திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்

jaya_medalமுதல்வர் ஜெயலலிதா உள்பட திரைத் துறையில் சாதனை படைத்த 41 பேருக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா பதக்கங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

சென்னையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். விழாவில், முதல்வர் ஜெயலலிதா உள்பட 41 பேருக்கு பதக்கங்களை அவர் வழங்கினார். பதக்கம் பெற்றவர்களின் விவரம்:

முதல்வர் ஜெயலலிதா, மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், பழம்பெரும் நடிகைகள் வைஜெயந்தி மாலா, அஞ்சலி தேவி, இயக்குநர்கள் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், நர், கே.ராகவேந்திர ராவ், கேலி சித்திரக்காரர் கே.பாபு, கர்நாடகத்தில் 86 படங்களுக்கும் மேல் தயாரித்த பர்வதம்மா ராஜ்குமார், நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன், மூத்த நடிகர் அம்பரிஷ், மகாத்மா காந்தி பிக்சர்ஸ் சங்கர் சிங்கின் மகன் எஸ்.வி.ராஜேந்திர சிங் பாபு, தயாரிப்பாளரும் இயக்குநருமான துவாரகீஷ், பி.ரவிச்சந்திரன், திரைப்பட வெளியீட்டாளர் வீரண்ணா, நடிகர் மாதவன் நாயர் மது, மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் சந்திரன், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், குன்ஞக்கோ போபன் போபன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மூத்த நடிகர் கிரண் வி.சாந்தா ராம், ரன்தீர் ராஜ்கபூர், தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி, திரைப்பட வெளியீட்டாளர்கள் கமல் பன்ஜட்டியா, விஜய்குமார் சுப்ளே, கவிஞர் ஜாவித் அக்தர், மராட்டிய நடிகர் ரமேஷ் தியோ, நடிகை சீமா தியோ, வங்க மொழி நடிகை அபர்ணா சென், திரைப்பட இயக்குநர் கௌதம் கோஷ், நடிகர் பிரன்ஜித் சட்டர்ஜி, மராட்டிய நடிகர் நரேஷ் கனோடியா, பஞ்சாபி நடிகை ப்ரீத்தி சாப்ரூ, ஒரிசா திரைப்படக் கலைஞர் உத்தம் மகந்தி, போஜ்புரி நடிகர் மனோஜ் திவார், அசாம் நடிகை சரிபா வாகித்.