நடிகை ஜியா கான் வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த யூன் மாதம் 3ம் திகதிமும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தடவியல் அறிக்கையில் ஜியாவின் கழுத்தை யாரோ பெல்ட்டால் இறுக்கிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 1ம் திகதி ஜியாவின் அம்மா ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஜியா தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை யாரோ கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஜியா இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கருப்பு நிற டிராக் சூட்டில் வீட்டுக்கள் நுழைவது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. ஆனால் அவர் நைட்டியில் தூக்கில் தொங்கினார். தற்கொலை செய்யப் போகிறவர்கள் உடை மாற்றிவிட்டு தான் இறப்பார்களா என்று அவர் தனது மனுவில் கேட்டிருந்தார்.
எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ராபியாவின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து மறுவிசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.