சரோஜா தேவி முதல் த்ரிஷா வரை…

fourthஇந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் 57 பேருக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. திரைப்படத் துறையின் முக்கிய கருவியான பயோஸ்கோப்பின் சிறிய உருவம், விருதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. முதல்வரிடம் இருந்து விருது பெற்றவர்களின் விவரம்:

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், பிரசாத் ஸ்டுடியோவின் ரமேஷ் பிரசாத், விஜயா புரொடக்ஷன்ஸ் வெங்கட் ராம ரெட்டி, ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், கோவை டிலைட் தியேட்டரின் ஜோகர் (1914-இல் உருவாக்கப்பட்ட திரையரங்கம்), இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா, வயலின் கலைஞர் ராமசுப்பிரமணியன்,

JJ1005திரைப்படப் பின்னணி பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, பாடலாசிரியர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒளிப்பதிவாளர் என்.எஸ்.வர்மா, ஒளிப்பதிவாளர் பாபு, படத் தொகுப்பாளர் விட்டல், நடன இயக்குநர் சுந்தரம் (மகன் ராஜு சுந்தரம் பெற்றார்), புகைப்படக் கலைஞர் தாரா, சண்டைப் பயிற்சியாளர் கே.எஸ்.மாதவன், ஒளிப்பதிவாளர் கண்ணன், ஒப்பனைக் கலைஞர் மாதவராவ், ஆடை வடிவமைப்பாளர் கொண்டைய்யா, தொழில்நுட்பக் கலைஞர் சாமிக்கண்ணு, புகைப்படக் கலைஞர் ஏ.சங்கர்ராவ், பின்னணிக் குரல் கலைஞர் கே.என். காளை, கே.ஆர்.அனுராதா, நடிகர் சிவகுமார், இயக்குநர் மகேந்திரன், நடிகர் பிரபு, திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன், இயக்குநர் பி.வாசு, நடிகர் விவேக், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள் சரோஜா தேவி, மனோரமா, எம்.என்.ராஜம், ராஜ ஸ்ரீ, சாரதா, காஞ்சனா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, சௌகார் ஜானகி, ஜெயசுதா, ஜெயப்பிரதா, மீனா, சிம்ரன், த்ரிஷா, தயாரிப்பு நிர்வாகி ராமதுரை, லைட்மேன் சுந்தரம், கோ-ஆர்டிஸ்ட் ராமாராவ், சினி ஏஜெண்ட் ஜி.ஆறுமுகம், செட்ஸ் வி.துரை, தயாரிப்பு உதவியாளர் சி.என்.சுந்தரம், பி.எஸ். சரோஜா (அவர் கலந்துகொள்ளாததால் அவருக்கு வீட்டுக்கு விருது அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பு).