இந்திய சினிமாவில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பட தயாரிப்பு செய்து வரும் நிறுவனம் ஏ.வி.எம்., ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரில் தொடங்கி, அதன்பிறகு ஏ.வி.எம். சரவணன், பிறகு அவரது வாரிசு ஏ.வி.எம். குகன் என்று வளர்ந்த இவர்களது தயாரிப்பு துறை இப்போது நான்காவது தலைமுறையையும் எட்டியுள்ளது. குகனின் பெண் வாரிசுகள் அபர்ணா குகன், அருணா குகன் 55 நிமிடம் ஓடக்கூடிய படம் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அபர்ணா குகன், அருணா குகன் கூறியிருப்பதாவது, ‘கசப்பு இனிப்பு’ என்ற குறும்படத்தை யூ-டூயூப்பில் பார்த்தோம். அந்த குறும்படம் எங்களை கவர்ந்தது. உடனே அந்த டைரக்டரை அழைத்து இதை கொஞ்சம் பெரிய படமாக இயக்க முடியுமா என்று கேட்டோம். அதன்படி இயக்குனர்கள் அணில் மற்றும் ஹரிஸ்ரீ ஆகிய இருவரும் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பெயரில் 55 நிமிடம் ஓடக்கூடிய படத்தை உருவாக்கி தந்தார்கள். இப்படத்தை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இணையதளம், டி.வி., மூலம் ரிலீஸ் செய்ய உள்ளோம். எதையாவது புதுசாக செய்யணும் என்ற ஆர்வம் தான் எங்களை இந்தப்படத்தை இப்படி ரிலீஸ் செய்ய வழிவகுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.
டிவி சீரியலா? போய்யா போ: சதா
sadha
டிவி சீரியலில் எந்த காலத்திலும் நடிக்க மாட்டேன் என்று ஒரே போடாக போட்டுள்ளாராம் சதா.
ஜெயம் படத்தில் போய்யா போ என்ற வசனத்தை பேசி பிரபலமானவர் சதா. பின்னர் ஷங்கர் படத்தில் விக்ரம் கதாநாயகியாக உயர்ந்த சதா கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறி பல வாய்ப்புகளை இழந்தார்.
கடைசியில் இப்போது குத்துப்பாட்டுக்கு ஆடும் நிலைக்கு வந்துள்ளார்.
பிரபல நாயகிகளை சீரியல்கள், நிகழ்ச்சிக்கு வளைத்துப் போடும் டிவி சேனல் சதாவை அணுகியுள்ளது.
ஆனால் சதாவோ ஒரு சீரியலில் நடித்தால் 2 அல்லது 3 வருடத்திற்கு அதிலிருந்து விலகமுடியாது. அப்படி நடிப்பது போரடிக்க ஆரம்பித்துவிடும்.
டிவி ஷோக்களில் வருவது பிடித்திருக்கிறது. ஆனால் சீரியலில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.