நமீதா அரசியலில் குதிக்க இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் சேர இருக்கிறார் என்று வந்து கொண்டிருந்த யூக செய்திகளுக்கு பதில் அளித்திருக்கிறார். ஆம், அவர் நிஜமாகவே அரசியலில் குதிக்க முடிவு செய்திருக்கிறார். அதுவும் தமிழ் நாட்டு அரசியலில். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு திடீரென அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த வருடமே அரசியலில் குதிப்பது என்று முடிவு செய்து விட்டேன். எந்த கட்சியில் சேருவது என்று தீவிரமாக யோசித்து வருகிறேன். இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை.
பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டாக வந்த செய்திகள் உண்மை இல்லை. நான் அரசியலில் குதித்தால் அது தமிழ்நாட்டில்தான். நான் இங்கேதான் வாழ்கிறேன். இங்கேதான் வருமான வரி கட்டுகிறேன். நான் சென்னையில் குடியேறி பத்து வருடமாகிவிட்டது. என் வீட்டு விலாசம், பாஸ்போர்ட் விலாசம் எல்லாம் சென்னைதான். எனவே நான் வடஇந்திய பெண் இல்லை. சென்னை பெண்தான். அதனால் அரசியலில் குதித்தால் மாநில கட்சியில் சேர்ந்து இங்குதான் அரசியல் பண்ணுவேன். ஒரு தென்னிந்தியரை திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே வாழ்வதுதான் என் குறிக்கோள்.
இவ்வாறு நமீதா கூறியிருக்கிறார். (நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்)
வேனாம்! நீ குதிச்ச மேடை தாங்காது…..
ஏற்கனவே தமிழ்நாடு நாசமா போயி கிடக்குது, இதுலே நீ வேறையா……!!!!!
வருங்கால முதல்வர் அம்மா நமிதாஜி வாழ்க வாழ்க . தமிழ்த்தாய் நமீதாம்மா வாழ்க வாழ்க வாழ்க
சார், நிங்க சொல்றது நடக்க போகிறது பாருங்க லேன்….வாழ்த்துக்கள் மாண்புமிகு நமீதா அவர்களே ….
ஏன்? கன்னடக்காரரான நடிகை ஜெயலலிதா காலில் ‘அம்மா! தாயே!’ என்று காலில் விழுகிறானே அரசியல்வாதித் தமிழன் அதே போல இந்த நமீதா காலிலும் விழுந்து விட்டுப் போகிறான்! அப்படி என்ன தமிழ் நாட்டு அரசியலில் தமிழன் இல்லாமலா போய்விடுவான்!
அரசியலில்தான் கட்டைக்கு போகும் வரை காலத்தை ஓட்டலாம் என்று, இந்த செம்ம கட்டை தெரிஞ்சி வச்சி இருக்கு !
காலம் சென்ற மூப்பனார் அவர்கள் கூறிய ஒரு செய்தி ஞாபகம்.இன்னால் முதல்வர் தனது வீட்டு நிகழ்ச்சிக்கு நடனமாட வந்திருந்த பொழுது மூப்பனாரின் நண்பர் போகிற போக்கில் நடன மாட வந்த ஜெய முதல்வர் ஆனாலும் ஆச்சர்ய பட ஒன்று மில்லை என கிண்டலடித்தாராம். இவர் முதலமைச்சர் அல்ல இந்திய அரசியலில் பிரதமராக கூட வரலாம்,ஆச்சர்யம் ஒன்றுமில்லை.