என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?”
பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது.
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம்.
ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள்.
தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன்.
போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொடங்கி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும்.
பிரபாகரனின் ஆளுமை, கம்பீரம், மக்கள் மீது அக்கறை, இலட்சியத்துக்கு உயிரையும் தரும் அர்ப்பணிப்பு… இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள்.
ஒரு தலைவனா பிரபாகரனை ‘ரோல்மாடலா’ சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!”
இவ்வாறு விகடன் மேடைக்கு வழங்கிய பதில்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
இப்படி சொல்லுவதற்கு தமிழ் நாட்டிலுள்ள எந்த அரசியலிலுள்ள தமிழர் தலைவனுக்கும் தைரியம் வராது. நன்றி தலைவா!
நாங்கள் உங்களை போன்ற காலாவதி ப்ரோகர்களை அதிகம் பார்த்ததுண்டு. சந்தர்ப்பங்களை சாதனையாக்கும் பட்டியலில் நீங்கள் வேண்டாம் …நடிப்பு மட்டும் போதும்.
நடிகர்களுக்கு இது போன்ற வசனங்கள் சர்வ சாதாரணம் ! அவருடைய பொழப்பு கூட தமிழனையும் தமிழ்நாட்டையும் நம்பித்தான் நடக்குது ! தமிழனுக்கு நன்றி கடன் பெற்று இருக்கிறார் ,அவருக்கு வாழ்த்து சொல்ல நான் தவறவில்லை !
பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனும் சொல்லமாட்டேன், அதே நேரம் விமர்சனம் இல்லாமல் யாரும் இருக்க முடியாது, செல்லம் நீ ஒரு உலக மகா நடிகன்டா