ஆர்யாவை எனக்கு மட்டுமல்ல; எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் : அனுஷ்கா

anush‘இரண்டாம் உலகம்’ படத்தில், சண்டை காட்சிகளில்வெளுத்து வாங்கியுள்ளீர்களே?

ஆமாம், அது, ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஜார்ஜியாவில் உள்ள சண்டை பயிற்சி மாஸ்டரிடம், 15 நாட்கள் பயிற்சி எடுத்து, சண்டை காட்சிகளில் நடித்தேன். படம் பார்த்த பலரும், இதற்காக, எனக்கு பாராட்டு தெரிவித்தனர்.

ஆர்யாவிற்கு யோகா சொல்லிக் கொடுத்தீங்களாமே?

நான் ரொம்ப வருஷமா யோகா கத்துக்கிட்டிருக்கேன், அப்பப்போ நிறைய பேர் கேட்பாங்க. கொஞ்சம் சொல்லி தருவேன். ஆனால், ஆர்யாவுக்கு சொல்லிக் கொடுத்ததாக கூறுவது பொய். ஆர்யா என்னை விட ‘பிட்’டா இருக்கார், உடற்பயிற்சி செய்து, உடம்பை சரியா வச்சிட்டு இருக்கார்.எதுக்கு அவருக்கு நான் சொல்லித் தரணும்? அது வெறும் வதந்தி தான்.

ஆர்யாவும், நீங்களும் நல்ல நெருக்கமான நட்பில்இருக்கீங்க. நயன்தாராவும் இருக்காங்க எப்படி இது?

உண்மையா சொல்லணும்னா, ஆர்யா பற்றி நிறைய பேர் ஏதேதோ சொல்வாங்க. ஆனா, ஆர்யா ரொம்ப நல்ல நண்பர். நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். அவருடன் முதல் முதலா நடிக்கும்போது, அவரின் கடுமையான உழைப்பை பார்த்து, ஆச்சரியப்பட்டேன். நிச்சயம் ஆர்யாவை எல்லா பெண்களுமே விரும்புவாங்க. அவ்ளோ நல்ல கேரக்டர் ஆர்யா. அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு, ரொம்ப ஒத்துழைப்பு கொடுப்பார்.

தமிழ் ரசிகர்கள் உங்ககிட்டே என்ன எதிர்பார்க்குறாங்கனு நினைக்கிறீங்க?

என் முகம், அவங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பிடிச்சிருக்கு, அது இல்லாம, ஒரு நல்ல சினிமாவை தான் அவங்க விரும்புறாங்க. அது அனுஷ்கானு இல்ல, வேறு யாரா இருந்தாலும்.

தமிழில் குறைவாகவும், தெலுங்கில் அதிக படங்களிலும் நடிக்கிறீங்களே?

அப்படி எல்லாம் இல்லை. இரண்டு மொழிகளிலும் கதை கேட்கிறேன். எந்த கதை எனக்கு பிடிக்குதோ, அதை ஒத்துக்கிறேன். மற்றபடி, இரண்டு மொழிகளுமே எனக்கு பிடித்தது தான்.