எதையும் புதுமையாக செய்யக்கூடியவர் பார்த்திபன். மேடை பேச்சா, விழாவை நடத்துவதா, பரிசு பொருள் கொடுப்பதா, கருத்து சொல்வதா, கவிதை எழுதுவதா எல்லாமே புதுமையா இருக்கும். அது எல்லோருக்கும் பிடிக்கும். ஆனா அவர் சினிமாவில் புதுமை செய்ய வரும்போதுதான் சிக்கல். அது நன்றாக இருந்தாலும்கூட யாருக்கும் பிடிக்காமல் போகிறது. இதனால் சில ஆண்டுகளாக பங்ஷன் ஜங்ஷன் என்று இருந்தவர் இப்போது ஒரு படம் டைரக்ட் செய்யப்போகிறார்.
“கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்” எல்லாமே அவர்தான், படத்தின் பெயரும் அதுதான். பார்த்திபன் இதுவரை 11 படங்கள் டைரக்ட் செய்திருக்கிறார் எல்லாவற்றிலும் அவர்தான் ஹீரோ. இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. புதுமுகங்கள்தான் நடிக்கிறார்கள்.
“அடுத்த விநாடி என்ன நடக்கும்ங்ற சுவாரஸ்யம்தான் வாழ்க்கை. நம்மோட வாழ்க்கைக்கு வேறு யாரும் திரைக்கதை வசனம் எழுதி இயக்க முடியாது. நம் வாழ்க்கைக்கு நாம்தான் இயக்குனர். அதுதான் படத்தோட நாட். காமெடியும், கருத்தும் நிறைந்தது. படத்துல அடுத்த சீன் என்ன என்று யாராலும் கணிக்க முடியாது. அப்படி ஒரு திரைக்கதை” என்று தன் படம் பற்றி ஒரு முன்னோட்டத்தை சொல்லியிருக்கிறார்.
புதுமையை ஆரம்பிச்சிட்டாரு அருவியையும் ஆரம்பிச்சிட்டாரு பார்த்திபன்