முருகதாஸின் சம்பளத்தை பார்த்து விஜய்யே அதிர்ந்து போய்யிருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் வெற்றி பெற்ற பட வரிசையில் துப்பாக்கி முக்கிய இடம் பிடித்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அத்துடன் சென்னை மற்றும் கோவை உரிமையும் விஜய் பெறவுள்ளார் (அந்த உரிமை சுமார் 45கோடி வருமாம்).
ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸோ விஜய்யை காட்டிலும் அதிகம் சம்பளத்தை கேட்டு பெற்றிருக்கிறாராம். அதாவது விஜய் சம்பளத்தைவிட இரண்டு கோடி அதிகமாக ரூ 20 கோடி சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம் முருகதாஸ். இதை கேட்ட விஜய் முதலில் அதிர்ந்து போனாராம்.
பின்னர் இதையெல்லாம் கேட்டும் கேட்காமல் இருப்பது தான் நல்லது என அமைதியாக போய் விட்டாராம். ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
அப்படிப் போடு அரிவாளை! நடிகனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சம்பளம்? நடிகனுக்கு அள்ளிக் கொடுத்தால் தமிழ்ச் சினிமா எப்படி உருப்படும்!
இந்த தொகை யாரை நம்பி கொடுக்கபடுகின்றது ???? 1980 முன்னே மலேசியா ,சிங்கபோர் ,இலங்கை இந்த நாடுகளில் தான் தமிழ் படங்கள் ஓடின …அனால் இன்று ஐரோப்பா ,கனடா ,அமெரிக்க ஆஸ்திரேலியா நாடுகளில் இந்த தமிழ் படங்கள் அங்குள்ள ஈழ தமிழர்களால் வெளியிடபடுகின்றன ..ஆக ஈழ மக்கள் வியர்வை சிந்தி உழைக்கும் டாலர் இந்த நடிகர் சம்பளம் ஏற முக்கிய காரணம் ..இந்தியாவில் தமிழர்களின் பொருளாதாரம் பாதாளத்தில் …தமிழ நாடில் ஒரு மாதம் வசூல் …ஐரோப்பா நாடு ஒன்றில் சில நாட்களில் பெறலாம் ..ஆனால் இந்த தமிழா சினிமா கூட்டம் ..ஈழ மக்களுகாக என்ன செய்தது ஒரு சிலர் தவிர்த்து ???