“விழா, இதுவும் “மதயானைக்கூட்டம் மாதிரி இழவு வீட்டில் ஆரம்பமாகும் கதைதான்! ஆனால், இழவு வீட்டில் ஒப்பாரி பாடவந்த பெண்ணுக்கும், தப்பு அடிக்க வந்த பையனுக்குமிடையேயான காதல்! படம் முழுக்க, இழவு, இழவு… இழவு வீடு… ஒப்பாரி, தப்பாட்டம்… ஆனால் படத்திற்கு “விழா எனும் பெயர்காரணம் தான் புரியாத புதிர்!
பெரிய வீட்டு சாவுக்கு ஒப்பாரி பாடல் பாட பாட்டியுடன் வரும் நாயகி ராக்கம்மா எனும் மாளவிகா மேனன் மீது, அதே சாவுக்கு தப்படிக்க வரும் சுந்தரம் எனும் மகேந்திரனுக்கு காதல் ஏற்படுகிறது. ஒரே சாதி, சனம் என்றாலும் “ஒப்புக்கும், “தப்புக்கும் காதல் பூத்து, காய்த்து, கசிந்துருகி கனியாவதற்கு மேல்சாதியினர் தடையாக இருக்கின்றனர். எப்படி?, மேல்சாதி வீட்டு வாரிசின் தகுதி கம்மியான காதலுக்கு, ஹீரோ மகேந்திரன் உதவுவது, மகேந்திரனின் காதலுக்கு உபத்திரமாகிறது! அப்புறம்? அப்புறமென்ன.? தடை பல தாண்டி தன் நண்பனின் காதலையும் சேர்த்து வைத்து, தன் காதலிலும் ஹீரோ கரை சேர்வது தான் “விழா!
தாரைதப்பட்டை அடிப்பதில் வல்லனாக “தப்பு சுந்தரமாக மகேந்திரன். மாஜி மாஸ்டர் மகேந்திரனாக தமிழ் சினிமாவில் நடிப்பு பயின்றவர் என்பதால் பதட்டமே இல்லாமல் பட்டையை கிளப்பி இருக்கிறார். பலே!
ஒப்பாரியில் எல்லாம் ஒரு சேதி வைத்து பாடும் ராக்கமாவாக மாளவிகா மேனன், கண்களாலேயே காதல் பாடுகிறார். காளி, “காதல் தண்டபானி, பிள்ளையார் பட்டி ஜெயலட்சுமி, தேனி முருகன், யுகேந்திரன், “கல்லூரி வினோத், “கல்லூரி கோபால், ஸ்மைல் செல்வா எல்லோரும் எக்கச்சக்கமாய் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் யுகேந்திரன் மட்டுமே சபாஷ் வாங்குகிறார்.
ராஜா குருசாமியின் “நறுக்கு தெறிக்கும் வசனம், யு.கே.செந்தில்குமாரின் ஓவிய ஒளிப்பதிவு, ஜேம்ஸ் வசந்தனின் இனிய இசை எல்லாம் இருந்தும் பாரதி பாலகுமாரனின் இயக்கத்தில், நாயகன், நாயகி இடையேயான இழவு வீட்டு காதலைக்காட்டிலும், நாயகர் மகேந்திரனின் “தப்புக்குச்சி ப்ளாஸ்பேக் உருக்கம்!
ஜேம்ஸ் வசந்தனின் இனிய இசையில், “என்னாச்சோ ஏதாச்சோ…, “நெஞ்சடச்சி நின்னேனே…, “மதுரை என்னும்… உள்ளிட்ட பாடல்களுக்காகவும், அவை படமாக்கப்பட்டிருக்கும் விதத்திற்காகவும் “விழாவை கொண்டாடலாம்!
ஆக மொதத்தத்தில் “விழா – பாடல்கள் விழா – படம் “சற்றே விறுவிறுப்பு இல்லா உலா!
தாடியும் மூஞ்சிகளும் பாரு ,,,கேட்டா கதைக்கு ஏற்ப காட்சியாம் ,,வக்காளி ,தக்காளிய போட்டு பிணைய