‘தமிழ் மொழி காக்கும் மலேசியா’, இது இசையமைப்பாளர் தாஜ்நூர், மலேசிய தமிழர்கள், மலேசியாவின் பெருமையை தமிழில் சொல்லும்படி உருவாக்கிய இசை ஆல்பத்தின் பெயர் ஆகும்.
இந்த இசை ஆல்பம் மலேசியாவில் இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன், இசை அமைப்பாளரும், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரஹானா, பின்னணி பாடகர்கள் வேல்முருகன், யாசின், நான்ஸி, சத்யன் உள்பட பலரும் கலந்துகொள்ள வெகு விமரிசையாக சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது!
இந்நிகழ்ச்சியை ஏ.ஆர்.என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து அஷ்ரப் மற்றும் ரஷிதா இருவரும் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
‘தமிழ் மொழி காக்கும் மலேசியா’ இசை ஆல்பம் குறித்து தாஜ்நூர் இவ்வாறு கூறுகிறார், எவ்வாறு? ஒவ்வொரு முறை மலேசியா போகும் போதும் அந்த அழகான ஊரை பற்றி, நம் அழகு தமிழில் இசை ஆல்பம் வெளியிட வேண்டும் என்று நினைப்பேன்.
ஆனால் அதற்கு இப்பொழுது தான் நேரம் வந்தது போலும்… மலேசிய வாழ் பெண் கவிஞர் ரஷிதா பொருத்தமான வரிகளுடன் என்னை நாடி வந்தார். உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
ஆல்பம் ரெடி! பாரதிராஜா கையால் அதை மலேசியாவில் வெளியிட்டு மகிழ்ந்தது மறக்க முடியாதது எனும் தாஜ்நூர், இனி மலேசிய கலைஞர்களையும் தன் இசையில் பயன்படுத்திக் கொள்ளும் முடிவிலும் இருக்கிறாராம்! வாழ்த்துவோம்!