ஷாம் நடித்திருக்கும் 6 படம் நாளை ரிலீசாகுது. படத்தை
பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டிய ஷாம். படம் முடிந்ததும் நிருபர்களிடம் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:
2002ல 12பி படம் மூலமா சினிமாக்கு அறிமுகமானேன். 11 வருஷமாச்சு சினிமாக்கு வந்து. ஸ்கூல் படிக்கும்போதே அப்பா இறந்துட்டாரு. எனக்கு ஆதரவா இருந்த ஒரே டைரக்டர் ஜீவா அண்ணனும் இறந்துட்டாரு. சினிமால எனக்கு யாருமே இல்லை.
இடையில சில தப்பான படங்கள்ல நடிச்சேன். காரணம் என்னை கைட் பண்ண யாரும் இல்லை. கதை கேட்கும்போது எல்லா படமும் நல்ல படமாக தெரியுது. நம்பி நடிச்சால் படம் முடிஞ்ச பிறகுதான் அதோட நிலைமை புரியது.
ஓரளவுக்கு தெளிவான பிறகு இனி நடிச்சா நல்ல படத்துலதான் நடிக்கிறதுன்னு காத்துக்கிட்டிருந்தேன். எத்தனை நாளைக்குத்தான் காத்துக்கிட்டிருக்கிறது. நாமே சொந்தமா ஒரு படம் எடுத்து அதுல என்னோட திறமை, உழைப்பை காட்டுறதுன்னு முடிவு பண்ணி எங்கிட்ட இருந்த பணம், என் அண்ணன்கிட்ட இருந்த பணம், நண்பர்கள்கிட்ட வாங்கின கடன் எல்லாத்தையும் போட்டு 6 படம் ஆரம்பிச்சேன்.
இந்தியா முழுக்க நடக்கிற கதைங்கறால மாநிலம் மாநிலமா போயி எடுத்தோம். எடைய குறைச்சு, கண்கணை இயற்கையாகவே வீங்க வச்சு நடிச்சேன்.
நினைச்ச பட்ஜெட்டை தாண்டிச்சு. என் தகுதிய மீறிப்போச்சு. எல்லாத்தையும் சமாளிச்சு ஸ்டூடியோ 9 கம்பெனி உதவியோட படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கேன். இனி நான் நம்புறது உங்களையும், ரசிகர்களையும்தான். கைகொடுத்து தூக்கி விடுங்க, ஆதரவு கொடுங்க ப்ளீஸ்…
இவ்வாறு ஷாம் உருக்கமாக பேசினார்.
குட் லக் ஷாம்
உனக்கு ஆதரவு கொடுக்க போயி நாங்கள் நாடு ரோட்டில்தான் பிச்சை எடுக்கோணும் ,,,ஏற்க்கனவே கோமணம் பாதி கிழிஞ்சி போயி இருக்கு,இந்த லெட்சணத்தில் உனக்கு ஆதரவு கொடுக்கொனுமா ?? அப்புறம் ஊதான்