பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சன்னியாசியாக மாறியுள்ளார் நடிகை ரஞ்சிதா.
தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார்.
அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற காணொளி பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார், நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு.
இந்த பிறந்த நாளிலும் 40–க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உரிய சடங்குகள் செய்து ரஞ்சிதா சன்னியாசியாக தீட்சை பெற்றார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார்.
பின்னர் மேடையில் பேசிய ரஞ்சிதா, உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன்.
முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன் என்றும் இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன் எனவும் கூறியுள்ளார். ரஞ்சிதாவுக்கு நித்யானந்தா சன்னியாசி தீட்சதை வழங்கியதற்கு மடாதிபதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவித்து விட்டார்கள் ,இனி என்ன சந்நியாசி வேசம்தான் பாக்கி ,,போ போ
ரொம்ப நல்லதா போச்சி!!! இனி நினைத்த நேரமெல்லாம் தலைவர் நித்தியானந்தா அறைக்கு சென்று வேண்டும்மளவுக்கு …………………மானங்கெட்ட ஜென்மங்கள் ?
ஜன்னலை திரங்கள் காற்று வரதும்..கதவை மூடுங்கல் ரஞ்சிதா வரடும்…நித்தியானந்த
ரஞ்சிதா ,பார்த்தார் சந்நியாசிகள் தான் மதத்தின் பெயரை சொல்லி
ஏக போக வாழ்க்கை வாழுகிறார்கள் ,நாமோ சினமாவில் நடித்தும்
சம்பதிக்கமுடியவில்லை ,நிதியனதவின் ஆசைநாயகியாக வாழ்ந்தும் அனுபவிக்க முடியவில்லை , சரி சந்நியாசியாக மாறுவோம் ,இந்த
மட மக்கள் என்னை தெய்வமாக ஏற்றுகொள்வார்கள் என்று நினைத்து ரஞ்சிதா சந்நியாசியாக மாறிவிட்டார் நைனா .
அவர் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டார். இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அவரே அரசியல்வாதியாக மாறி இருந்தால் அது சமுதாயத்தைப் பாதிக்கும். அவரை நிம்மிதியாக வாழ விடுங்கப்பா!
என்ன அநியாயம். அந்தப் பெண்ணை வாழவும் விடமாட்டேன் என்கிறீர்கள். சாகவும் விட மாட்டேன் என்கிறீர்கள். தவறுகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நடப்பது உண்டு. நிவர்த்தி செய்ய உதவிடுங்கள். பெண் பாவம் பொல்லாதது. இது நித்தியானந்தாவுக்கு.