கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
சுவரெங்கும் போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் ரஜினி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் நலத்திட்ட உதவிகள் பல வழங்கியும் விழாவை படு விமர்சையாக கொண்டாடினர். அவ்வாறு கொண்டாடப்பட்ட ரஜினியின் பிறந்த நாள் மூலம் இப்போது ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது.
பிறந்த நாளை முன்னிட்டு ரஜினியை வாழ்த்தி சென்னையில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டியிருந்தது. அந்த போஸ்டரில் ஒன்றுதான் இப்போது பிரச்னையை கிளப்பியுள்ளது. அதாவது, ரஜினிகாந்த் குடும்பத்துடன் வாக்குச் சாவடியில் நிற்பது போலவும், அவர்களுக்குப் பின்னால் இந்துக் கடவுள்களான விநாயகர், விஷ்ணு போன்ற கடவுள்கள் காத்து நிற்பது போலவும் அதில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர்களை பார்த்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் ஒன்றை கொடுத்துள்ளது. இப்படி ஒரு போஸ்டரை நிஜமாகவே ரசிகர்கள்தான் ஒட்டினார்களா இல்லை ரஜினியை பிடிக்காத சில விஷ கிருமிகளின் வேலையா என்று கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளனர்.
தமிழனடா ,தமிழந்தாண்ட்ட நாத வேலைக்கு குரு நாதரே ! ஒரு காலத்தி இடைநிலை பள்ளியின் 6 ராம் படிவ புத்தகத்தில் தமிழன் எதில் இருந்து தோன்றினான் என்று புத்தகம் வெளியாகியது ,,அந்த புத்தகத்தில் எழதியது அனைத்தும் உண்மை !!??: எனக்கு வயிறு கலைக்குது ,அப்புறம் வந்து தொடர்கிறேன் !!!????????????????????????????????
ரஜினி தொலைந்தால் சிலருக்கு சினிமா பைத்தியம் குணமாகும் !