தைப்பூசம் என்பது ஒரு தெருவிழா ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய சமூகம் முன்வர வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அது நுகரும் கலாச்சாரத்தன்மைக்கு ஆளாகி தனது பண்பாட்டு சமயத்தன்மையை இழந்துவிடும் என்பதால் இந்த விதிமுறைகளை உருவாக்க முற்பட்டோம் என்கிறார் குணராஜ்.
கடந்த ஒரு மாத காலமாக இது சார்பாக ‘தைப்பூச பணிப்பிரிவு’ என்ற ஒரு குழுவை உருவாகினோம். இந்து சங்கம், இந்து சேவை சங்கம், ருத்திர சமாஜ், செலயாங் நகராண்மைக்கழகம், காவல்துறை மற்றும் சில சமூக அமைப்புகளை சார்தவர்கள் ஆலோசனை வழங்கினார்கள் என்றார் அக்குழுவைச் சார்ந்த குணராஜ்.
இதன் பலனாக இன்று இந்து சங்கம் அலுவலத்தில் ஒரு கலந்துரையாடல் விளக்க க்கூட்டம் நடைபெற்றது. இதை இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன்ஷான் வழிநடத்தினார். அவருக்கு துணையாக அதன் முன்னால் தலைவர் டத்தோ வைத்தலிங்கம் மற்றும் இராமாஜி, குணராஜ், கோம்பாக் காவல்துறையின் ஏஎஸ்பி முத்து, இந்து சங்க துணைத்தலைவர் கந்தசாமி, ஆகியோர் உட்பட இன்னும் சில இயகத்தலைவர்கள் உடன் இருந்தனர்.
முதல் கட்டமாக மலேசியாவில் நடைபெறும தைப்பூசத் திருவிழவுக்கான விதிமுறைகள் அடங்கிய ஒரு கையேட்டை இந்து சங்கம் தனது சார்பாக அறிமுகப்படுதியது. சுமார் நூறு பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பலர் கருதுரைத்தனர். அது இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினமாகும். இது பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.
மலேசியாவில் கொண்டாடப்படும் முக்கிய சமய விழா இதுவாகும். அன்மைய காலங்களில் இங்கு இவ்விழாவை கண்டு கழிப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது ஒரு சமயவிழா என்றாலும் அதை காணவருபவர்கள் அதிகமாகி அதை ஒரு கூட்டமும் கும்மாளமும் கொண்ட வாணிப நிகழ்வாக்கி வருகின்றனர். இதை முறைப்படுத்துவது நம் அனைவரின் கடமை என்றார் வைத்தலிங்கம்.
விதிமுறைகளைப் பற்றி விளக்கமளித்த மோகன்ஷான், இவை சார்பாக தான் பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவுடன் பேசியதாகவும் அதற்கு அவர் ஆதரவு நல்கியதாகவும் கூறினார்.
தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஏஎஸ்பி முத்து, சில வருடங்களுக்கு முன்பு பொங்கோ இசை கருவிகளை தடை செய்ய எங்களின் உதவி நாடப்பட்டது. அவ்வருடம் சுமார் 500 பொங்கோ இசை கருவிகளை நாங்கள் அகற்றினோம். அதன் பிறகு மக்கள் அதனை கொண்டு வருவதில்லை என்றார்.
சிலர் ஏன் பத்துமலை கோயில் நிர்வாகம் யாரையும் அனுப்ப வில்லை என கேட்டனர். பத்து மலை கோயில் நிர்வாகம் தனது பணியை முறையாக செய்தால் பல பிரச்சனைகளை தீர்க்கலாம் என்றனர்.
விதிமுறைகளில் சில
அலவு காவடிகள் எடுப்பவர்களின் அலவு 3 அடிக்கு மேல் இருக்கக்கூடாது; காவடி எடுப்பவர்கள் முறையாக புஷ்ப காவடி, பால் காவடி, அலங்கார காவடி எடுக்கலாம்.
காவடிகளில் இயக்கத்தின் சின்னங்களோ அல்லது சமயத்திற்கு சார்ந்து இல்லாத எந்த ஒரு விசயத்தையும் தங்களின் காவடிகளில் இணைக்கக்கூடாது. இருந்தால் அந்தக் காவடிகள் தடை செய்யப்படும்.
இரத காவடி, பறக்கும் காவடி, அரிவாள், கத்தி, சூலம்,, தடி,, சாட்டை,, சுருட்டு,, மது பானங்கள் போன்றவைகளுக்கு தடை.
முனீஸ்வரன், மதுரை வீரன், சுடுகாட்டு காளி, காட்டேரி போன்ற தெய்வ வழிப்பாட்டு காவடிகள் எடுக்க அனுமதிக்கப்படாது. நாக்கில் குங்குமம் அணிந்து வருபவர்களும் தடை செய்யப்படுவார்கள்.
மேலும் டுரியான் காவடி, மிளகாய் காவடி, கொடூரமாக அலங்கரிக்கப்பட்ட காவடிகளுக்கும் தடை.
காவடிகள் எடுக்கக்கூடிய பக்த்தர்கள் கண்டிப்பாக சமய உடைகளை அணிந்து வர வேண்டும். அதனை தவிர்த்து மற்ற உடைகளை அணிந்து வருபவர்களின் நேர்த்தி கடன் ஏற்றுக் கொள்ளப்படாது.
காவடிகளுடன் நாதஸ்வரம், தவில், உறுமி மேளத்தோடு காவடி சிந்து மற்றும் தெய்வீக பாடல்களைப் பாடி வர வேண்டும். அதை தவிர்த்து சினிமா பாடல்களோ, ‘Gangnam Style’, ரேஃப் போன்ற பாடல்களைக் கண்டிப்பாக பாடி வரக்கூடாது.
கேளிக்கை நிகழ்வுகளுக்கு கட்ட கட்டமாக தடை விதிக்க வேண்டும்.
உணவும் பானமும்
தண்ணீர் பந்தல் போடுபவர்கள் மெத்து வகை கப்களை (STROFOAM CUPS) பயன்படுத்த இயலாது. மேலும் அதிகமானவர்கள் இலவச பானங்கள் உணவு வழங்க முன்வருவதால் அதிகப்படியாக அவை வீணாகின்றன. இதை முறையாக கையாள முன்பதிவு முறையை அமுலாக்க கேட்டுக்கொள்ளப் பட்டது.
அதோடு அரசியல் தலைவர்களின் வருகைக்கு மேடை போடுவது, அவர்களுக்கு ‘கட் அவுட்’ போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இவை விதிமுறைகளில் இல்லை.

























நீர் என்ன கலையா? அல்லது பஜாரியா? கருத்துரைப்பவர் எனும் தகுதி கொஞ்சமாவது உமக்கு இருந்தால் கருத்துக்குக் கருத்து எனும் அடிப்படையில் கருத்துரைக்காமல் உம்மை நீர் சைவன் என்று சொல்லொயும் ஒரு வீரசைவனுடைய குணமாகிய அன்பு,அறம், சாந்தம்,நீதி நேர்மை எனும் எல்லாவற்றையும் தூக்கிக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு தமிழையும் சைவத்தையும் காப்பாற்றப் போவதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி தர்கத்திலிருந்து தப்பி ஓட வழிதேடும் பாணியில் என்னை பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி என்றும் திராவிட புகழ்பாடி என்றும் குட்டைகுழப்புபவன் என்றும் தந்தை பெரியாரை தரக்குறைவாக கன்னட நாயக்கன் தமிழ் உணர்வை மழுங்கடிக்க வந்தவன் என்றும் “என்னை ச்சூத்திரனென்று அழையாதே …மாறாக வேசி பிள்ளை என்று அழை ” என்று பெரியார் சொல்லச் சொன்னார் என்று அண்டப்புழுகை ஆகாசப் புழுகாக ஆதாரமெ இல்லாமல் எழுதவும் துணிந்தீர். நீர் குறிப்பிட்ட வீடியோக்களுக்கு பதிலளிக்க நான் தயாராக இருந்தபோதும் உமது தரக்குறைவான விமர்சனம் உம்மோடு வாதம் செய்வதில் அர்த்தமுள்ளதாக அமையப்போவதில்லை என்பதை உணர்ந்து விடைபெறுகிறேன். உம்முடைய அர்த்தமற்ற தூற்றுதலை இனியும் நான் பெரிதாக எடுத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளப் போவதில்லை!
உங்கள் எல்லாருடைய ஒப்பனை (கருத்து) வெளிப்பாடுகளில் உங்கள் மனங்களில் புரையோடிப்போய் ரணமாகிப்போனதில் ஏற்பட்ட ஆத்திரம் தெரிகிறது. நாம் வாழும் இந்த நாட்டில் நாம் தமிழர்கள் என்று மார்தட்டிக்கொள்ள தைரியம் வர மறுக்கின்றது. இல்லை வெட்கப்படுகின்ற அவல நிலையும் எட்டிப்பார்க்கின்றது. காரணம் தமிழனை தேடிப்பார்க்கவேண்டியுள்ளது. நம் கண்ணுக்குத் தெரிந்த கலப்பில்லாத ஒரு தமிழினம் (ஈழத்தமிழர்கள்) அல்லாடிக்கொண்டிருக்கிறது. இங்கே, சுவைக்கலவையாய் (மிக்சர்) பரிணமித்துக்கொண்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. தைபூச காலங்களில் தீமிதி திருவிழா காலங்களில் நாடகக்கலைஞர்களை வ்ளர்த்தார்கள் அன்றைய நம்நாட்டு (மலேசிய) தமிழர்கள். இன்று 500, ஆயிரம் என்று சிமாக்காரர்களை வளர்ததுவிட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் நல்லாத்தானே சம்பாதிக்கிறார்கள். நமக்கு ஒன்றும் அவர்கள் கொடுப்பதில்லையே…பின் ஏன் இந்த நிலமை? இந்த ஆலயங்கள் நமக்கு என்ன செய்கிறது. இந்த நாடகக்கலைஞர்களை வருடத்திற்கு ஒருமுறையாவது ஒரு பெருந்தொகை கொடுத்து அவர்களுக்கு ஊககமும் ஆக்கமும் கொடுக்கலாகாதா?
அவர்கள் செய்யமாட்டார்கள். ஏனென்றால், நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். ஏனென்றால், அவர்கள் இப்படி நினைத்துக்கொள்வார்கள்…அவர்கள் உடம்பில் என்ன ரத்தம் ஓடுகிறதோ அதுதான் மற்றவர்கள் உடலிலும் ஓடுகிறதென்று. அவர்கள் தமிழனாக் இல்லாதிருப்பதால். உண்மையான தமிழன் மதத்திற்கு அப்பாற்பட்டவன்.
நிறையா படித்த இதுதான் பிரச்சனையோ? இப்போதுதான் புரிகிறது! ஏன் சேரன்,சோழன்,பாண்டியன் சண்டை ஒருவனையும் உறுப்பிய வாழவிடவில்லை! நம் லட்சணம் இந்த நிலையில் இருந்ததால்தான் மாற்றான் நம்மை இன்றுவரை மேய்த்து கொண்டிருக்கிறான் இங்கு மட்டும் அல்ல தமிழ் நாட்டிலும்!
தேனி அவர்களே… தங்கள் கருத்திற்கு நன்றி. நான் கருத்துக்களை இப்பகுதியில் முன்வைப்பதே அறியாதவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையுமே எனும் நல்ல நோக்கத்தில்தான். அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கருத்துப் பரிமாற்றத்திற்கு பதில் அபாண்ட பழிசுமத்தல் அரங்கேற்றமாக அல்லவா இருக்கிறது! கடவுள் இல்லை என்று பெரியார் சொன்னார் என்று வரும்போது , பெரியார் ஏன் அப்படிச் சொன்னார் என்று நீங்கள் புரிந்து பதிலுரைத்தீர்கள். பெரியாரைப்பற்றி அறியாதவர்களுக்கு அந்த விளக்கம் ஒரு தெளிவைத் தருகிறது. பெரியாருக்கு மக்கள் பல வகையில் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்திற்காண ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கெழுதி வைத்திருக்கிறார் அவர். அதை எப்போது வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் பார்க்கும்படி இன்னும் வைத்திருக்கிறார்கள். அது அவருடையப் பணம். அவர் யாருக்கும் கணக்கு காட்டவேண்டிய அவசியமே இல்லை. பிறகு ஏன் அவர் கணக்கு எழுதி வைக்கவேண்டும்? பெரியாரைக் கேட்டால் அவர் சொல்வாராம் ” இது என் தேவைக்காக மக்கள் தந்த பணம். அதை ஊதாரித்தனமாக செலவு செய்யக்கூடாது. நீதியும் நேர்மையாகவும் அதை கையாளவேண்டும்” என்பாராம். கடைசி காலத்தில் உயிர் விடுவதற்கு சற்று முன்புகூட “அய்யோ… இந்த அப்பாவி மக்களை இப்படியே கைவிட்டுட்டு போகிறேனே..!” என்று வலிதாங்கமுடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு இறந்துபோன ஓர் உன்னதத் தலைவனை , சமுதாய விடுதலைக்காக கடைசிவரை போராடிய உத்தமனைக் கொஞ்சம்கூட நன்றி உணர்வே இல்லாமல் ஒருமையில் திட்டுவதைச் சகிக்கமுடியாமல் போக நேர்ந்ததை எண்ணி குமுறிவிட்டேன். நன்றி!
பழங்களே வணக்கம்! நாம் அனைவரும் வெவ்வேறு தோற்றமும் சுவையும் கொண்டவர்கள் அனால் அடிப்படையில் நம் ஒரே இனம், பழ
இனத்தை சார்ந்தவர்கள்.நம்மக்குள் போட்ட போட்டியை வளர்த்துக்கொண்டால் நாளை இந்த மண்ணில் எந்த பழ வகையும் இருக்காது என்று உணர்வீர்!
தைபூசத்தன்று மக்கள் கூடி கலைவதுப் போல் ஆண்டு தோறும் செம்பருத்தியில் பட்டிமன்றம் அரங்கேறுவது வழமை !செம்பருத்தியின் முன்னாள் வாசகர்கள் அனல் தெறிக்கும் கருத்துக்களை பகிர்ந்து ஒய்ந்து விட்டார்கள்! பூனைக்கு மணிகட்ட யாரும் நெஞ்சைநிர்த்தவில்லை !முருகனுக்கு தமிழ் மொழி புரியாது என்றால் இடையில்வந்த ஆரியம் சமஷ்கிருதத்துக்கு முன் சங்ககாலப் புலவர்,சமயநூல் புலவரும்மான ஔவையார் முருகனோடு எந்த மொழியில் பேசினார்,தன் பாடலால் முருகனோடு பேசியதாக வரலாறுகள் நமக்கு உணர்த்துகிறதே! தைபூசத்தன்றுதான் நடராஜா தில்லு முல்லு நினைவுக்கு வரும்!நம் நாட்டில் பல கலை ஞ்சர்கள்,கவிஞ்சர்கள்[குறிப்பா தைப்பிங் ஓவியா கோடிகொடியா தமிழன் இருந்தும் யாது பயன் நான் இறக்கும் வரை மறக்காத வரிகள் }நல்ல இனிமையான குரல் வளம் உள்ளவர்கள் இலை மறை காயாக உள்ளார்கள்! வசதி வாயிபுள்ளவர்கள் திறமையான இசையமைப்பாலர்களை உருவாக்க முடியும் இளையராஜா எந்த பல்கலைகழகத்தில் இசையின் நுணுக்கத்தை கற்றார் ஒரு ஆர்முனிய பெட்டியில் இத்தனை இனிமையான ராகங்களா ?ஏன் நம் நாட்டு இசையமைப்பாலர்களால் முடியாது?மேடையில் உங்களை பயங்கர தோற்றத்தில் பார்க்கவா ஆதரவு தருவார்கள் !திறமைக்கு எப்போதுமே முதலிடம் !இங்கே 54 கருத்துக்களை படித்து திட்டு திட்டா ஏன் ஆதங்கத்தை கொட்டினேன் அம்புட்டு தான் வேறொன்றுமில்லை பராபரமே !!
நிறையப் படிப்பதால் வருவது பிரச்சனை அல்ல மாறாக அறிவுப்பூர்வமான சிந்தனைகள். அவற்றைக் கொண்டு தவறுகளையும், தப்புத் தாளங்களையும் தவிர்ப்பத்தில் என்ன தவறு வேங்கையனே? சாக்ரடீஸ், ‘Aristotle’ – அவர்களின் வரலாற்றையும் படியுங்கள் ‘ஏன், எதற்கு, எதனால்’ என்ற கேள்விகள் பிறந்ததின் நியாயம் புரியும். பின்னாளில் ஜனநாயக ஆட்சிமுறை ஏற்படுவதற்கு இவர்களின் கேள்விகளே முன்னோடியாக அமைந்தது.
இந்து சங்கம் , சட்ட விதுகு உட்ட்பட்டு SSM , உள்ளது சட்டம் தெரியாத மேதவிகள் தயவு கூர்ந்து வக்கிலை நடவும்…(di bawah akta syarikat Awam Syer limted by Terhad )……முறைய……அதன் ஆண்டு கணகரிகையில்
வெள்ளி 1, விபரம் உள்ளது தங்கள் வட்டார இந்து சங்கதை அணுகவும்….ச்யபழ் மோகன் சான், குணராஜ்…, ராம்ஜி, …..
மலேசியா ஹிந்து சங்கம் பஹங் மாநிலம் சார்பில் பக்தர் உங்களுக்கு அன்பான ஆலோசனை நமது சமயப் பாடி காவடிகளை. எடுகுமாறு உங்கள் அன்பான வேண்டுகோள்….
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை!
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை!
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்சிகள் உள்ளதனாலே!
நீங்கள் கூறுபவர்கள் இதுபோன்று சண்டைகள் போட்டதனால்
அடையாளம் இல்லாமல் மறைந்து விட்டார்கள் தலைவா!
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் ஆதுதாண்ட வளர்ச்சி!
என்று கேட்டது ஞாபகம் வருகிறது தலைவா! ஆகையால் நம் சண்டை மாற்றானோடுதான் இருக்கவேண்டுமே தவிர நம்முடன்
அல்ல தலைவா! சமாதானம் என்று ஒரு வார்த்தையும் இருக்கிறது நம் மொழியில்!தங்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இல்லை என்றாலும் என் இனம் திசை மாறி போகும் இந்த அவலநிலையை பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை!
பஞ்சம் பிழைக்க வந்தவனென்று ஆரியனை சொன்னேன் …தங்களை அல்ல …
(என்னை ச்சூத்திரனென்று அழையாதே …மாறாக வேசி பிள்ளை என்று அழை)
(அய்யோ… இந்த அப்பாவி மக்களை இப்படியே கைவிட்டுட்டு போகிறேனே..!” என்று வலிதாங்கமுடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு இறந்துபோன ஓர் உன்னதத் தலைவனை!!! ..,
தாங்கள் சொல்வது தவறு .. கன்னட ராமாசாமி மனத்திரையில் இப்படிதான் இருந்திருக்கும் இந்த முட்டாள் தமிழனை ஒருவளிபன்னாமல் உயிர்போயடுமோ ஐயோ …
ராமசாமி அவருடைய திராவிடகொள்கை அர்த்தம் இப்படிதான் இருக்கமுடியும் .. ராமசாமியின் திராவிட கொள்கையால் சாதியம் ஒழிந்ததா?
திராவிடத்தால் தமிழ் மொழி தமிழ் இனம் ஏற்றம்பெற்றதா? இல்லவே இல்லை ..
சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானத்தில் ஆங்கிலம் ஹிந்தி ..தமிழ் நகி !!சிங்கபுரிலிருந்து சென்னை விமானத்தில் தமிழ் உள்ளது …தமிழர்களின் சொத்தாக விளங்கிய கல்விக்கூடங்கள் முடுவிளாகாணும் நிலையில் !! தனியார் கல்விக்கூடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளது 95%திராவிடர்கள் ஆதிக்கம் …dravida சாதனை இன்னும் நிறைய … இவையனைத்தும் தமிழக நண்பர்முலம் தெரிந்துகொண்டேன் ..
இறுதியாக யாதி (வியாதி) பற்றிபார்ப்போம் .. மதங்களை எடுத்துக்கொண்டால் அனைத்திலும் இந்த வியாதி உள்ளது …
உடனே தெரிய வேண்டுமென்றால் இணையதள ஜோடிபோருத்தம் பக்கத்துக்கு செல்லுங்கள் … கிருஸ்தவ —யாதி —முஸ்லிம் வாய்ஜாதி …. பஞ்சாவி …ஜாதி ….
கன்னடர்களில் ,,, தெலுங்கில் ,, மலையாளிகளில் பன்சாபியர்களில்
அவர்களின் பெயரிலே யாதி உள்ளது …
சீனர்களிலும் உள்ளது ….மலாய்காரர்களிலும் மேட்டுக்குடி உள்ளது….
ஆறறிவில் குறைந்த உயிரினங்களிடமும் ஜாதி உள்ளது … புறாக்களிடமும் நாம் பார்க்கலாம் … உதாரணத்துக்கு ஒரு தேன்கூட்டை எடுத்துகொண்டால் பெரியதேனி ராஜா ராணி , உள்ளே கொஞ்சம் உயர்ந்த வர்க்கம் வெளியே காவல்காரதேனி … இப்படி வர்க்கம் உலகில் அனைத்து பாகங்களிலும் உள்ளது …ஜாதி சாக்கடையிலிருந்து மனிதன் மாறவேண்டும் …
கன்னட ராமசாமி தமிழர்களை மீட்கவந்த மீட்பரா? அபத்தம் …
நான் நன்றியுள்ளவனாக இருக்கவேண்டுமோ ?????
தமிழ் சாதியை ஒழிக்கவில்லை வளத்தவர்கள் திராவிடர்கள் …
சாதியைவைத்து தலைவனானவனும் திராவிடர்களுக்கு துணைபோனான்…
நாத்திகம் பேசியவன் திருட்டுத்தனமா சாமியாயு கால்ல விழுந்தான் ஆதாரமுள்ளது …
நாத்திகம் பேசியவன் மதம்மாறினான் …
என்னமோ தமிழனுக்கு மட்டும்தான் ஜாதி உள்ளதுபோல் கன்னட ராமசாமி படம் ஒட்டுவான் முட்டாள் தமிழன் பார்த்து ரசிக்க …
சகோதரன் ஜெகவீரபாண்டியனிடம் மன்னிப்புகேட்கிறேன் தங்கள் மனம் வேதனைபட்டிருந்தால்:) ..
அண்மையில் முகனுளில் படித்தது (உனது கோமணத்தை அடுத்தவன் புடுங்கினால் மானத்தை காக்க கெஞ்சி கூத்தாடி வாங்கி கட்டாதே … மாறாக அவன்கையைவெட்டு!!!!
ஆண்டபரம்பரை பேண்டபரம்பரை!!!!! ஒரு சிறு பரதேசிகூட்டத்திடம் விழுந்தது புரியாத புதிராக உள்ளது !!
(வீரசைவனுடைய குணமாகிய அன்பு,அறம், சாந்தம்,நீதி நேர்மை)
இதெல்லாம் கடைபிடித்த இனம் வாழ பொறம்போக்கு நிலத்தில் …உலகெமெல்லாம்…. கம்போங் ரயில்வேயும் சேர்த்து …
இந்தியாவை எடுத்துகொண்டால் பாதிக்குமேல் தெலுங்கு வம்சாவளியினர் ஆட்சி செய்கிறார்கள் …ஆண்டபரம்பரை அவர்களை சொன்னால் போருந்தும்போல …
கண்டிப்புடன் வாழ்ந்த வளர்ந்த சமயமும் சமூகமும் தங்களுக்கான ராச்சியத்தை உருவாக்கியுள்ளார்கள் … மலேசியா ,இந்தோனேசியா ,பாகிஸ்தான் , இலங்கை ,பங்களாதேஷ் , இஸ்ரேல் ,,,
கன்னட ராமசாமி விதைத்த நச்சுகிருமி இன்று வளர்ந்து விருட்சமாகி உள்ளது …மாற்றுகருத்து இல்லை …
ஐயன் தேனியின் தனிமனித தாக்குதல் வேண்டாமென்ற கருத்திக்கினங்க இதற்குமேல் கன்னடராமசாம்ய்யை விமர்சிக்கமாட்டேன் இந்த பக்கத்தில் .. நன்றி 🙂 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் 🙂 இன்பமே சூழ எல்லோரும் வாழ நானும் வாழ வழிகாட்டுவாயாக
இப்படியெல்லாம் அடிச்சுக்குவாங்கள் என்று தெரிந்துதான், ஆதிதமிழன் மதம் என்று பெயர் சூட்டி ஒதுக்கி வைத்தான். ஆரியனோ தன் சுயநலத்தற்காக தமிழன் முதுகில் ஏறி, தமிழன் செல்லுமிடமெல்லாம் மதத்தை பரப்பி விட்டான். அன்றைய ஆதி தமிழனின் காரண காரியங்கலெல்லாம், அறிவியலும், அறிவும் சார்ந்ததாகவே இருக்கும். பொங்கல் பண்டிகை உட்பட. அதனால்தான் அவன் பல கண்டுபடிப்புக்களை கண்டுபிடிக்க முடிந்தது. தமிழனின் கடவுள் — இயற்கை,இறைவன், இறைவனடி சேர்தல், உலகம் முழுவதும் இறைந்து கிடப்பது. என்றுதான் அழைப்பார்கள்.
எல்லாம் நலமாக இறைவன் அருள் புரிவராக.
மறுபடியும் M.G.R -ரை என் கண் முன்னே வந்து நிழலாட வைத்து எம்மை மறுபடியும் தோட்டப்புற வாழ்க்கையின் நினைவலைகளுக்கு உந்தியதில் மகிழ்ச்சி வேங்கையனே. “பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்சிகள் உள்ளதனாலே!” என்ற கண்ணதாசனின் வார்த்தைகளில் அடங்கி இருக்கின்றது உங்களுக்கு பதில். தமிழ் “அரைகுறை” மொழி என்று கூறியதால் பகுத்தறிவைக் கொண்டு எம்மால் சரியான மறுமொழி கடாரம் கழுகாருக்கு கொடுக்க முடிந்தது. அதற்கு அண்ணாவும் இசைந்து கருத்து தெரிவித்தார். தமிழர்களின் சைவ சமயத்தை, இந்து மதம் என்ற போர்வைக்குள் அமுக்கி அப்படியே ஏப்பம் விட பார்த்த எத்தர்களின் முயற்ச்சியை முறியடிக்க எமது உணர்ச்சி தேவைப்பட்டது. எப்படி திராவிட கழகத்தார் M.G.R. -ரை வைத்து தமிழ் நாட்டு தமிழர்களின், தமிழ் நாட்டு தெலுங்கு வம்சாவளியினரின் உணர்ச்சியை “திராவிடன்” என்ற மந்திர வார்த்தையால் தூண்டி ஆட்சி உரிமையை பெற்றார்களோ, அதே போன்றுதான் எமது உணர்ச்சியும், பக்தி என்ற போர்வையில் ஆலயத்தில் செய்யப்படும் சமய விபச்சாரத்திற்கு யாம் உணர்ச்சிக் கொண்டு அழுத்தமாக குசேலரின் கருத்துக்கு சுருக்கமாக பதில் கொடுத்தது, சரியான சமய அறிவு வழி செல்லும் பக்தர்களின் உரிமையைத் தர்காக்க. இன்றுதான் என்னுடைய வெற்றிப் பயணம் துவங்குகின்றது. ஆயிரமாயிரம் அடிமைகளில் யாமும் ஒருவராக இருக்க விரும்பவில்லை. இருக்கவேண்டியதும் இல்லை. மாறாக M.G.R. -ரைப் போல் “ஆயிரத்தில் ஒருவனாக” இருக்க விரும்புகின்றேன். இறந்தும் வாழ்வோர் சான்றோர்கள். அவ்வாறன வரிசையில் நிற்பவர்கள் M.G.R., Socrates, Aristotle போன்ற சான்றோர்கள். அவர்கள் இன்னும் நமது நினைவலைகளில் இருந்து மறைந்து விடவில்லை தொண்டரே! யாம் சண்டைப் போட வரவில்லை தொண்டரே மாறாக நம் மக்கள் அனைவரும் பிழையான பக்தி மார்க்கத்தில் இருந்தும், “தெய்வ குற்றம்” என்னும் பயமுறுத்தலின் வழி பொய்யான நம்பிக்கையை வளர்க்கும் எத்தர்களின் வலையில் இருந்தும் விலகி இருக்கவே மன்றாடுகின்றேன். இப்பகுதியில் கருத்து கூறுபவர்கள் திசை மாறவில்லை மாறாக “ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ” என்ற தேடுதலுடன் வந்திருகின்றார்கள். அறிக.
மிக்க நன்றி தேனீ தலைவா ! இங்கு கருத்துக்கள் பரிமாறி கொண்ட அனைவருக்கும் நன்றி! உலகிற்கு வாழ கற்று கொடுத்த இனம் தமிழினம்! 18 சித்தர்களும் தமிழர்கள்! அந்த ஒரு பெருமை நம்மை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழவைக்கும்!
ஒர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மாட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை!
” தை முதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு ”
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ….
இன்றைய ….
நம் நாடு தாளிகையில்
பத்து மலை ….பூசத் திருவிழாவில் …..
எந்த விதமான காவடிகளுக்கும்
தடை இல்லையாம்….!!
கோவில் நடராஜா அறிவிப்பு …!!!
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை …..
வேண்டியப் படி நிறைவேற்றுமாறு
கேட்டுக்கொண்டுள்ளார் !!
இப்போது மலேசியா இந்து சங்கத்தின்
நிலைப்பாடு என்ன ??
சரியானப் போட்டி..!
இந்து சங்கம் அரோகரா …..
டொரியான் காவடி வேல் ..வேல்……!!
டேய் முட்டா பயல்கள எதுக்காக தைபுசத்தை நடுதேறேங்க ,,மடப்பயல் நிர்வாகிகளும் ,முட்டா பயல் பக்தர்களும் இருக்கும் வரையிலும் தமிழன் முன்னேறவே மாட்டான் ,,வக்காளி
சமுகவலைதலங்களில் மிகவும் கேவலமாக விமர்சிகிறார்கள் …
முருகா இந்த நடராசாவுக்கு அடுத்த தைபுசம் வருவதற்குள் நல்வழிகாட்டு … திராவிடங்களும் நம்மொழி பேசும் மற்ற மத நம்பிகையாளர்களும் தமிழ்கடவுள் முருகனை வணங்குபவர்களையும் கேவலமாக விமர்சிகிறார்கள் …. உக்காந்து இந்தனடராசாவோடு பேசி முடிவெடுக்க தமிழ் தலைவர்கள் ???? குறுநில மன்னர்போன்று!! வரும்போது ஓமகுச்சி இப்போ உசிலமணி.
பத்துமலை நடராஜா தாத்தா சொத்து !!!!!!! …
தமிழன் திராவிடந்தாண்டி ,,திராவிடன் இல்லையேல் தமிழ் இல்லை ,தமிழ் கடவுள் இல்லை ,,ம்ம்ம்ம் ,எனக்கு ஒரு சந்தேகம் கடவுளுக்கு நாசமா போன மனிதனை போல் எப்படி கை கால்கள் இருக்கிறது ,,கடவுள் ஒரு சக்திதானே ??!! சரி அதை விடுங்கள் ,,முட்டாள் பக்தர் இருக்கும் வரையிலும் ,உண்டியல் திருடனுங்களுக்கு கொண்டாட்டம்தான்
எவன் உண்டியலில் காசை போடுறானோ அவனை செருப்பால அடிங்கடா
டுரியான் காவடி நல்லதுதான், மலையேறி இறங்கியவுடன் களைப்பை
போக்க உட்கார்ந்து பழம் சாப்பிடலாம்,அதை ஏன் கெடுக்கணும்?
டேய் ஹெலங் கெடா… தமிழ் அரை குறை மொழியா?? அரை வாங்காதே …
எங்கப்பன் தமிழ் கடவுள் முருகனுக்கு எதுக்குடா சமஸ்கிருதடுல அர்ச்சனை.. படவா.. எங்க வந்து என்ன பேசுற?
உண்மையான, நேர்மையான்,கொள்கையுள்ள திராவிடப் பாசறை பகுத்தறி வாளர்களுக்கும்,மொழியுணர்வும்,இனப்பற்றும்,மெய்யான அப்பழுக்கற்ற சமய உணர்வும் உள்ள அன்பு நண்பர்களுக்கும் தமிழனின் மாண்பினைக் காக்கவந்த இனிய பொங்கள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். வள்ளுவனைப் பெருமைபடுத்தும் வண்ணம் திருக்குறளின் மாண்பினை நிலைநாட்டிட திருக்குறளை ஒவ்வொருநாளும் தியனித்து வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் . வாழ்க !
மோஹன் அவர்களே.. தமிழன் திராவிடன் தான்.. ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் மலையாளிகளோ, தெலுங்கர்களோ அப்படி சொல்லிக் கொள்வதில்லை.. தமிழன் மட்டும்தான் திராவிடன்.. திராவிடன் என்று சேர்த்துப் பேசிகிறான்… அழையாத வீட்டுக்குச் சென்று கொடுக்காத விருந்துக்கு ஏங்குவதைப் போல.. தமிழனுக்கு நாம் தமிழர் என்ற உணர்யு மட்டுமே போதுமானது.. பத்துமலை விசயத்தில் நடராஜாவை ஒடுக்கியே ஆகவேண்டும். நஜிப்புக்கு அடிவருடும் இவன் எல்லாம் ஆலயத் தலைவன் என்று இருப்பதே சமயத்திற்கு அவமானம். நடராஜாவின் நண்பர் நஜிப் என்றால் பிறகு இந்துக்கள் அனைவரும் அன்வார் இப்ராஹிம்மின் நண்பர்கள் ஆக வேண்டியிருக்கும் என்பதை நஜிப் உணர்ந்தால் சரி..
அன்பான செம்பருத்தி வாசகர்கள், செம்பருத்தி ஆசிரியர் மற்றும் தமிழர் அனைவருக்கும் எமது இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துக்கள்!
பெனாங் தைபுசம் பாருங்கள்,அருமையாக இருக்கிரெது,இங்கே பது மலை தனி மனிதன் தர்பார் பாருங்கள் ,வெட்கம் .
ஒழிக கோவில் திருடன் நடராஜ.
பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டில்
தமிழருக்கு தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வகையில் எழுச்சியோடு உழைத்து முன்னேற எம்மைவிட வசதிகுறைந்த நம் சொந்தங்களுக்கும் உதவ முன்வருவோம் ..
அனைத்து தமிழ்மக்களுக்கும் எனது அன்பான தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் 🙂
தைபுசம் இன்று உலகம் போற்றும் நிகழ்வாகி விட்டது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பார்வையாளர் நம்மை மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும். அழகு இருக்க வேண்டும், சுத்தம் பக்தி வேண்டும். pick pocket ஜாக்கிரதை, நெருசல் கவனம், நிர்வாகம் இதற்கு முன் எச்சரிக்கை எடுக்க வேண்டும். தரு தலைகள் வாலாட்டும், நடவடிக்கை தேவை. நம் சமயம், கலாச்சாரம் வாழும் விழா, சிறப்பு செய்வோம். கொதிக்கும் என்னை சட்டி உள்ள கடைகள் போன்றவை கூட்டதில் ஆபத்து. சிறுவர்கள் கையில் உங்கள் டெலிபோன் என்னை எழுதுங்கள். அன்னதானம் செய்வோர் பல counter திறக்கவும்.
நேத்ரா ,,UNMAITHAAN
வருக,வருக என வரவேற்ப்போம் பொங்கும் தமிழ்ப் புத்தாண்டை,செம்பருத்தி ஆசிரியர் குழுவினர்,அதன் பணியாளர்,அன்பான வாசக நண்பர்களுக்கும்,இந்தியர்களுக்கும் பொங்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் !
கோவில் நடராஜா …..றி மேய்க்கத்தான் லாயக்கு.
தமிழர்கள் முன்னேற வேண்டும் என்று வெட்டி பேச்சு பேசி விட்டு, நமக்கு சொந்தமான பத்து மலையில் நம் திருவிழாவில் கூட முக்கால் வாசி கடைகள் வேற்று இனத்தவர் கடை போட்டு காசை அள்ளி செல்வார்கள், நம் இனத்தவர் கடைசியில் வந்து அவர்கள் போட்ட கோப்பைகளை அள்ளுவார்கள். Temple management,மற்றும் நம் தலைவர்கள் கையால் ஆகாத தனம்.
பணம் செலவு செய்து , கூட்ட நெரிசலில் சிக்கி , வாகனத்தை பல கிலோமிட்டர் துரம் நிறுத்தி(RM10) , நடந்து வந்து மலை ஏறி ,இவ்வளவும் நடராஜன் நல்லா சிறும் சிறப்புமா வாழ்வதற்கு. அதற்கு பதில் அருகில் உள்ள ஆலயற்டிற்கு சென்று வரலாமே ! பணம் நேரம் மிச்சம்.பாதுகாப்பாகவும் இருக்கும் . மிஞ்சிய பணதை தமிழ் பள்ளிக்கு நன்கொடையாக கொடுப்போம் . தமிழ் கடுவுள் முருகன் நிச்சயமாக ஆசிர்வதிப்பார் !! சிந்திப்போம் தமிழனே !!!!!
எப்பா தலை சுத்துது. திராவிட சிந்தனைகள் தமிழ்நாட்டுக்கு ஒரு காலத்தில் அவசியமாகப்பட்டது. ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு அது தேவையில்லை என்றெ கருதத்தோன்றுகிறது.
rantau podian, நீங்கள் சொல்வது பகுத்து சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு ஏற்புடையது. தைபூசம் அன்று அங்கு கூடும் கூட்டத்தைப் பார்த்தல் அநேகருக்கு அந்த ஆற்றல் குறைவு என உர்ஜிதம் ஆகிறது. அதிகம் படித்தவர்களும் இந்தக் கோலத்தில் முண்டி மோதி பங்கெடுப்பதால்….. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நமது சமுதாயம் மேன்மைபெற திருந்த மிக2 சிரமப்படுவதன் ஒரு முக்கியக்காரணி நாம் காலத்திற்கு ஏற்ற சிந்தனை மாற்றமும், சமகால நிலைக்கு ஏற்ற நடத்தைகளையும் விடாபிடியுடன் ஏற்றுக்கொள்ள மறுப்பது. தலைவர்களும் நாம் மாறுவதை விரும்பவில்லை. ஆக, கோவில் நிர்வாகம், மற்றத் திருட்டுக்கூட்டங்கள் தொடர்ந்து கோடிஸ்வரர்கள் ஆவதற்கு தம்கட்டி தோல் கொடுக்கிறோம்! முதுமையாலும், முடியாமையாலும் நம் அண்டையில் வாடிவாழும் வறியவர்களுக்கு RM1 கொடுக்க தயங்குகிறோம். காரணம் ? கடவுளுக்குக் காணிக்கை (இலஞ்சம்) கொடுத்தால் நம்மையும் நமது குடும்பத்தையும் கவனித்துக்கொள்வார் என்று. கடவுள் என்ன நமது அரசாங்க அமலாக்க அதிகாரியா? மாமுல் பெற்று கைமாறு செய்ய? சிந்தனை மாற்றம் தேவை. எப்படி கொண்டுவருவது..?!
க.ம.போ., சிந்தை மாற்றம் எப்படி வர வேண்டும் என்பதை செம்பருத்தியின் மக்கள் கருத்து பகுதியில் போகராஜா குமாரசாமி தமிழாக்கம் செய்திருக்கும் ” யார் என் வெண்ணைக் கட்டியை நகர்த்தியது” என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரையை படியுங்கள். சிந்திக்க வைக்கின்றது. நன்றி போகராஜா குமாரசாமி.
க.ம.போ.- வைப் போன்று எமக்கும் சிந்தனை மாற்றம் தேவைப்பட்டது. தமிழர்கள் பல தெய்வ வழிபாட்டில் பொய்யான பக்தி மார்கத்தில், நான் வேண்டியதைக் கொடுத்தால், யாம் உமக்கு பிரிதி உபகாரமாக இந்த “நேர்த்திக் கடனை” அல்லது “வேள்வி/யாகத்தை” அல்லது “காணிக்கையை” அல்லது “பூஜை” செய்வேன் என்ற பண்ட மாற்று வியாபாரத்தை நமது இறைவனிடம் வைத்தால் இது நாம் வணங்கும் இறைவனுக்கு சுயநலத்தின் பேரில் கொடுக்கும் இலஞ்சமாக இருக்காதா? இதுதானா நமது இறைக்கொள்கை? இதுதானா நம் முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்த இறை வழிபாடு? இதுதானா நால்வர் பெருமக்கள் நமக்கு கற்றுத்தந்த இறைவழிபாடு? அப்படியானால் “நீங்கள் விரும்பியது கிடைத்தால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்”. இல்லையேல், உங்ககளுக்கு நீங்கள் வணங்கிய தெய்வத்தின் அல்லது இறைவன் மீது இருக்கும் “நம்பிக்கை”, “அவ நம்பிக்கையாகி” வேற்றொரு மதத்திற்கு ஓடுவீர்கள். இதுதானே, மாறியவர்களின் காரணக் காரியங்களாக இருகின்றன. நன்றி போகராஜா குமாரசாமி. தொடரும்.
காலத்திற்க்கேற்ப சிந்தனை மாற்றம் நம்மவர்களிடையே வர வேண்டும். தமிழர்களின் உண்மையான இறை நெறி கோட்பாடு என்னவென்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் அறிந்துக் கொள்ள வேண்டும். நமக்குரிய சைவ சித்தாந்த இறைக் கோட்பாடுகளை/நெறிகளை அறிந்து அதன் வழியில் இறைவனை வணங்குவோமானால், நிச்சயமாக தமிழர்களிடையே இருக்கும் பிழையான பக்தி மார்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும். இது முதலில் ஒவ்வொரு தனி மனிதனின் “மனதில்” மாற்றம் வர வேண்டும். பின்னரே, ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும். கற்றறிந்தவர்கள், தமிழர்களுக்கு முறையான இறை நெறியை கற்பிக்க வேண்டும். அவற்றைப் பெற்றறிய நாமும், நமது பிள்ளைகளும் சைவ சித்தாந்தத்தை உள்வாங்க வேண்டும். ஆதலால், தமிழர்கள், “உங்கள் வாழ்க்கையை (இறை வழிபாட்டை) காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும், அப்படி மாறவில்லையானால் (சமய அறிவில்/ஆன்மீக வாழ்க்கையில்) பின் தங்கிப் போகலாம்”. நன்றி போகராஜா. தொடரும்.
இதுவரையில் நாம் பகுத்தறிவற்ற பக்தி மார்கத்தில் நின்று செய்த பிழைகள்தான் எத்துனை, எத்துனை? பக்தியின் பேரில் செய்த, செய்துக் கொண்டிருக்கின்ற கோடான கோடி செலவினங்கள்தான் எத்துனை, எத்துனை?. இன்றைய தைப்பூசத் திருநாளில், பக்தி என்ற பெயரில் நாம் செய்யும் செலவினங்கள்தான் எத்துனை கோடி? க.ம.போ. சொல்லிய மாதிரி, தத்தம் வீட்டிற்கு அருகாமையில் கஷ்டப்படும் இந்திய குடும்பங்களுக்கு இப்பணத்தைக் கொடுத்து உதவினால் அது தர்மம் ஆகாதா? அதன் பிரிதிப்பலன் புன்னியமாகாதா? ஏன் இந்த பிழையானா பக்தி மார்க்கம் இன்னும் நம்மிடையே இருக்க வேண்டும். நமக்கு மாற்றம் வேண்டும், நம்மிடையே இருக்கும் அதிக செலவு செய்து இறைவனை வணங்கும் அல்லது வேண்டிக் கொள்ளும் தவறான இறைக் கொள்கை மாற வேண்டும். இதுநாள் வரை இருந்த நமது நடவடிக்கை காலம் கடந்தவையாக இருக்கட்டும். நாம் “புதிய முறையில் சிந்தித்து செயல்படுவதால் (இறை வாழ்க்கையில்) புதிய வெற்றிகளைப் பெறலாம்”. புதியதோர் உலகம் படைப்போம் வாரீர். நன்றி போகராஜா. தொடரும்.
நாரா, திராவிட சிந்தனைகள் தமிழ் நாட்டுக்கு எந்தக் காலத்திலும் அவசியப்படவில்லை இந்தத் திராவிடச் சிந்தனைகள் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். அதன் பலனைத் தான் இப்போது நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் சிவ பெருமான் க.ம.போ. கேள்விக்கணை தொடுத்தது போல, “அரசாங்க அமுலாக்க அதிகாரி அல்ல” மாறாக அவன் பெருங்கருணைக் கொண்டவன். நம்மிடம் இருந்து எதையும் பிரிதி உபகராமாக எதிர்பார்க்காத “பெருங்கருணையாளன்”. உயிர்கள் படும் வேதனையின் பால் அன்புள்ளம் கொண்டு அருள் ஆற்றுபவன். உயிர்களுக்கு உலகத்தைப் படைத்து, இன்ப துன்பங்களைக் கொடுத்து பக்குவப் படுத்தி, திருவருளின் வழி தம்மிடையே சேர்த்து பேரின்பத்தைக் கொடுப்பவன். அவன் ஒருவனே பரம்பொருள் என்று அறிந்து செயல்பட்டால் தமிழர்கள் நலம் பெறுவார்கள். இதுவே, திருமுறையும், நால்வர் பெருமக்களும் நமக்கு காட்டிய ஓர் இறைக் கொள்கை வழிபாடாகும். பல தெய்வ வழிபாட்டில் இருந்து ஓர் இறைக் கொள்கை வழிபாட்டிற்குச் செல்லுவோமானால், நாம் தமிழர்களுக்கான செம்மையான மெய்யியல் வழிபாட்டுக் கொள்கைகளுக்கு உரிமையானவர்களாக ஆவோம். நால்வர் பெருமக்கள் காட்டிய ஓர் இறைக்கொள்கைக்கு கற்றறிந்தவர்கள் தமிழர்களை வழி நடத்தினால் “நாம் புதிய வாழ்க்கையை அனுபவிக்க முடியும், அந்த வாழ்வைப்பெற நமது செயல்பாட்டு வழிமுறையினை மாற்ற வேண்டும்”. இந்த மாற்று சிந்தனை தோன்ற வழி வகுத்த க.ம.போ. – வின் கருத்துக்கும், போகராஜாவின் கட்டுரைக்கும் எமது நன்றி உரிதாகுக.
நாராவும், சக்கிரவர்த்தியும் திராவிட சிந்தனைகள் வேண்டாம் என்கின்றனர். முன்னவர் திராவிடச் சிந்தனைகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டிற்கு அவசியமாகப்பட்டது. ஆனால் அது மலேசியத் தமிழர்களுக்குத் தேவையே இல்லை என்கிறார். பின்னவரோ திராவிடச்சிந்தனைகள் தமிழ்நாட்டிற்கு எந்த காலத்திலும் அவசியப்படவில்லை. இந்த திராவிடச் சிந்தனைகள் மூலம் பெரிய அளவு பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். அதன் பலனைத்தான் இன்றும் அனுபவிக்கிறோமே… என்று மனம் நோகிறார். இருவரும் கருத்தில் வேறுபடவும் ஒன்றுபடவும் செய்கின்றனர். ஆனால் திராவிடச் சிந்தனைகளில் எது இந்த அநாகரிகமான ( பாரம்பரிய காவடிகளையல்ல) காவடிகளை ஆதரித்து தமிழ்நாட்டிலோ அல்லது மலேசியாவிலோ வளர்த்தது என்று சொல்ல முடிந்தால் அடியேன் மகிழ்வேன். மற்றவை பதில் கண்டு!
சைவ நெறிகளே நம்மை முழுமையாக வாழவைக்கும்……….
730 குருஜி படம் போட்ட காவடிகளை தடை செய்ய இயலவில்லையா?
மாற்றம் ஏற்படும் என்றுதான் இவ்வருட தை பூசத்திற்கு சென்றேன் ஏமாற்றம் தான்.
எல்லாம் பொய்
எமது பார்வையிலும் இவ்வருட தைப்பூசத்தில் பக்தர்களிடையே சமய மேம்பாட்டிற்கான எவ்வித கணிசமான மாறுதலும் தென்படவில்லை. THR Raga மட்டும் வெற்றுப் புகழ்ச்சிக்காக எல்லாம் ஒரே நாளில் மாறி விட்டதாக ஒரு மாயை ஏற்படுத்த முயன்றதுதான், ஒரு மாறுதலாக தெரிந்தது. தமிழர்களின் இறை பக்தியில் தெளிவு வேண்டுமானால், சமய இயக்கங்கள் இரட்டிப்பு பணிப்படை பலம் கொண்டு தொடர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது. முயற்ச்சியை கை விட வேண்டாம்.
காவடிகள் என்பது சமயம் சம்பந்தப்பட்டது. அது தமிழர்களின் பாரம்பரியம். கால ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதனைப் சமயப் பெரியார்கள் அந்தத் தவறான பழக்க வழக்கங்களைத் திருத்திருக்க வேண்டும்.ஆனாலும் நம்மிடையே அடாவடித்தனம் அதிகம். யார் பேச்சையும் கேட்பதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம். இப்போதும் அது தொடர்கிறது. அரசில்வாதிகளே இதற்கேல்லாம் காரணம் என்று தான் நான் நினைக்கிறேன்.