மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தீபாவளியன்று ஆரம்பம், பாண்டியநாடு, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்கள் வெளியாகின்றன.
அஜீத்தின் படங்களிலேயே ‘மங்காத்தா’ தான் பெரிய ஓபனிங் பெற்ற படம். இதன் சாதனையை ‘ஆரம்பம்’ எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் அஜீத் மாஸ் ஸ்டாராக இருந்தாலும் ஆரம்பம் படம் ஓடக்கூடிய நேரம் இரண்டரை மணி நேரம் தான். படம் ஓடும் நேரம் குறைவு என்றாலும் அஜீத்தின் அதிரடி அதிகமாகத்தான் இருக்கும்.
ஆனால் ஆல் இன் ஆல் அழகுராஜா படமோ மூன்று மணி நேரம் ஓடுமாம். இந்தப்பக்கம் கார்த்தி, சந்தானம் கூட்டணியின் சலம்பலே எவ்வளவு நேரமானாலும் ரசிகர்களை தியேட்டரில் அலுப்பு தெரியாமல் உட்கார வைத்து விடுமே..!
அதேபோல பாண்டியநாடு படமும் விஷாலுக்கு இன்னொரு ‘சண்டைக்கோழி’யாக இருக்கும் என்கிறார்கள் படத்தில் வேலைபார்த்துள்ள தொழிநுட்ப பிரிவினர்.

























