தைப்பூசம் என்பது ஒரு தெருவிழா ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய சமூகம் முன்வர வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அது நுகரும் கலாச்சாரத்தன்மைக்கு ஆளாகி தனது பண்பாட்டு சமயத்தன்மையை இழந்துவிடும் என்பதால் இந்த விதிமுறைகளை உருவாக்க முற்பட்டோம் என்கிறார் குணராஜ்.
கடந்த ஒரு மாத காலமாக இது சார்பாக ‘தைப்பூச பணிப்பிரிவு’ என்ற ஒரு குழுவை உருவாகினோம். இந்து சங்கம், இந்து சேவை சங்கம், ருத்திர சமாஜ், செலயாங் நகராண்மைக்கழகம், காவல்துறை மற்றும் சில சமூக அமைப்புகளை சார்தவர்கள் ஆலோசனை வழங்கினார்கள் என்றார் அக்குழுவைச் சார்ந்த குணராஜ்.
இதன் பலனாக இன்று இந்து சங்கம் அலுவலத்தில் ஒரு கலந்துரையாடல் விளக்க க்கூட்டம் நடைபெற்றது. இதை இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன்ஷான் வழிநடத்தினார். அவருக்கு துணையாக அதன் முன்னால் தலைவர் டத்தோ வைத்தலிங்கம் மற்றும் இராமாஜி, குணராஜ், கோம்பாக் காவல்துறையின் ஏஎஸ்பி முத்து, இந்து சங்க துணைத்தலைவர் கந்தசாமி, ஆகியோர் உட்பட இன்னும் சில இயகத்தலைவர்கள் உடன் இருந்தனர்.
முதல் கட்டமாக மலேசியாவில் நடைபெறும தைப்பூசத் திருவிழவுக்கான விதிமுறைகள் அடங்கிய ஒரு கையேட்டை இந்து சங்கம் தனது சார்பாக அறிமுகப்படுதியது. சுமார் நூறு பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பலர் கருதுரைத்தனர். அது இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினமாகும். இது பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.
மலேசியாவில் கொண்டாடப்படும் முக்கிய சமய விழா இதுவாகும். அன்மைய காலங்களில் இங்கு இவ்விழாவை கண்டு கழிப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது ஒரு சமயவிழா என்றாலும் அதை காணவருபவர்கள் அதிகமாகி அதை ஒரு கூட்டமும் கும்மாளமும் கொண்ட வாணிப நிகழ்வாக்கி வருகின்றனர். இதை முறைப்படுத்துவது நம் அனைவரின் கடமை என்றார் வைத்தலிங்கம்.
விதிமுறைகளைப் பற்றி விளக்கமளித்த மோகன்ஷான், இவை சார்பாக தான் பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவுடன் பேசியதாகவும் அதற்கு அவர் ஆதரவு நல்கியதாகவும் கூறினார்.
தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஏஎஸ்பி முத்து, சில வருடங்களுக்கு முன்பு பொங்கோ இசை கருவிகளை தடை செய்ய எங்களின் உதவி நாடப்பட்டது. அவ்வருடம் சுமார் 500 பொங்கோ இசை கருவிகளை நாங்கள் அகற்றினோம். அதன் பிறகு மக்கள் அதனை கொண்டு வருவதில்லை என்றார்.
சிலர் ஏன் பத்துமலை கோயில் நிர்வாகம் யாரையும் அனுப்ப வில்லை என கேட்டனர். பத்து மலை கோயில் நிர்வாகம் தனது பணியை முறையாக செய்தால் பல பிரச்சனைகளை தீர்க்கலாம் என்றனர்.
விதிமுறைகளில் சில
அலவு காவடிகள் எடுப்பவர்களின் அலவு 3 அடிக்கு மேல் இருக்கக்கூடாது; காவடி எடுப்பவர்கள் முறையாக புஷ்ப காவடி, பால் காவடி, அலங்கார காவடி எடுக்கலாம்.
காவடிகளில் இயக்கத்தின் சின்னங்களோ அல்லது சமயத்திற்கு சார்ந்து இல்லாத எந்த ஒரு விசயத்தையும் தங்களின் காவடிகளில் இணைக்கக்கூடாது. இருந்தால் அந்தக் காவடிகள் தடை செய்யப்படும்.
இரத காவடி, பறக்கும் காவடி, அரிவாள், கத்தி, சூலம்,, தடி,, சாட்டை,, சுருட்டு,, மது பானங்கள் போன்றவைகளுக்கு தடை.
முனீஸ்வரன், மதுரை வீரன், சுடுகாட்டு காளி, காட்டேரி போன்ற தெய்வ வழிப்பாட்டு காவடிகள் எடுக்க அனுமதிக்கப்படாது. நாக்கில் குங்குமம் அணிந்து வருபவர்களும் தடை செய்யப்படுவார்கள்.
மேலும் டுரியான் காவடி, மிளகாய் காவடி, கொடூரமாக அலங்கரிக்கப்பட்ட காவடிகளுக்கும் தடை.
காவடிகள் எடுக்கக்கூடிய பக்த்தர்கள் கண்டிப்பாக சமய உடைகளை அணிந்து வர வேண்டும். அதனை தவிர்த்து மற்ற உடைகளை அணிந்து வருபவர்களின் நேர்த்தி கடன் ஏற்றுக் கொள்ளப்படாது.
காவடிகளுடன் நாதஸ்வரம், தவில், உறுமி மேளத்தோடு காவடி சிந்து மற்றும் தெய்வீக பாடல்களைப் பாடி வர வேண்டும். அதை தவிர்த்து சினிமா பாடல்களோ, ‘Gangnam Style’, ரேஃப் போன்ற பாடல்களைக் கண்டிப்பாக பாடி வரக்கூடாது.
கேளிக்கை நிகழ்வுகளுக்கு கட்ட கட்டமாக தடை விதிக்க வேண்டும்.
உணவும் பானமும்
தண்ணீர் பந்தல் போடுபவர்கள் மெத்து வகை கப்களை (STROFOAM CUPS) பயன்படுத்த இயலாது. மேலும் அதிகமானவர்கள் இலவச பானங்கள் உணவு வழங்க முன்வருவதால் அதிகப்படியாக அவை வீணாகின்றன. இதை முறையாக கையாள முன்பதிவு முறையை அமுலாக்க கேட்டுக்கொள்ளப் பட்டது.
அதோடு அரசியல் தலைவர்களின் வருகைக்கு மேடை போடுவது, அவர்களுக்கு ‘கட் அவுட்’ போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இவை விதிமுறைகளில் இல்லை.
கேள்வி 4) உருவமில்லாத பரம்பொருள் நம் உருவத்தை எப்படி
படைத்தான்? பகுதி நேர கருத்தாளனாக வந்த எம்மிடம் இப்படியெல்லாம் கோக்கு மாக்கா கேள்வி கேட்பது உங்களுக்கே நியாயமாக படுகின்றதா மாறன்? நம் தமிழர்கள் இப்படியெல்லாம் சிந்தித்து பதில் கண்டிருந்தால் நாம் இவ்வுலகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முன்னோடிகள் என்பதை நிருபித்து விடலாமே!. சிவபெருமான் எட்டு குணங்களை உடையவன் என்று சித்தாந்திகள் கூறியதாக முன்னம் சொன்னேனே, அவற்றில் இரண்டு, இறைவன் “முற்றறிவு உடையவன்”, ” பேராற்றல் உடையவன்” என்பதாகும்”. “முற்றறிவு” என்பது, இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய எல்லாக் காலங்களையும் ஒருங்கே அறிந்தவன். அதனால் ஏக காலத்தில் எங்கும் எதையும் அறிபவனாகி இருப்பன் சிவபெருமான் என்று முனைவர் திரு ஆறு நாகப்பன் தனது சித்தாந்த சைவம் என்னும் நூலில் விவரிகின்றார். அவரே, “பேராற்றல்” என்பதை, இறைவனின் எல்லையற்ற செயலாகும் என்று மேலும் விவரிக்கின்றார். முக்காலத்தையும் அறிந்து, பேராற்றலுடன் செயல்படும் சிவபெருமான் என்னும் பரம்பொருள் உயிர்களின் இச்சையை அறிந்து அதனதன் நிலைக்கு ஏற்றவாறு உடலையும், கருவிக் கரணங்களையும் (ஐம்பொறிகளுடன், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனப்டுவன) கொடுத்து படைத்தல் தொழிலை செய்தான், செய்கின்றான், செய்வான். இதுவே, ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களுக்கு தேவையான உடலைக் கொடுத்த விதமாகும். புரிஞ்சிகிட்டா சரி.
நன்றி தேனீ !
கேள்வி 5) இராமாயணத்தை உருவாக்கிய காரணம் யாது? இதுகூடவா தெரியவில்லை உங்களுக்கு? நம் வீட்டில் அன்றாடம் புருஷன் பெண்ட்டாடி சண்டையில் அடித்துக் கொண்டு சாவுகின்றோமே, அன்றாடம் நாட்டில் உலா வரும் முதலாவது பெண்மணி செய்யும் செய்வினையையும், அதனால் அவர்தம் புருஷன் வாயடைத்து பட வேண்டிய வேதனையையும், அவர்களைத் தாக்க வரும் மாமக்திர் என்ற இராவணனும், இவனுக்கு பக்க பலமாக இருக்கும் பெர்காசா, பெக்கிடா என்னும் பணிபடைகளையும், இவர்களையெல்லாம் எதிர்க்க வேண்டி போராட்டம் நடத்தும் மக்களும், இவர்களுக்குத் துணையாக இராமனும், இலட்சுமணனும் அவர்களுக்குத் துணையாக வரும் அனுமானும் அவர்தம் வானரப்படையையும், சுக்ரீவனையும் கொண்டு எதிரிகளை வெல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் என்ற சமூகவியல், வாழ்வியல் அரசியல் தத்துவத்தை உணர்த்தவே வால்மீகி என்னும் முனிவர் ஒருவர் நமக்கு பல்லாயிரம் ஆண்டுக்களுக்கு முன்னமே ‘Master Plan’ ஒன்றைப் போட்டுக் கொடுத்து விட்டார். முடிந்தால் இராமாயணத்தின் போர் தத்துவங்களைக் கொண்டு போர் தொடுங்கள். வெற்றி உங்கள் பக்கம்!
மங்கை, ஏன்தான் நீங்கள் வகைத் தெரியாமல் வாயைக் கொடுத்து ……. புண்ணாக்கிக் கொள்கின்றீர்களோ தெரியவில்லை. யாம் உங்கள் கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்தால், பின்னிப் பெடல் எடுத்த மாதிரி ஆகி விடும் உங்கள் கதை. வேண்டாமே இந்த வாதம்.
சார் நாம் இங்கே கேட்பது எப்படி முருகன் தமிழ் கடவுள் சொல்ரீங்க்கொ/சைவம் சொல்ரீங்க்கொ.அதற்கு பதில் திருக்குறள் என்று சொன்னால் யெற்று கொள்ள முடியும்.சைவம் என்றால் இந்த புலியை கொன்று பாடம் பண்ணி அதன் மேல் வுட்கார்ந்து தியானம் செய்வார்களே அவர்களா.கொல்லாமை அஹிம்சை அன்பே சிவம்.சீனர் வியாபாரத்தில் கெட்டிக்காரர் அதனால் நம்மில் பலர் சீன மொழியை பழகவில்லையா ஏன் தமிழ் பள்ளியில் பணம் கொடுத்து அந்நிய மொழியை கட்பிக்கவில்லயா.நடராஜவை ஏன் முருகன் தண்டிக்க வில்லை அப்போ நடராஜ வுத்தமண் போல்.ஆலயம் அதன் ராஜ கோபுரம் இதில் சிலருக்கு(மற்றவருக்கு )நம்பிக்கை வரும் ஆனால் வராது.பிறகு ஏன் இப்படி பட்ட இடத்துக்கு போவானேன் மனம் சஞ்சலம் படுவானேன்.முருகர் இப்படிதான் இருப்பார் என்று சிலருக்கு எப்படி தெர்யும்,தேரிலே.எல்லா மதத்தினரும் தன் மதத்திற்கு அவமானம் நேரும்போது எதையும் செய்வர்.இது தேவை இல்லை எமக்கு.ஏன் என்றால் எங்கள் பெருமாள் ஆலயத்தில் இப்படி யாரும் அராஜகம்/கோவில் வுடைப்பு கிடையாது இருந்தாலும் நாம் ஹிந்து ஆயிட்ரே,விட்டு போக முடிலே.தான் ஆட வில்லையம்மா சதை ஆடுது.
தேனீ! கடைசியாக,பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? மும்மூர்த்திகள் யார்? முக்காலத்தையும் அறிந்த சிவபெருமானுக்கு ஏன் மகாவிஷ்ணு,பிரம்மா துணை வேண்டும்?
நன்றி! எல்லாம் சிவமயம்!
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,
வருணன் மேய பெருமணல் உலகமும்,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே!
உண்டியல் திருடன் மடராஜா ஆலய தலைவர் நாற்காலியில் சுபெர்க்லு போட்டு ஒட்டிவிட்டார்கள்… நவரமுடியலப்பா கொஞ்சம் பொறுத்துக்ககுடாதா????
குடிநீர் வாரியத்தில் சாதாரண மீட்டர் போருதிகிட்டுருந்தான்..
இன்னைக்கு கோடிஸ்வரன் ..அல்ப்ஹார்ட் கார் பல அசையும் அசையா சொத்து …இப்பவே கண்ணகட்டுதே…
எத்தனைநாளைக்குத்தான் ஒருமனுஷன் கச்டபடுகிரது !!..
வரும்போது ஓமகுச்சி …. உண்டியல்திருடி வைத்தநேறச்சு இப்போ உசுலாமணி …
மடராஜா பத்துமலைய இப்ப நாளுக்குநாள் மடாலயமாக மாத்திகொண்டு வருகிறான் …. கோயில் கணக்கு மற்றும் கோயில் தலைவர்பதவியை ஆயுதமாக வைத்து முருகன் திருத்தலத்தை கபளிரம் செய்ய ஒருகூட்டம் படிப்படியாக முன்னேறுகிறது …
அடுத்த தைபுசத்துக்குல்லார முருகனுக்கருகில் கோவிந்தன் அமர்வான் ….. பிச்சாங்கை பக்கம் பெருமாள் அருகில் அவர் பக்தர் அனுமன் .அவர் பின்னாடி புதுசா காதல்மன்னன் கிருஷ்ணனா …. புதுசா கிதாசாரம் என்று மடராஜா திறந்துவைதானாம்!!!!
தமிழர்கள் ஆழ்ந்து உறங்கும்வரைக்கும் மடராஜாவை தலைவர் பதவியிலிருந்து விரட்டியடிக்காதவரைக்கும் எதிர்காலத்தில் இதுவும் நிகழலாம் முருகன் சிலையருகில் உள்ள மலையில் கொஞ்சத்தை காலிபண்ணிவிட்டு அருகிலுள்ள மலசலகூடத்தை வேறிடத்துக்கு மாற்றீட்டு ராமாயனமண்டபம் கட்டி ராமர்சிலை நிறுவினாலும் யாரும் சாக் ஆகவேண்டாம் .. தேவையான பணத்தை கோடிகணக்கில் கொட்டிகொடுக்க ராமபக்தர்கள் மட்டிமில்லை இந்திய அரசிலிருந்தும் வரும் …
ஏன்னா நிலைமை அப்படிதான்
தன்மான தமிழர்களே சைவபேரியோர்களே கூடிப்பேசி ஆலய நிர்வாக மாற்றத்தை சுமுகமான முறையில் திர்த்துவையுங்கள்….
தற்போதைய தலைவரின் சேவை போதும் …
பல தீயசக்திகளின் எதிர்ப்பையும்மிறி
தைத்திங்கள் தமிழரின் புத்தாண்டு என்று அறிவித்த நடராஜாவுக்கு வாழ்த்துக்கள் …
. தேனி. க.ம.பொ எனது நன்றிகள் உரித்தாகுக. ஒரு கலைஞனுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை விட (திறமை இருக்கோ இல்லை) அவனுக்கு கிடைக்கும் கை தட்டலே அவனுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும். அந்த வகையில் தாங்கள் பாராட்டுக்குரியவர்களே. கமபொ , நான் குறிப்பிட மறந்து போனதை (ஆணவம்-அகம்பாவம்) தாங்கள் ஞாபக படித்தினீர்கள். தாங்களும் என்னைப்போலவே சிந்தித்திருக்கின்றீர்கள் நன்றி.
மாறனின் கடைசி 2 கேள்விகள். 1) பெருமாலுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? இருவருக்கும் உள்ள தொடர்பு அவரவர் மதத்தில், சமயத்தில் (வைணவம் & சைவம்) “பரம்பொருள்” என்று போற்றப்படும் ஒற்றுமை. மற்ற வகையில் ஒற்றுமையை விட வேற்றுமையே நிறைந்து காணப்பட்டது. ஆரியரின் இந்திய தென்னாட்டிற்கு வருகையால் வைணவமும் சைவமும் இறைக் கொள்கை வேறுபாட்டினால் பகைமை தோன்றிற்று. இக்காலக்கட்டத்திலே, இந்தியாவின் வடக்கே அசோக சக்ரவர்த்தின் பரந்த ஆட்சிப் பீடத்திலே புத்த மதம் அமர்ந்து கோலோச்சியது. வைணவத்தின் புலால் வேள்வி வழிபாட்டின் (எ.க. அசுவமேதயாகம்) மகத்துவம் குன்றிற்று. உயிர்பலி வேள்வியை எதிர்த்த புத்த மதமும், சமண மதமும் இந்திய துணைக்கண்ட மக்களிடையே பிரபலமடைந்தது. இந்திய தென்னாட்டிலும் இந்நிலை பரவ ஆரம்பித்ததால் வைணவ ஞானிகள் மற்றும் முனிவர்கள் புலால் வேள்வி வழிபாட்டினை “Research & Development Centre” – க்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஆராய்ந்து பார்த்தலில் அக்கால மக்கள் உயிர் கொல்லாமையை விரும்புகின்றனர் என்று அறிந்தனர். புத்த, சமண மதங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள, புலால் வேள்வி வழிபாடு என்பது இன்று நம்மிடையே இருக்கும் தானியங்கள் இந்திரனுக்கு அவிர்பாகமாக கொடுக்கப் படும் (சைவ) வேள்வி வழிபாடானது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, தென்னாட்டிலே புத்த, சமண மதத்தினரை எதிர்கொள்ள ஆரியர்களிடம் திராணி இல்லாததால் தென்னாட்டிலே இருந்த சைவர்களின் பக்கபலம் வைணவர்களுக்குத் தேவை பட்டது. மீண்டும் ஒரு முறை “Research & Development Centre” – க்கு அவர்களின் பிரச்சனையைக் கொண்டு சென்றனர். சைவர்களின் பக்கபலத்தை பெற, அவர்களுடன் வைணவர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பது அறிவுடைய வேதாந்திகள், ஞானிகள், முனிவர்கள் அளித்த பதில். எப்படி என்று கேள்வி எழுந்த போது “சிவ புராணக் கதைகள்” ஏற்படுத்துங்கள் என்று பதில் வந்தது. அதற்க்கு தாமே புராணக் கதைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதில் சிவன், சக்தியும் கணவன் மனைவியாகவும், கிருஷ்ணர்/விஷ்ணு சக்திக்கு தனையனாகவும், விநாயகர், முருகன் பாலகர்களாகவும் சித்தரித்து இன்னும் பல அவதாரங்களை ஒன்றிணைத்து கொடுத்தனர். இறுதியில், சிவனும் பெருமாளும் மாமன், மைத்துனர் என்ற கதாபாத்திரமாகி, வைணவர்கள், புத்த, சமண மதத்தினரை வென்று, சைவர்களையும் இந்து மதம் என்ற போர்வைக்குள் அமுக்கி வென்றனர்.
மாறனின் இறுதிக் கேள்வி: முக்காலத்தையும் அறிந்த சிவபெருமானுக்கு ஏன் மகாவிஷ்ணு, பிரம்மா துணை வேண்டும்? மும்மூர்த்திகள் யார்? இருக்கு, யசூர் வேதத்தில் கூறப்படும் “உருத்திரன்” பிரமத்தின் அதிட்திட்டு (“by Order of”) செயல்படும் ஒரு பாகமாக கூறப்பட்டுள்ளது. படைக்கும் தொழில் பிரம்மாவுக்கும், காக்கும் தொழில் விஷ்ணுக்கும், அழிக்கும் தொழில் உருத்திரனுக்கும் கொடுக்கப் பட்டதாக வேதங்களின் வெளிப்பாடு. இதில் ஒரு சில உபநிடதங்களும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளதாக அறிகின்றேன். எது எப்படி இருப்பினும் வேதத்தில் உருத்திரன் பரம்பொருளாக கூறப்படவில்லை மாறாக அதிட்திட்ட தேவனாகவே குறிக்கப் பெறுகின்றார். இது சைவர்களின் இறைக் கொள்கைக்கும், சித்தாந்திகளின் பரம்பொருள் கோட்பாடுக்கும் மாறுபட்டதாகவே உள்ளது. சைவர்களும், சித்தாந்திகளும் சிவனுக்கு அளிக்கும் நிலையைத் தொடர்ந்து பார்ப்போம். தொடரும்.
சைவ சமயத்தில் சிவ பெருமானை பரம்பொருளாக போற்றி வழிப்படுகின்றனர். இங்கே மாமன் மச்சான் உறவுக்கு இடமில்லை. சொரூப நிலையில் செயலற்று இருக்கும் சிவன், உயிர்களுக்கு அருள்செய்யும் பொருட்டு தனது குணமாகிய திருவருளையே சத்தியாகக் கொண்டு செயலாற்ற தடத்த நிலைக்கு வருகின்றார். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந் தொழில்களையும் சிவபிரானே செயலாற்றுகின்றார். இவற்றை செயல்படுத்த 36 ஆன்ம தத்துவங்களைத் தோற்றுவித்தார் என்று சித்தாந்திகள் வகுத்துள்ளனர். அவற்றில் சுத்த மாயையில் முறையே 1) சிவ தத்துவம் 2) சத்தி தத்துவம் 3) சாதாக்கியம் 4) ஈசுரம் 5) சுத்த வித்தை என்ற 5 நுண்ணிய தத்துவங்ககளை தோற்றுவித்து செயலாற்றுகின்ரார். இதில் சுத்த வித்தை தத்துவத்திற்கு அதிகாரியாக அதிட்திட்டு செயல்படும் இறைவன் உருத்திரன் எனப்படுவார். ஆகவே, வேதத்தில் கூறப்படும் உருத்திரனின் நிலையும், சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் உருத்திரன் நிலையும் வெவ்வேறு. சைவத்தில் சிவபெருமான் ஐந்தொழில்களை ஆற்ற பிரம்மாவையும், விஷ்ணுவையும் அழைக்கவில்லை என்பதை அறிக.
சார் ஆகாயத்தில் எல்லாம் பதிவாகி வுள்ளது,தானங்களின் வுதவியொடு சில கேள்விகள் கேட்டு பாரும்,கிடைக்கும் ஆனால் அதில் தீரா தாகம் வேணும்.மக்கள் நன்மை பெறவே இதை தந்தோம்.சுப்பிரமணிய சுவாமிகள்(அமெரிக்கர் )தன் சிஷ்யனிடம் 1 பழுதடைந்த வாகனத்தை கொடுத்து சிஷ்யா இந்த வாகனத்தை பழுது பார்த்து கொடு சொன்னார்கள்,சிஷ்யனும் சரி சாமி சொல்லி யெற்றுகொண்டார்.நித்ய கர்மம் அதாவது குரு சேவை முடித்து தன்னையே கேள்வி கேட்டு கொண்டு தானத்தில் அமர்வர் (இந்த வாகனத்தை எப்படி சரி செய்வது/செயல் பட வைப்பது.தினமும் குரு கேட்பார் என்னப்பா சரி செய்தாச்சா,சிஷ்யன்=செய்து கொண்டு இர்க்கேன் சாமி என்று சொல்வார்,அப்போது நாம் கண்டது/சிலர் சொல்ல கேட்டது இது எல்லாம் வரும்=நான் கேட்டது இது இல்லை2 என்று தியானிக்கும் பொது யாரும் சொல்லாதது/கேட்காதது வொன்று வரும் அதுதான் சரியான பதில்.நம் கபாலமே ஆகாயம்.கபாலத்தில் தியானம் செஞ்ச மூளைக்கு வொக்சிகென் பாய்ந்து அவைகள் செயல் படும்,பலர் காம இச்சைக்கு அடிபணிந்து எல்லாம் வீணாய் போகிறது.வாழ்க,நாராயணா2.
மிக்க நன்றி தேனீ தலைவா! சைவ சமய விளக்கங்கள் அற்புதம்!அற்புதம்! ஆனால் இன்னும் ஒரு சந்தேகம்! அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது,பூமியில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந் தொழில்களையும் சிவபிரானே செயலாற்றுகின்றார் என்பதும் உண்மையானால் இங்கு நடக்கும் எல்லாவற்றையும் அவன் தானே அனுமதித்தான்? பிறகு ஏன் வைணவத்தின் புலால் வேள்வி வழிபாட்டினை படைத்து,காத்து வருகிறான்? அதனால்தானே சைவ சமயத்திற்கு இந்த நிலை இன்று? எல்லாம் சிவமயம்!
அன்பான செம்பருத்தி வாசகர்களுக்கு, நான் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஓர் உண்மை சம்பவத்தை. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் நாட்டு வார இதழ் நிருபர் ஒருவர் வெளிநாட்டு பயணக்கட்டுரைக்காக ஜரோப்பா தேசம் சென்றிருந்தார். முருக பக்தரான அவர், தங்கியிருந்த அறையில் மேஜையில் முருகர் படத்தை வைத்திருந்தார். அறையை சுத்தம் செய்ய வந்த ஜரோப்பிய ஊழியர் நமது கலச்சாரம் பண்பாடு அறிந்திராதவர். முருகர் படத்தை பார்த்து விட்டு இவர் என்ன உங்கள் நாட்டு அரசரா? என்று கேள்வி கேட்க நிருபரோ தகுந்த விளக்கங்களுடன் பதிலை கூறிவிட்டு உங்கள் மனதில் என்ன பட்டது ஏன் அப்படி கேள்வி கேட்டீர் என்று கேட்டார். ஊழியர் கூறிய பதில் உடல் நிறைய தங்க ஆபரணங்கள், தலையிலே தங்க கிரீடம், கையிலே ஆயுதம். இரண்டு பக்கமும் அழகிய இழம் மனவியர் இருவர் அவர்கள் உடலிலும் நிறைய தங்க ஆபரணங்கள். வாசகர்களாகிய நீங்கள் இப்போது கூறுங்கள் யார் பக்கம் தவறு என்று. எந்த ஒரு காரண காரியமும் எளிமையாக இனிமையாக அறிப்புர்வமாக சென்றயடைய வேண்டும். எதற்க்கு எடுத்தாலும் ஏன், எப்படி, எதற்கு என்று கேள்வி மேல் கேள்வி கேட்கும் இழம் வளரும் பருவத்தினரின் மனதில் பசுமையாக பதியும்படி சுலபமாக சென்றயடைய வேண்டும். இதைதான் ஆதி தமிழர்கள் ஓசை மொழி, எழுத்து வடிவம் இல்லாத அந்த காலத்தில் அவர்களின் கருத்துக்களை வளரும் இழம் பருவத்தினிரிடம் இந்த முறையில் கொண்டு சேர்த்தனர். ஆதலால்தான் அவர்களால் அறிவிலும் அறிவியலிலும் சிறப்பாக வாழ முடிந்தது. மூச்சு பயிற்ச்சி உடல் ஆரோயக்கத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை எல்லோரும் அறிந்ததே. அதை சடுகுடு என்ற கபடி விளையாட்டின் மூலம் கொண்டு சேர்த்தனர். பல்லாங்குழி என்ற கணக்கு விளையாட்டு நம்மை கைகழுவி விட்டு எங்கோ போய்விட்டது. அந்த காலத்தில் குடிசை வாசலில் போடபடும் மாவு கோலம், ஊர்வனையான எறும்பு புரான் புச்சிகள் உள்ளே வராமல் தடுப்பதற்காக போடப்பட்டவை. ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிவுலக தொடர்பு இல்லாததால் வளரும் இழம் பருவத்தினர், தாய் தந்தரையே கதி என்று அமைதியாய் இருந்தனர். ஆனால் இன்று தொலை தொடர்பு சாதனங்கள் வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும் வந்த பின்னர், எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ராக்கெட் வேகத்தில் படுவீழ்ச்சிக்கு போய்கொண்டு இருக்கின்றனர். காரணம் நம்முடைய கருத்துக்கள் எளிய முறையில் அவர்களிடம் சென்று சேராததே. பலன் கூத்தாடிக்கு பாலபிசேகமும், மற்றவர்கள் எள்ளிநகையாடும் விதமாக திருவிழாவில் தெருவிழா நடத்துவதும், எதிர்காலமே தெரியாமல் போதையில் புரல்வதும் மற்றும் பல. நம்முடன் வந்த சீன சமுகத்தினரை எடுத்துக்கொள்ளுங்கள். அன்று இருந்த அதே எண்ணிக்கையில் இன்றும் அதே கோயில்கள். அன்று இருந்த அதே பொலிவுடன் இன்றும் இருக்கின்றன. கோயில் கட்டிடங்களும் அப்படியே. ஆனால் அவர்கள் அன்று கூலிகள் இன்று கோடிஸ்வரர்கள். அன்று சிங்கப்புர் தீவு சொந்தம் இன்று பினாங்கு தீவும் சொந்தமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் நமக்கு இறந்து போன நம் முன்னோர்களுக்கு ஆறடி நிலம் மட்டுமே சொந்தம். ஆனால் நம்மை எடுத்துக்கொள்ளுங்கள் எல்லாமே எதிர்பதம். என் மனதில் பட்டதை கூறுகிறேன் சற்று மாற்றி யோசித்து பாருங்கள். தமிழ் நாட்டில் அன்று மன்னரின் கட்டளைக்கினங்க பல ஆயிரம் மனித சக்திகளால் உருவான பல அதிசயக்கும் பெரிய2 கோயில்கள். கோயில்களுக்கு பதிலாக மலைகளில் ஒரு கொயிலுக்கு ஒரு அணைகட்டு என்று கட்டி குறுக்கே அந்தந்த ஊர்களுக்கு சிறிய நதிகளை வெட்டியிருந்தால் இன்று விவசாயிகளின் நன்மை? சரி என்னதான் தீர்வு. அன்று ஆரியர்களின் வருகைக்கு பின்பே நமக்கு சரிவுகள் ஏற்ப்பட்டன எதை2 இழந்தமோ அதை திரும்ப பெறவேண்டும். அன்று நம் முன்னோர்கள் எந்த முறையை கையாண்டார்களோ அதே முறையை நாமும் கையாள வேண்டும். அப்படி கையாண்டால் ஒரு சில ஆண்டுகளில் பலனை எதிர்பார்த்து விட முடியாது எப்படி சரிவுகள் பல தலைமுறைகள் பிடித்ததோ அதே போல் முன்னேற்றமும் பல தலை முறைகள் பிடிக்கும்.
இது யாரையும் மனதில் நிறுத்தியோ புண்படுத்தவோ எழுதப்படவில்லை எம்மின மக்கழின் வீழ்ச்சியை நினைத்தே எழுதினேன்
யக்ஞங்கள் 5 (1)தேவ யக்ஞம் (2)ரிஷி யக்ஞம் (3)பிதுர் யக்ஞம் (4)பூத யக்ஞம் (5)நரயக்ன்யம்.தேவ யக்ஞம்=கணேசர்,பெருமாள் ,சிவ ,சக்தி ,முருகன் ,சூர்யன் பூஜைகள்.ரிஷி யக்ஞம் =மூர்திகள் ஆசிபெற்ற சித்தர்கள் பாடிய பாடல்கள் பாராயணம்.பிதுர் யக்ஞம் =இறைவனடி சேர்ந்த நம் மூதாதையர்கல் சொர்க்கம் சேர பிரார்த்தனை.பூத யக்ஞம் =வளர்ப்பு பிராணி/பெர்யோர்/சிறுவர் அனைவருக்கும் வுணவு.நரயக்ன்யம் =நரக வேதனை/நோய்/வறுமை/மற்றும்2 கஷ்டத்தில் இருப்போருக்கு பிரார்தனை/யாகம் /அர்ச்சனை போன்றவை.சிவாசரியரொ/பட்டாசாரியரொ எல்லோர்க்கும் ஒன்றே.
ஆண்கள் பலவிதம்/பெண்கள் பலவிதம்/மூர்த்தி பல/பக்தி பலவிதம் அதில் ஒன்று தான் டுரியான் காவடி.பால் காவடி,கரும்பு காவடி ,அழகு குத்துவது மற்றும்2 கடவுளை தலைவனாக/தாயாக/குடும்பமாக/நண்பனாக/வேலை காரனாக மற்றும்2 விதமாய் வணங்குகின்றனர்.அது அவர் வுரிமை.ஏன் பத்து மலை சுற்றுலா தலமா இருந்தாலும் சுற்றுலா பயணிகள் பெருகி கொண்டு தான் வருது.என்னமோ சொல்றாங்கோ அவுங்க மானம் போவுதாம்/யாரோ அவுங்க மூஞ்சிலே காரி துபுராங்கலாம்.ஆதி மனிதன் ஆடை /நாகரீகம் /வுரவு தெரியாம வாழ்ந்தான் அம்மா தெரியாது அப்பா தெரியாது அண்ணன்/தம்பி/அக்க /தங்கை யாரும் தெரியாது எப்படி எப்படியோ யினவிர்தி நடந்தது.நீ யார்/நான் யார் ?மானமாம் அவமானமாம்.
மாறன் உங்கள் கேள்விக்கு சைவ சமயத்தில் அவத்தை என்ற கோட்பாட்டின் வழி பதில் சொல்ல வேண்டும். இன்று நேரம் இல்லை நாளை இரவு எழுதுகின்றேன் பொறுத்திரும்.
உழவரே இவ்வளவு நல்ல தமிழில் கருத்து எழுதுபவரே, நமது முன்னோர்கள் கண்ட நல் வழிமுறைகளை வரிசைப்படுத்தி தெரிந்த வரையில் எழுதுங்களேன். செம்பருத்தி வாசகர்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கும் என்று நம்புவோமாக.
இங்கெஹ் நம்பெஹ் என்னதே சொனாலும் அங்கெஹ் பொய் செர்ஹதி,என் என்றல்….அங்கெஹ் அப்படி தான்…..சொனஹ் எங்கெஹ்கெஹ் கெகெரகெஹ்…
ஐயா தேனீ மற்றும் உழவன் போன்றோரே இன்றைய தமிழன் வளர்ச்சிக்கு தேவை … உங்களைபோன்று ஒரு நூறு பேர் தமிழர்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்தினால் முன்னோர்கள் பெற்றவெற்றி நம்வருங்கால சந்ததி அடையும் என்பதில் ஐயமில்லை .. ஐயா உழவனாரே செம்பருத்தி மக்கள் கருத்து பக்கம் ஒருகட்டுரை வரையலாமே … தங்களிடமுள்ள சரக்கை சக வாசகராகிய எமக்கும் பகிர்ந்தளிககலாமே …
ஐயா தேனீ மற்றும் உழவன் போன்றோரே இன்றைய தமிழன் வளர்ச்சிக்கு தேவை … உங்களைபோன்று ஒரு நூறு பேர் தமிழர்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்தினால் முன்னோர்கள் பெற்றவெற்றி நம்வருங்கால சந்ததி அடையும் என்பதில் ஐயமில்லை .. ஐயா உழவனாரே செம்பருத்தி மக்கள் கருத்து பக்கம் ஒருகட்டுரை வரையலாமே … தங்களிடமுள்ள சரக்கை சக வாசகராகிய எமக்கும் பகிர்ந்தளிககலாமே …
இங்கு நடக்கும் எல்லாவற்றையும் அவன் தானே அனுமதித்தான்? இது மாறனுடைய கேள்வி. உயிர் “கேவல நிலையில்” (உடல் அற்று ஆணவ மலத்தில் அழுந்தி நிற்கும் நிலை) செயலற்று துன்பத்தில் இருக்கும். அதன் துன்பத்தைப் போக்கும் பொருட்டு சிவ பெருமான் உயிருக்கு உடலைக் கொடுத்து படைத்தான். இது இன்று நாம் வாழும் “சகலர் நிலை” என்பது. தனது திருவருளால் உயிரை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தை சற்றே விலக்கும் போது, உயிர் தனது இச்சா சக்தி (இச்சை), கிரியா சக்தி (செயல்), ஞானா சக்தி (அறிவு) கொண்டு செயல் பட தொடங்கும். உயிருடன் ஒன்றாய், வேறாய், உடனாய் நின்று செயல் ஆற்றுவான் சிவ பெருமான் என்கிறது சித்தாந்தம்.
இறைவன் உயிர்களோடு கலந்து ஒன்றாய் நிற்பான். அதனாலே அவனை அறிய உமது சித்தத்தினுள் கடந்து செல், நீர் கடவுளை காண்பாய். பொருள் தன்மையினால், உயிருடன் வேறாகி நிற்பான் இறைவன். உயிரின் செயலுக்கு உயிரே பொறுப்பாகும் ஒழிய அது இறைவனின் செயலாகாது என்பதை உணர்த்த வேறாகி நிற்பான் என்கிறது சித்தாந்தம். என்று உயிர் இன்ப துன்ப செயல் அற்று இருவினை ஒப்பு ஏற்பட்டு சிவத்தை சார்ந்து நிற்கின்றதோ அப்பொழுது உயிரும் தானுமாய் உடனாகி நிற்பான் என்கின்றது சித்தாந்தம். ஆகையால், இவ்வுலகில் நாம் சகலர் நிலையில் நின்று செய்யும் சகல செயல்களுக்கும் நம் உயிரே காரணம் ஒழிய இறைவன் அல்ல என்பதை உணர்க. போதும் ஐயா உமது கேள்விகள்.. மேற்கொண்டு சைவ சித்தாந்தம் பயில முனைவர் திரு ஆறு நாகப்பனை தொடர்பு கொள்ளுங்கள்.
வைணவர்கள் புலால் வேள்வி வழிப்பாடு இப்பொழுது இல்லை. காலத்துக்கு தகுந்தமாரி காட்சியும் மாறி விட்டது. ஆளை விடுங்கள் சாமி.
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது! இங்கு கருத்துக்கள் பரிமாறிகொண்ட அனைவருக்கும் நன்றி! நன்றி தேனீ சார்!
எல்லாம் சிவமயம்!
ஸாதான் ஓதுது வேதம்.
எங்களுடையதை திருடி விட்டனர் என்று புலம்புகின்றனர் சிலர்,அப்போது இதுவும் அவர்கலுடதொ (அச்வாமித யாகம் ).அந்த யாகம் மாந்த்ரீக அதர்வண வேதா அடிப்படை.இங்கே ப்ரொகிதர்கு வேத மந்த்ரதுக்கு வேலை இல்லை சார்.ராணி தேனீ இருக்குமிடம் சிப்பாய் தேனீ காரணம் /கேள்வி இல்லாமலே தேன் கொண்டு பொய் கூடு கட்டும்,6 அறிவு மனிதன் ஏன் தலைமையை மதிக்காது விரண்டா வாதம் செய்கின்றனர்.
“kayee” நீர் ஏன் புலம்ப ஆரம்பித்து விட்டாயோ தெரியவில்லவிலை. உமது நம்பிக்கையில் நீர் நில்லும். எங்களுடைய அறிவார்ந்த இறை கோட்பாடுகளின் வழி எங்கள் வாழ்வை செம்மையாக்கிக் கொள்கின்றோம். இதில் ஏன் உமக்கு பொறாமை, பொச்சரிப்பு. இன்னும் தொடர்ந்து எங்கள் மூளையை சலவை செய்ய முடியவில்லை என்பதனாலா?. காலம் மாறிவிட்டது, காட்சியும் மாறி விட்டது. தமிழர்களும் மாறி விட்டனர் என்பதை உணர்ந்து செயல்படுக. சும்மா சாத்தான் வேதம் ஓதுது, கீதுது என்று வெட்டிப் பேச்சி பேசினால் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வாய் எம்மிடமிருந்து.
தேனி, கலை அவர்களே தங்களது பாராட்டல்களுக்கு மிக்க நன்றி. தாங்களிருவரும் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்ற என்னால் முடிந்த வரை முயற்ச்சி செய்து பார்க்கிறேன். காரணம் இது போன்றவற்றில் முன் அனுபவம் இல்லாததும், ஒரு சிறிய கட்டுரை வரைய சில மணி நேரங்கள் ஆவதும் ஆகும். ஒரு சிலர் எப்படிதான் நிறைய எழுதுகின்றனரோ தெரியவில்லை!. அதன் சூட்சமத்தை தெரிந்து கொள்ள ஆவல். உதவி புரிபவர் யாரோ?.
ஒரு சில தினங்களுக்கு முன்பு நான் எழுதிய இந்த மென்மையான கருத்து, ஒரு சிலருக்கு கீழ் மூச்சும் மேல் மூச்சும், மூச்சுக்காற்றில் உஷ்ணமும் உயர்வதை காண்கிறேன். வேண்டாம் என் மீது கோபம். இங்கே கருத்து எழுத வருபவர்கள் எல்லோரும் வீழ்ந்து கிடக்கும் தன் இனம், உயர வேண்டும் என்பதற்காக பொது நல சிந்தனையோடு வருகின்றனர். யாருக்கும் யாருடனும் மல்லு கட்டும் எண்ணம் இல்லை. இதற்கே இப்படி என்றால், சில நுாறு வருடங்களுக்கு முன்னால் வழக்கத்தில் இருந்த, புனித ஆலயம் என்று சொல்லப்படுகிற அந்த இடத்தில் தன் உடல் காம இச்சயை தீர்த்துக் கொள்ள தேவ தாசிகளை (தேவனுக்கு தொண்டு செய்பவர்கள்) பயன்படுத்திக்கொண்டார்களே அதைப்பற்றி என்ன சொல்ல. ஆரம்ப ஆதி காலங்களில் மேற்கு திசையிலிருந்து வந்த ஆரியர்களின் உணவு சைவமா? அசைவமா? என்று விஞ்ஞான புர்வமாக எழுதினால் சாந்தி அடைவீர்களா? வேண்டாமே தர்க்கம். உங்களிடம் ஒரு கேள்வி சித்தரும், முனிவரும், உண்மை சாமியார்களும், போலிசாமியார்களும் ஒரே நிறத்தனலான (காவி நிறம்—-இழஞ்சிவப்பு) ஆடையே அணிகின்றனர். அந்நிறத்தின் சிறப்பம்சம் என்ன? ஒழிந்திருக்கும் தத்துவம் என்ன? சுலபமான இன்னொரு கேள்வி குடுமி இல்லாத தேங்காய் புஜைக்கு உதவாது. புஜைக்கு பிறகு குடுமியை பிய்த்து விட வேண்டும். அதன் தத்துவம் என்ன? இரண்டிற்கும் 10 வயது சிறுவனும் புரிந்து கொள்ளும்படியான (வேதம் சம்பந்தமான பதிலை தவிர்க்கவும் அதில் குழப்பமே பதிலாக கிடைக்கும்) அறிவியல் ரீதியான பதில் வேண்டும். பதில் கூறாவிட்டால் உங்கள் தலை சுக்கு நுாறாக வெடித்துவிடும். பதில் கூறிவிட்டால் வேதாளம் முருங்கை மரத்தில் திரும்பவும் ஏறி உட்கார்ந்து கொள்ளும் என்று கூறமாட்டேன். அடுத்த பதிவில் நானே கூறி விடுவேன்.
காய் மலாயு சொல்கிற ஓராங் காயு ..நல்லபெயர் பெயர்போல செயல்
kayee! மாயோன் மேய காடுறை உலகமும்,சேயோன் மேய மைவரை உலகமும்,வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,வருணன் மேய பெருமணல் உலகமும்,முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையான் சொல்லவும் படுமே! ஏன் முல்லை முதலில் சொல்லபடுகிறது? அரியும்,அரனும் ஒருவனே! என்று முருகன் வழிபாடு இருந்ததோ அன்றே பெருமாள் வழிபாடும் இருந்தது! ஆகா பெருமாளும் தமிழ் கடவுளே! ஆரியர்களுக்கும் நாம் (தொல்காப்பியர்) கற்று கொடுத்தோம், அரியும் அரனும் ஒன்னே அறியாதவர் வாயில் மண்ணே! (வாயில் மண்ணே என்பது மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் இந்த பூமியை / மண்ணுலகத்தை குறிக்கிறது) நம் உடல் உறுப்பு அல்ல! எல்லாம் சிவமயம்!
காவி கலர் உடை – காடுகளில் வாசம் செய்யும் சித்தரும், முனிவரும் தங்களைப் பூச்சி, புழு, போன்ற ஊர்வன பிராணிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள ஒரு வகை காட்டுப் பழத்தில் இருந்து எடுக்கப் படும் “காவி” வர்ணத்தில் தங்களது வெள்ளைத் துணியை தோய்த்து அணிந்து கொண்டார்கள் என்று அறிகின்றேன். அந்த பழ வர்ணத்தில் இருந்து வரும் வாடை இப்பிராணிகள் அண்ட விடாது பாதுகாக்கும் என்றும் அறிகின்றேன். இன்று, காவி உடை போட்டவன் எல்லாம் சிறந்த பக்திமான்கள் என்பதும். சாஸ்திரிகள் சாமியார்கள் என்பதும், சங்கராச்சியார்கள் என்பதும், ஆதீனம் என்பதும் ஆகி விட்டது. காஞ்சி சங்கராச்சியாருக்கு எப்பேர்பட்ட அவமானங்கள், மதுரை ஆதீனத்துக்கு எப்பேர்பட்ட அவமானங்கள், நித்தியாந்தா போன்ற போலிச் சாமியார்களால் ஏமாந்தவர்கள் எத்துணைப் பேர். எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்களைப் “போர்த்தி”க் கொள்வது நவீன “காவி” உடை!
தேங்காய் குடுமி – தேங்காய் கெடாமல் இருப்பதற்காகவும், உடைத்ததைப் பின்னர் சரியான நிலையில் அமர வைக்க வேண்டி, குடுமியை முன்னர் பிய்யிக்காமலும், பின்னர் பிய்யித்தும் வைக்கக்கூடும். பிழையானால் சரிபடுத்துங்கள் உழவரே.
வணக்கம் தேனி அவர்களே, காயு அம்மாவின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
காயு அம்மாவுக்கு,
(வேதம் சம்பந்தமான பதிலை தவிர்க்கவும் அதில் குழப்பமே பதிலாக கிடைக்கும்) அறிவியல் ரீதியான—– என்பதை அறிவியலும் அறிவும் என்று சேர்த்துக் கொள்ளவும்.
மாறன் சார் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். நான் அவசர குடுக்கையில் எய்த அம்பு என் மனதையும் 2-3 நாட்களாக நோகஅடித்து விட்டது . உங்களுடைய பண்பு ஒரு வார்த்தை குட எதிர்த்து பேசவில்லை அதுவரை தாங்கள் உயர்ந்தவரே
சாமுண்டி , நீ ஏன் ஒரு ரிங்கிட்டை இந்து சங்க தலைவரிடம்
கொடுத்தே , முதலில் உன் மேலேதப்பு இருக்கு ,அவனிடம் போய்
கணக்கு கேட்குரே , ஏன்னா நைனா கோயிலுக்கு அல்லது சங்கத்திற்கு தலைவனா வரவன் எல்லாம் சம்பாதிக்க வருகிறான்
என்று நமக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் ,அப்படி இருக்க முட்டாள் தனமாக காசை கொடுத்து விட்டு கணக்கை கேட்கலாமா ,இதில் உண்டியலில் காசு போட்டவன் ,நகைகளை
போடுகிறவன் இருக்கும் வரை எவன் டா தலைவனாக வர ஆசைப்பட மாட்டன் , வெண்டாம் நைனா ,நமக்கு தெய்வம்
நம்மை பெற்றவர்கள் இருக்க எதற்கு கண்ணால் காணாத வற்றை எல்லாம் கும்பிட காசை அள்ளி இறைக்கிறாய் நைனா .
தேனீ சார்,கோபம் வேணாம் கை மீது, கிண்டல் செய்ய வரவில்லை.சிலநேரம் பெரியார் சொல்றாங்கோ சிலநேரம் சிவ புராணம் சொல்றாங்கோ.திட்டுங்கள் சார் வுமக்கில்லாத வுருமையா.சொல்லுங்கள் தமிழர் ஆஸ்திகனா/நாஸ்திகனா.சாமியார்/போலி சாமியார் ஏன் நாம் அவர்கிட்டே போவானேன் யெமாருவானென் விதியை புரியாதவன் தான் பரிகாரம் பெயரில் ஏமாறுவான்.காவி வுடை நெருப்புக்கு சமானம் அதனால் வுடுத்துகின்றனர்.விடுங்கள் ஏன் மற்றவனயெ குறை/நிறை பர்குராங்க்கொ.இந்த விளக்கம் குரு சிஷ்ய முறையில் கிடைக்கும்.திருமணம் செய்தபின் செக்ஸ் செஞ்சா யாரும் தப்பு சொல்ல மாற்றார்கல்,எதுவும் சுலபத்தில் கிடைக்காது அதுவே சுலபமா கிடச்சா அது நிலைக்காது.ஆலய வழிபாட்டுக்கு பூர்ண தேங்காய் தான் சிறப்பு.திட்டுங்கோ தேனீ சார் ஆனா நன்மை பிறக்க திட்டுங்கோ எனக்கு தேடல் நிறையா இருக்கு எதாவது கிடைக்குமா பாப்போம் ஆனா நான் ஜால்ரா அடிக்க மாட்டேன்.இன்பமே சூழ்க எல்லா ஹிந்துவும் வாழ்க,நாராயண அர்ப்பணம்.
உழவன் சார்! இங்கு உயர்ந்தவரோ,தாழ்ந்தவரோ கிடையாது! அவரவருக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சரியாக நடத்துகிறோம்!நடந்தது,நடப்பது,நடக்கவிருப்பது அனைத்தும் அவன் அறிவான்!
எல்லாம் சிவமயம்!
பக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி போகும்..
-தந்தை பெரியார்.
“பக்தி”க்கும், “புத்தி”க்கும் “அ”கர “உ”கரத்திலும் உள்ள வித்தியாசம்தான்.
செம்பருத்தி களத்தினிலே ஆன்மீக சிந்தனையும் ,பகுத்தறிவின் சித்தாந்தமும் ,மலேசிய மைந்தர்களின் தமிழ் ஆக்கத்தால் மணக்கின்றது தமிழ் , கருத்து மழை பொழிகின்றது மடை திறந்த வெள்ளம் போல் ,மடமைகளை மீட்க ,கருத்துகளத்தினில் உள்ளே வர பயந்தோம், மணக்கும் தமிழ் கண்டு நுழைந்தோம் ,வாழ்த்து சொல்ல ,மனிதவாழ்கையில் ஆன்மீகம் இன்றியமையா நிலையாய் போனது, அளவுகடந்த பக்தி மார்கத்தால் மடமையும் இணைந்தது ,அளவுகடந்த மடமையின் மார்கத்தால் , படித்த அறிவாலும் ,பட்டஅறிவாலும் , பகுத்தறிவு சிந்தனையும், தழைத்து ஓங்கியது நெறிப்படுத்த ,பக்தி மார்க ஆன்மிக சிந்தனைகள் தழைக்கட்டும் ,ஆன்மீகம் இருக்கும் வரை ஆன்மீக கடிவாளமாக பகுத்தறிவு சிந்தனைகள் நிலைக்கட்டும் ,தமிழுக்கும் ,தமிழ் கடவுள் ,பெருமைக்கு களம் அமைத்த செம்பருத்தி தலைமைக்கும் ,ஆசிரியபெருமக்களுக்கும் , மனிதமார்கத்தில் களம்கண்ட படைப்பாளிகளுக்கும் ,மனம் நிறைந்த வாழ்துக்கள் ,வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் ,தைபூசம் கண்ட தமிழ் கடவுளுக்கும் வாழ்துக்கள் .
உண்மையான இறை பக்தி உள்ளவன் தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கதில் உயர்நதவனாக இருந்தால் அவனுடைய பக்தியால் புத்தி சரியாகவே இருக்கும். ஒழுக்கமில்லாது அதை உயிரைவிட மேலாக மதிக்காதவருக்கே அதைப் பெரியார் சொன்னார். பெரியாரை ஆழ்ந்து படிக்காவிட்டால் அவரின் உள்ளத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
செம்பருத்தி களத்தினிலே ஆன்மீக சிந்தனையும் ,பகுத்தறிவின் சித்தாந்தமும் ,மலேசிய மைந்தர்களின் தமிழ் ஆக்கத்தால் மணக்கின்றது தமிழ் , கருத்து மழை பொழிகின்றது மடை திறந்த வெள்ளம் போல் ,மடமைகளை மீட்க ,கருத்துகளத்தினில் உள்ளே வர பயந்தோம், மணக்கும் தமிழ் கண்டு நுழைந்தோம் ,வாழ்த்து சொல்ல ,மனிதவாழ்கையில் ஆன்மீகம் இன்றியமையா நிலையாய் போனது, அளவுகடந்த பக்தி மார்கத்தால் மடமையும் இணைந்தது ,அளவுகடந்த மடமையின் மார்கத்தால் , படித்த அறிவாலும் ,பட்டஅறிவாலும் , பகுத்தறிவு சிந்தனையும், தழைத்து ஓங்கியது மனிதர்களை நெறிப்படுத்த ,பக்தி மார்க ஆன்மிக சிந்தனைகள் தழைக்கட்டும் ,ஆன்மீகம் இருக்கும் வரை ஆன்மீக கடிவாளமாக பகுத்தறிவு சிந்தனைகள் நிலைக்கட்டும் ,தமிழுக்கும் ,தமிழ் கடவுள் ,பெருமைக்கு களம் அமைத்த செம்பருத்தி தலைமைக்கும் ,ஆசிரியபெருமக்களுக்கும் , மனிதமார்கத்தில் களம்கண்ட படைப்பாளிகளுக்கும் ,மனம் நிறைந்த வாழ்துக்கள் ,வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் ,தைபூசம் கண்ட தமிழ் கடவுளுக்கும் வாழ்துக்கள் .
பக்தி புத்தியை தீட்ட கூறும்! ஞானவழியில் புத்தியை தீட்ட பக்தியே வழிகாட்டி! அதன் அராய்ச்சி தன் நுண்ணறிவாற்றலை உயர்வாக்கி,
அறிவும் உயர்வாகி,முடிவில் தன்னை அறிந்து,இவை யாவும் தன் பரிணாம வேக விளைவாக இருப்பதை உணர்வதே ஞானமாகும்! ஞானத்தை தேடுங்கள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும்! எல்லாம் சிவமயம்!
காவி நிறம்- இழஞ்சிவப்பு- நெருப்பு. நெருப்பின் தன்மை தீயிலிட்ட எந்த பொருளும் திரும்ப பயன் பாட்டிற்கு உதவாது. அர்த்தம் ஒரு வழி பாதை. நாங்கள் பந்த பாசங்களையும், ஆசபாசங்களையும் துறந்து இறைவனை காண அந்த ஒரு வழி பாதையில் செல்கின்றோம், சென்றுவிட்டோம் என்று உணர்த்தவே அந்த நிறம். காவி உடையை அணிபவர்கள், தவறு செய்து மாட்டிக்கொண்டாள் தர்ம அடி வாங்குவது அதனாலேயே.
தேங்காய் – குடுமி
ஆணவ மலத்தாலேயே மனிதன் கடைசிவரை மனிதனாக வாழாமல், இறைவனை காணாமல் அழிந்து விடுகிறான். ஆணவம் என்கிற கடினமான ஓட்டை கடந்து சென்றால் அன்பு என்கிற துாய மனதை வெள்ளை பருக்களை காணலாம். அதன் பிறகே அறிவுக் கண்ணான ஞாணக்கண் திறக்கும். அதனை நெற்றிக்கண் என்றும் சொல்லுவர்.
சூடம்
ஒரு கவிஞரின் பாடல் வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாதே?. சூடம் தயாரிக்கப்படுவது நாமேல்லோரும் அறிந்ததே. சுத்தமான சூடத்தை எறித்தால் கீழே சாம்பலோ, மேலே புகையோ, தரையில் எறித்ததற்கு ஆன சுவடோ தெரியாது. நமது ஆண்மாவையே குறிக்கும்.
கும்பம்
பாடல் கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? தண்ணிருக்கு அணை போடாவிட்டால் கீழ் நோக்கியே பாயும் . நமது மனமும் அப்படியே. கட்டுப்பாடு இல்லாவிட்டால் கண்டபடி அலையும். தேங்காயை உடைப்பதுற்கு முன்பாக தண்ணீர் வெறும் தண்ணீர்தான். தேங்காயை உடைத்த பின்பு தண்ணீர் தீர்த்தமாகிறது. ஆணவத்தை அழித்த மனிதன் புனிதன் ஆகிறான்.
அன்பான வாசகர்களே ஒரு சிலவற்றை மட்டுமே உதாரணம் காட்டியிருக்கிறேன். ஆணவத்திற்கும் வினாயகர் புஜைக்கும் ஒற்றுமை உள்ளது சிங்கத்தின் மீது அமர்ந்த அம்மனுக்கும், பெண்னிடத்தில் உள்ள தாய்மை என்ற குணத்திற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. முருகனுக்கும் பட்டுக்கோட்டை பாடல் ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்ற பாடலுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது, நம்மில் பலர் இந்த சமுகத்திற்கு பயந்து, சடங்கு சம்பிராதயங்களை பொருள் அறியாது ஒரு கடமையாகவே செய்து வருகின்றனர். புப்படைந்த பெண்களின் சடங்கும், கல்யாணமாகும் மணமக்களின் நழுங்கும் அப்படியே.
வாசகர்களே என்னுடைய எழுத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். படிக்கும் வாசகர்கள் தவறை புரிந்து கொள்ளட்டும். என்னையே நானும் மாற்றிக்கொள்கொள்கிறேன். தவறை திருத்திக்கொள்ளிறேன். உண்மை இருந்தால் ஒரு வரியில் பாராட்டுங்கள். மற்றவர்களும் புரிந்துக் கொள்ளட்டும். எனக்கும் உற்சாகமூட்டட்டும்.
முருகனுக்கும் பட்டுக்கோட்டை பாடல் என்ற வரிகளில் குழந்தை பருவ முருகனுக்கும் என்று மாற்றிக் கொள்ளுங்கள். தவறுக்கு மன்னிக்கவும்.
கருத்து மலைகள் செம்பருத்திக்குள் வந்து நுழைவதைப் பார்த்தால் தமிழர்கள் அறிவார்ந்த ஆன்மீக வாழ்க்கைப் பயணத்தை மீண்டும் தொடங்க துவங்கி விட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. உழவரே, தங்களது விளக்கத்திற்கு நன்றி. வாழ்க தமிழ், வளர்க தமிழர். இங்கே நல்லதோர் கருத்து பரிமாற்றத்திற்கு வழி வகுத்த செம்பருத்தி இணையத்துக்கும் வாசகர்களின் சார்பில் நன்றி.
ஒழுக்கமில்லா அறிவாலோ, புத்தியாலோ, அல்லது ஞானத்தாலோ அரசியலுக்கும் சரி, சமயத்திற்கும் சரி, குடும்ப வாழ்க்கைக்கும் சரி , தலைமைத்தவத்திற்கும் சரி எந்த பயனும் சமுகத்திற்கு ஏற்படப் போவதில்லை.!
ஜெகவீரபாண்டியன் அவர்களே, குறைகளை தெளிவாக சொன்னால், என்னை நானே திருத்திக்கொள்வேன். கற்றது கையளவு என்ற மன பாங்கு உள்ளவன் நான். குறைகளை மற்றவர்களும் புரிந்து கொள்வர். பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.