கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சி ,மலேசியாவில் 28ம் தேதி இளையராஜா தலைமையில் நடைபெறுவதாக இருந்தது , ராஜாவுக்கு உடல் நல குறைவால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் கார்த்திக் ராஜா ஷோவை நடத்தினார் , மலேசியாவில் இருந்து , நமது நிருபர் தரும் சிறப்பு செய்திகள் இதோ:
யுவன் ஒரு வார காலமாக மலேசியாவில் இசை நிகழ்ச்சிக்காக பயிற்சி கொடுத்து வருகிறார், இளையராஜாவுடன் மருத்துவமனையில் இருந்த கார்த்திக்ராஜா , சில தினங்களாக இசை பயிற்சி கொடுத்து வருகிறார். காலையில் தொடங்கி, மலேசிய நேரப்படி மாலை நிகழ்ச்சி நடக்கும் 30 நிமிடங்கள் வரை, இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் பயிற்சி கொடுத்தார்.
மேர்டிகா(Merdeka) ஸ்டேடியத்தில் மலேசிய நேரப்படி சரியாக இரவு 7.20 மணிக்கு மின்னல் எப் எம் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொடங்கினர். கூட்டம் நிரம்பி வழிந்தது; பக்கத்தில் இருக்கும் நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டனர்; அந்த கூட்டத்தினர் இடையே பிளாஷ் மொபோ டான்ஸ் வழங்கினர்.
இதில் ராஜாவின் பாடல்கள், ராஜா ராஜாதி ராஜா இந்த ராஜா, வச்சிக்கவா உன்னை மட்டும், மைனா மைனா மாமன் புடிச்ச மைனா, இளமை இதோ போன்ற பாடல்களுக்கு ரசிகர்கள் முன்னிலையில் ஆடினர்.
சரியாக மலேசிய நேரப்படி இரவு 7.55 மணிக்கு கார்த்திக் ராஜா மேடைக்கு வந்தார். வணக்கம் தெரிவித்து நமசிவாய வாழ்க என்று, இறைவணக்கம் பாடினார். இதை அடுத்து இளையராஜா திரையில் தோன்றினார். ஜனனி ஜனனி என்று பாடலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி அனைத்தும் நேரடியாக இளைய ராஜாவுக்கு இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியை பார்த்து இடையில் சில நிமிடங்கள் பேசினார். நான் எப்படியாவது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். டாக்டர் அறிவுரைப் படி வர முடியவில்லை ,நான் அங்கேதான் இருக்கேன் எந்த குறையும் இல்லை , நிகழ்ச்சியை கார்த்திக் சிறப்பாக நடத்துவார் அவர்க்கு என் வாழ்த்துக்கள் என்றார்.
ஜனனி பாடலை பவதாரிணி, கார்த்திக் ராஜா பாடி முடித்தனர். பாடலை அடுத்து பேசிய கார்த்திக் ராஜா, 100 ஆண்டு கால இந்திய சினிமாவில், இசையில் 30, 40 வருஷத்தில் அப்பாவின் பங்கை எடுத்திட்டா, என்ன இருக்குமுன்னு உங்களுக்கே தெரியும், நான் இங்க மகனா பேசல, ரசிகனா பேசுறேன், அப்படி இசையை கொடுத்தவர் ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோகிராம் பண்ணும் போது பக்கத்தில் இருந்து பார்த்தபோது என்னால் முடியல, என்று கண்ணீர் விட்டு அழுதவரை வெங்கட் பிரபு மேடைக்கு வந்து தைரியம் கொடுத்து சென்றார்.
இதை அடுத்து பேசிய கார்த்திக், இந்த மேடை அப்பா இல்லாமல் வெறுமையாக இருக்கு, நான் இதை ஒத்துக்குறேன் , இங்க இல்லனாலும் ,அவங்க மனசு முழுக்க இங்க தான் இருக்கு , ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது ஷோவுக்கு போய்டனும்பா, என்று பலமுறை சொன்னார், இபோதைக்கு அப்பாவை ரீ- பிளேஸ் பண்ண முடியாது, அதனால் எங்களால் முடிந்ததை கொடுக்கிறோம் என்றார்.
தொடர்ந்து ஹரி சரண் மற்றும் குழுவினர் ராஜா சார் வணங்கும் அண்ணாமலையார் பாடல் ஒம் சிவ ஓம் என்று அரங்கம் அதிர பாடினார், இதை அடுத்து நடிகை சுகாசினி மேடைக்கு வந்தார் , தான் ராஜாவின் ரசிகை , உடல் முழுக்க அவர் ரத்தம் தான் ஓடுறது என்றார் , நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் , இதை தொடர்ந்து தன் அம்மாவிற்காக கார்த்திக் ,யுவன் ,பவதாரிணி, அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே பாடலை பாடினர்.
நிகழ்ச்சில அடுத்து பேசிய சுஹாசினி , எனக்கு குழந்தை பிறக்கும் முன் தங்க காப்பு அம்மா தான் போட்டாங்க. ஆனா தங்கம் மாதிரி 3 குழந்தைகள கொடுத்திருக்காங்க, நீங்க சொலுங்க அம்மா பத்தி என்றதும், யுவன் சொன்னார் நான் இசையை முறைப்படி படிக்கல , அம்மா தான் உன்னால் முடியும், வெளுத்து வாங்கு யுவன் என்று என்னை உற்சாக படுத்தினார். அம்மா இல்லைனா இன்று இந்த யுவன் இல்லை என்றார், கார்த்திக் சொல்லும்போது அம்மாக்கு நாங்கள் டார்ச்சர் தான் கொடுதிருக்கோம் என்றார், பவா சொல்லும்போது நான் பாடகி ஆனதுக்கு அம்மாதான் காரணம் என்றார். இப்படி அப்பா, அம்மா அழகான வாழ்க்கை கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் என்றார் சுகாசினி.
அடுத்து மேடைக்கு வந்த எஸ் பி பாலசுப்ரமணியம், தோளின் மேலே பாரம் இல்லை, கேள்வி கேட்க ராஜா இல்லை என்று பாடினார், அடுத்து அவர் பேசும்போது இந்த சூழ்நிலை மிக வருத்தமானது, ராஜா மேடையில் இருக்கும் போதே மைக் பிடிக்கமாட்டார் கார்த்திக், அவர் பிறக்காத போதே எங்கள் நட்பு உண்டு, எனக்காக ராஜா பிறந்தாரா? ராஜாவுக்காக நான் பிறந்தேனா தெரியல, ஆஸ்பத்திரில நான் பார்க்க போனப்ப ,டேய் டாக்டர் கிட்ட சொல்லுடா, நாம கச்சேரி போயிட்டு வந்திடலாம், என்று எவ்வளவோ முயற்சி பண்ணான், நான் ராஜா இல்லாம எந்த ஷோவ்யும் பண்ணதில்லை, 2 இறக்கை முளைத்தால் ஓடி வந்திடுவான், அவன் 100 வருஷம் நல்லபடி வாழணும்னு வேண்டிக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்த ராஜா ரசிகர்களிடம் பேசினார், அப்போது ,தோளின் மேலே பாரம் இல்லை, கேள்வி கேட்க ராஜா இல்லைன்னு பாடினான், நான் கேள்வி கேக்கலனா அப்படி ஒரு பாட்டு வந்திருக்குமா, 2000 பாட்டுக்கு மேல என் பாடல்களை பதிவிறக்கம் பண்ணி கேக்குறாங்க , எனக்கு என்ன கொடுக்கிறாங்க ,அவங்க கிட்ட இருந்து நான் வாங்க கூடாது, அவர்களுக்கு நான் தான் கொடுக்கணும் என்றார் , அப்பா பேசியதுக்கு பதில் சொன்ன கார்த்திக்
உலகத்தில் மக்களுக்கு அன்பு , காற்று , நீர் எப்டி காசு இல்லாம இலவசமா கிடைக்குதோ அதை போல உங்கள் இசையும் கிடைக்கணும்பா என்றதும் , அரங்கில் கை தட்டல் …
நிகழ்ச்சியில் மனோ ஒ பிரியா பிரியா ,என் கண்மணி , செண்பகமே ,போன்ற பல பாடல்களை , காமெடி கலந்து பாடி ரசிகர்களை உற்சாக படுத்தினார் , பாலு , சின்ன மணி குயிலு , என்ன சத்தம் இந்த நேரம் ,சந்தைக்கு வந்த கிளி ,வனிதாமணி , ஜெர்மனியின் ,இளமை இதோ பாடல்களையும் , சித்ரா, ஓ பிரியா தென்றல் வந்து ,போன்ற பாடல்களையும் , கிருஷ் பனிவிழும் நிலவு ,பேர் வச்சாலும் பாடல்களையும்,உமா ரமணன் ம், ஆனந்த ராகம் பாடலையும் ,,ஆலப் ராஜ் ,ஷாலினி வெட்டி வேரு வாசம் பாடலையும் ,யுகேந்திரன் பொதுவாக எம் மனசு தங்கம் பாடலையும் , வெங்கட்பிரபு சொர்கமே என்றாலும் பாட்டையும் ,யுவன் தென்றல் வந்து ,நிலா அது போன்ற பாடல்களையும் , பவதாரிணி ,ரம்யா ,சத்யன் ,ரீட்டா ,அனிதா ,ஹரி சரண் ,செந்தில் தாஸ் ,பிரேம்ஜி ஆகிய பாடகர்களும் ராஜா பாடல்களை பாடினர்.
விழாவில் வாலி ,பாவலர் , ஸ்வர்ணலதா , மலேசியா வாசுதேவன் போன்றவர்களுக்கு
நினைவு வணக்கம் செலுத்தப் பட்டது , முக்கிய நிகழ்வாக இந்நிகழ்ச்சியில் வந்த வருமானத்தில் ஒரு பகுதி பார்வையற்றவர்களுக்கு வழங்கப் பட்டது , இந்த விழா வில் ,நடிகை ஜெயஸ்ரீ ,ராம்கி ,நிரோஷா , வாசுகிபாஸ்கர் , வெங்கட் பிரபு குழுவினர் பலரும் கலந்து கொண்டனர் , நிகழ்ச்சி மலேசிய நேரப்படி இரவு 12.30 மணிக்கு முடிக்க அனுமதி கொடுக்கப் பட்டது ,
ஆனாலும் மக்கள் கலைய வில்லை, விழா சூடு பிடித்தது , கடைசி 15 நிமிடங்கள் ரசிகர்கள் உற்சாக படுத்த , மேடையில் அத்தனை பாடகர்களும் வந்து ஹிட் பாடல்கள் சில வரிகளை அரங்கம் அதிர ரசிகர்களின் கைதட்டல்களோடு ஹாப்பி நியூ சொல்லி , சரியாக இரவு 1 மணிக்கு பாடி முடித்தனர் , வீடு செல்ல மனசே இல்லாதபடி ராஜாவின் இசையை ஒருவரின் மனசிலும் எடுத்து சென்றதை நாம் அரங்கில் இருந்து பார்க்க முடிந்தது , கிங் ஆப் கிங்ஸ் இசை வென்றது .
அருமை அருமை ,,நம் சமுதாயதிக்கு இதுதான் முக்கியம் ,அவன் அருமையாக ஆடி பாடி பணத்துக்காக கூத்தாடினான் ,,மலேசிய தமிழன் இங்கு அம்னோ காரனிடம் ஐந்துக்கும் பத்துக்கும் ,அரிசிக்கும் பருப்புக்கும் கூத்தடிதுக்கொண்டு இருக்கிறான் ,வாழ்க தமிழ் சமுதாயம் .கி கி கி கி
அப்பனை நினைத்து ஒரு பிள்ளை கண்ணீர் விடுவது சகஜமப்பா ,,இதி என்ன அதிசியம் இருக்கிறது ? செவ்வாய் கிரகர்த்திர்க்கு இன்னும் சில வருடங்கள் கழித்து மனித குளத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த உலகை விட்டு அனுப்ப போகிறார்கள் விஞ்சானி .போகிறவர்கள் திரும்பி வருவார்களா இல்லையா என்று தெரியாது !ஏன்னா ஒரு வலி பாதையாம் !அவர்களை,அவர்கள் குடும்பத்தை நினைத்து கண்ணீர் விட்டு கை கொடுங்கள் மலேசியர்களே !
சினிமா விமர்சனத்தில் உள்ள அர்த்தம் உள்ளது. புதை மண்ணில் மூழ்கிக் கொண்டிருந்த கலைநிகழ்ச்சி வெற்றி பெற பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி கை கொடுத்தார்கள் மலேசிய இந்தியர்கள் என்று சொல்லாமல் சொல்கின்றாரரோ விமர்சகர்?. நேற்றைய தமிழ் நேசனில் பார்த்த தானைத் தலைவர் குடும்ப மற்றும் ம.இ.க – காரர்கள் வர்ணப் படங்கள் இதைப் பறைசாற்றுகின்றனவே!
மோகன் சார்,
அம்னோ மற்றும் ம இ க இதைத்தான் 56 வருசமா செஞ்சி தமிழனை ஏமாத்தி பொலைகரனுங்க. இந்த சமுதாயம் திருந்த போறது இல்லை.. இப்பவெல்லாம் தமிழனு சொல்லி எவன் வந்தாலும் உதவி பண்றதே கிடையாது. எப்படியாவது செத்து தொலையாட்டும். 2014 வெலை எல்லாம் எகிறி நிக்கப்போது. அப்புறம் தெரியும் தமிழனுக்கு. மோகன் சார் தமழனுக்கு அறிவுரை சொல்லி ஏன் நேரத்த செலவு செய்றிங்க. 50 வெள்ளிக்கும் 5 வெள்ளிக்கும் அரிசி பருப்புக்கும் ஒட்டு உரிமையை விற்றவன் தமிழன். அழிஞ்சி போகட்டும் விடுங்க.
வர்றவனுங்க எல்லா ஒரே dialog பேசினா எப்படி? அப்புறம் தமிழன் நிலைமை இந்த நாட்டிலே? நல்ல ஒரு எதிர்க்கால திட்டத்தை அதாவது கல்வி,பொருளாதாரம்,அரசியல் மற்றும் சில முக்கிய அங்கங்களையும் சேர்த்து விரைவில் வரைய ஏற்பாடு ஆகட்டும்! தமிழ் இன,மொழி மேம்பாட்டு திட்டமாக உருபெற்று விரைவில் செயலாக்கம் பெற வேண்டும்! மற்றவை படி படியாக ஒருங்கிணைக்கலாம்! வெளிநாடுகளிருந்து முதலிடு ஏற்பாடு
செய்ய பலர் ஆர்வம் காட்டி உள்ளனர்.தமிழன் சொத்துடமை உயர்ந்தால் சீனரைபோல் நம் வாழ்க்கை தரம் அனைத்து நிலைகளிலும் மாற்றம் காணும்!