தைப்பூசம் என்பது ஒரு தெருவிழா ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய சமூகம் முன்வர வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அது நுகரும் கலாச்சாரத்தன்மைக்கு ஆளாகி தனது பண்பாட்டு சமயத்தன்மையை இழந்துவிடும் என்பதால் இந்த விதிமுறைகளை உருவாக்க முற்பட்டோம் என்கிறார் குணராஜ்.
கடந்த ஒரு மாத காலமாக இது சார்பாக ‘தைப்பூச பணிப்பிரிவு’ என்ற ஒரு குழுவை உருவாகினோம். இந்து சங்கம், இந்து சேவை சங்கம், ருத்திர சமாஜ், செலயாங் நகராண்மைக்கழகம், காவல்துறை மற்றும் சில சமூக அமைப்புகளை சார்தவர்கள் ஆலோசனை வழங்கினார்கள் என்றார் அக்குழுவைச் சார்ந்த குணராஜ்.
இதன் பலனாக இன்று இந்து சங்கம் அலுவலத்தில் ஒரு கலந்துரையாடல் விளக்க க்கூட்டம் நடைபெற்றது. இதை இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன்ஷான் வழிநடத்தினார். அவருக்கு துணையாக அதன் முன்னால் தலைவர் டத்தோ வைத்தலிங்கம் மற்றும் இராமாஜி, குணராஜ், கோம்பாக் காவல்துறையின் ஏஎஸ்பி முத்து, இந்து சங்க துணைத்தலைவர் கந்தசாமி, ஆகியோர் உட்பட இன்னும் சில இயகத்தலைவர்கள் உடன் இருந்தனர்.
முதல் கட்டமாக மலேசியாவில் நடைபெறும தைப்பூசத் திருவிழவுக்கான விதிமுறைகள் அடங்கிய ஒரு கையேட்டை இந்து சங்கம் தனது சார்பாக அறிமுகப்படுதியது. சுமார் நூறு பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பலர் கருதுரைத்தனர். அது இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினமாகும். இது பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.
மலேசியாவில் கொண்டாடப்படும் முக்கிய சமய விழா இதுவாகும். அன்மைய காலங்களில் இங்கு இவ்விழாவை கண்டு கழிப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது ஒரு சமயவிழா என்றாலும் அதை காணவருபவர்கள் அதிகமாகி அதை ஒரு கூட்டமும் கும்மாளமும் கொண்ட வாணிப நிகழ்வாக்கி வருகின்றனர். இதை முறைப்படுத்துவது நம் அனைவரின் கடமை என்றார் வைத்தலிங்கம்.
விதிமுறைகளைப் பற்றி விளக்கமளித்த மோகன்ஷான், இவை சார்பாக தான் பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவுடன் பேசியதாகவும் அதற்கு அவர் ஆதரவு நல்கியதாகவும் கூறினார்.
தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஏஎஸ்பி முத்து, சில வருடங்களுக்கு முன்பு பொங்கோ இசை கருவிகளை தடை செய்ய எங்களின் உதவி நாடப்பட்டது. அவ்வருடம் சுமார் 500 பொங்கோ இசை கருவிகளை நாங்கள் அகற்றினோம். அதன் பிறகு மக்கள் அதனை கொண்டு வருவதில்லை என்றார்.
சிலர் ஏன் பத்துமலை கோயில் நிர்வாகம் யாரையும் அனுப்ப வில்லை என கேட்டனர். பத்து மலை கோயில் நிர்வாகம் தனது பணியை முறையாக செய்தால் பல பிரச்சனைகளை தீர்க்கலாம் என்றனர்.
விதிமுறைகளில் சில
அலவு காவடிகள் எடுப்பவர்களின் அலவு 3 அடிக்கு மேல் இருக்கக்கூடாது; காவடி எடுப்பவர்கள் முறையாக புஷ்ப காவடி, பால் காவடி, அலங்கார காவடி எடுக்கலாம்.
காவடிகளில் இயக்கத்தின் சின்னங்களோ அல்லது சமயத்திற்கு சார்ந்து இல்லாத எந்த ஒரு விசயத்தையும் தங்களின் காவடிகளில் இணைக்கக்கூடாது. இருந்தால் அந்தக் காவடிகள் தடை செய்யப்படும்.
இரத காவடி, பறக்கும் காவடி, அரிவாள், கத்தி, சூலம்,, தடி,, சாட்டை,, சுருட்டு,, மது பானங்கள் போன்றவைகளுக்கு தடை.
முனீஸ்வரன், மதுரை வீரன், சுடுகாட்டு காளி, காட்டேரி போன்ற தெய்வ வழிப்பாட்டு காவடிகள் எடுக்க அனுமதிக்கப்படாது. நாக்கில் குங்குமம் அணிந்து வருபவர்களும் தடை செய்யப்படுவார்கள்.
மேலும் டுரியான் காவடி, மிளகாய் காவடி, கொடூரமாக அலங்கரிக்கப்பட்ட காவடிகளுக்கும் தடை.
காவடிகள் எடுக்கக்கூடிய பக்த்தர்கள் கண்டிப்பாக சமய உடைகளை அணிந்து வர வேண்டும். அதனை தவிர்த்து மற்ற உடைகளை அணிந்து வருபவர்களின் நேர்த்தி கடன் ஏற்றுக் கொள்ளப்படாது.
காவடிகளுடன் நாதஸ்வரம், தவில், உறுமி மேளத்தோடு காவடி சிந்து மற்றும் தெய்வீக பாடல்களைப் பாடி வர வேண்டும். அதை தவிர்த்து சினிமா பாடல்களோ, ‘Gangnam Style’, ரேஃப் போன்ற பாடல்களைக் கண்டிப்பாக பாடி வரக்கூடாது.
கேளிக்கை நிகழ்வுகளுக்கு கட்ட கட்டமாக தடை விதிக்க வேண்டும்.
உணவும் பானமும்
தண்ணீர் பந்தல் போடுபவர்கள் மெத்து வகை கப்களை (STROFOAM CUPS) பயன்படுத்த இயலாது. மேலும் அதிகமானவர்கள் இலவச பானங்கள் உணவு வழங்க முன்வருவதால் அதிகப்படியாக அவை வீணாகின்றன. இதை முறையாக கையாள முன்பதிவு முறையை அமுலாக்க கேட்டுக்கொள்ளப் பட்டது.
அதோடு அரசியல் தலைவர்களின் வருகைக்கு மேடை போடுவது, அவர்களுக்கு ‘கட் அவுட்’ போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இவை விதிமுறைகளில் இல்லை.

























தமிழ…இந்த பத்து மலைக்கு போக வேண்டாம்! உங்கள பணத்தை கொள்ளை அடிக்க உண்டியல் திருடன் நடராஜனும், இந்த BN அரசாங்கமும் திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள்… அறிவை உபயோகிங்கள், அறிவை உபயோகிக்க முடியவில்லை என்றால்? சொல்லுங்கள் தந்தை பெரியாரை வரவழைக்கிறேன்!!!
முதலில் இந்த இந்து சங்கம் …
பொது இயக்கமாக பதிவு பெறட்டும் …!!
பிறகு மற்றவர்களுக்கு அறியுரைக் கூறட்டம் …..!!!
முதலில் ஹிந்து சங்கம் குட்டம் முறையாக நடை பெருகிரதா என்று ஹிந்து சங்கம் திரு சஹான் கவனிக்க வேண்டும்
பொது மக்களின் பங்கும் மிக முக்கியம்,
நாம் ஆதரவு கொடுபோம் ..!
தைப்புசதன்று மேல காணும் கோமாளி கூட்டங்களை
பார்த்து தலை குனிவோடு வீடு திரும்பிருக்கிறேன்.
மாற்றான் நம்மை ஏளனம் செய்ய நம் இனத்தவரே காரணம்! நம் இன,மொழி,பண்பாடு உலகிற்கே வழிகாட்டியாக இருந்து இன்று காட்டுவாசிகள் போல் தோற்றமளிக்கும் நம்மவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க சரியான தலைமைத்துவம் வேண்டும்.நம் அண்டை நாடான சிங்கப்பூரில் இது போன்று நடப்பதில்லை! நம் இனத்தை கேவலபடுத்தும் எந்த ஒரு செயலையும் அனுமதிக்க கூடாது! அதிலும் திருட்டு கும்பல்கள் கைவரிசையை
கட்டுபடுத்த அதிரடி நடவடிக்கை தேவை! இன்றே நன்றே செயலாக்கம் பெற நல்ல விதிமுறைகளை வரைந்து அதற்கேற்ப வழிநடத்தப்பட வேண்டும்! ஒற்றுமையே பலம்!
இந்த கட்டுப்பாடுக்களை அமுல் படுத்துவதற்கு காவல் துறையினர் ஒத்துழைக்க வேண்டும்.இல்லையென்றால் நம்மவர்களை அடக்கமுடியாது
மோகன் ஷான் முதலில் ஹிந்து சங்கம் ஒரு மலேசியன் 1 RM என்று வசூலித்த பணம் இன்று வரை எவளவு ?.சில வருடங்களுக்கு முன் sungai petani முருகன் கோவில் திருவிழாவில் நானும் பணம் கொடுத்து அவர் கைப்பட ரசீது கொடுத்து வருட இறுதியில் உங்களுக்கு நினைவு படுத்துவோம் என்றார் இதுவரை ஒரு நினைவு படுத்தலும் இல்லை .இவர்களே இந்த வல்லலில் இருக்கும் போது,ஹிந்துக்களை கவனிக்க இவர்களுக்கு எங்கே நேரம் உள்ளது .
முருகன். பெயரை. சொல்லி. சிவன்.(nadaraja) கொள்ளை அடிக்கறான்.இதில்.விதிமுறை.என்ன வழிமுறை.எதும் எடுபடாது..பணம்வந்தால் போதும்.சமுதாயத்தை பத்தி நமக்கு என்ன அக்கறை.
நல்ல முயற்சி . முதலில் அவை செயல்பட ஆதரவு கொடுப்போம்.
முதலில் இந்த இந்து சங்கம் …
பொது இயக்கமாக பதிவு பெறட்டும் …!!
பிறகு மற்றவர்களுக்கு அறியுரைக் கூறட்டம் .நடராஜா.இருக்கும் வரை ,நடக்காத onru.
puthiya barathi , தங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். பல ஆலயங்களில் அதன் “ஆட்சிக்குழுவினர்” திருவிழாக்களில் ஏற்புடைய சமய நெறிமுறைகள்/ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைப் பற்றி கவலை கொள்வது குறைவு; அவர்களின் அதிகவனம், திருவிழாக்களில் “முக்கிய அங்கமான” வசூல்களிலேயே லயித்து இருக்கிறது. யார் என்ன செய்தால் என்ன? நமக்கு வசூல் பெருகினால் போதும் என்ற மனபோக்குத் தவிர்த்தல் வேண்டும். இந்தியாவில் இன்றும் சாமியார்கள் தெருவில் அம்மன ஊர்வலம் வருகின்ற்னர்.!! அங்கு எப்படியோ செய்து தொலையட்டும். இங்கு, பல்லின நாட்டில் “காட்டுமிராண்டித்தனங்களைத்” தவிர்த்து, சைவ சமய மான்பிற்கு மேன்மைதரும் வகைகளில் நமது சமய விழாக்கள் இருக்க வேண்டும். இதனால் நிர்வாகத்தினருக்கு வருமானம் குறையும் என்றாலும், சைவ மேன்மை கருதி சீர்திருத்தங்களை கண்டிப்ப்டன் அமல் செய்ய வேண்டும். இப்பொழுது மற்றவர்களின் கேலிக்கு நம்மை நாமே ஆட்படுத்தி வருகிறோம். தன்மானமுடன் “நாகரிகமாக” வாழ விரும்பும் அனேக இந்துக்களுக்கு இது எண்ணற்ற தலைக்குனிவை ஏற்படுத்துகின்றது. இதில் “படித்தவர்களின்” பங்களிப்பும் உள்ளது என்பது வியப்பானது. தைப்பூச தெருக்கூத்துகளில் (திறந்தவெளி disco) என்ன சைவத் தன்மை காணப்படுகிறது?! இரத ஊர்வலத்தில் தூய்மையான சாலைகளில் ஆயிரக்கணக்கான தேங்காய் உடைத்து அசுத்தப்படுத்துவதால் தூய்மை விரும்பும் மற்ற இனத்தவருக்கு, நகராண்மை ஊழியர்களுக்குத் தொல்லை என பகுத்தறிவோடு யோசிக்க வேண்டும். பணம் பாழ். பகுத்தறிவுக்கு பஞ்சம் என்றால் நமக்கு என்றும் மேலும் தலைகுனிவுதான். நம் மூதாதையர் இந்தியா ஒரு பெரும் குப்பைத் தொட்டி. ஆக, இங்கேயும் நாம் தொடர்ந்து அதுபோல் செய்யலாம் என கருதி செயல் பட்டால் வரும் வினை ஒருநாள் – நமக்கு விரைவில்.! அதற்கு முன், திருந்துவோமா?!
எங்கள் தமிழ் கடவுள் முருகனை கேலி செய்த டுரியான் காவடி காரனை செருப்பால் அடிக்கவேண்டும் ! அறியாமல் செய்யவில்லை , இது அவன் செய்த நையாண்டி !
காட்டுமிராண்டி காவடிகளை கண்டிப்பாக தடைசெய்வோம் ..
தமிழர் பண்டிகை சைவ சித்தாந்தபடி கொண்டாடுவோம் தமிழர்களாய் ..
ஹிந்து பாபா ,நித்தியானந்தா,ராமா ,குமாரி , யோகா பிராடு சித்தர்கள் விளம்பரம் முற்றாக தடை செய்யவேண்டும் …
தமிழர் திருவிழாவை கேலிகுத்தாக்க பல பொறுக்கிகள் காத்திருக்கிறது … மோகன் நீ போய் சிவாஜிரொவ் (ரஜனி ) பேநேருக்கு பாலாபிசேகம் செய் ….
கன்னட நாயக்கன் ராமசாமி எதற்கு தமிழன் உணர்வ மலுங்கடிக்கவா மோகன் ???? அவன ஆந்திராவுக்கு பொய் திராவிட கட்சிதுவங்கசொல்லு … அல்லது கன்னடத்தில் இரண்டுகோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் அங்கயாவது கடை விரிக்கசொல்லு … தமிழனுக்கு கன்னடன் ஒரு அமைச்சு பதவியாவது கொடுக்கிறானா பார்ப்போம் …தம்பி குணராஜ் உன்சேவை தொடரட்டும் … வாழ்த்துக்கள் …
கட்டுப்பாடு இல்லாத தறுதலைகளை கட்டுப்படுத்துவது அவசியம்,தைப்பூசம் ரவுடிகள் விளையாடும் மைதானம் அல்ல!அவர்கள் செய்யும் அறிவிலித்தனத்தால் சமுதாயத்துக்கு பெரும் தலைக்குனிவு!திரு குணராஜ் அவர்களுக்கு நன்றி !
சுய லாபத்திற்காக எவனாவது ஒருவன் தெருவோரம் கட்டிய கோயிலை உடைத்து விட்டால் இந்து மதமே அழிந்து விட்டது என்று ஒப்பாரி வைத்து ஓலமிடும் டி.மோகன், மாணிக்கவாசகம், தெலுக் இந்தான் மனோகரன் போன்ற அரைவேக்காடு அரசியல்வாதிகள் இந்து மதத்தை படுகேவல நிலைக்கு கொண்டுச் செல்லும் இதுபோன்ற அயோக்கியர்களுக்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்?
முருகன் திருத்தளதில்…….
பல சாமிகளின் அவதாரம் !!
கூத்தரசனை பத்திரிக்கையில்
விளம்பரம் செய்ய ……
தமிழகத்தின் சீர்காழி…!!!
குழுமமாக இயங்கும்
மலேசியா இந்து சங்கத்தில் …..
எத்தனை உறுப்பினர் ?
இவர்களின் காவடி ஆட்டதில்
முருகன் அரோகரா !!!!
ஆஹா, தமிழர்களுக்கு சைவ சமய ஞானம் நெற்றிக் கண்ணின் வழி தெறிக்க ஆரம்பித்து விட்டதைப் பார்க்கும் போது உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது. சமயத்தில் நம்பிக்கை மட்டுமன்றி பகுத்தறிவையும் சேர்த்து இறைவனைக் காண முயல்வோம். தமிழர்கள் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை.
பத்து மலை முருகன் திருத்தலம், நடராஜா என்ற ஒரு தனி மனிதனால் பல தெய்வ சன்னிதிகளாக மாற்றப் பட்டத்திற்கு யார் தடைப் போடுவது? இதற்கெல்லாம் சட்டம் போட உங்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லையா? தலைவருக்கு ஒரு சட்டம், பக்தர்களுக்கு ஒரு சட்டமா? கேள்வி கேட்க யாருமில்லை என்ற தைரியம்தானே? கோவில் தலைவர் நடராஜா அறிக்கை விடாமல் இந்து சங்கத்தை வைத்துக் கொண்டு குணராஜ் என்ற தனி மனிதர் அறிக்கை விட்டால் அதை “கடுந்தவ பக்தர்கள்” ஏற்றுக் கொள்ளுவார்களா? தலையே ஒன்றும் சொல்லல, நீர் யார் என்னைக் கேட்க என்று ஆலய வாசலிலே வெட்டுக் கத்தியுடன் போராட தயாராக இருப்பார்கள் “கடுந்தவ பக்தர்கள்”. இதை பட்டணத்தில் உள்ள ஓர் ஆலயத்தின் துணைத் தலைவராக இருந்து யாம் அனுபவித்தவன் என்று முறையில் உங்களுக்கு அறிவுரை சொல்லுகின்றேன். எதற்கும் ஆட்பலத்துடன் முன் எச்சரிக்கையாக ஆலய வாசலில் நில்லுங்கள்.
பக்தர்களுக்கு இவ்வளவு சட்டங்கள் போட இந்து சங்க தலைவருக்கும், தைபூச பணிபிரிவு தொண்டர்களுக்கும் அறிவிருந்தது. வரவேற்கின்றோம். தமிழர் தெய்வமாகிய முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பத்து மலைக் கோவில் அர்ச்சகர்களுக்குச் சட்டம் போட நினைவில்லாமல் போனது ஏனோ? அல்லது நடராஜாவின் காலை மிதித்தால் அவர் உங்கள் சிண்டு மயிரை பிடிப்பார் என்ற பயமா? அல்லது அது தமிழன் மொழிதானே எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற ஏளனமா? சொல்லுங்கள் குணராஜ்?, சொல்லுங்கள் இந்து சங்க தலைவர் அவர்களே?, சொல்லுங்கள் கந்தசாமி அவர்களே?, சொல்லுங்கள் கணபதி ராவ் அவர்களே? பதிலுக்குக் காத்திருகின்றேன். இல்லையேல் நானே “கடுந்தவ பக்தர்களுக்கு” போட்டுக் கொடுப்பேன்!
இந்துக்களே இந்து சமயத்தை கேவலப்படுத்துகின்றனர். இதெற்கெல்லாம் காரணம் பகுத்தறிவு குறைவு. எப்படி நாகரிகமாக உண்மையான பக்தியுடன் வழிபடுவது என்றே புரியாத ஜென்மங்கள். இவர்களின் நடத்தை மற்றவர்களால் எள்ளி நகைக்கப்படுகின்றது. குடித்து விட்டு ஆட்டம் போடுபவர்களை சாராய சோதிப்பு செய்து வெளியேற்றவேண்டும். தமிழ் திரை படங்களில் காணப்படும் மட்டரகமான செய்கைகளை இங்குள்லோரும் கடை பிடிக்கின்றார்கள். நமக்கு தனித்தன்மை இருக்கின்றது ஆனாலும் நம் சுயமரியாதையை கெடுக்கும் அளவுக்கு ஆட்டம் போடகூடாது.
கோவில் வளாகத்தில் ஒரு மனிதருக்கு (அவர் PM என்றாலும்) முருகனுக்கு நிகரான cut-out வைத்திருப்பதைப் பார்த்து ……?! மனிதர்களை இறைவனாக்கும் இந்திய கலாச்சாரம் இங்கு பரவக்கூடாது. நம் நாட்டில் முஸ்லிம் பள்ளிகளில் ஏதும் தலைவர்களுக்கு இப்படி செய்கிறார்களா..??!! சகோதர சீக்கியர் குட்வாராக்களில் இப்படி செய்வார்களா?! ஏன் இப்படி இருக்கும் சிறிதளவு மானத்தையும் இழந்து, இந்தக் கூஜாத்துக்கும் கலாச்சாரம்?! உண்மையில் PM கூட இந்த கூஜாத்தூக்கிகள் செய்ததை கண்டு உள்ளார அசௌகரியம் பட்டு இருப்பார். இந்தத் தேவையில்லா கூஜாத்தூக்கித்தனத்திற்கு செய்த செலவை உண்மையில் வறுமையில் வாடும் ஓர் இரண்டு குடும்பத்தினருக்குக் கொடுத்து இருக்கலாம். முருகன் மிகவும் சந்தோசப்பட்டு சில merit புள்ளிகள் கொடுத்திருப்பார் – கோவில் நிர்வாகத்தினருக்கு. இதுபோல் செய்தால் அவர் கணக்கில் இவர்களுக்கு demerit புள்ளிகள்தான் கிடைக்கும். அதிக demerit கிடைத்தால் நரகம் செல்ல வேண்டி வரும். தடிப்பாகப் பூசும் திருநீறையும் குங்குமத்தையும் பார்த்து அவர் ஏமாற மாட்டார். சமய உணர்வுடன்கூடிய ஆன்மீக உணர்வும் தேவை.
முதலில் நம் இனம் அடிப்படை ஒழுக்கத்தை கற்க வேண்டூம் . ஆராம்பம் வீட்டில் பிறகு பள்ளி மற்றும் பொது இடம் பிறகு ஆலயத்திற்கு எப்படி உடை உடைத்த வேண்டும் ஒழுக்கத்துடன் வழிப்பாடு செய்யவேண்டும் என்று நிறைய ஒழுக்கத்தை விட்டு காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்து வருகிறார்கள்
கட்டுப்பாடு இல்லாத சமூகமும்,கட்டுப்பாடு இல்லாத ஜனநாயகமும் சிறப்படையுமா?
தைப்பூசம் வழிகாட்டிகள்-எப்படி சரியாக கொண்டடுவது?
விளக்கம் திருமுறை செம்மல் ஐயா ந. தர்மலிங்கம்.
http://omtamil.tv/thaipusam-guidelines-how-to-celebrate-properly/#googtrans(ta)
நண்பர்களே முதலில் நம் ஹிந்து மதத்தை மதிக்க பழகிக்கொள்ளுங்கள்.ஹிந்து மதத்தை எவன் கேவலமாக பேசினாலும் அவனை செருப்பலை அடிப்பேன்.அவன் திருடன் இவன் திருடன் என்று சொல்லும் நீங்கள் ஏன் போலீசில் புகார் செய்யவில்லை.???முதலில் நீங்கள் 1 தெரிந்துகொள்ள வேண்டும்.கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று theni சொல்லிருந்தார்.sankrit மொழியில் உள்ள உச்சரிப்பு வேறு தமிழில் உள்ள உச்சரிப்பு வேறு,சரியான உச்சரிப்பு கொண்டே அர்ச்சனை செய்யவேண்டும்.உங்களுக்கு தமிழ் புடிக்கும் என்று அரைகுறை மொழிகளால் அர்ச்சனை செய்ய முடியாது.ச் ஸ் ஷ் இந்த வித்தியாசத்தை கவனிக்கவும்.ஹிந்துக்களை பத்து மலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல MOHAN mohan யார்?யாரும் அறிவை அடகு வைக்க வில்லை.பெரியார் என்ன கடவுளா இல்ல மந்திரியா???????அறிவு இல்லாதவன்தான் அடுத்தவன் சொல்வதை கேட்பான் உன்னை போல.ஹிந்து சங்கத்தை பொது இயக்கமாக செயல்பட முடியுமா?அது ஹிந்துக்கள் விவகார இயக்கம்.இதுகூட தெரியவில்லை என்றால் எப்படி?JAKIM பொது இயக்கமாக செயல்பட முடியுமா??அது இஸ்லாம் விவகார இயக்கம்.இங்கே நம் மன குறையை சொல்வதைவிட நம் மதத்தை பிறர் மதிக்க நாம் என்ன செய்தோம் என்று யோசிங்க.இது ஒரு நல்ல செயல்.எல்லோரும் சேர்ந்து செயலாற்றுவோம்.வாருங்கள் நண்பர்களே.குறை சொல்பவன் சாகும் வரை குறை சொல்வான்.அவன் சொல்லிக்கொண்டே சாகட்டும்.அவன் விதி அது.நம் மதத்தை நாமே குறை சொன்னால் எப்படி?குறை களைய வழி உண்டு.செயல் படுவோம் குறை களைய…நன்றி
பெரிய பத்திமான் , சமயத்தை அறிந்த பெரிய ஞானி, இவர் சொல்கிறார் செருப்பால் அடிப்பாராம். நாகரிகத்தின் இலக்கணம் இவர். இவருக்கு தமிழ் அரைகுறை மொழி. அந்த ஈசனே தமிழுக்கு மயங்கியதாகத்தான் செய்தி. இந்த வடமொழி அடிவருடிக்கு எச்சரிக்கையாகவே சொல்கிறேன் அரைகுறை லிஸ்டில் தமிழைச் சேர்ப்பீர்களேயானால் உங்களை மனித லிஸ்டிலிருந்தே தூக்கிவிடுவேன்;ஜாக்கிரதை!
கருத்துக்கு நன்றி கடாரம் கழுகாரே! சம்ஸ்கிருத மந்திரங்களை தமிழில் உச்சரியுங்கள் நான் சொல்ல வரவில்லை. நான் சொல்ல வந்தது இறை வாழ்த்துக்களை திருமுறைகளை, போற்றிப் பாடல்களை தமிழில் சொல்லி அர்ச்சனை செய்யலாமே? தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளாதா என்ன? அல்லது இப்பொழுது ஆலயங்களில் இருக்கும் அர்ச்சகர்களுக்கு திருமுறை மந்திரங்களே தெரியாதா என்ன?
இந்து மதம் நல்ல மதமே , ஆனால் இந்தியன் தான் அதை தவறாக கடை பிடிக்கிறான். நோக்க மில்லாத கூத்தாடி காவடிகளை உடனே நிறுத்த வேண்டும்.இதை நான் என் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க போகிறேன்.நீங்கள் எப்படி?
இந்து + தைபூசம் + நாடகம்
இந்து சங்கமும் இந்து சார்ந்த சில அமைப்புகளும் எடுத்துள்ள இந்த முயற்சி புதிதல்ல என்றாலும் இதனால் வெளியே உள் ள் கொள்ளையர்களிடமிருந்தேனும் ஓரளவு காப்பாற்றப்படமுடியும்.
ஆனால், உள்ளே உள்ள்வர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவது முடியாத காரியம்.
இந்து என்ற சொல் உலகலாவிய அளவில் விரிந்து பரந்து வேர்விட்டு ஆழப்பதிந்துபோன மூலக்கூறுகள் அடங்கிய மதம் என்று சொல்பவர்களிடையே நான் சற்றே வித்தியாசமாகத்தான் பார்க்கின்றேன்.
இந்து; ஒரு மதம் என்று சொல்வதைவிட அது வாழ்வியலுக்கான வாழ்வாதாரங்களைக்கொண்ட; கடலுக்குள் உள்ளடங்கிய+அடங்கப்பெற்ற அல்லது எண்ணிலடங்கா அதிசயங்களின் பெரும் பொக்கிசம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
ஆக, அது ஒரு இந்து மகா சமுத்திரம். இந்தப் பெயர்கூட இப்படித்தான் வந்திருக்கவேண்டும்.
ஆகவே, இந்த சமுத்திரத்துக்குள் நல்லதுகளும் உண்டு…தீமைகளும் உண்டு. நல்லதுகளை எப்படி ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளமுடியாதோ இது தீமைக்ள நிறைந்தது என்று ஒதுக்கிடமுடியாது. இந்து சார்ந்த விடயங்களும் அப்படித்தான். ஒரே கட்டுக்குள் அனைத்தையும் நாம் அடக்கிவிடவும் முடியாது.
தைபூசம், தீமிதி போன்ற விழாக்களும் அம்மன்+முனியாண்டி+காட்டேரி+அய்யனார் போன்ற தமிழர் சார்ந்த வழிபாட்டு பூசனைகளை இந்த இந்து என்னும் மூன்று எழுத்துகளுக்குள் அடங்கிப்போகச்செய்யவும் முடியாது.அடக்க நினைத்தால் விடைகளே இல்லாத கேள்விகளுக்குள் சிக்கிவிடவேண்டும்.
ரிஷி மூலம் நதி மூலம் நான் பார்க்க முற்படவில்லை. ஆனால், நாம் தேடலை முடுக்கிவிட்டால் வேதனைகள்தான் பதிலாகக் கிடைக்கும். ஆகவே, இங்கு நான் சொல்லவருவது இந்து+இந்து மதம் என்ற சொல்லுக்குள் எல்லா விடயங்களையும் உள்ளடக்கவேண்டியதில்லை.
இதில், இந்து சங்கமும் இந்து மதம் சார்ந்த அமைப்புகளும் செய்யவந்திருப்பது ஒரு இந்து இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவர்கள் நினைப்பது. இது ஒரு தப்பான வழிநடத்தல். இத்னால், இந்து அர்த்தம் கற்பிக்க பார்கிறார்கள். இந்து என்ற சொல்லுக்கு சரியான ஒரு வழித்தடம் உங்களால் அமைத்திடமுடியாது+முடியாத காரியமுமாகும். கடலையே அடக்கி ஆளப்பார்ப்பதும் இந்து என்ற சொல்லுக்கு வழிமுறைகள் கற்பிப்பதும் ஆகாத செயல்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்து என்ற மாபெரும் கடலிலிருந்து வெளியே வாருங்கள். இந்திய வமசாவழி இந்தியர்கள் என்று நீங்க்ளாகவே அமைத்துக்கொண்ட ஓடுபாதையிலிருந்து, இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக பதியமிட்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும் அந்த வம்சவழியைச்சேர்ந்த; புறந்தள்ளப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் (ஈழத்தமிழர்களைபோல்) இன்னொரு சமுதாயத்திற்கு ஒரு மாற்று ஓடுபாதையை நிர்மாணியுங்கள். அந்த சமுதாயத்தின் புதிய வார்ப்புகளுக்கு ஒழுங்கான, முறையான் பயணத்துக்கு நிச்சயம் செய்யுங்கள்.
கடலையே கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல, இந்து என்ற நாமகரணத்தை வைத்துக்கொண்டு இந்த மலேசிய மண்ணில் பலர் கொள்ளையடிதுக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செயலகளை இந்த அமைப்புகள் களை எடுக்கவேண்டும். சிறு சிறு குடிசைக்கோயில்களைக் கட்டிக்கொண்டு குருமார்களாக தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு அறியாத பாமரர்களிடம் பிணந்தின்னிக் கழுகுகளாக் பணம் பிடுங்கிக்கொண்டிருப்பவர்களை துடைத்டொழிக்க முற்படுங்கள்.
இன்னும் நாம், மீன்கள் கூட்டம் கூட்டமாக மீன்பிடி வலைகளில் சிக்கிக்கொள்வதைபோல் நிறையபேர் இந்து என்ற சமயப்போர்வைக்குள் வலைகளோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். கடல், யாருக்கும் சொந்தமாகிவிடமுடியாது. பயணம் மட்டுமே செய்யமுடியும்..அப்படி பயணம் செய்பவர்களில் சாமானியர்களைவிட வல்லவர்கள்தான் அதிகம். அதுபோலத்தான் சமயம் என்ற கடலும். அவர்கள் வல்லவர்களாக இருப்பதற்குக் காரணம் சமய நம்பிக்கையில் மூட பழக்கங்களை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு பரதேசிகளாக இருப்பதனால்தான்.
கூத்தும் கும்மாளமும் ஒவ்வொருவனுடய வாழ்வாதாரத்துக்கும் மிகமிக அவசியம். ஆனால், நடப்பது என்ன? அந்தக் கூத்தும் கும்மாளமும் வேறுவழியில் தடம் மாறிவிட்டது. வளரவிட்டுவிட்டு இப்போது இந்த அமைப்புகளெல்லாம் அங்கலாய்ப்பது, இவர்கள் அரங்கேற்றும்
வருடத்திற்கு ஒருமுறை வந்துபோகும் இந்தத் தைப்பூச நாளில்தான். இது ஒரு நாடமாகத்தான் இருக்கிறது.
கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் இதுபோன்ற சொற்கள், சொற்களாக மட்டுமல்ல; முழுமையான மதமாகவும் விளங்கி விருட்சமாகிப்போனது. காரணம், அவர்களுக்கு மதம் சார்ந்த குணங்கள் – நடவடிக்கைகள் – கலச்சாரங்கள் மிக அழுத்தமாக பதிவாகிப்போனதனால். அவர்கள் அவர்களாகவே வாழ்கிறார்கள். அவர்களை நோக்கி விரல் நீட்டி எதுவும் சொல்லிவிடமுடியாது.
ஆனால், இந்த மலேசியாவில் இந்து என்று சொல்லிக்கொள்பவர்களின் நிலைமை அப்படி இல்லை. மற்ற் சமயங்கள் உலக ரீதியில் பயமற்று இயங்குகிறது. அவர்களுக்கு, எல்லாவகையிலும், உலகார்ந்த வகையில் பாதுகாப்பும் உள்ளது.
ஒரு இந்துவுக்கு அப்படி இல்லை. சுரண்டி வாழ்பவர்கள், இந்துவுக்குள் அமிழ்ந்துபோன ”சொரணையற்றவர்கள் ” பலிகடாவாகிறார்கள்.
மற்ற மதங்கள் மனிதர்களை நேசிக்கிறார்கள். அரவணைக்கிறார்கள். வாழ்வாதாரத்துக்கு வழிதேடிக்கொடுக்கிறார்கள்.
இஸ்லாம், பிரதி வெள்ளிக்கிழமைதோறும் அந்தந்த வட்டார இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் ஒன்றுகூடுகிறார்கள். ”அல்லாஹு அக்பர்” என்று இறைவனை ஏகக்குரலில் அழைத்து தொழுகிறார்கள். ஒருவருக்கொருவர் கட்டி அணைத்துகொள்கிறார்கள். குசலம் விசாரித்துக்கொள்கிறார்கள்.
கிறிஸ்துவம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் (அந்தந்த வட்டார வகைப்பட்ட) கிறிஸ்துவ அன்பர்கள் ஒன்றுகூடுகிறார்கள். ஒருசேர தோத்திரங்கள் ஸ்தோத்திக்கிறார்கள். புதியவர்களாக இருந்தால் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். தேவாலயத்தவர்களால் பழையவர்களின் பெயர்ப்பட்டியலோடு புதியவர்களின் பெயர்களும் குடும்ப நிலவரங்களும் பதிவேட்டில் பதியப்பட்டு அரவணைக்கப்படுகிறார்கள்.
இந்து, பிரதி வெள்ளிக்கிழமைகளில் இந்துக்கள் ஆலயங்களுக்குச் சென்றாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விசாரித்துக்கொள்வதில்லை. புன்னகைப்பதில்லை. ஒவ்வொரு வருகையாளரின் விவரம் ஆலயக்காரகளுக்குத் தெரிந்துகொள்வதில் ஆர்வமில்லை. அக்கறையுமில்லை. ஆனால், அவர்களிடமிருந்து அர்சனைக்கு காசுமட்டும் தேவை. ஆலயங்களை வழிநடத்துவதற்கு அவர்களிடம் வசூலும் நடக்கும். அப்போதுமட்டும் புன்னகைப்பார்கள்.
தனித்தனி அர்சனைகள் அவரவர்களின் நாள் நட்சத்திரம் கேட்டு நடக்கும். விலையையும் நிர்ணயித்திருப்பார்கள். ஆள் பார்த்து + ஆளாளுக்கு செய்யப்படும் அர்சனைகளால் இந்த சமுதாயத்துக்கு என்ன பயன்?
இந்தச் சமுதாயம் பிளவுபட்டுப் போனதற்கு முழுமுதற்காரணம் இந்த ஆலயங்களே என்பதை எத்துணைபேர் சிந்தித்துப்பார்கிறோம்.
தனித்தனி அர்சனைகளால் நாமெல்லாம் தனியாகித்தானே போய்விட்டோம். வீடுகள் வாங்கினாலும் பக்கத்துவீட்டுக்காரன் தமிழனாக இருந்தால் உடனே வீட்டை மாற்றுகிறோம். இதெல்லாம் எப்படி நடக்கிறது. யோசித்தோமா? தோட்டப்புறங்களில் வாழ்ந்த காலங்களில் நாம் எப்படி இருந்தோம். அங்குள்ள ஆலயங்களில் ஒட்டுமொத்தமாகத்தானே அர்சனைகள் நடந்தன. மானேஜர், கிராணிமார்களும், தண்டல்மார்கள் என்று மக்களோடு மககளாக ஒன்றாக நிற்கவில்லையா? மக்கள் ஒற்றுமையாக இல்லையா?
இந்து சங்கத்திற்கும் சமயம் சார்ந்த அமைப்புகளுக்கும் ஒரு வெண்டுகோள். மாற்றம் காணவேண்டியது மூலதாரத்தில். அதை சென்ற காலங்களில் செய்திருக்கலாம். தைபூச காலத்தில் அதை பெரிது படுத்துவது உங்களுக்கும் சுயவிளம்பர நோக்கம். பேனர்கள் (BENNER) வைக்கக்கூடாது என்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு நீங்களே நாளிதழில் இதுபோன்ற செய்திவழி மிகப்பெரிய பாதாதைகள் வைத்துக்கொண்டுள்ளீர்கள்.
குசேலன்
பஞ்சம் பிழைக்க தமிழனோடு ஓட்டிகிட்டவனும், மொழி ஊருபேரில்லாத(பரதேசி) தமிழர் மொழி பற்றியோ சைவ சமயம் பற்றியோ பேச அருகதையற்றவர்கள் ….. தமிழர்கள் இந்தியனுமில்லை இந்துவுமில்லை ….
பெரியாரின் பெருந்தொண்டை கேவலப்படுத்தி பேசும் தமிழன் உண்மையிலேயே நன்றிகெட்ட தமிழனாகத்தான் இருக்க முடியும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,வஞ்சிக்கப்பட்ட தமிழினப் பெண்டிர் மேலாடை அணியக்கூடாது என்று ஆட்சி அதிகாரத்தால் ,மதக்கட்டாயத்தால் அவமானப் படுத்தப்பட்டு, உரிமை மறுக்கப்பட்ட கொடுமையான காலக்கட்டங்களில், பெட்டைகளாய் பதுங்கிய தலைவர்கள் இருந்தபோது அந்த தமிழ்த் தாய்குலத்திற்காக அக்கினிப்போர் நடத்தியவன் எங்களின் தன்மானச் சிங்கம் தந்தை பெரியார். அப்படிப்பட்ட உணர்வுள்ள மாமனிதனை, நன்றிகெட்டத்தனமாய் “கன்னட இராமசாமி எதற்கு? தமிழனின் உணர்வை மழுங்கடிக்கவா?” என்று கேட்பவன் தமிழன் என்று மார்தட்டிக்கொள்ளத் தகுதியற்றவனே. உணர்வற்றுக் கிடந்த தமிழினத்தை உசுப்பிவிட வந்தவன்தான் தந்தை பெரியார்; உறங்கிக்கிடந்த தமிழினத்தை எழுப்பிவிட வந்தவன்தான் சுட்டெறிக்கும் சூரியன் தந்தை பெரியார் . தமிழன் என்று மார்தட்டுபவனே…தயவு செய்து நன்றிகெட்டு பேசாதே…”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”
வாழ்க, மிக சந்தோசமாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பனி.
இந்த திட்டத்துக்கு எதிர் கருத்து கூறியவர்களை நான் கடுமையாக சாடுகிறேன். தமிழன் எதை செய்தலும் குற்றமா இருக்கு. இவங்களும் ஒன்னு செய்ய மாட்டங்க , செய்வர்களையும் குறை கூர்வார்கள். என்ன கொடுமை சரவணா ithu.
ஆங்கிலேயர் இந்தியாவை முகுதாக பிடித்தபோது அங்கே 100 வகை வழிபாடுகள் இருந்தன ..குழப்பிய இவர்கள் கண்டு பிடித்த சொல் தான் ..இன்று நாம் குழம்பிகொண்டு இருக்கும் இந்து சமயம் ..தமிழனுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை ..இந்திய வரலாறு கூட அன்று பிரிட்டிஷ் அரசால் கற்பனையில் எழுதபட்டது …சோழ சேர பாண்டிய அரசர்கள் பற்றி சில வரிகள் தன இதில் உண்டு அனால் வாடஇந்திய குப்த அரசு பற்றி பல கற்பனைகள் உண்டு ..இந்த குப்த வரலாறு உண்மையானதா என்பது வேறு ..இன்று 21 நூறாண்டில் சினிமா நடிகனுக்கு பூஜை போடும் தமிழா நாடு எருமை பிறவிகள் ..இந்திய வரலாறு பிரிட்டிஷ் காரனால் எழுத பட்டபோது ..என்ன செய்துகொண்டிருக்கும் என்று சொல்ல வேண்டியது இல்லை …கவனிக்க மொரீசியஸ் நாட்டில் தமிழர்கள் தமிழ் சமயம் என்று சொல்லுகின்றார்கள் ..முருகனை ..பிளையாரை வணங்கு கின்றார்கள் இதனைக்குக்ம் அங்கு தமிழ் பேச தெரிந்த தமிழர்கள் குறைவு ..நோபெல் பரிசு பெற்ற ட்றீணீடாட் நாடு எழுத்தாளர் நைபூல் ..எழுதிய புத்தகத்தில் தமிழ் ஒரு VESTIGIAL LANGUAGE என்று எழுதி பலA ஆண்டுகள் அகிவிடன …தமிழ் நாடில் இதுவரை தமிL வியாபாரம் செய்து பிழைக்கும் வழுகை தலைவன் உட்பட எவரும் வாய் திறக்க வில்லை பாவம் இவங்கள் பேசுவதே தமிங்க்லிஷ்
சூப்பர் குசேலன்..
முதலில் கடாரம் கழுகுக்கு பதில். சமஸ்கிருதத்தில் பிள்ளையாருக்கு “ஓம் தத்புருஷாய வித்மஹே, வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தீ ப்ரசோதயாத்” என்று சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வதுதான் சரி என்று வாதாடினீர்கலானால், 1700 ஆண்டுகளுக்கு முன்பே (கி.பி. 3-ம் நூற்றாண்டு) திருமூலர் தமிழ் சிவாகமாகிய திருமந்திரத்தில் வழங்கிய காப்பு “ஐந்து கரத்தனை ஆணை முகத்தினை …..” என்ற கணபதி மூல மந்திரம் எப்படி வந்தது? அத்துணை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவ ஞானி பாடிய தமிழ் மொழி தங்களது அகராதியில் “அரைகுறை”யானது என்றால், துதி பாட மட்டுமே பயன்படும் சம்ஸ்கிருத மொழி அதைவிட கழிவானது என்றால் தங்களுக்கு கோபம் வரக் கூடாது. அதற்குப் பின் வந்த கபில தேவ நாயனார் “திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் …..” என்று தமிழில் பாடிய பிள்ளையார் காப்பு என்ன “அரைகுறை” தமிழ் மொழியில் வந்ததா? 14-ம் நூற்றாண்டில் சிவப்ரகாசம் என்ற மெய்கண்ட சாத்திரத்தில் உமாபதி சிவாச்சாரியார் வழங்கிய “ஒளியான திருமேனி உமிழ்தானம் ….” என்ற பிள்ளையார் காப்பு “அரைகுறை” தமிழில் வந்ததா? சமய ஞானம் இல்லாதவர்களிடம் நீங்கள் கலாய்க்கலாம். ஆனால் எம்மைப் போன்றவரிடம் உங்கள் கூற்று எடுபடாது. ஆகையால் சம்ஸ்கிருத மொழியை உயர்த்திப் பேச வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியை தாழ்த்திப் பேச வேண்டாம். அப்புறம் நீங்கள் இங்கே எங்களுக்கு அறிவுரை புகட்ற பயன்படுத்திய தமிழ் மொழியே, மாணிக்கவாசகர் சபித்தது போல, உங்களுக்குப் பயனற்றுப் போகும்.
குசேலரே, நீங்கள் சொல்ல வந்ததை நேரிடையாக சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசுவானேன். “உள்ளே உள்ளவர்கள்” ஆலய அர்ச்சகர்கள், குருக்கள், ஆலய நிர்வாகம் என்று நேரிடையாகவே சொல்லலாமே. அவர்களின் மனதில் இருப்பதெல்லாம், காசு, துட்டு, பணம், மணி, மணி என்பதுதானே. இதனால்தானே, இத்தகையோர்களினால்தானே, இந்து மதத்தில் குழப்பம், கேப்மாரித்தனம். இவர்கள் ஒழுங்காக சமய போதனைகளின் வழி நின்று, பக்தர்களையும் நல்வழிப் படுத்தினால் ஏன் நம் இனத்தவர் படுகுழியை நோக்கிப் போக வேண்டும். அரசியலை விட ஆலயத்தில் அதிகமாக சமய விபச்சாரம் செய்ய ஆரம்பித்தால் அதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. அறிந்தவர்களே, ஒதுங்கிப் போனால் அரசியலை விட மோசமான சாக்கடையாகி விடும் நமது திருத்தலங்கள். ஆகவே, இந்து மதத்தை குறை கூற வேண்டாம் என்று சொல்லுவதை விட, இந்து மதத்தில் படிந்து இருக்கும் சேற்றுப் படிவங்களை அகற்ற வழிகோலுங்கள், நீங்களும் யாமும் நிம்மதி அடைவோம்.
இந்து சமயத்தின் பக்தி மார்க்கத்தில் பால் குடம் ,காவடி எடுத்தல் முதலியவை இருந்தாலும் கூட தன்னை வருத்தி கொள்வதை ஒரு காலும் அனுமதிக்கவில்லை என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.மனமது செம்மையானால் மந்திரமது தேவையில்லை…
தேனீ தலைவா! சும்மா பிச்சிட்டிங்க பிச்சி……..
தேனீ உங்களின் சீற்றத்திலும் உண்மை சிறக்கிறது, பதிலும் சிறக்கிறது. அனைத்தும் அறிந்தவன் இறைவன் என்பதை அனைவரும் ஏற்றுகொண்ட ஒன்று, இதற்கு மாற்று கருத்தே கிடையாது. சமஸ்கிருதம் தெரிந்த கடவுளுக்கு ‘தமிழ் மொழியும்’ தெரியும்! அப்படி இருக்க ஒருவர் சமஸ்கிருத விரும்பியாக இருந்தாலும், தமிழ் மொழி விரும்பியாக இருந்தாலும் அர்ச்சனைகளை அதன் பொருள் விளங்கும் வண்ணம் தமிழ் மொழியில் சொல்வது சமயத்தை வளர்க்கும் அறிவார்ந்த வழி. இல்லேயேல்…சாமி ‘சேம்’ ஆகவும் மாரியம்மா ;’மேரியாகவும்’ சுப்பிரமணியம் ‘சுலைமானாகவும்’ ஆவதை தடுக்க இயலாது! மற்ற மத வழிபாடுகள் அவர் அவருக்கு புரிந்த மொழியில் நடக்கையில் நாம் மட்டும் புரியாத நமக்கு சொந்தமில்லாத மொழியில் கோயில்களில் பவனி வருவதேன்? பல இளைஞர்கள் மற்ற இனத்தில் உள்ள மத இலகு அணுமுறையில் கவரப்பட்டு , அவர்களின் மத கவர்ச்சி அணுகு முறையில் சிறைபட்டு மீண்டு வராமல் பல குடும்பா சிக்கலில் அல்லல் பட்டு வருவதையும் , நீதிமன்றம், காவல் நிலையம் என்று ஏறி இறங்குவதையும் நாம் கண்கூட பார்கின்ற அவல நிலைகள். இதற்கு அடிபட காரணம் நாம் சரியான இலகு முறையிலே சமயத்தை பிள்ளைகளுக்கு வழங்கத் தவறிய கையாலாகததன்மை ! பிளகைளுக்கு சமய தெளிவு இல்லை என்பதில்லை , அதனை இலகு வழியிலே வழங்கவில்லை என்பதுதான் உண்மை. புரியாத மொழியிலே அற்ச்சனை, ஏன் என்று கேட்டால் கிடைக்காத சரியான பதில்… இஷ்டத்திற்கு மாரியமதுக்கொண்ட சமய சடங்குகள்… பிள்ளைகளும் , இளைஞர்களும் குழம்பிகிடக்கின்றனர் ஐயா! சொந்த மொழியிலே பேசுங்க…தெரிந்த மொழியிலே அர்ச்சனை பண்ணுங்க…என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சிக்குவோம்…கடவுள் கிட்ட அர்ச்சகர் என்ன பேசுறார்னு நாமும் தெரிஞ்சுக்குவோம்! இதில் என்ன ரகசிய மொழி வேண்டிக்கிடக்கு ?
ஜெகவீரபாண்டியன் தாங்கள் ஒரு குட்டை குழப்பி என்று எமக்கு நன்றாகவே தெரியும் … (உரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ) தமிழை காட்டான் மொழி என்று சொன்னவன் யார்?
ஆரியமும் திராவிடனும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு … இரண்டும் தமிழை தமிழனை கருவருத்தவர்கள் ….. ஐயா பாண்டியாரே கிருத்துவ பைபிளை நாட்டான் எரிக்கிரானாம் … அதை தடுப்பதற்கு ஏதாவது செய்யும் …
அரவின் குமார் “இந்து மதம்” என்பது என்னவென்று அறியாமல் தாங்கள் கருத்து கூறியுள்ளீர்கள். இந்து மதம் என்று நீங்கள் புலம்பிக் கொண்டிருப்பது வைணவ மதம். அதன் வழிபாட்டு முறை, அவர்தம் தெய்வங்களுக்காக யாக வேள்விகள் செய்து தேவாதி தேவர்களுக்கு வழங்கும் அவிர்பாகத்தால் மகிழ்ச்சி அடைந்து தம் பக்தர்களுக்கு கேட்டது கிடைக்கும் என்று அருள்புரிவதாக நம்பிக்கை. அவர்கள் மொழியில் சொன்னால் ஐதீகம். பால் குடம், காவடி (காவு + அடி) எடுப்பது எல்லாம் தமிழர்களின் மரபில் தத்தம் தெய்வங்களுக்கு அன்பின் பேரில் செய்யும் நேர்த்திக்கடன் என்பதாக வந்தது. முதலில் சிவபெருமானுக்கு நேர்த்திக்கடன் என்பது போய், அப்புறம் முருகனுக்கு நேர்த்திக்கடனாகி இப்பொழுது MU- க்கும், மற்ற இங்க்லீஷ் பந்து விளையாட்டு கிளப்புகளுக்கு நேர்த்திகடானாகி, எல்லா சிறுதெய்வ வழிபாட்டுக்கும் மதுபான நேர்த்திக்கடனாகி சிரிப்பா சிரிக்குது இந்து மதம். இதைதான் நீங்கள் இந்து மதம் என்று அறிந்து வைத்திருந்தீர்களானால் தயவு செய்து மீண்டும் இந்து மதம் என்னவென்பதை படிக்க எங்காவது ஒரு பாலர் பள்ளியில் சேருங்கள். இது அறியாமையில் இருக்கும் மற்ற தமிழர்களுக்கும், இந்து பெருமக்களுக்கும் தகும்.
நன்றி அண்ணா.
ஜெகவீரபாண்டியனுக்கு பதில்
பெரியாரின் பச்சை துரோகம்!!!
என்னை சூத்திரன் என்று அழையாதே மாறாக வேசி மகன் என்று அழை என்பது போன்றது தான் இந்த “திராவிடன்” என்னும் நாமம்.
http://www.youtube.com/watch?v=_0DbFCMSTZ0
http://www.youtube.com/watch?v=4oqAQTlE2m8
“கலை” என்று அழகாகப் பெயர் வைத்துக்கொண்டு அசிங்கமாகவும் அறியாமையாகவும் இருக்காதீர். ஒன்றைப்பற்றி தெரிந்தால் கருத்துரைக்க வேண்டும்.இல்லை என்றால் படித்துவிட்டாவது கருத்துரைக்க வேண்டும்.எவனோ அரை குறை பைபிளை எரித்தால் எனக்கென்ன? அது சபா சரவாக்கார மலாய்காரன் பிரச்னை. உமக்கு வேலை இல்லையென்றால் போய் குடைபிடியும். பெரியாரை நூல் போட்டு அளக்க உமக்கு விபரம் போதாது என்பதால் பெரியவர்களைப்பற்றி பேசாமல் இருப்பது உத்தமம். ஆரியமும் திராவிடமும் ஒன்னு என்று சொல்பவன் தலைக்குள் இருப்பதுதான் மண். தேவநேயப்பாவாணர் என்று ஒரு தமிழ் அறிஞர் இருந்தாரே… அவரைப்பற்றி தெரியுமா? அவர் எழுதிய ஆராய்ச்சி நூல்களைப்பற்றியாவது தெரியுமா? அவர் திராவிடன், திராவிடம்,என்பதற்கு ஆய்தறிந்து சொன்ன விளக்கமாவது தெரியுமா? ஊரிலிருந்து வரும் வாய் வியாபரிகளின் அரைகுறை பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னிடம் பேச முயற்சிக்காதீர். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழியென்று சொன்னது உண்மைதான். இது குறித்து பேரறிஞர் அண்ணாவிடம் புகார் கொடுத்த கழகத் தோழர்களுக்கு பேரறிஞர் அண்ணாதுரை சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? ” இதோட விட்டீங்கனா ஒன்னுமில்லை. இதைப்பற்றி கேள்வி எழுப்பனா? பிறகு பெரியார் விளக்கம் சொல்ல ஆரம்புச்சாருனா தாங்கமாட்டீங்க. பேசாம போயி வேலையப் பாருங்க!” என்றார். அதைத்தான் உமக்கும் சொல்கிறேன். பேசாம , கிளராம போய் வேலைய பாரும். இல்லை நீ பதில் சொல்லத்தான் வேண்டுமென்று அடம்பிடித்தால் நாற்றமெடுக்கும். பரவாயில்லையா?
கலை நீர் அடங்கமாட்டீர் பொலிருக்கிறது. வேலையை முடித்துவிட்டு வரேன்!
நல்ல திர்பூ
உம்மைபோன்று வந்தேறியின் சாதிவெறிக்கு பயந்து மாறி டமிலநல்ல யாம் … தமிழருக்கு எத்தினை எதிரிகள்டாசாமி !!!!! திராவிடன், ஆரியன் …. மாறி தமிழனும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்கிறான் …
யா பாண்டியாரே இந்த செம்பருத்தியில் கருத்து சொல்ல பல பக்கம்கள் உள்ளது …. நீர் இரண்டு ஓடத்தில் பயணிகாதிர்.. ஏதாவது ஒன்றை தேர்வுசெய்யும் …
இந்த செய்தி சைவ தமிழர் வழிபாடு சம்பந்தபட்டது … இங்கு எதற்கு கன்னட நாய்க்கன் ராமசாமி … உமக்கு திராவிடம் புகழ்பாட வேண்டுமென்றால் பைபிளை ஓரமாக வைத்து விட்டு திருட்டு திராவிடத்தில் உறுப்பியம் பெறவேண்டியதுதானே …
மொழியும் இனமும் மேன்மைபெற ஒரேவழி ..
தமிழர்களை பாம்புபோன்று சுற்றியுள்ள திராவிடம் ஆரியம் இரண்டையும் சீர் செய்யவேண்டும் …
சைவ தமிழர்கள் தங்கள் வழிபாட்டை நெறிபடுத்த முனையும்போது நாத்திகம் பேசுபவர்கள் , கிருத்தவ தமிழர்கள் , ராம பக்தர்கள் மற்றும் குருஜி பக்தர்கள் தயவு செய்து உங்கள் வழிபாட்டு முறையையோ அல்லது குழப்பம் விளைவிக்கும் கருத்தை சொல்லாதிர்கள் …
என்னை மனித லிஸ்டில் இருந்து தூக்க நீர் யாருமையா?? MR Jegaveerapandian .
தமிழை அரைகுறை மொழி எனும் லிஸ்டில் சேர்க்க நீர் யாருமையா ?? திருவாளர் கடாரம் கழுகார் அவர்களே? ( நண்பர் தேனி உங்கள் பெயரைத் தமிழ் படுத்திய அழகை நேசிக்கிறேன்) தமிழோடு நீங்கள் சமரசமாகுங்கள் ,தமிழன் என்று கைகுழுக்க இந்த ஜெகவீரபாண்டியன் எப்போதுமே தயாராக இருப்பான்.
கலை மற்றும் ஜெகவீரபாண்டியன் தயவு செய்து தனிநபர் விவாதம் வேண்டாமே