காமெடியன்கள் மீது எனக்கு பொறாமை உண்டு என்றார் மணிரத்னம். நகைச்சுவை நடிகர் விவேக் ஹீரோவாக நடிக்கும் படம் நான்தான் பாலா. கண்ணன் டைரக்டு செய்கிறார். விவேக் ஹீரோ, ஸ்வேதா ராவ் ஹீரோயின். வெங்கட்ராஜ், நாசர், சார்லி, கஞ்சா கருப்பு, மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வெங்கட் கிரிஷி இசை. மணவாளன் ஒளிப்பதிவு. ஜே.ஏ.லாரன்ஸ் தயாரிப்பு.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மணிரத்னம் பேசியதாவது: ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு புத்திசாலித்தனம் இருந்தால்தான் முடியும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடிக்கென்று தனி இடம் உண்டு. அவர்கள் வெகுவாக பாராட்டப்பெறுகிறார்கள். விவேக்கை பொறுத்தவரை அவருக்கென்று தனி இடம் வகுத்து வைத்திருக்கிறார். அவர் இன்னமும் முயன்றால் நல்ல இடத்துக்கு வருவார்.
காமெடி நடிகர்களைப் பார்த்தால் எப்போதுமே எனக்கொரு பொறாமை உண்டு. அவர்களால் மட்டும் எப்படி ரசிகர்களை சிரிக்க வைக்க முடிகிறது என்று எண்ணுவேன். இன்றைக்கும் 1950களில் வெளியான படங்களை பார்க்கும்போது அதில் இடம்பெறும் காமெடிகள் வியப்பை தருவதாக உள்ளது. இன்றைய காலகட்டத்துக்கும் அது ஏற்புடையதாக இருக்கிறது. இவ்வாறு மணிரத்னம் கூறினார். விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் கே.பாலசந்தர் விக்ரமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமாம் ரொம்ப பொறாமைதான் ,,நல்ல நடிகண்டா