“கோச்சடையான்’ என்ற மன்னரின் சாகசம் மிகுந்த வாழ்க்கையைத் தழுவி உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் தந்தை, மகன் என இரட்டை வேடங்கள் ஏற்று நடித்துள்ளார்.
ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஷோபனா, ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை மேற்பார்வையில், ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
ஹாலிவுட்டில் உருவாகி பலத்த வரவேற்பைப் பெற்ற “அவதார்’, “டின்டின்’ படங்களைப் போன்று அனிமேஷன் படமாக “கோச்சடையான்’ உருவாகியுள்ளது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் 3 டி ஒலி தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் கடந்த சில மாதங்களாக படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. டப்பிங் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டன. கிராஃபிக்ஸ் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால், குறிப்பிட்ட நேரத்தில் படம் தயாராகாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு “கோச்சடையான்’ படத்தின் டிரெய்லர் இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி “கோச்சடையான்’ ரிலீஸ் ஆக உள்ளது.
தலைவா சீ யு ஓன் யுவர் பர்த்டே… தமிழ் திரையுலகின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முயற்சி.
தமிழ் படத்தையும் தமிழ் மொழியையும் உலகத்திற்கு உன் மூலமாக பரவ செய்ய மகிழ்ச்சி.