பாரதிராஜாவை கவர்ந்த சீனுராமசாமி!

barathirajaசீனு ராமசாமியின் கதையை தானே தயாரித்து இயக்கப் போகிறாராம் பாரதிராஜா.

“தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை” ஆகிய படங்களின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் இயக்குனர் சீனு ராமசாமி. சமீபத்தில் இவர், பாராதிராஜாவைச் சந்தித்த போது கதை ஒன்று சொன்னாராம். இதைக்கேட்டு பிரமித்துப்போன பாரதிராஜா அந்தக்கதையை தானே தயாரித்து இயக்குவதாக தெரிவித்தாராம்.

மேலும் முழுக்கதையையும் எழுதிமுடித்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறும் கூறியிருக்கிறார். இருப்பினும் பாரதிராஜா, நீ விரும்பினால் நீயே படத்தை இயக்கு.., நான் படத்தை தயாரிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார் பாரதிராஜா. ஆனால், பாரதிராஜாதான் இந்த கதையை இயக்க வேண்டுமென தன்னுடைய ஆவலையும் வெளிப்படுத்தியிருக்கிறார் சீனுராமசாமி.

வழக்கம் போல பாரதிராஜாவுக்குப் பிடித்தமான தேனி நகரைச் சுற்றிய கதையாம். கிராமத்துப் பின்னணியில் ஒரு த்ரில்லராக இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சீனுராமசாமி. முழுக்கதையையும் எழுதி முடித்துவிட்டு பாரதிராஜாவை சந்திக்கும்போதுதான் இந்தப்படத்தை அவரே இயக்குகிறாரா என்பது குறித்து தெரியவரும்.