கா. ஆறுமுகம். பகுதி 3. இந்த இறுதிப்பகுதியில் மேலும் சில அறிவியல் சான்றுகள் பன்மொழிக்கு ஆதரவாக தரப்பட்டுள்ளன. பன்மொழிகளை கற்றுக் கொள்வதால் என்னென்ன பயன்கள் என்பதை முழுமையாக் இப்போதே அறிந்து கொள்ள இயலாது. ஆனால், அறிவியல் அடிப்படையில் நல்ல பயன்கள் கிடைக்கும் என்று மட்டும் தெரிகிறது. பன்மொழி பேசும் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருப்பதை கண்கூடாக அறிய முடிகிறது.
லண்டனின் மூலை முடுக்குகள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று கொண்டாடப்படும் வாடகை கார் ஓட்டுனர்களின் மூளை ஸ்கானில் (scan) கிடைத்த முடிவுகளை மேற்கோள் காட்டினார் தொரோந்தோக்ஸ் யோர்க் பல்கலைகழக உளவியல் ஆராய்ச்சியாளர் எல்லன் இயாலஸ்தாக். அவர்களுடைய மூளையில் இடம் சார் பகுத்தறிவிற்கான பகுதி அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது கண்டறியப்பட்டது.
வயலீன் வாசிப்பவர்கள் மற்றும் மற்ற இசைக் கலைஞர்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களது மூளையில் விரலசைவுகளைக் கட்டுப்படுத்தும் பகுதியில் வளர்ச்சி காணப்பட்டது. தொடர் பயிற்சிகள் மூளையில் மாற்றங்களை உண்டாக்குகிறதா அல்லது இந்த திறன்களை மூளை கொண்டிருப்பதால் ஒருவர் வாடகை கார் ஓட்டுனராகவோ அல்லது இசை கலைஞராகோ உருவாகின்றனரா என்பதின் காரணமும் விளைவுகளும் இன்னும் புலப்படாமலே உள்ளது என்கிறார் இயாலஸ்தாக்.
சுவீடனின் ஆய்வு
கடந்த ஆண்டு சுவீடனில் உள்ள லண்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் இந்த கோப்பாட்டை ஆய்வு செய்து பார்க்க முடிவு செய்தனர். பன்மொழி சார்ந்த ஆய்வு என்பதால், ஆய்வுக்கு உப்சாலாவில் உள்ள ஆயுதபடையின் மொழிபெயர்ப்பாளர் கல்விசாலையில் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
13 மாதங்களில் இவர்களுக்கு பழக்கமில்லாத அரேபிய மொழி அல்லது டரி மொழி கற்பிக்கப்பட்டது. அதே பாட திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவம் அல்லது நுண்ணறிவு இயற்பியல் கற்கும் மாணவர்களும் அந்த காலவரைக்குள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். வேற்று மொழியை கற்பிக்கும் முன் அனைவருடைய மூளையும் ஸ்கேன் செய்யப்பட்டது.
அதே போல், 13 மாதங்களின் முடிவில் மீண்டுமொரு முறை அவர்களது மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. வேற்றூ மொகழிக் கற்ற மாணவர்களில் மூளையில் பின்புற மேட்டில் வளர்ச்சி இருந்தது. இந்த வளர்ச்சி சிறப்பாக நினைவாற்றல் மேலாண்மைக்கும் புடிய விசயங்களில் எளிதில் கைதேர்ந்தவராவதற்கும் உதவுகிறது. பெருமூளை புறணி பகுதியில் உயர்ந்த, சீராக பகுத்தறிவு பதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மற்ற மாணவர்களிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை.
அர்தமுள்ள சத்தம் நரம்பு மண்டலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
வடமேற்கு பல்கழகத்தை சேர்ந்த உயிரியல் நிபுணர் நினா கரௌஸ் உச்சந்தலையில் மின்முனைகளைப் பொருத்தி மூளையில் செவிபுலன் பகுதியை ஆராய்ந்தார். இந்த ஆய்வில் இருமொழி பேசுபவர்கள் பேச்சு தொடர்பான ஒலிகள், முக்கிய தொனிகள், தாளங்கள், குழப்பமளிக்க கூடிய சப்தங்கள் போன்றவற்றை எளிதில் ஏறுக் கொள்கின்றனர். “மக்கள் சப்தங்களை அர்தமுள்ளதாக பயன்படுத்தும் போது நரம்பு மண்டலத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.” என்கிறார் கரௌஸ்.
பியாலஸ்தோக் இருமொழியாளர்கள் முளையை உபயோகிப்பதில் குறைவான அடர் தன்மையையும், நரம்பியலில் grey matter-யை விட white matter-யை அதிகமாக உபயோகிப்பதாக நம்புகிறார். white matter நரம்பு கொழுப்பினால் நரம்புகளுக்கு பாதுகாப்பளிக்கின்றது.
மூளையின் முன் மடலிலும், மூளையில் இரண்டு அரைக்கோளங்களிலும் ஆரோக்கியமான நரபு கொழுப்பை ஒரு மொழி பேசுபவர்களை விட இருமொழியாளர்களின் மூளையில் அதிகம் இருக்கிறது என்று அவரும் அவரது சக நண்பர்களும் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. “மூளை அமைப்பிற்குறிய வேற்றுமைகளை இன்றைய நவீன அறிவியலில் கண்கூடாக காண முடிகிறது” என்றார் அவர்.
மூளை வேகமாக செயல்பட
பன்மொழி கல்வி பற்றிய பெரும்பான்மையான வாதங்களால் பன்மொழி தெரிந்த மூளை அதிக செயலாற்றல் கொண்டது என்று தெரிகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பொருளுக்கும் கருத்துக்கும் குறைந்தது இரு மொழிகளில் இரண்டு வார்த்தைகளை தேர்ந்தெடுக்க நேர்வது ஒரு பயன் மிக்க பயிற்சியாகும். இதை நுண்ணறிவுசார் விஞ்ஞானிகள் நிலை மாறு பணி என்றழைக்கின்றனர். சாதாரணமாக ஆயிரம் வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது என்போம்.
உதாரணத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும் போது தொலைப்பேசி அழைப்பு வரும், அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கொம் போது, உங்களை பார்க்க அலுவலகத்திற்கு யாராவது வருவார்கள், அவர்களிடம் பேசிவிட்டு பிறகு தொலைப்பேசியையும், மின்னஞ்சலையும் கவனிப்போம். வழக்கமாக மூளையின் செயற்பாடு ஒரு வழியாக தான் இருக்கும். அதனால் பல வேலைகளை கையாளுவது சிரமம், அதிலும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியற்ற அலுவல்களை கையாளுவது மிகவும் சவால் தான்.
குளறுபடியாக நிஜ வாழ்வில் சவால்களைச் சந்திப்பதில் ஒருவன் எவ்வளவு தெளிவாக உள்ளான் என்பதை கணிக்க சில வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்று தான் ஸ்ட்ரூப் சோதனை. இச்சோதனை ஆரம்பத்தில் திரையில் ஒரு வண்ணத்தில் பெயர் அதே வண்ணத்திலான மையினால் எழுதப்பட்டிருக்கும். இந்த கட்டத்தில் காட்டப்படும் வண்ணத்தை கூறவோ அல்லது அதை குறிக்கும் விசையை அழுத்தவோ பணிக்கப்பட்டிருக்கும். இந்த பணியை அநேகமாக அனைவராலும் செய்துவிட முடியும்.
எளிய சோதனை நீங்களும் செய்யலாம்
அடுத்த நிலையில் ஒரு வண்ணத்திற்கான பெயர் வேறு வண்ண மையினால் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக ‘மஞ்சள்’ என்ற சொல் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். வார்த்தைகளைப் படிக்காமல், அது எழுதப்பட்டிருக்கும் மையின் வண்ணத்தை கூறவேண்டும்.
இது நினைப்பதை விட கடினமான பணியாகும். இங்கே தரப்பட்டுள்ள படத்தில் உள்ள எழுத்துக்களை படிக்காமல் நிறத்தை மட்டும் சொல்லுங்கள் பார்கலாம்! பெரும்பாலும் உலக அளவில் பன்மொழி பேசுபவர்கள் ஒரே மொழியை பேசுபவர்களை விட குறைவான பிழைகளுடன் இந்த பணியை இலகுவாக செய்து முடித்து விடுகின்றனர்.
இந்த ஆய்வு நடுதர வயது பன்மொழியாளர்களின் மூளை பயன்பாடு உச்சத்தில் இருப்பதை மட்டும் கட்டவில்லை மாறாக பன் மொழி பேசும் குழந்தைகளும், வயோதிகர்களும் சமமான நுண்ணறிவு உள்ளது, அல்லது பன்மொழி அற்றவர்களிடம் முழுமை பெறாமலோ, நழுவவோ தொடங்கியுள்ளது எனக்காட்டுகிறது.
பல பணிகளை மாறி மாறி செய்ய நேரிடும் போது இழக்கும் செயல்திறனை global switch cost. பல வேலைகளை ஒரே நேரத்தில் எல்லோருமே செயல்திறனை மெதுவாக்குவர் அல்லது சில தவறுகளைச் செய்யும் வாய்ப்புள்ளது, ஆனால், இப்படி பல வேலைகளைச் செய்யும் போது பன்மொழியார்களின் வேலையில் தோல்விகள் குறைவாகவே உள்ளது என்கிறார் பியாலஸ்தோக்.
சாத்தியமில்லை என்பதை புறம்தள்ளி விட்டு ஆய்வுக்கு வெளியே வாழும் மக்களின் செயல்திறன் கூடினால், ஒரே மொழி மட்டும் அறிந்த மாணவர்கள், நணபர்களிடையே போட்டிகள் அதிகரிக்கும்.
போட்டியாற்றல் உண்டானல் திறமை வெளிப்படும்
போட்டியாற்றல் இலகுவாக மதிப்பிட முடிந்ததால் பெரியவர்களிடையே பன்மொழி ஆற்றலின் முக்கியத்துவம் அதிகமாகிறது. Universiti of Kentucky-யை சேர்ந்த புலனுணர்வு சார்ந்த நரம்பியல் விஞ்ஞானி பிரியன் கோல்ட் 60 வயதிலிருந்து 68 வயதிற்குட்பட்ட முதியவர்களிடம் நிலைமாறு பணியைப் பற்றிய ஆய்வொன்றை நடத்தினார். இருமொழியாளர்கள் ஒரே மொழி பேசுபவரை விட அதிக வேகமாகவும், நுட்பமாகவும் செயல்பட்டது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் வேலை செய்வதை காந்த அதிர்வு அலை வரைவு கருவியின் மூலம் ஸ்கேன் செய்து பார்த்த போது இருமொழியாளர்களின் மூளை குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மொழி பேசுபவர்களின் மூளையை விட சுறுசுறுப்பாக செயல்படுவதை தவிர மற்ற பகுதிகளில் குறைவாகவே செயல்பட்டது.
அதிகமாக செயல்படுகிறது என்றால், மூளை கடினமான வேலைகளைச் செய்கிறது என்று அர்த்தம். எனவே, வயோதிகர்கள் இளைஞர்கள் போலல்லாமல் தங்களுடைய மூளை அதிக கடினமாக உபயோகிக்க வேண்டியிருக்கும். ஆனால், இருமொழி பேசும் முதியர்கள் இதை குறைவாகவே செய்கின்றனர்’ என்கிறார் கோல்ட். இது உண்மையில் அதிக நன்மை தரக் கூடியது தான்.
குழந்தை முதலே பன்மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்
பியாலஸ்தோக் வயது சார்ந்து புலனுணர்வு குறைவைப் பற்றி ஆய்வு நடத்தியுள்ளார். இருமொழியாளர்கள் முதுமையினால் வரும் மறதி நோயை சராசரி 4.1 வருடங்கள் தள்ளி போடுகின்றனர். almizheimer’s உள்ளவர்களுக்கு இது 5.1 வருடங்கள் தள்ளி போடப்படுகிறது. அதனால், ஒரே மொழியைப் பேசி பழகிய நடுத்ர வயதினர் ஒருவர் இதற்கு மேல் இன்னொரு மொழியைக் கற்றுக் கொண்டால் அவர்களுக்கு இருமொழியாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து நன்மைகளும் நடந்துவிடும் என்றால் அது சாத்தியமில்லை.
பொதுவாகவே பெரியவர்களை விட சிறு குழந்தைகள் இலகுவாக எந்தவொரு விசயத்தையும் கற்றுக் கொள்வர். எனவே சிறு குழந்தையிலிருந்தே பன் மொழி பயன்பாட்டை பழக்கப்படுத்துவது தான் சாத்தியப்படும் என்கிறார் கோல்ட். நடுதர வயதிற்கு மேல் வேறோரு மொழியைக் கற்பது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவதற்கு ஒரு வழி என்றும் அவர் கூறினார்.
யூட்டா பள்ளிகளில்பன்மொழிக் கவி பயிலும் பிள்ளைகள் மூளையின் சக்தியும், அவர்களது மொழி ஆளுமையும் தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே போகிறது. இத்திட்டம் ஆரம்பித்ததிலிருந்து முன்னணியில் இருக்கும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களில் முன்னேற்றமும் பன்மொழி கல்வி வழங்கும் கல்விகூடங்களில் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்க பலர் விரும்புவதற்கு காரணமாக உள்ளது. இதை நிறைவு செய்ய ஒவ்வொரு ஆண்டும் புதியதாக 20 முதல் 25 பள்ளிகளில் இருமொழிக் கல்வியை புகுத்த திட்டமிட்டுள்ளனர்.
யூட்டாவில் உள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த இருமொழி வாழ்க்கை பல மகிழ்ச்சிகளைத் தந்துள்ளது. “அவர்கள் என்னை அணைத்துக் கொண்டது என்னை நெகிழ்த்தி விட்டது’ என்கிறார் Morning Side ஆரம்ப பள்ளியில் பிரான்சு மொழி கற்றுக் கொடுக்க தொடங்கும் முன் கல்லூரிகளிலும், உயர்கல்விகூடங்களிலும் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்த பிரான்சு ஆசிரியை ஜோர்ஜியா கீலிங். என்னுடைய மாணவர்கள் பள்ளி சபைக் கூடலில் பிரஞ்சில் பாடியது என் கண்களை கலங்கி விட்டது என்றார். இதுவே மூன்றாம் ஆண்டு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சான்று. வேறு மொழியின் அழகையும், அந்த மொழியின் பாடல் வரிகளையும் கற்றுக் கொள்வது அவர்களது சித்தனையை மேம்படுத்துகிறது என்றார். முற்றும்
முழுமையாக கட்டுரையை படித்தேன். சிறப்பாக உள்ளது. இதன் வழி தமிழ் பள்ளியை ஒரு சிறந்த தலத்திக்கு எடுத்து செல்ல முடியும். தமிழ் , ஆங்கிலம் , மலாய் ஆகிய மொழிகள் பயிலும் நமது மாணவர்கள் சிறந்த திறன் கொண்டவர்களாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் குண்டர் கும்பளைதான் உருவாக்குகிறோம். எப்படி நம்பால் மாற இயலும்? உரு மாற்றம் காண என்ன செய்யலாம்?
பலர் இங்கு சிறந்த கருத்தை பதுவு செய்து வருகிறார்கள், அவர்கள் தங்கள் மூளையை கசக்கி ஆலோசனை வழங்கவும்.
ஒரே மொழி ஆற்றல் கொண்ட மலாய்காரன் எப்படி சார் இந்தியனை (அரசியல்) வழிநடத்துகிறான் ?
நல்ல கேள்விதான். மலேசிய ஒரு மாய வளர்சிய்ல்தான் உள்ளது. ஊதாரிதன்மான ஆடம்பரமாக அரசியல்தான் நடக்கிறது. லஞ்சம், ஊழல் கொண்ட அரசாங்கம் – வளத்தை சூரையடுகிறது. கல்வியில் வியட்நாமை விட மோசமாக உள்ளோம். அரசியல் பலம் என்பதும் மூளை திறன் என்பதும் வேறு. ஒரு வகையில் நாமும் அவர்களது அந்த நிலைக்கு ஒத்து போனதும் காரணமாக உள்ளது. உங்கள் பத்தி என்ன?
சார்! சோம்பேறி முட்டாள் நீங்கள் சொல்வது தெரியும்! அதனால்தான் நம் பிள்ளைகளை முடக்கி வைக்க பெரும் திட்டம்!
நேற்று ஈப்போவில் நடந்த ஒரு பெற்றோர்கள் கூட்டததில் இந்த
கட்டுரை சார்பாக ஒரு சக பெற்றோர் அறிவித்தார். தமிழ்ப்பள்ளி ஒரு அறிய வாய்ய்பு என்றார். அறிவியல் சார்ந்த இந்த கட்டுரை முக்கியம் என்றார். இதை படித்த போது, தமிழ் பள்ளி மாணவர்கள் சிறந்த வகையில் உருவாக முடியும் என்பது அறிவியல் உண்மை. அந்த நம்பிக்கையை இந்த ஆய்வு காட்டுவதால், அனைவரும் அக்கறை கொண்டு தமிழ் பள்ளியை முன்னெடுக்க வேண்டும். அதை வெறும் ஒரு பள்ளி என்று பார்க்காமல் அது நமக்கு கிடைத்த ஒரு அருமையான முக்கியமான வாய்ப்பு என்று எடுத்து கொள்ள வேண்டும், இந்த கருத்தை நாம் தான் எடுத்து பேசவும் பரப்பவும் வேண்டும். தமிழ் நாளிதழ்கள் இதை பிரசுரம் செய்து உதவ வேண்டும் . நன்றி.
Iniyaval mugunthan, நம் நாட்டு தமிழ் தினசரிகள் சில வேளைகளில் மட்டும் நல்ல தமிழர் தொண்டுகள் செய்கின்றன. 30.12.2013 அன்று இரங்கூனிலிருந்து KL வர MAS விமானம் ஏறும் நேரத்தில், விமான நுழைவாயிலின் அருகே அடுக்கி வைத்திருந்த மலாய், சீன, ஆங்கில தினசரிகளில் விரும்புவதை எடுத்துக்கொள்ளுமாறு கூறினர். நான் எனக்கு ஆங்கிலம் ஓர் அளவே தெரியும் எனக்கூறி தமிழ் தினசரி கிடைக்குமா என வினவினேன். (நமது தமிழ் தினசரிகளின் விற்பனைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனும் நோக்கில், MASல் இப்படி செய்வது உண்டு.) உடனே stewardess பணிவுடன் தமிழ் தினசரி இல்லை என மன்னிப்புக் கோரினார். அவர் அருகில் இருந்த மற்றொரு stewardess அவரிடம் ஏதோ மெதுவாகப் பேசினார். முன்னைய stewardess நான் அமரும் இருக்கை எண்ணைக் கேட்டு, ஒரு தமிழ் தினசரி இருக்கக்கூடும் எனக்கூறி, தேடிப்பார்த்து சொல்வதாகக் கூறினார். உடனே சற்று நடைவழியில் உள்ளே வந்து, பிரயாணிகள் தலை உயரே இருக்கும் பொருட்கள் வைக்கும் பெட்டியைத் திறந்து, தேடி, அன்றைய தமிழ் நேசனை என்னிடம் கொடுத்தார்..!!! ( MAS நட்டத்தில் நடந்தாலும் அவர்களின் சேவை தரம் அதிகம். இந்திய விமானங்களில் இது போன்ற சேவை உணர்வை காண்பது அரிது.) அன்றைய தலைப்பு செய்தியைப் பார்த்ததும் நான் அதிர்ந்து போனேன். “ரசிகர்களின் மனங்களில் கல்ந்திருப்பவர் இளையராஜா”. ஆமாம்.!! இது நம் நாட்டின் ஒரு முக்கிய தமிழ் தினசரியின் அதிமுக்கிய தலைப்பு….!! எப்படி உறுப்படும் நம் சமுதாயம்..??!! ( இதில் minnal FM மின்னிய மின்னல்கள் வேறு…!!!) நமக்கு எண்ணற்ற சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு etc பிரச்சனைகள் இருக்கும் போது…, நமது தமிழ் தினசரியின் தமிழர் சமூக உணர்வை எண்ணி மெய்சிலிர்த்து போனேன். இருப்பினும் நாம் (அறிவு விருத்திக்கு அதிகம் உதவாத) நம் நாட்டுத் தமிழ் தினசரிகளை தொடர்ந்து (அரைக்குறை மனதுடன்) ஆதரிப்போம் – இந்நாட்டில் தமிழ் மொழி நிலைப்பிற்கும், வளர்ச்சிக்கும்..
எந்த நாளேடும் செய்திகளை உண்மையுடனும் நேர்மையுடனும் கூற வேண்டும். ஆனால் அவை படிப்போரில் அநேகரை வசியப்படுத்தி மற்ற விஷயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற அவசியமில்லாத ஆனாலும் அன்றாட செய்தியாக கொடுக்கின்றன. படிப்பவர்கள் அதனை செய்தி என்றுமட்டும் படித்துவிட்டு நமது முன்னேற்றத்திற்கு உதவாது என்றால் ஒதுக்கி விட வேண்டும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதர்க்கேற்ப தொடர்ந்து இம்மாதிரியான செய்திகளையே வெளியிட்டு படிப்போரின் சிந்தனையை ஒருமுகப்படுத்திவிடுகிறது. அதன் பின் படிப்போரின் சிந்தனையும் நோக்கமும் அதுவே ஆகிவிடுகிறது. நான் ஒரு திரைப்பட ஆய்வொன்றில் கலந்து கொண்டேன். அந்த ஆய்வாளர் திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்து ரசித்துவிட்டு போகவேண்டுமே ஒழியே நமது வாழ்வாக்க முயலக்கூடாது என்றார். திரைப்படம் முன்பே முடிவாக்கப்பட்ட முடிவை கொண்ட கதையை தழுவியது. ஆனால் நமது உண்மை வாழ்வின் அடுத்த நிமிடத்தை கூட நம்மால் நிர்ணயிக்க முடியாது. திரைக்கதையில் எல்லாமே இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்தில் முடிந்துவிடும். உண்மைவாழ்க்கை அப்படியல்லவே. ஆக எதையும் அதனதன் கண்ணோட்டத்தில் பார்த்து நாமைகளை எடுத்துக்கொண்டு ஒவ்வாததை விட்டுவிடவேண்டும். எனக்கும் பல மொழி கட்ற்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த மலைகளை நான் நெருங்க முடியாவிட்டாலும். அவர்களின் ஆற்றலை கண்டு நான் வியந்தது உண்டு. ஒருவர் தான் ஆற்றப்போகும் சொர்ப்பொழிவை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தயார் படுத்தி அந்த சொற்பொழிவை இரண்டு மொழிகளிலும் எவ்வித கருத்து மாற்றமும் இல்லாமல் கூறிவிடுவார். அவரோடு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து பணிபுரிந்து, என்றாவது அவரது சொர்ப்பொழிவுகளில் குறைகாண முடியுமா என்று முயன்று தீவிரமாக அவரின் சொற்பொழிவுகளை செவிமடுத்து ஏமாந்ததுதான் மிச்சம். ஆக தமிழ் பள்ளிகள் நாம் மூன்று மொழிகளை ஒரே சமயத்தில் கற்க ஒரு வரப்பிரசாதம் என்றே அறிந்து செயல்பட இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
தொவண்ண பாவண்ண நன்றாக சொன்னீர்கள். பெரியார்கூட ஒரு நல்ல கருத்தைச் சொல்லிவிட்டு ” நான் சொல்கிறேன் என்பதற்காக என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைமட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.” என்பார். நான் பத்திரிகைகளில் வேலை செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன். எல்லா பத்திரிகைகளும் பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டவை. இதில் அரசாங்க அடிவருடித்தனம் அதிகம். ஒரு 20 சதவிகிதமே சமூக நலச்செய்திகள். மற்ற தெல்லாம் 3ம் தர வாசகர்களை திருப்திபடுத்தும் வர்த்தக நோக்கம் கொண்டவை. எழுத்துக்கும் உள்ளத்திற்கும் கொஞ்சம்கூட உறவிருக்காது.நல்ல ஆய்வு கட்டுரைகள் , காலத்திற்கு ஏற்ற நடப்பு சமுதாய,பொருளாதார சிக்கள்களைப் பற்றிய தரமான, ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை மற்ற மொழிப் பத்திரிகைகளில் காண்பதைப்போல் நம்மொழிப் பத்திரிகைகளில் கண்பதரிது. வாசகர்களை முன்னோக்கி இழுத்துச் செல்லும் கடப்பாட்டிலிருந்து விலகி வாசகர்களின் ரசனைக்கு எற்ப எழுதி, அவர்களின் பின்னால் பத்திரிகைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளில் மெய்ப்பொருளைக் காணும் அறிவும் ஆற்றலும் வேண்டுமெனும் என்று சொல்லி உங்களின் கருத்தினை ஆதரிக்கிறேன் தோவன்னா பாவன்னா!
இது தமிழ் நாட்டுத் தமிழனுக்கு சரி வருமா? தமிழும் ஆங்கிலமும் படித்தால் தான் மூளை வளரும். இந்தி படித்தால் மூளை வளராது என்று ஒதுக்கி விட்டார்களே! இப்போது ஆங்கிலம் படித்தால் போதும், தமிழ் படித்தால் மூளை வளராது என்று நினைக்கிறார்கள். பிராமணத் தமிழனும் அண்டை மாநில மலையாளிகளும் இந்தி படித்து விட்டு இந்தியாவில் பெரிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டுத் தமிழன் தமிழ் படித்துவிட்டு தமிழ் நாட்டில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறான்! இப்போது தமிழனும் வளரவில்லை. தமிழும் வளரவில்லை.
தமிழர் நந்தா, நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில். 51% அறிவாளிகளை, 47% கொண்ட முட்டாள்கள் ஆளும் ஜனநாயகம் என்பதே பதில்.
தேனீ கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் !
தமிழர் நந்தா, ஒரு மொழி தெரிந்த மலாய்க்காரன் ஜனநாயகம் என்னும் அரசாட்சியை கையில் வைத்துள்ளான். “ஜனநாயகத்துக்கு” அறிவு முக்கியமல்ல மாறாக எண்ணிக்கைதான் (“numbers”) முக்கியம். 51 மடையர்கள் சேர்ந்து 49 அறிவாளிகளை முட்டாலாக்குவதுதானே. ஜனநாயகம். ஆகவேதான், முட்டாள்களின் ஜனநாயகம் அறிவாளிகளான இந்தியனை வழிநடத்துகின்றது. நீங்கள் ம.இ.க. – வை மனதில் நிறுத்தி இந்த கேள்வியைக் கேட்டிருந்தால் அந்த இந்தியர்கள் சுயநலவாதி மடையர்கள். அவர்களை அறிவாளி என்று நினைத்துக் கேள்வி கேட்க வேண்டாம். ஒரு மடையனை இன்னொரு மடையன் வழி நடத்துவது பெரிய காரியமல்ல!
தமிழ் பள்ளியில் ஏன் சீன மொழி பாடம் தேவையா.தமிழ் பாடத்தில் பின்தங்கிய மாவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தலாமே.நீ சீன மொழி பாடம் நடத்தினால் அவன் இது தமிழ் பள்ளி இல்லை சோ மலாய் மொழி 80%நேரம் நடக்கணும் சொல்றான்.சீன மொழி படிக்க பணம் கெக்ராங்க்கொ சோ பணம் வுல்லவன் பிள்ளை மட்டும் படிக்கும் இல்லாதவன் பிள்ளை நிலை.?சார் சிறந்த மாணவன் /மாணவி ,விளையாட்டு /அறிவு திறன் /பாடல் /நடிப்பு,இதில் சிறந்து விளங்கும் பிள்ளைகள் பெரும்பாலும் பணக்கார பிள்ளை,நன்கொடையாளர் பிள்ளை,ஆசிரியர் பிள்ளைகல் இவர்கள்தான் தேர்ந்து யெடுக்கபடுகின்ரனர்.மலாய் காரர் பிள்ளைகள் காகம் போன்றவர்கள் சிறிதானாலும் எல்லோரும் பகிர்ந்து கொள்வர் வொற்றுமை,நமகிட்டெ இல்லையே.