தைப்பூசத்திற்கான விதிமுறைகளுக்கு இயக்கங்கள் ஆதரவு!

kavadi 3தைப்பூசம் என்பது ஒரு தெருவிழா ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய சமூகம் முன்வர வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அது நுகரும் கலாச்சாரத்தன்மைக்கு ஆளாகி தனது பண்பாட்டு சமயத்தன்மையை இழந்துவிடும் என்பதால் இந்த விதிமுறைகளை உருவாக்க முற்பட்டோம் என்கிறார் குணராஜ்.

கடந்த ஒரு மாத காலமாக இது சார்பாக ‘தைப்பூச பணிப்பிரிவு’ என்ற ஒரு குழுவை உருவாகினோம். இந்து சங்கம், இந்து சேவை சங்கம், ருத்திர சமாஜ், செலயாங் நகராண்மைக்கழகம், காவல்துறை மற்றும் சில சமூக அமைப்புகளை சார்தவர்கள் ஆலோசனை வழங்கினார்கள் என்றார் அக்குழுவைச் சார்ந்த குணராஜ்.

BC MHSஇதன் பலனாக இன்று இந்து சங்கம் அலுவலத்தில் ஒரு கலந்துரையாடல் விளக்க க்கூட்டம் நடைபெற்றது. இதை இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன்ஷான் வழிநடத்தினார். அவருக்கு துணையாக அதன் முன்னால் தலைவர் டத்தோ வைத்தலிங்கம் மற்றும்  இராமாஜி, குணராஜ், கோம்பாக் காவல்துறையின் ஏஎஸ்பி முத்து, இந்து சங்க துணைத்தலைவர் கந்தசாமி,   ஆகியோர் உட்பட இன்னும் சில இயகத்தலைவர்கள் உடன் இருந்தனர்.

Gunarajமுதல் கட்டமாக மலேசியாவில் நடைபெறும தைப்பூசத் திருவிழவுக்கான   விதிமுறைகள் அடங்கிய ஒரு கையேட்டை இந்து சங்கம் தனது சார்பாக அறிமுகப்படுதியது. சுமார் நூறு பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்நிகழ்வில்  பலர் கருதுரைத்தனர். அது இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினமாகும்.  இது பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.

BC Segaranமலேசியாவில் கொண்டாடப்படும் முக்கிய சமய விழா இதுவாகும். அன்மைய காலங்களில் இங்கு இவ்விழாவை கண்டு கழிப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது ஒரு சமயவிழா என்றாலும் அதை காணவருபவர்கள் அதிகமாகி  அதை ஒரு கூட்டமும் கும்மாளமும் கொண்ட வாணிப நிகழ்வாக்கி வருகின்றனர். இதை முறைப்படுத்துவது நம் அனைவரின் கடமை என்றார் வைத்தலிங்கம்.

விதிமுறைகளைப் பற்றி விளக்கமளித்த மோகன்ஷான், இவை சார்பாக தான் பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவுடன் பேசியதாகவும் அதற்கு அவர் ஆதரவு நல்கியதாகவும் கூறினார்.

தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஏஎஸ்பி முத்து, சில வருடங்களுக்கு முன்பு பொங்கோ இசை கருவிகளை தடை செய்ய எங்களின் உதவி நாடப்பட்டது. அவ்வருடம் சுமார் 500 பொங்கோ இசை கருவிகளை நாங்கள் அகற்றினோம். அதன் பிறகு மக்கள் அதனை கொண்டு வருவதில்லை என்றார்.

சிலர் ஏன் பத்துமலை கோயில் நிர்வாகம் யாரையும் அனுப்ப வில்லை என கேட்டனர். பத்து மலை கோயில் நிர்வாகம் தனது பணியை முறையாக செய்தால் பல பிரச்சனைகளை தீர்க்கலாம் என்றனர்.

விதிமுறைகளில் சில

அலவு காவடிகள் எடுப்பவர்களின் அலவு 3 அடிக்கு மேல் இருக்கக்கூடாது; காவடி எடுப்பவர்கள் முறையாக புஷ்ப காவடி, பால் காவடி, அலங்கார காவடி எடுக்கலாம்.

Kavadi 1காவடிகளில் இயக்கத்தின் சின்னங்களோ அல்லது சமயத்திற்கு சார்ந்து இல்லாத எந்த ஒரு விசயத்தையும் தங்களின் காவடிகளில் இணைக்கக்கூடாது. இருந்தால் அந்தக் காவடிகள் தடை செய்யப்படும்.

இரத காவடி, பறக்கும்  காவடி, அரிவாள், கத்தி, சூலம்,, தடி,, சாட்டை,, சுருட்டு,, மது பானங்கள் போன்றவைகளுக்கு தடை.

kavadi 4முனீஸ்வரன், மதுரை வீரன், சுடுகாட்டு காளி, காட்டேரி போன்ற தெய்வ வழிப்பாட்டு காவடிகள் எடுக்க அனுமதிக்கப்படாது. நாக்கில் குங்குமம் அணிந்து வருபவர்களும் தடை செய்யப்படுவார்கள்.

Kavadi 2மேலும் டுரியான் காவடி,  மிளகாய் காவடி, கொடூரமாக அலங்கரிக்கப்பட்ட காவடிகளுக்கும் தடை.

காவடிகள் எடுக்கக்கூடிய பக்த்தர்கள் கண்டிப்பாக சமய உடைகளை அணிந்து வர வேண்டும். அதனை தவிர்த்து மற்ற உடைகளை அணிந்து வருபவர்களின் நேர்த்தி கடன் ஏற்றுக் கொள்ளப்படாது.

காவடிகளுடன் நாதஸ்வரம், தவில், உறுமி மேளத்தோடு காவடி சிந்து மற்றும் தெய்வீக பாடல்களைப் பாடி வர வேண்டும். அதை தவிர்த்து சினிமா பாடல்களோ, ‘Gangnam Style’, ரேஃப் போன்ற பாடல்களைக் கண்டிப்பாக பாடி வரக்கூடாது.

கேளிக்கை நிகழ்வுகளுக்கு கட்ட கட்டமாக தடை விதிக்க வேண்டும்.

 உணவும் பானமும்

Najib cut outதண்ணீர் பந்தல் போடுபவர்கள் மெத்து வகை கப்களை (STROFOAM CUPS) பயன்படுத்த இயலாது. மேலும் அதிகமானவர்கள் இலவச பானங்கள் உணவு வழங்க முன்வருவதால் அதிகப்படியாக அவை வீணாகின்றன. இதை முறையாக கையாள முன்பதிவு முறையை அமுலாக்க கேட்டுக்கொள்ளப் பட்டது.

அதோடு அரசியல் தலைவர்களின் வருகைக்கு மேடை போடுவது, அவர்களுக்கு ‘கட் அவுட்’ போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இவை விதிமுறைகளில் இல்லை.