வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி 100 நாட்கள் ஆனது

varutசிவகார்த்திகேயனின் ஹாட்ரிக் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் கடந்த செப்டம்பர் மாதம் 6ந் தேதி தொடங்கப்பட்டது (ரிலீசானது). சிவாவுடன் ஸ்ரீதிவ்யா, சூரி, நடித்திருந்தினர் பிந்து மாதவி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பொன்ராம் இயக்கி இருந்தார். ராஜேஷ எம். வசனம் எழுதியிருந்தார்

“வருத்தப்படாத வாலிப சங்கம்…” என்ற சங்கத்தின் தேசிய கீதத்தை இமான் இசைக்க அந்த கீதமே படத்துக்கு ஓப்பனிங்கை கொடுத்து இப்போது சங்கம் 100 நாட்களுக்கு வந்துவிட்டது.

சத்யம், எஸ்கேப், தேவி, அண்ணா, பிவிஆர், மாயாஜால் போன்ற இடங்களில் சங்கம் இன்னும் சில காட்சிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற ஊர்களில் சங்கம் ஷிப்டானாலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 7 கோடி செலவில் தொடங்கப்பட்ட சங்கம் 16 கோடி வசூலை குவித்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.