இந்திய சினிமாவில் முதன் முறையாக மூன்று தலைமுறைகள் இணைந்து நடிக்கும் படம் ஒன்று தெலுங்கில் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் மனம். இயக்குபவர் நம் தமிழ்நாட்டுக்காரரான விக்ரம் குமார். படத்தில் அக்னினேனி நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோர் முறையே தாத்தா, மகன், பேரனாகவே நடிக்கிறார்கள். படத்தை தயாரிப்பதும் நாகார்ஜுனாவின் அண்ணபூர்னா ஸ்டூடியோதான்.
விக்ரம் குமார் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்தார். கல்வி விழிப்புணர்வு பற்றி இவர் இயக்கிய ஒரு மவுனப்படம் தேசிய விருதுகளை அள்ள இயக்குனர் ஆனார். இஷ்டம் என்ற முதல் தெலுங்கு படத்தை இயக்கினார். அதில்தான் ஸ்ரேயாவை அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு இந்தியில் 13பி என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம்தான் தமிழில் யாவரும் நலம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது டைரக்டர் செய்து வரும் படம்தான் மூன்று தலைமுறைகள் நடிக்கும் மனம்.
அக்னினேனி நாகேஸ்வரராவின் 90 வது பிறந்த நாளான நேற்று (செப்படம்பர் 20) படத்தின் முதல் போட்டோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
90 வயதிலும் நடிக்கும் பழம் பெரும் நடிகர் ‘தேவதாஸ்’ அ. நகேஸ்ராவ் கலைஞரோடு இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் என்பது என் ஆவா, வாழ்த்த எனக்கு வயது போதாது!
வாழ்த்துகள்! நாகேஸ்வரராவ் அவர்களின் நடிப்பை மறக்க முடியுமா. வாழ்க பல்லாண்டு!