முதியவர்களை அவமானப்படுத்தும் படம்!

oldகே.ஏ.அன்பு செல்வன் என்ற புது டைரக்டர் என் நெஞ்சைத் தொட்டாயே என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். பவித்ரா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். புதுசா எதையாவது செய்ய வேண்டுமே என்று டைரக்டர் பல நாட்கள் ரூம் போட்டு யோசித்து ஒரு ஐடியாவை கண்டுபிடித்தார். அது 80 வயதுக்கு மேற்பட்ட முதிய பெண்களுக்கு நீச்சல்போட்டி வைப்பது. அதை சினிமாவில் பார்க்கும் மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்பது அவரது கணிப்பு.

இதற்காக திருவாரூர் அருகே உள்ள ஒரு குளத்தை தேர்வு செய்தார். தனது உதவியாளர்கள், புரொடக்ஷன் ஆட்களை விட்டு சுற்றுமுற்று கிராமத்திலிருந்து 85 முதிய பெண்களுக்கு இண்டர்வியூ வைத்து அதில் 6 பேரை செலக்ட் பண்ணினார். அவர்களுக்கு சுடிதார் அணிவித்து 15 அடி ஆழம் கொண்ட தண்ணீரில் இறக்கி விட்டு நீச்சலடிக்க வைத்து படம் எடுத்திருக்கிறார். அதில் பலர் மூர்ச்சையாகி விழுந்திருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் நின்றதால் பலருக்கு காய்ச்சல் வந்திருக்கிறது.

பாவம் அந்த முதியவர்கள் சினிமாக்காரர்கள் கொடுக்கும் சில நூறு ரூபாய் பணத்திற்காக தங்களையே காமெடி பொருளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதியவர்களை தெய்வங்களாக பார்க்கும் கலாச்சாரம் கொண்ட மண்ணில்தான் இதுவும் நடக்கிறது.