பிடிவாரண்டிலிருந்து தப்புவது எப்படி? தீவிர யோசனையில் அஞ்சலி

anjali_001இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடிகை அஞ்சலி.

அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகை அஞ்சலி.

இந்நிலையில் திடீரென தலைமறைவான இவர் தனது சித்தி குறித்தும், இயக்குனர் களஞ்சியம் பற்றியும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் களஞ்சியம், அஞ்சலி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பலமுறை நீதிமன்றம் வாய்தா கொடுத்தும் அஞ்சலி ஆஜராகவில்லை.

கடைசியாக பிடிவாரண்ட் பிறப்பித்தது. அப்போது தகுந்த காரணங்களை சொல்லி அந்த பிடிவாரண்டில் இருந்து தப்பினார்.

அதன்பிறகு அக்டோபர் 29ம் திகதி அஞ்சலி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நேற்றும் அஞ்சலி ஆஜராகவில்லை. அவருக்கு உடல்நலமில்லை என்ற அவரது வக்கீல்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அஞ்சலியை உடனே கைது செய்யச்சொல்லி மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி உத்தரவிட்டதோடு வழக்கை அடுத்த மாதம் 22ம் திகதிக்கு தள்ளி வைத்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸ் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்கிற சூழ்நிலையில் அஞ்சலி ஐதராபாத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் ஊடகங்களுக்கு தெரியாமல் திடீரென நீதிமன்றத்தில் ஆஜராகி பிடிவாரண்டை ரத்து செய்ய வைக்கலாமா? அல்லது தகுந்த மருத்துவ சான்றிதழ் கொடுக்கலாமா? என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.