வடிவேலு இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
1991ல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் வடிவேலு. அதனைத்தொடர்ந்து இவர், காதலன், கிழக்குச் சீமையிலே, முதல்வன், பொற்காலம், வின்னர், சச்சின், சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் கலக்கியுள்ளார்.
தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் வடிவேலு முதன் முறையாக இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நாயகனாகவும் முத்திரை பதித்தார். தற்போது இவர் சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பல நடிகைகள் நடிக்கின்றனர். வடிவேலு சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி பின்னணிப் பாடகரும் கூட.
சீக்கிரம் வாங்க தலைவா! உங்க சவடால் தனம் இல்லாம இப்ப எந்த படத்தையும் பார்க்க முடியிலேயே!
நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு சிறந்த கலைஞன்.தொடரட்டும் உங்களது பாணி.