நகைக்கடை விளம்பரத்தை பார்த்து நெகிழ்ந்து போயுள்ளாராம் த்ரிஷா.
சமீபத்தில் வெளியான விளம்பரம் ஒன்றில் ஒரு விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் மணமகன், அந்தப் பெண்ணின் இளம் மகளையும் தன் மகளாகவே ஏற்றுக் கொள்கிறான்.
இதைப் பார்த்து நெகிழ்ந்த த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், தனது ரசிகர்கள் இதுபோன்ற திருமணங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
மேலும் பெண்கள், ஆண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்வதுபோல, ஆண்களும் பெண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்பதுதான் சிறந்தது என்று கூறியுள்ளார்.
த்ரிஷா இதற்கு முன்னதாக தெரு நாய்களின் பராமரிப்பு குறித்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சே! ஏதோ தெரு நாய்களின் பழக்க தோஷத்தால் தான் இரண்டாம் திருமணத்தை த்ரிஷா ஆதரிக்கிறார் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறதே!
தெரு வியாபாரம் என்னவென்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளார் த்ரிஷா!
நல்லவை எவர் செய்தாலும் , சொன்னாலும் அவை நல்லவையே! தெரு நாய் பராமரிப்பும் சிறந்த மனித தன்மைக்குரிய செயலே, அதை விட சிறந்த பண்பு விதவைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதாகும் ஆக அவரின் சேவையும், கருத்தும் பாராட்டுக்குறிது. மனிதாபமிக்க இரண்டு வெவ்வேறு சம்பவங்களை ஒரு செய்தியில் இணைத்துள்ளதால் தவறான அனுமானத்திற்கு இடமளித்து விடுகிறது.