கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பொதுவாக ஒருவரைக் கவுரவிப்பது என்றால் அவரது சிலையை நிருவுவார்கள் அல்லது அவரது பெயரைக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சூட்டுவார்கள்.
அந்த வகையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கவுரவிக்கும் வகையில் கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை சூட்டியுள்ளனர்.
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், கனடாவில் டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகள் குறித்து புகழப்பட்டது.
பின்னர் அதன் தொடர்ச்சியாக, கனடாவின் மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் – ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எனக்கு பிடித்த மியூசிக் டைரக்டர் ஏ.ஆர்.ரஹ்மான். எனக்கு பிடித்த பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் அதிகம். BEST OF LUCK A R RAHMAN