நான் ஒன்றும் விபச்சாரி அல்ல! நடிகை ராதா பாய்ச்சல்

radha_002ஐந்து பேரைத் திருமணம் செய்து கொள்ள நான் ஒன்றும் விபச்சாரி அல்ல என்று ராதா ஆவேசமடைந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, 6 ஆண்டுகளாக குடித்தனம் நடத்தி 50 லட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று வைர வியாபாரி பைசூல் மீது நேற்று சென்னை கமிஷனரிடம் நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.

ஆனால் இவரின் குற்றச்சாட்டுகளை தொழில் அதிபர் பைசூல் மறுத்துள்ளார்.மேலும் ராதா பலரை திருமணம் செய்தவர் என்றும் அவருக்கு 5 முறை திருமணமாகியுள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ராதா, 6 வருடத்துக்கு முன் காத்தவராயன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது சவுந்தரபாண்டி என்பவர் பைசூலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

சிங்கப்பூரில் பெரிய வைர வியாபாரி, பைனான்சியர் என்றும், எனது தீவிர ரசிகர் எனவும் கூறினார்.

அப்போது எனக்கு பண கஷ்டம் இருந்தது. ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். இதனால் பைசூல் மேல் மரியாதை ஏற்பட்டது. அதன்பிறகு அடிக்கடி சந்தித்தார். ஒருநாள் என் கையை பிடித்து காதலிப்பதாக சொன்னார். காரில் என் வீட்டு முன்னால் அடிக்கடி வந்து நின்று கொண்டு என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை காட்டினார்.

மேலும் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி என்னோடு வாழத் தொடங்கினார். ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தினோம். என்னை மணந்து கொள்வார் என்று முழுமையாக நம்பினேன். வைர வியாபாரத்துக்கு தேவைப்படுவதாக ரொக்கம், நகை என்று ரூ.50 லட்சத்துக்கு மேல் என்னிடம் வாங்கினார்.

அதன்பிறகு வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். விசாரித்தபோது நிறைய நடிகைகள் மற்றும் பெண்களுடன் அவருக்கு செக்ஸ் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியானேன். பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள், மேலும் மதம், தொழில், ஊர், பெயர் என அவர் சொன்னது பொய்.

என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்.

பைசூல் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்ட தகவல்களும் எனக்கு தெரிய வந்தது. இவரது கூட்டாளி ஒருவன் மலேசியாவில் கைதாகி இருக்கிறான். நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ’ போல் அடிப்பார். காமக் கொடூரனாக நடந்து கொள்வார். செக்ஸ் வைத்துக் கொண்டதையெல்லாம் காணொளி எடுத்து வைத்துள்ளார்.

மேலும் அவரது கைப்பேசியில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்’ மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும், மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்.

பைசூலால் சினிமாவை விட்டேன். பணத்தையும் இழந்தேன். எனக்கு ஐந்து திருமணங்கள் நடந்துள்ளதாக பைசூல் அபாண்டமாக பழி போடுகிறார். அப்படி திருமணம் நடந்து இருந்தால் அதற்கான படங்களை காட்டட்டும். யாருடனும் எனக்கு திருமணம் நடக்கவில்லை. நான் ஒன்றும் விபசாரி அல்ல.

என்னிடம் வாங்கிய பணத்தை அவர் திருப்பி தந்தால் போதும். எனக்கு சொந்த வீடு இருக்கிறது, அதுதவிர வேறு வருமானம் இல்லை என்றும் பைசூல் என்னிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தை பொலிசார் மீட்டு தருவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.