தொடர்ச்சியாக நகரத்து கதைகளிலேயே நடித்து வந்த அஜீத், நீண்ட இடைவெளிக்கு பின், ‘வீரம்’ படத்தில், கிராமத்து கதையில் நடித்துள்ளார்.
மேலும், பேன்ட்-, டி-சர்ட்டுக்கு விடை கொடுத்து விட்டு, வேஷ்டி, சட்டைக்கு மாறியுள்ளார். இந்த படத்திற்காக, முதன் முறையாக மாட்டு வண்டி ஓட்டியபடி நடித்துள்ளார் அஜீத்.
இதற்காக, மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரிடம், சில நாட்கள் பயிற்சி எடுத்து, மாடுகளின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டு, அதன்பின்,தான் மட்டுமே வண்டியில் அமர்ந்து, மாடுகளை ஓட்டிச் சென்றபடி நடித்தாராம்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படக்குழுவுக்கும், தன் கையாலேயே உணவு பரிமாறும் வழக்கம் கொண்ட அஜீத், இந்த முறை, ‘வீரம்’ படத்தின் பெரும்பகுதி, படப்பிடிப்பு நடைபெற்ற ஒடிசா மாநிலத்திலுள்ள, ஒரு கிராம மக்கள், ஆயிரம் பேருக்கு, தன் கையாலேயே உணவளித்தாராம்.
உங்கள் கையாலேயே உணவளித்தீரே அதற்கு நன்றி! அதே சமயத்தில் அதற்கான செலவுகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் உங்களுக்கு இரட்டிப்பு நன்றி!