ரசிகர்களுக்காக எதிரிகளை பந்தாடும் அஜித்

ajithKஒவ்வொரு நடிகர்களுக்குமே சினிமாவில் தங்களுக்கென, ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்கத் தான் செய்யும். ஆனால், ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால், ரசிகர்களுக்காக, தங்களது பாணியை மாற்றிக் கொள்வர். அப்படித்தான், எனக்காக எந்த பில்டப்பும் வேண்டாம். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள் என்று, இயக்குனர்களிடம் சொல்லும் அஜித், வீரம்படத்தில் ஒரு ஓபனிங் பாடலில் நடனமாடியுள்ளார். தங்களது அபிமான ஹீரோ, ஒரு பாட்டோடு முதல் காட்சியில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற பெருவாரியான ரசிகர்களின் விருப்பத்துக்காகவே இப்படி மாறியுள்ளார், அஜித். அறிமுக காட்சியில், எதிரிகளை பந்தாடியபடி நடனமாடுகிறார் அஜித்.