இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளையராஜாவிற்கு விரைவில் ஆஞ்சியோ ஆப்பரேஷன் செய்யப்பட உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆப்பரேஷன் அவருக்கு வெகு நாட்களுக்கு முன்னரே செய்யப்பட வேண்டியது எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இசைஞானியின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திப்போம்.
உங்கள் நிகழ்ச்சி மலேசியாவிலே நடக்க வேண்டாம் .உங்களின் நலம் தான் முக்கியம் …..முதலில் உங்கள் உடம்பை கேர் பண்ணிகொங்கள்…
இசை உலகத்துக்கு இசைஞானி ஆற்ற வேண்டிய பணி இன்னும் இருக்கிறது. பரம்பொருள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க பிராத்திப்போம்.ஓம் நமச்சிவாய!