இவன் வேற மாதிரி – சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டு மழையில் நனைந்துள்ளது ‘இவன் வேற மாதிரி’.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன், இப்போது விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் இவன் வேற மாதிரி. சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இப்படம் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘இவன் வேற மாதிரி’ படத்தை பார்த்தேன்.

ஒரு கிளாஸான ஆக்‌ஷன் படம், இது வரைக்கும் எந்தப் படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது என்றும் இது நல்ல பொழுதுபோக்கு படம், படம் பெரிய வெற்றியடையும் என்று வாழ்த்தியுள்ளார்…