல்ல. அவர் ஒரு கனவான் என்று கூறுகிறார் போர்க் காலத்தில் அவரின் பரம வைரியான அப்துல் ரஹிம் நோர்!

தோற்றது சின் பெங் அல்ல, மலேசிய அரசாங்கம்!

வரலாற்று நாயகனான சின் பெங் வரலாற்று நாளான இன்று விடைபெற்று விட்டார்; அவருக்கு விடை கொடுப்போம்!

TAGS: