தைப்பூசம் என்பது ஒரு தெருவிழா ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய சமூகம் முன்வர வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அது நுகரும் கலாச்சாரத்தன்மைக்கு ஆளாகி தனது பண்பாட்டு சமயத்தன்மையை இழந்துவிடும் என்பதால் இந்த விதிமுறைகளை உருவாக்க முற்பட்டோம் என்கிறார் குணராஜ்.
கடந்த ஒரு மாத காலமாக இது சார்பாக ‘தைப்பூச பணிப்பிரிவு’ என்ற ஒரு குழுவை உருவாகினோம். இந்து சங்கம், இந்து சேவை சங்கம், ருத்திர சமாஜ், செலயாங் நகராண்மைக்கழகம், காவல்துறை மற்றும் சில சமூக அமைப்புகளை சார்தவர்கள் ஆலோசனை வழங்கினார்கள் என்றார் அக்குழுவைச் சார்ந்த குணராஜ்.
இதன் பலனாக இன்று இந்து சங்கம் அலுவலத்தில் ஒரு கலந்துரையாடல் விளக்க க்கூட்டம் நடைபெற்றது. இதை இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன்ஷான் வழிநடத்தினார். அவருக்கு துணையாக அதன் முன்னால் தலைவர் டத்தோ வைத்தலிங்கம் மற்றும் இராமாஜி, குணராஜ், கோம்பாக் காவல்துறையின் ஏஎஸ்பி முத்து, இந்து சங்க துணைத்தலைவர் கந்தசாமி, ஆகியோர் உட்பட இன்னும் சில இயகத்தலைவர்கள் உடன் இருந்தனர்.
முதல் கட்டமாக மலேசியாவில் நடைபெறும தைப்பூசத் திருவிழவுக்கான விதிமுறைகள் அடங்கிய ஒரு கையேட்டை இந்து சங்கம் தனது சார்பாக அறிமுகப்படுதியது. சுமார் நூறு பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பலர் கருதுரைத்தனர். அது இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினமாகும். இது பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.
மலேசியாவில் கொண்டாடப்படும் முக்கிய சமய விழா இதுவாகும். அன்மைய காலங்களில் இங்கு இவ்விழாவை கண்டு கழிப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது ஒரு சமயவிழா என்றாலும் அதை காணவருபவர்கள் அதிகமாகி அதை ஒரு கூட்டமும் கும்மாளமும் கொண்ட வாணிப நிகழ்வாக்கி வருகின்றனர். இதை முறைப்படுத்துவது நம் அனைவரின் கடமை என்றார் வைத்தலிங்கம்.
விதிமுறைகளைப் பற்றி விளக்கமளித்த மோகன்ஷான், இவை சார்பாக தான் பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவுடன் பேசியதாகவும் அதற்கு அவர் ஆதரவு நல்கியதாகவும் கூறினார்.
தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஏஎஸ்பி முத்து, சில வருடங்களுக்கு முன்பு பொங்கோ இசை கருவிகளை தடை செய்ய எங்களின் உதவி நாடப்பட்டது. அவ்வருடம் சுமார் 500 பொங்கோ இசை கருவிகளை நாங்கள் அகற்றினோம். அதன் பிறகு மக்கள் அதனை கொண்டு வருவதில்லை என்றார்.
சிலர் ஏன் பத்துமலை கோயில் நிர்வாகம் யாரையும் அனுப்ப வில்லை என கேட்டனர். பத்து மலை கோயில் நிர்வாகம் தனது பணியை முறையாக செய்தால் பல பிரச்சனைகளை தீர்க்கலாம் என்றனர்.
விதிமுறைகளில் சில
அலவு காவடிகள் எடுப்பவர்களின் அலவு 3 அடிக்கு மேல் இருக்கக்கூடாது; காவடி எடுப்பவர்கள் முறையாக புஷ்ப காவடி, பால் காவடி, அலங்கார காவடி எடுக்கலாம்.
காவடிகளில் இயக்கத்தின் சின்னங்களோ அல்லது சமயத்திற்கு சார்ந்து இல்லாத எந்த ஒரு விசயத்தையும் தங்களின் காவடிகளில் இணைக்கக்கூடாது. இருந்தால் அந்தக் காவடிகள் தடை செய்யப்படும்.
இரத காவடி, பறக்கும் காவடி, அரிவாள், கத்தி, சூலம்,, தடி,, சாட்டை,, சுருட்டு,, மது பானங்கள் போன்றவைகளுக்கு தடை.
முனீஸ்வரன், மதுரை வீரன், சுடுகாட்டு காளி, காட்டேரி போன்ற தெய்வ வழிப்பாட்டு காவடிகள் எடுக்க அனுமதிக்கப்படாது. நாக்கில் குங்குமம் அணிந்து வருபவர்களும் தடை செய்யப்படுவார்கள்.
மேலும் டுரியான் காவடி, மிளகாய் காவடி, கொடூரமாக அலங்கரிக்கப்பட்ட காவடிகளுக்கும் தடை.
காவடிகள் எடுக்கக்கூடிய பக்த்தர்கள் கண்டிப்பாக சமய உடைகளை அணிந்து வர வேண்டும். அதனை தவிர்த்து மற்ற உடைகளை அணிந்து வருபவர்களின் நேர்த்தி கடன் ஏற்றுக் கொள்ளப்படாது.
காவடிகளுடன் நாதஸ்வரம், தவில், உறுமி மேளத்தோடு காவடி சிந்து மற்றும் தெய்வீக பாடல்களைப் பாடி வர வேண்டும். அதை தவிர்த்து சினிமா பாடல்களோ, ‘Gangnam Style’, ரேஃப் போன்ற பாடல்களைக் கண்டிப்பாக பாடி வரக்கூடாது.
கேளிக்கை நிகழ்வுகளுக்கு கட்ட கட்டமாக தடை விதிக்க வேண்டும்.
உணவும் பானமும்
தண்ணீர் பந்தல் போடுபவர்கள் மெத்து வகை கப்களை (STROFOAM CUPS) பயன்படுத்த இயலாது. மேலும் அதிகமானவர்கள் இலவச பானங்கள் உணவு வழங்க முன்வருவதால் அதிகப்படியாக அவை வீணாகின்றன. இதை முறையாக கையாள முன்பதிவு முறையை அமுலாக்க கேட்டுக்கொள்ளப் பட்டது.
அதோடு அரசியல் தலைவர்களின் வருகைக்கு மேடை போடுவது, அவர்களுக்கு ‘கட் அவுட்’ போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இவை விதிமுறைகளில் இல்லை.
Jegaveeraphandian சார்! ஒழுக்கமில்லாதோர் எக்காலத்திலும் ஞானத்தை அடைய முடியாது! ஞானத்தை அடைய பக்தி யோகமே சிறந்தது வழி.
எல்லாம் சிவமயம்!
அய்யா… திரு.மாறன் அவர்களே…நீங்கள் சொன்னதில் எதுவமே தப்போ அல்லது தவரோ இல்லை அய்யா. உங்களின் கருத்தில் எனக்கு எதுவும் கருத்து வேறுபாடும் இல்லை. அய்யன் வள்ளுவர் நம்மை உலகத்தின் பார்வையில் உயர்த்த வந்த பெருமகனார். அவர் , ஒழுக்கம் விழுப்பம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. அது உயிரைவிட மேலானதாக ஓம்பப்படவேண்டும் என்று கூருகின்றார். பக்தி என்பதுவும் ஒருவகைப் பற்றுதான். ஆனால் அது ஒரு மேலானப் பற்று. உன்னதமானவராம் இறைவன் மீது வைக்கும் மாசில்லாப் பற்று. நாம் அந்த நேயன்மீது வைக்கும் பரிசுத்தமான அன்பே இறைவன் மீது நாம் கொள்ளும் பற்றாகவும் அதுவே பக்தியாகவும் பரிணமிக்கிறது. இப்படி இறையன்பில் திளைதவர்கள்கூட வாழ்கையில் சில நேரங்களில் இடறிவிட வாய்ப்பு உள்ளது. அதைத்தான் ” குணமெனும் குன்றேறி நிற்போருக்கும் வெகுளியை சிறிது பொழுதேனும் காப்பதென்பது அரிதான செயலாக இருக்கிறது ” என்று அய்யன் வள்ளுவர் உரைக்கிறார். ஆக, ஞானம் பெற்றவர்களும் வழுவிடாமல் இருக்க ஒழுக்கம் உயிரைப்போல , ஏன்….அதைவிட மேலானதாகவே இருக்கிறது. ஒருவனிடம் இருக்கும் ஞானத்தை வெளிப்படுத்துவதே ஒழுக்கம் எனும் கனியே. ஆக, ஞானிக்கே ஒழுக்கமும் ஒழுக்கமுள்ளவனுக்கே ஞானமும் கைகூடும். அதனால்தான் தந்தை பெரியார் ஒழுக்மில்லாத எதையும் தன் வாழ்நாளில் கொஞ்சம்கூட முகதாட்சண்யமின்றி சாடினார். ஒழுக்கமில்லாதவர்களால் நாட்டிற்கோ சமூகத்திற்கோ இனத்திற்கோ ஏன் சமயத்திற்கும்கூட பயனில்லை என்பது பெரியாரின் கருத்து. அவரைப் புரிந்துகொள்ளாதவர்கள் கோபிக்கிறார்கள். அவரின் உள்ளத்தை புரிந்துகொண்ட எத்தனையோ சைவப்பழங்களும் அவரோடு அன்பு பாராட்டவே செய்துள்ளனர்.
உழவரே… உங்கள் பெயரைக் குறிப்பதற்கு பதிலாக திரு. மாறன் என தவறுதலாக குறித்துள்ளேன். இருவரும் என்னை மன்னிப்பீராக! படித்தபின் இருவருமே கருத்துரையுங்கள்.நன்றி!
திருக்குறள் வுலக மொழி,கேள்விக்கு குரல் சொல்லி விளக்கம் எழுதினால்,நம் தமிழ் இனமே பின் தொடரும்,நம்மை போல்.மன்னிக்கவும் திராவிடம் அது எதுக்கு.கலைஞர் கருணாநிதி /கருணா இவர்கள் பெயர் யென்ரெண்டும் நிலைக்கும்.வாழ்க த்ரோகி.இன்னும் காதில் கேக்குது இலங்கை தமிழ் மக்கள் அலறல் ஓலம்.பிரபாகரன் மகன் என்ன பாவம் செஞ்சான்.
Jegaveeraphandian சார்!நீங்கள் அய்யன் வள்ளுவர் மீது கொண்டிருப்பதும் பக்தியே,அதில் எந்த சந்தேகமும் இல்லை!
ஜெகவீரபாண்டியன் அவர்களே தங்கள் விளக்கத்திற்கு நன்றி அய்யா நன்றி. பதில் வரும் வரை சிறிது நேரம் குழம்பியிருந்தேன் பதில் வந்ததும் தெளிவடைந்தேன். ஒவ்வொருவரும் இறைவனை அடைய ஒவ்வொரு வழியை தேர்ந்தெடுப்பர். நான் தேர்ந்தெடுத்த வழி நான் அருந்திய தமிழ்ப்பாலை கொண்டு ஆணவத்தை அடக்கி, மனம் என்ற அய்ம் புலன்களை கட்டுப்பாட்டுக்குள் ( மனதை ஒரு நிலை படுத்துவது சிரமம் ஆனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சுலபம்) கொண்டு வந்து அதன் வழி பயணிக்க முயற்ச்சிக்கிறேன். நம் தமிழ் மொழியை உள்வாங்கி ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் தேடி அலைந்தால் விடை கிடைக்கும் போது மனதினுள் தேனருவி பாயும். நான் அனுபவபட்டவன். உதாரணம் சில தட்டு, அவன் முதுகில் இரண்டு தட்டு, சாப்பாட்டுத் தட்டு, பணத்தட்டுப்பாடு. படி, துாசு படிந்திருக்கு, படி ஏறி மேலே வா. சிங்கம், அசிங்கம். நாணயம். பத்திரம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழில் இல்லாததா வேற்று மொழியில் இருக்கு. தமிழை படித்தவன் சரளமாக ஆங்கிலம் பேசுவான். தமிழில் இல்லாத உச்சரிப்பா, ஓர் எழுத்து நாக்கு பிரண்டாளும் அர்த்தமே மாறிவிடும். இதுவா நிஷ மொழி, இதுவா ஆண்டவனின் அர்ச்சனைக்கு ஏற்றமில்லா மொழி. தமிழர்களே விழித்தெழுங்கள். பாட்டிற்கு குரல் வளம் தேவை. குரல் வளத்திற்க்கு உச்சரிப்பு தேவை, உச்சரிப்பு என்பது ஒலியதிர்வு.
நமது 247 எழுத்துக்களில் இல்லாத ஒலியதிர்வா? பாட்டு படிக்க கற்றுக்கொள்ளும் போது தமிழில் சரிகமபதனிச என்றே ஆரம்பிக்கின்றனர். பாட்டுத் தேர்வின் போது, உன் குரல் வளத்தை (ஒலியதிர்வு) சோதிக்க வேண்டும் சமசு கிருதத்தில் ஒரு சுலோகம் பாடு என்றா கேட்கின்றனர். சிந்தியுங்கள் தமிழர்களே?. தமிழ், தமிழையும் திருக்குறலையும் என்னால் வேற்றுமை படுத்தி பார்க்க முடியவில்லை. காரணம் தமிழில் உள்ளதே திருக்குறலிலும், திருக்குறலில் உள்ளதே தமிழிலும் கலந்தே இருக்கின்றன. அந்த முதல் குறலிலும் சூது செய்து விட்டனர் கயவர்கள். பகவன் பகலவன். பகல்-வெளிச்சம்-சூரியன் பகல்+அவன் பகலவன். ஆனால் இன்று பகவன். எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு விசத்தை ஊட்ட மாட்டாள். எந்த ஒரு தகப்பனும் தன் மகனுக்கு துர்நடத்தையை வழி காட்டமாட்டார். அது போலவே நம் முன்னோர்களும் நமக்கு நழ் வழியே காட்டியிருப்பர். (எதிரி) திருடன் திருடி விட்டு செல்லும் போது அவனை அறியாமலேயே எதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்வான் . அந்த கோணத்திலேயே எனது ஆராய்ச்சியை குமரிக் கண்டத்திலிருந்து ஆராய்ந்தேன். விடை நன்மையே. குமரிக்கண்டத்திலும், ஆழிப் பேரலைக்கு பின்னால் இந்தியாவில் குடியேறி வட நாடு வரை ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஒவ்வொரு மனிதனுக்கும் கூடவே ஒட்டி பிறக்கும் ஆணவமும், வட திசை வழியாக உள்ளே நுழைந்த கயவர்களின் சூழ்ச்சியாலும், நாம் வேற்றுமையாக வாழ்கின்றோம், வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். வாசகர்களே சிலைகளும் மனித உணர்வுகளுக்கும் ஒற்றுமை2 என்று எழுதியதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். என் நண்பர்களுடன் கலந்து உறவாடிய பிறகே ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு சிலவற்றை கலந்துரையாடல் வழி ஒரு சில மணித்தியங்களில் புரிந்து கொள்ள முடியும். ஒரு சிலவற்றை நாட்கணக்கிலும் வார கணக்கிலும் ஆகும். வரும் நாட்களில் உங்களிடம் பகிர்ந்தழிக்கவும் ஆசைப் படுகின்றேன். நான் எல்லாம் அறிந்தவனும் அல்ல, யானைக்கும் அடி சறுக்கும் என்பதை உணர்ந்தவன். வாசகர் அனைவருக்கும் எனது வணக்கம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
இக்குறளில் உள்ள நயம், அழகு, பொருளின் ஆழம், அதை குறள் வெண்பாவில் தமிழ்ப்படுத்திய மாண்பு ,” பற்று” எனும் சொல்லை ஆறு முறை ஒரே குறளில் வரும்படி ஆரமாக்கி , தமிழை நேசிக்கும் அத்துனை உள்ளங்களுக்கும் பாமாலை சூட்டிய நம் தமிழ்ப் பாட்டனாம் அய்யன் வள்ளுவனை நம் உள்ளம் பற்றாமல் போகுமானால் , இந்த உலகில் தமிழர்களாகிய நாம் ஒருபோதும் வாழ்வாங்கு வாழவே முடியாது தோழர்களே. ஒரு குறிப்பு.அதாவது அய்யன் வள்ளுவர் இது போன்ற குறளை நமக்குத் தந்தபோது கன்னடமும் இல்லை , தெலுங்கும் இல்லை, மலையாளமும் இல்லை. இவர்கள் எல்லோருமே தமிழராக தமிழ் நாட்டவராக வாழ்ந்த காலம் அது. தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட கலாச்சார தாக்குதலும், அதன்வாயிலாக ஏற்பட்ட மொழிச்சிதைவும் பாராண்ட தமிழினம் இன்று கன்னடம்,தெலுங்கு,மலையாளம் என உடைந்து கிடக்கின்றன. ஒரு பேரினம் எப்படி சிற்றினமானது? எல்லாம் அய்யனின் திருக்குறளை மறந்ததும் தமிழ்ப்பற்றின்றியும் வாழப்பழகியதால் வந்த பின்னடைவுகள்தாம்.
ஜெகவீரபாண்டியன் அவர்களே
. தமிழ், தமிழையும் திருக்குறலையும் என்னால் வேற்றுமை படுத்தி பார்க்க முடியவில்லை. காரணம் தமிழில் உள்ளதே திருக்குறலிலும், திருக்குறலில் உள்ளதே தமிழிலும் கலந்தே இருக்கின்றன. இந்த வார்த்தை தங்களை சிறிது குழப்பியிருக்கலாம். இதன் அர்த்தம் தமிழ், தமிழ் கடவுள் , அழகு, அறிவு, முருகு, முருகன் . அய்யனை தமிழாக நம் மொழிக்கு கிடைத்த, கண்ணுக்கு தெரிந்த கடவுளாக பார்ப்பதால் என்னால் வேற்றுமை படுத்தி பார்க்க முடியவில்லை. என்று திருத்திக் கொள்ளவும். தமிழை உள் வாங்கிக்கொண்டதால் வந்த வாரத்தையே அது. திருக்குறளை நான் முழுமையாக படிக்காவிட்டாலும், படித்த என் நண்பருடன் கலகமும், கலந்துரையாடலின் வழி சுவைத்திருக்கின்றேன். சுவைத்துக்கொண்டும் இருக்கிறேன். முருகனை தமிழ் கடவுள் என்றும், அழகு, அறிவு என்றும் குறிப்பிடுவதை, பிரிதொரு கட்டுரையில் அறிவியல் ரீதியாக தெரியப்படுத்துகின்றேன்.
அய்யா உழவன் அவர்களே… //தமிழையும் திருக்குறளையும் உங்களால் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை// என்று சொன்னீர்கள். உங்கள் கருத்தினைப் படித்தபோது கலைஞர் கருணாநிதி ஒரு முறை பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. தமிழில் படி என்பதும் தமிழைப்படி என்பதும் வேறு வேறு என்றார். தமிழில் படி என்றால் விஞ்ஞானத்தையோ,பூகோளத்தையோ,கணக்கியலைப் பற்றியோ….. எதையுமே ஆங்கிலத்திலோ அல்லது மற்ற மொழிகளிலோ படிக்காமல் தமிழ் மொழியில் படிப்பதென்றும், தமிழைப்படி என்றால் தமிழிலுள்ள எல்லா இலக்கண இலக்கியங்களையும் படி என பொருள்படும் எனும் பொருள்படுமென உரைத்தார். அதன்படி பார்த்தால் நீங்கள் சொன்னதில் ஒன்றும் குழப்பமில்லைதான்!
நமக்கு தலை வலி,2பெனடொல் போடறோம் அது எப்படி நேராய் தலைக்கு போய் தலை வழியை குணம் செய்கிறது.வயிறுக்கு போயிருக்கலாம் கை காலுக்கு போயிருக்கலாம் ஏன் தலைக்கு போய் நிவாரணம் தரனும்.நாம் தோசை சுடும் பொது அவன் அணு ஆயுதம் ராகேட் கப்பல் மற்றும்2 போய் கொண்டிருந்தான் விஞ்ஞானம் அறிவியல் ஆராய்ச்சி போர்,தமிழர் இருந்தார் எங்கே.நம் ஆள் பேசுறதில் கெட்டிகாரன் அதிலும் விரண்டா வாதம்.தமிழ் நாட்டு போலிஸ் வுலகிலே சிறந்தது ஏன்னா அங்கே எட்டப்பர் ஜாஸ்தி.திருக்குறள் வாயிலாக வாவது வொற்றுமை வளரட்டும் என்று ஆசை பட்டேன்,நாம் மஹா திறமைசாலி ஆக வேண்டாம் ஆனால் வோட்ருமையாய் வாழும் அருவருக்கும் காகமாய் கூடி வாழ்ந்தால் நன்று நலம்.நமக்கு வொற்றுமை தான் குறைவு பனடோல் போல் இருக்க ஆசை ஏக்கம்.
திருக்குறளைப்பற்றியும் தமிழை பற்றியும் பேசுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது — திருக்குறளை மிஞ்சி மற்றவர்கள் ஏதும் சொல்லி இருப்பதாக எனக்கு தெரியெவில்லை. நமக்கு அவ்வை போன்று பல புலவர்கள் எவ்வளவோ கூறியிருக்கின்றனர். ஆனால் நம்மவர்கள் எத்தனை பேருக்கு திருக்குறள் என்று ஒன்று இருக்கின்றது என்று தெரியும்–அதிலும் தெரிந்து கொள்வதில் அக்கறையும் கிடையாது. நாம் எல்லோரும் திருக்குறளை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
காயு அம்மனிக்கு, உன்னைய என்னால அப்படிதான் பார்க்க முடியிது. உ எலுத்து நடய வச்சு பாக்குரப்ப உ வயசு குரவா இருக்கும்பொல தொனுது. அது எனமோ திரல நா யாருக்காசும் டெலிபொன் அடிக்கரப்ப, உனக்கெ ரொங்கொல வந்து சேருது. நமக்கொல்ல பொன ஜென்ம பந்தம் இருக்குமோ? வாயேன் ஜீன பெருநாலைக்கி, டீ சாப்புட்டுகிட்டே பேசுஒம். கொஞ்ச இரு நா எங்காலுங்ககிட்ட பெசிட்டு வந்துருறன்.
அன்பான வாசகர்களே இங்கே ஒருவர் என்னையும், நம் இனத்தையும் தாழ்வான எண்ணம் கொண்டு திரும்பவும் விமர்சிக்க முனைந்து விட்டார். அவருடைய எழுத்து நடையில் நன்றாகவே தெரிகிறது. (நாம் தோசை சுடும் பொது அவன் அணு ஆயுதம் ராகேட் கப்பல் மற்றும்2 போய் கொண்டிருந்தான் விஞ்ஞானம் அறிவியல் ஆராய்ச்சி போர்,தமிழர் இருந்தார் எங்கே?.)——( ஆதி மனிதன் ஆடை /நாகரீகம் /வுரவு தெரியாம வாழ்ந்தான் அம்மா தெரியாது அப்பா தெரியாது அண்ணன்/தம்பி/அக்க /தங்கை யாரும் தெரியாது எப்படி எப்படியோ யினவிர்தி நடந்தது.நீ யார்/நான் யார் ?மானமாம் அவமானமாம்.) ஆதி ஆரியர்கள் எந்த எண்ணத்துடன் நம்மை விமர்சித்தார்களோ, அதே குணம் இவருடைய எழுத்து நடையில் மிளிர்கின்றது. என் மீது இவருக்கு கோபம் இருக்கலாம் (வேதம் – உடல் உழைக்காமல் மற்றவர்களின் உடல் உழைப்பில் வயிறு வளர்க்கும் சோம்பேரிகளின் (ரத்தம் குடிக்கும் அட்டை) கற்பனை கதா பாத்திரம்.) இந்த வார்த்தைகளினால் இவருக்கு என் மீது கோபம் இருக்கலாம், தவறுதலாக அவர் மீது (மாறன்) அம்பை ஏவிவிட்ட அவரிடம் மன்னிப்பு கேட்பேனே அன்றி இவரிடம் மறந்தும் மன்னிப்பு கேட்க மாட்டேன். காரணம் அவர்கள் அன்று நம்மை எவ்வளவு கீழ் தரமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்தார்கள்.( கருங்குரங்குகள், குரங்கு கூட்டங்கள், அரக்கர்கள், ராட்சசிகள், இன்னும் அடுக்கலாம்) பெரியார் சார்ந்த புத்தகங்களை படிப்பவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளலாம். இவர்கள் நம்மை வர்ணித்த விதமும் செய்த சூழ்ச்சியும், அதனுல் நம் இனத்தவர்கள் சிக்குண்டு படும் வேதனையும் கண்டு, என் மனம் ரணமாகி வடுவாகி போனதால். அன்று அந்த வார்த்தையை உபயோகித்தேன். (பெரியார்) இறந்து போன தன் நண்பனுக்காக திருநீறு அணிந்து கொண்ட அந்த மனித நேயம் எங்கே? இன்றும் நம்மை இழிவாக பார்க்கும் இந்த அரக்க குணம் எங்கே? அவர்கள் மட்டும் புநுால் அணிந்து கொள்வார்களாம், காசுக்காக நம்மிடம் வரும்போழுது எதிர் திசையில் புநுாலை அணிவிக்க செய்து தற்காலிகமாக அவர்கள் இனத்தில் சேர்த்துக் கொண்டு, காரியம் முடிந்தவுடன் நம் கையாலேயே அதனை கழட்டி நெருப்பில் போட வேண்டுமாம். என்ன ஒரு கயமைத்தனம். நம்மிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதனுல் புகுந்து குளிர் காய நினைப்பதுதான் எனக்கு பிடிக்கவில்லை. இன்றும் இவர்கள் நம்மை பார்த்து கூறுவது, நாம் நாகரீகம் தெரியாமல் மிருகமாக வாழ்ந்தோமாம் இவர்கள் வந்த பின்னர்தாம் நமக்கு வெளிச்சம் கிடைத்ததாம். இவர்கள் அறிவாளிகளாம் நாம் முட்டாள்களாம். தெரியாமல்தான் கேட்கிறேன் தமிழன் சென்ற இடம் எல்லாம் அவனுடைய கலாசாரமும், பண்பாடும் இன்றும் மிளிர்கின்றன. அப்படியென்றால் மேற்கு திசைலிருந்து இந்தியாவிற்கு வரும் போழுது, வரும் வழிகளில் உங்களுடைய காலடி தடமும் பதிந்திருக்க வேண்டுமே? அப்படி ஒன்றும் இல்லையே அது ஏன்? எங்களை பார்த்துதானே எல்லாமே கற்றுக் கொண்டீர்கள். துரதிஷ்ட வசமாக சிறு வயதிலும் கணவனை இழக்கும் பெண்களை, புவும் பொட்டும்தான் இழக்க சொல்வோம் நாங்கள் எங்கள் மனித குணம் எங்கே?. ஆனால் நீங்கள் உடன் கட்டை என்ற பெயரில், கதற2 வலுக்கட்டாயமாக நெருப்பினுள் தள்ளி கொல்லுகின்ற உங்கள் குணம் எங்கே? இன்றும் வட நாட்டு கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பவும் திரை மறைவில் புநுால் போட்ட உங்க ஆளுங்களுக்கு ஒரு உபதேசமும், எங்க ஆளுங்களுக்கு ஒரு உபதேசமும் செஞ்சிகிட்டுதான் இருக்கீங்க அதனால் நீங்கள் உயர்வதும் நாங்கள் தாழ்வதும் நடந்துக்கிட்டு இருக்கு. வேனாம் தாயி என்ன உட்டுரு. நான் சொல்வது எங்க ஆளுங்களுக்கு தெரியும். நல்லது எது கெட்டது எதுனு தெரியும். உலகம் இன்னைக்கு கைக்குள்ள வந்துடுச்சி. அறிவும் சிந்தைனையும் வளர்ந்திடுச்சி. நான் பெனடோலும் இல்லை, எட்டப்பனும் இல்லை. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னன்னுமோ உளருற. உங்க ஆளுங்கங்கிட்ட நல்லதை கேட்டுட்டு வந்து எங்களுக்கு சொல்லலாமே. யார் உன்னை ஏச போற. திருவள்ளுவரு எங்களுக்கு கிடைச்ச தீர்கதரிசி உனக்கு இதேல்லாம் புரியாது. திரும்பவும் சொல்லுரேன். என்னை உட்டுடு தாயி என்னால முடியல. நான் அழுந்துடுவேன்.
உழவன் ஐயா மொழியல்ல உருஇல்ல சொந்தவரலாரு இல்ல மொத்தத்தில பரதேசிகூட்டம் … (திரைகடலோடி திரவியம்தேடு )தமிழன் போன இடமெல்லாம் அட்டைபோன்று தெலுங்கனும் பார்பனனும் ஓட்டிகிட்டான் …
தமிழா பல்ல இளிச்சிக்கிட்டு தமிழ் பேசிகிட்டு வருவான் ஓரத்தில கொஞ்சம் படுக்க இடம் கொடுத்த நாலு தலைமுறைக்கு உன்சன்ததி அடிமையாகிடும் ..
தமிழா தெலுங்கன் தமிழனா வெளிலகாம்பிச்சுகுவான் …உன்னைவிட உன் மொழில பாண்டித்தியம் பெறுவான் … நம்பிடாதே நேரம்பார்த்து கவுத்திடுவான் …
அவன் தெலுங்கனா இருப்பான் நான் தமிழன்டா சொன்னா முஞ்சி மாறிடுது !!!!
முருகன் எப்படி தமிழ் கடவுள் குறத்தி வள்ளியை மனந்ததாலா.எப்படி சார் விற்ற முடியும் நீங்கள் எல்லாம் தமிழ் தலை வாசல் காவலர்கள்,நன்மையை யார் சொன்னால் என்ன பெருமையாய் இருக்கு தமிழ் மேல் நிறைந்த பற்று கொண்டதற்கு,ஹிந்து கடவுளை வணங்கும் யாவரும் ஹிந்துக்களே சிறந்தவர்களே ஆவர்.திருக்குறள் மொழி தமிழை விட வேறுபட்டிருக்கு,அதை மற்றொருவர் விளக்கி சொன்னால்தான்/விளக்க வுரை எழுதினால்தான் தமிழர்கே புரியிது அப்படி இருக்க எப்படி இது தமிழர்க்கு கிடைத்த காவியம்/பொக்கிஷம் /வர பிரசாதாம் ஆகும்.ஏன் கருத்துக்களை எப்படி வேணுமானாலும் புரிந்து கொள்ளும்.என் நோக்கம் ஹிந்து வொற்றுமை மட்டுமே..பூனூல் போடணுமா பொட்டுக்குங்க்கொ நீங்களே வுனர்வீர்கல் அதன் புனிதாம் பிறகு முடிவு செய்வீர் போடலாமா வேணாமா என்று.பெரியார் யார் இந்த ஆள் காட்டி விரல் நடு விரல் இடையே மூக்கு போடி மறைத்து வைத்து வுபயோகித்து போதையில் பேசுவாரே அவரா.நமக்கு சுய அறிவு வுண்டு ஏன் நாஸ்திகன் கூறும் வுபதேசம் திருக்குறள் இருக்க.ஏன் என்றால் அடுத்தவன் சொல்வது இனிப்போ இனிப்பு வும் இனத்தார் கூறுவதை நீரே கேட்க மாட்டீர்.விளக்கம் /வாதம் செய்யும் நடையில் தெரிய வில்லையா உம் சிறந்த குணம்.இந்த நாட்டில் பேரரசர் பட்டம் வழங்க்கும் பொது கூட ஒரு துண்டை பூனுல் மாத்ரி தான் போட்டு பின் தான் பட்டம் சூட்ட படுவார் அங்கே குல்லா தலையில் போடும் போது எங்கே போனது வும்….. .ஆதி மனிதன் /தோசை சுட்ட விசெயம் -நாம் வொற்றுமை பற்றி பேசுவோம் திருக்குறள் பயன் பற்றி பேசுவோம் ஆனால் சிலர் மஹா புத்தி சாலி சொல்வார் தமிழும் திருக்குறளும் ஒன்று திருக்குறள் சொல்லி தமிழில் விளக்க அவசியமில்லை வாதம் செய்ய தேவை இல்லை என்று நாம் இங்கே தட்டி கொடுத்து வேலை வாங்க சொல்றோம் ஆனா இவர்.சந்தர்பம் பார்த்து காரியம் சாதிப்பவன் நான் இல்லை.சபையில் நின்று வாதம் செய்ய தயார் கற்றொரிடம்.சிவன் தென் திசைக்கு வுரியவன் அதேபோல் யமனும் தென் திசைக்கு வுரியவர் இந்தியாவில் தென் திசையில் வாழ்பவர் தமிழர் தென் திசை மயான பூமி இப்படி எவ்ளவோ வுண்டு பெருமை பேச நான் வுண்மையை மட்டும் தான் பேசுவேன்,இங்கே நாம் எழுதுவது கடமையை வுணர்தவே,வும் மனதை புண்படுத்த அல்ல.இந்த பூமியில் திராவிடன் தேவை இல்லை இது இந்தியா அல்ல மலேசிய 5 கோட்பாடு அதில் முதல் கோட்பாடு இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.புலம்பல் தேவை இல்லை நண்பா ஏன் சிறிய மூலைக்கு செம்மை பெற ஏதாவது கொடும்.வுங்கள் கருத்துக்களை யாம் வொருபோதும் வோதுக்கியதில்லை எனக்கு தேவையான வற்றை யெற்று கொண்டு வுள்ளேன்.ஆனால் நீங்கள் தான் யாமை வோதுக்கி வைகுரீர் பரவாயில்லை.சகொதிரர் தானே,வாழ்க நாராயண சமர்ப்பணம்.
அய்யா தேனீ,உழவன்,மாறன்,ஜெகவீரபாண்டியன்,கலை உங்கள் அனைவர்களுக்கும் என் அன்பான வணக்கம்,காயுஅம்மா ஒரு மன வளர்ச்சி குன்றியவர் போல் அவருடைய கருத்துக்களும் வளர்ச்சி குன்றியதாக காணப்படுகின்றது!பூனூலை ப்பற்றி தம்பட்டம் அடிக்கும்,அவரது இனத்து பெண்களை கட்டுப்பாடு என்ற போர்வையில் அடிமை படுத்தி வீட்டுக்குளேயே பூட்டிவைத்திருந்த நிலை மாறி படிதாண்டிய அய்யர் விட்டு பெண்ணை காதலித்து மணம்முடித்து,அழகான{நன்கு வயது}ஆண் குழந்தையை பெற்றவள்,அங்கிருந்தும் படி தாண்டி விட்டார்!பேரரசர் கூட பூனுல் மாதிரி துண்டு அணிந்து பட்டம் வழங்குகிறாராம், சொல்லும் மனநல கிறுக்கன்!
பக்தி வந்தால் புத்தி போகும்…………….. ஒரு காலத்திலே சாதாரண காய்ச்சல் வந்தால் கூட ,பேய் பிடித்து இருக்கிறது என்று அடித்தே கொன்று விடுவார்களம் ….இன்றைக்கு எவ்வளவோ மருந்துகள் ….அதைபோல் பல ஏராளமான பொய் புரட்டுகளுக்கு ………….நீங்கள் உலகத்தில பல பேர் சொன்ன கதைகளை ,,,கருத்துகளை வடிகட்டி இப்போ ஞயம் சொல்லுரிங்க ,,,,,,,,,பிள்ளையை சாப்பிட கேட்டவர்
இன்னும் நிறையா குப்பைகள் ,,,,ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன் நான் தமிழன் ,,,இந்து அல்ல அல்ல அல்ல
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்………..
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்………..
அலையோசை … உங்களின் கருத்துப்படிதான் நானும் கருத்து கொண்டேன். அவ்வாறுதான் மற்ற உடன்பிறப்புகளும்(தேனீ,மாறன்,உழவன்) உங்களைப்போன்று ஒத்த கருத்தினைக் கொண்டிருப்பார்களென நம்புகிறேன். அதனால்தான் அந்தக் காயுவுக்கு பதில் கருத்து எழுதாமல் இருந்துவிட்டேன்.// திருக்குறள் மொழி தமிழைவிட வேறுபட்டிருக்கு.அதை மற்றொருவர் விளக்கி சொன்னால்தான், விளக்க உரை எழுதினால்தான் மற்றவர்க்கே புரியுது.அப்படி இருக்க எப்படி தமிழர்க்குக் கிடைத்த காவியம்,பொக்கிஷம்,வரப்பிரசாதம் ஆகும்?// இப்படி கேள்வி கேட்கும் ஒரு கூமுட்டைய எங்காவது பார்க்க முடியுமா? இந்தமாதிரி அரைவேக்காட்டிற்கெல்லாம் பதில் எழுதினால் அதுக்குத்தான் புரியுமா என்ன!!? திருக்குறள் மொழி தமிழில் இல்லையாம் , வேறு ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்டுள்ளதாம், அதை ஒருவர் தமிழில் விளக்கினால்தான் புரிந்துகொள்ள முடியுமாம்.அதனால் ,அப்படி இருப்பதனால் , அதை இவர் சிறந்த நூலாக ஒப்புக்கொள்ள மாட்டாராம். ஐம்பெரும் காப்பியங்கள் தமிழில் உண்டு. அவற்றை காவியம் என்பார்கள். .திருக்குறள் அறநூல். தமிழனின் அறக்குறள்,மறக்குறள்,புறக்குறள்,அகக்குறள் அதனால் அது தமிழினத்தின் மானம் காத்து நிற்கும் திருக்குறள். இது தமிழர்களின் சொத்து. காயீ… இது உனக்குப் புரியாது பொத்து!
காயு அவா்களுக்கு, தங்களின் முதல் கேள்விக்கு , தங்களுக்கும், எனது இன மக்கள் அன்பார்ந்த வாசகர்களுக்காகவும், அறிவும், அறிவியல் ரீதியாகவும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் வேலை பளுவும், உடல் நலமும் சிறிது இடையுறு செய்கின்றன. பதில் வர 2-3 நாட்கள் ஆகலாம். அதுவரை பொருத்தருள்வும். அவசரபட்டு சைதான் வேதம் ஓதுது என்று சொல்லி விடாதிர்கள்.அதற்குள் முடிந்தால் எனது கேள்விகளுக்கு பதில் தேடி, விடை எழுதுங்களேன். வாசகர்களுக்கும் எனக்கும் நன்மையளிக்கும்.( வரும் வழிகளில் உங்களுடைய காலடி தடமும் பதிந்திருக்க வேண்டுமே?)
திருக்குறளுக்கு விளக்க உரை எழுதினால் தான் புரியுது யாருக்கு ஆரியனுக்கு,தம்-மிழ் தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலிஇது தமிழனுக்கே உரித்தானது,திருக்குறலில் பிற்க்காலத்தில் ஆரியன் சம்ஸ்கிருத சொற்களை புகுத்திவிடாமல் பாதுகாப்பதே விளக்க உரை!ஒரு இசையமைப்பாளர்1330ஒவுவொரு குறளுக்கும் ஒவுவொரு இசையமைத்து பெருமைபடுத்தியுள்ளார்! திருக்குறளுக்கு விளக்க உரை காயு அம்மா போன்றவர்கள் தமிழ் மொழியை தெளிவாக,எழுத,படிக்க தேரியாதவர்களுக்கானது திருக்குறளில் ஆரியன் சம்ஸ்கிருத வார்த்தைகளை புகுத்தி விடாமல் பாது காத்துள்ளார்கள் தமிழர்கள் !
வாய் சொல் வீரர்களே ஏன் பிராமண பெண்ணை மணக்கணும் யுண் இனத்தில் நல்ல பெண் யாரும் இல்லையோ.ஜாதி விட்டு ஜாதி தாவும் குரங்கினமே,எம் ஜாதி அடங்கி இருகின்றனர் பிறரை போல் (தைபுச திருவிழாவில் பார்தீர ஆட்டம் கொண்டாட்டம் நல்ல வுதாரணம் ).நீரெல்லாம் வந்துட்டீர் சபையில் பேச.பெய்பிடிதால் பட்டாசரியரை யாரும் தேடி வருவதில்லை வும் சிவாச்சாரியரை தான் தேடி போறாங்கோ புரிந்து பேசும் சிலரே.அடாவடி வீரரே எழுத்து நாகரீகம் தெரியாதவரே ஒரு தமிழர் கல்வி துணை அமைச்சரை ,சாதாரண ஆசரியர் புரட்டி எடுத்தானே,நீரெல்லாம் அப்போது எதை மூடிட்டு இருந்தீர்.இவரெல்லாம் ஹிந்து இல்லையாம் ஆனால் ஹிந்து தெய்வத்தை வணங்குவார்களாம்.தெருவிலே /கொச்சை படுத்துவார்களாம்.வேதம் சாஸ்திரம் பொய்யாம் அப்படின்னா பிறப்பு பத்திரமும் பொய்யே,வேத இதிகாசங்களை நம்பனும் விமர்சிக்க கூடாது,அப்படியே விமர்சிக்கனும்னா அவரவர் பிறப்பு பத்திரத்தை அலசி ஆராயவும்.முல்லை முல்லால்தான் எடுக்கணும் சிலரிடம் இப்படிதான் பேசவேண்டி இருக்கு.திருக்குறள் தெரிந்தவர் மக்களுக்கு எளிமையான விததில் விளக்கி கூரும்,திருக்குறள் கற்றவர் /வுணர்ந்தவர் வுலகில் மிக சிறந்தவர் அவர்க்கு இணையாக வுலகில் எவரும் கிடையாது,கேள்விக்கு சந்தேக படுவது என் வுரிமை புரியும் படி விளக்கம் தருவது கற்றொர் /காவலர் கடமை,அதை விட்டு தேவை இல்லாமல் (நிறை குடம் தளும்பாது )எகுறி குதிக்காதே.
காயீ எனும் பைத்தியத்திற்கு வெறி பிடித்துவிட்டத்து ; பேய் பிடித்துவிட்டது. சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பிதற்றுது. இந்த பித்துக்குளிக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்போல் இருக்கிறது. ஐம் வெரி சாரி!
உன் இனத்து பெண் என் இனத்து ஆணை விரும்பி வந்து மேலே விழுந்தால் இழுத்து போடுவது ஆண்மை !உன் ஜாதி அடங்கி இருக்கா பெட்டியில் போட்டு பூட்டி அடிமை படுத்தி வைத்திருக்காமல் வெளிலே விட்டுப்பார்! சந்தி சிரிக்கும் பெரியார் மூக்கு பொடி போட்டு போதையில் இருக்கும்போது பிராமண பெண் மணியம்மை இரண்டாம் தாரமாக என் பெரியாரை மணந்தார்!நீர் விளக்கம் பெற இங்கு யாரும் கிளாசு நடத்த வில்லை!உன் பிறப்பு பத்திரத்தை நீயே சொதித்துகோ!
உண்மை தன் காயுக்கு பைத்தியம் முத்தி போச்சி,விலகி இருப்பதே மேல்!
அன்பான செம்பருத்தி வாசகர்களே. இங்கே காயு என்பவர் என்னை மகா புத்திசாலி, நாடக கபததாரி என்று வர்ணித்தார். அப்படி பட்ட என்னத்துடன் நான் இங்கே உள்ளே நுழையவும் இல்லை, எனக்கு அந்த குணமும் இல்லை. நான் எழுதிய எழுத்துக்களில் இலக்கன பிழைகளும் எழுத்து பிழைகளும் நிறையவே உள்ளது. நானும் அறிவேன். எனக்கு தெரிந்த வற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணமே உள்ளது. ஆணவம் பிடித்த இந்த அடங்காபிடாரியை, கேள்வி கேட்டு, பதில் சொல்லி ஆணவத்தை அடக்கி அன்பான முறையில் நம்மில் ஒருவராக அரவணைத்துக்கொள்ளும் என்னமே. இருந்தது. அதனால்தான் இவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் எழுதினேன். அந்த பதில்கள் நம்மவர்களும் பயன் படட்டுமே என்ற என்னமே இருந்தது. ஆனால் இவரோ நம்முடன் கலந்துரையாடுவதில் இவர் உயர்ந்து கொண்டு போவது போலவும், நாம் தாழ்ந்து கொண்டு போவது போலவும் எண்ணம் கொண்டுள்ளார். எழுத்து நடையும் ரொம்பவும் கீழ்மையாக இருக்கிறது. இனியும் தொடர்பு வைத்துக்கொள்வது நல்லதல்ல என்று முடித்துக்கொள்கிறேன்.
ஆனால் அவரோ பதில் தெரியாமல் நான் ஓடுவதாக தம்பட்டம் அடித்துக்கொள்வார். முழுமை பெறாத, சிறுக2 எழுதி வைத்ததை அவருக்காக வெளியிடுகிறேன். முதலில் உங்கள் பெயரை முழுமை படுத்துங்கள். என் மனதினுள் ஒரு உருவகம் கொடுக்க முடியவில்லை. காரணம் பெயர் முழுமை பெறாமல் மொட்டையாகவும், அந்த வார்தையின் அர்த்தம் தெரியாமல் சொட்டையாகவும் இருக்கு. தாங்கள் கேட்ட முதல் கேள்வி முருகன் எப்படி தமிழ் கடவுள். இதற்கு இரண்டு வகைகளில் பதில் கொடுக்கலாம். 1. சமயத்தில் புலமை பெற்ற தமிழறிஞர்கள் வழியிலும் பதில் கொடுக்கலாம். 2. வரலாறு ரீதியாக அறிவியல் மூலமாகவும் பதில் கொடுக்கலாம். முன்னது என்னால் முடியாது. பின்னது என் அறிவிற்கு எட்டிய வரை முயற்ச்சிக்கிறேன். தெளிவடைந்தாலும், குழப்பமடைந்தாலும் பதில் கூற மறவாதிர்கள். ஆதி மனிதன் 6வது அறிவான சிந்தனை தோன்ற ஆரம்பித்தவுடன், கருத்து பறிமாற ஓசை மொழி இல்லாததால், அவன் பொருட்களை நாடினான். அதை சைகை மொழியென்றும் கூறுவர். மற்ற ஜீவ ராசிகளுக்கும் மனிதனுக்கும் மிகப் பெரும் வித்தியாசமான 6வது அறிவு இருப்பதை உணர்ந்த அவன் மற்றவர்களுக்கு உணர்த்தவும், அதனை பதப்படுத்தி மனிதனாக வாழவும். மென்மேலும் பதப்படுத்தி மனிதன் புனிதனாக உயர்வதற்கும் கருத்துக்களை பரிமாற பொருட்களை கையாண்டனர்.
நான் பார்த்தா பைதியகாரன் வும் பாட்டனுக்கும் வைதியம் பார்ப்பேன்,அடக்கம் பிறவியில் வரணும்,வும் இனத்தில் நல்ல பெண் இல்லையோ,யார் கிடைச்சாலும் குடும்பம் நடத்துவாரோ வுங்க ஆள்,தள எப்படியோ எடுபுடி அப்படியே பெண்கள் ஜாக்ரதை சில கூட்டம் பெண் செக்ஸ் பொம்மை நினைத்து அலையுது.தை பூசதில் பார்த்தேன் சுதந்திரத்தை நீர் பார்தீரா திருப்தியா.இதெல்லாம் அவர்கள் தப்பில்லை வும்மை போன்றோர் தப்பு,கொஞ்ச காலத்துக்கு கஷ்டமா இருக்கும் போக2 அதுவா பழகிரும்.வெட்டியா வுன் கிட்டே பேசி ஒரு ப்ரொஜனமும் இல்லே.நண்பா வுலவரெ ஏன் இன்று மூட் அவுட்டா,எனக்கு நல்ல பெயர் தந்துட்டீர் நன்றி நண்பா அடங்கா பிடாரி வொகே2.ஒரே கட்டுரையில் பலர்க்கு பதில் எழுதினேன் ஆனால் வும்மை பற்றி யாம் எந்த வாசகமும் நீர் நினைத்தது போல் எதுவும் நான் எழுத வில்லை எது எப்படியோ மன்னிக்கவும்.மனதை புன்படுதியிருண்டால்.முதலில் தமிழர் ஆச்டீகனா /நாஸ்திகனா,யாரும் வோதுக்க பட்டவர் இல்லே நண்பா,பட்டா சாரியார் /சிவாச்சாரியார் கலந்ததே 1 முழுமையான இந்து மதம்.ஒரு சிலர் தான் விமர்சிப்பார் பலர் யெற்று கொள்வர்.10 மலைக்கு போகாதே வுண்டியலில் பணம் போடாதே சொன்னார்கள் நடந்ததா.ஆகாயத்தை பார்த்து நடப்பதை விட பூமியை பார்த்து நடந்தால் நன்று.நான் அதி மஹா புத்தி சாலியும் அல்ல அதே வேலை மஹா கர்வியும் அல்ல சாதாரண மனிதன்,நல்லவர் கோபம் வேண்டாம் எமக்கு.யார் எம்மை யெற்றாலொ மறுத்தாலோ எனக்கு கவலை இல்லே,வாசகர்களுக்கு புரிந்து ஆண்டவர் வழியில் அனைவரும் வோன்றாய் இணைவோம்.வாழ்வோம்.நாராயணா சமர்ப்பணம்.
kayee! எனக்கும் விவாதம் செய்ய விருப்பமில்லை,இருந்தாலும் என் கேள்வி இதுதான்:யார் நாகரிகம் முதலில் தோன்றியது;தமிழரா அல்லது ஆரியரா?
முருகப் பெருமான் தமிழ் கடவுள் சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர் ,பழமைக்கும் பழமையாய் புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான் , முருகு என்ற சொல்லில் மு – மெல்லினம் ரு -இடையினம் கு வல்லினம் எனவே தமிழே முருகன் முருகனே தமிழ் என்பார்கள் , முருகன் ஓம் என்னும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான் பிரணவம் என்றால் சிறந்த புதிய ஆற்றலைத் தருவது என்று பொருள் முருகன் தன்னை நாடி தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான் தந்தைக்கு ஓம் என்னும் பிரணவ பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு ,ஓம் என்பது அ உ ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது அ படைத்தல் உ காத்தல் ம ஒடுக்கல் என் முறையே பொருள்படும் அ உ ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ உ ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள் முருகனுக்குப் படை வீடு ஆறு அவை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ,பழனி ,சுவாமிமலை ,பழமுதிர் சோலை ,திருத்தணி ஆகும் ,முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும் மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது தெய்வயானை ,கிரியா சக்தியாகவும் ,வள்ளி இச்சா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும் , மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள் ,பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும் முருகன் அருள் வேண்டி பக்தர்கள் பலவித விரதங்கள் இருந்தாலும் அதில் முதன்மையாக சஷ்டி விரதம் உள்ளது திருசெந்தூரில் சூரனுடன் முருகன் ஆறு நாட்கள் சண்டையிட்டபோது அவரது அன்பர்கள் விரதம் இருந்து தியானித்தனர் அன்று தொடங்கிய இந்த பாரம்பரிய சக்திமிகு விரதத்தை இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடை பிடிக்கிறார்கள் திருச்செந்தூர் கந்த தலத்தில் சஷ்டி விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் வேலை வணங்குவதே வேலை என்று முருகனுடன் மனம் ஒன்றுபவர்கள் முருகன் நிச்சயம் ஆட்கொள்வார் , ஆன்மீக கருத்தை எடுத்துயிட்டோம் ஆக்கத்திற்கு மட்டுமே விவாதத்திற்கு அல்ல ,அனைத்தும் சமமாக கருதுவோம் தழைக்கட்டும் கருத்துசுடர் ,வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் .
சகோதரர்களே! விவாதம் தலைப்பைவிட்டு திசைமாரி செல்கிறது. தைப்பூச விழாவின்போது பத்துமலை தகவல் மையத்தை என் பொருப்பில் விட்டுப்பாருங்கள்,இந்த அடாவடித்தனம் புரியும் அறிவிலிகளுக்கும்,கோமாளி கூட்டங்களுக்கும் நல்லாபாடம் கற்பிக்கிறேன்
தமிழ் இன மக்களே,எப்படி மலாய் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறோமோ அப்படியே திருக்குறளையும் சேர்த்து கொள்ளும்.ஆகாமா ஹிந்து பங்கச தமிழ் என்று யெற்று கொள்ள மறுக்கும் சிலர் சுயநல காரர்கள்.மக்களை தன் கட்டு பாடிலெ வைத்து கொள்வர்.வுதாரணம் நிறைய வர்க மாஸ் 60 வயதை தாண்டியவர்கள்,வுசிய மாஸ் பாரங்களை பதிந்து 2 வருடங்கள் ஆச்சு 63 வயதில் இறைவனடி சேந்துட்டார்.இறப்பு நிதி கோரும்போது அதிகாரி கேட்கிறார் பதிந்து விட்டீரா,நம் தலைவரை சென்று கேட்டோம்,இன்னும் பதிய வில்லையாம் நேரம், இல்லையாம்.அவர் நேரே வந்து வாதாடி பெற்று தருகிறாராம் சுயமாக சென்றால் கிடைக்காதாம். ஆனால் இறப்பு நிதி கிடைத்துவிட்டது எனபது தலைவருக்கு தெரியாது.இப்படி நிறைய பேர் தமிழரை யெமாற்றி திரியுது கவனம்.சிலபேற்கு லெப்ட் ரைட் விட்டாதான் வேலை செயராங்க்கோ.எவ்ளோ செலவு பண்றோம் வீடுக்கு 1 திருக்குறள் நூல் அவசியம் வாங்கி படிங்கோ இதில் ஒரு சிக்கல் நிறைய பேர் வாங்கினா வுடனே விலை எகிறிடும் நம் ஆள் கடையில்.படித்த ஆன் பெண் வார வெள்ளி /செவ்வாய் சாரி வுடுத்தி ஆலயம் சென்று தெய்வ தரிசனம் செய்கின்றனர் பார்க்கவே வியப்பாக வுள்ளது.சாஷ்டாங்க நமஸ்காரம் வாழ்க நம்மக்கள்.அவர்கள் முகம் பிரகாசமாய் இருக்கு கொட் மலை பிள்ளையார்,கே எள் மஹா மாரியம்மன் கோயில் அங்கே என்ன தெய்வீக சூழல்.தெய்வீக மனம்.நாரதர் கழகம் நன்மையில் முடியும்,நாராயண சமர்ப்பணம்.
சிலர் சொல்றது இருக்கட்டும்! நீங்க என்ன சொல்றிங்க? யார் நாகாரிகம் முதலில் தோன்றியது நாரதரே? தமிழரா? ஆரியரா?
மாறன் அவர்களே, யார் முதலில் என்ற ஒரு பெரிய கேள்வியை கேட்டு விட்டீர். இதற்கு வரலாற்று ஆய்வு வல்லுனர்களும், ஆதாரம் இல்லாமல் பதில் தர சிரம படுகின்றனர். ஆழிப்பேரலையில் அழிந்து விட்ட குமரிக்கண்ட ஆதாரங்களும் கை கொடுக்கவில்லை. தாங்கள் தான் முதலில் என்று இருவருமே வாதாடுகின்றனர். அது மனிதனின் இயற்கை குணம். நடு நிலையில் இருக்கும் நாம் தான் இரு பக்க சாரார்களின் பதிலை உள் வாங்கி, அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டும். நம் நாட்டு கவிக்குயில் களியபெருமாள் எழுதிய நீத்தார் கடன் நெறிமுறைகள், என்ற புத்தகத்தில், ஆதி தமிழர் இறந்தவருக்கு செய்யும் சடங்குகள் அதற்கான விளக்கங்கள் எழிய தமிழில் எழுதியிருக்கின்றார். நமக்கு யார் முதலில் என்ற கேள்விக்கு அங்கிருந்தும் சிறிய துப்பு கிடைக்கலாம். எனக்கு அறிந்ததை எழுதி பதியேற்றுவதில் எனக்கு சிரமமாய் இருக்கிறது. அருகிலிருந்தால் மணிக்கணக்கில் கலந்துரையாடி விளாவாரியாக புரிய வைப்பேன். நான் இருப்பது வெள்ளி மாநிலத்தில். நாம் சிறப்பாய் வாழ்ந்து உளவியல் ரீதியாக சீரழிந்து போனது எப்படி என்றும் புரிய வைப்பேன். இருந்தாலும் ஒரு சிறிய கட்டுரை வரைந்து கொண்டிருக்கிறேன். தங்களுக்காகவும் நம் இன மக்களுக்காகவும்.
மாறன் அவர்களே,தமிழ் /ஆரியம்,இரண்டும் ஹிந்துவே சகோதரா,சுதப்புகிரென் என்று எண்ணினால் யாம் விழுந்தால் நீர் எழவேண்டும் ஆதலால் சகோதரரே தமிழ் நாகரீகம் முதலில் தோன்றியது.வுதயகுமார் சார் வுங்கள் புராண நம்பிக்கை மேலும் வளரனும்,வாழ்த்துக்கள் ஆனால் ஒன்று 10 மலையிலும் முருகர் இருக்கார்.தொல்லைகள் தாங்க முடியவில்லை என்று வரும்போது முருகர் வேல் பூஜை செய்து பாருங்கள்,முருகர் ருத்ர கோபம் கொண்டு எதிரியை ம காரத்தை அழிப்பார் பின் வு காரம் கொண்டு காப்பார்.வும் செய்யுள்.திரு.பரமசிவம் சார்.ஏதோ ஒரு சமுகம் நம்மை திசை திருப்ப சிந்தனையை அவர் பக்கம் திருப்பும் ஆனால் நாம் பெரியோர் காட்டிய வழி நம்மை நம்பியவர் தொடர்ந்து நல்வழியில் செல்ல நாம் முதல் வுதாரனமாக துணையாக நிட்பொம்/நடப்போம்.நாம் அற வழி நடப்போம் முருகர் கை வேல் காக்கும் நல்லவரை.நம்மில் வொற்றுமை குறைவை பிறர் சந்தர்பவாதிகள் நம் கையை கொண்டு நம் கண்ணை குத்துகின்றனர் என்று விழிகிரொமொ அன்று நிட்பார் எதிரில் எவருமில்லை.
நன்றி உழவன் சார்,kaayee;மிக்க நன்றி! எல்லாம் சிவமயம்!
யார் இந்த kayee ? தயவுசெய்து பகுத்தறிவுடன் பேசவேண்டுகிறேன். நம்மில் அனாவசிய வாக்குவாதம் தேவை இல்லை. நாம் தமிழர் -தமிழ் நம் தாய் மொழி – திருக்குறள் யாவருக்கும் உகந்தது. இதில் கருத்து வேற்றுமைக்கே இடமில்லை. தயவு செய்து பெருந்தன்மையுடன் யாவரும் நடந்து கொள்ளவும். நம்மவர்களில் பலர் பெருந்தன்மையில்லாமல் மரியாதை இல்லாமலும் நடக்கின்றனர். என்னை பொறுத்த மட்டில் நாம் யாவரும் உடன் பிறப்புகள்— இதை என் மனதார சொல்கின்றேன். இதுநாள் வரை நாம் ஒற்றுமை இல்லாமல் இருந்தது போதும். உயர்வு தாழ்வு என்பதே மிகவும் கீழ்த்தரமான எண்ணங்கள். தாழ்வானவர்கள் மற்றவர்களை கெடுத்து அதனால் பலன் பெறுபவர்கள்
அன்பான செம்பருத்தி வாசகர்களே கட்டுரையை தொடர்வோம். முருகன் தமிழ் கடவுளா? என்ஆய்வுக்கு உட்பட்டவரை முருகன் மட்டுமல்ல மாரியம்மனும் தமிழ் கடவுளே. கடலில் மூழ்கி போன குமரிக்கண்டத்தில் வாழந்த ஆதிமனிதர்கள் (தமிழர்கள்) சிந்திக்க ஆரம்பித்தவுடன் இந்த அண்டத்தையும் உயிரிணங்களையும் உண்டாக்கிய மூலப்பொருளை தேடியலைந்தனர். அப்போதைய அவர்களின் அறிவுக்கண்களுக்கு சூரியன் மூலமாக இயற்கையின் வழி (மனித அறிவுக்கு எட்டாத ஒரு சக்தி) உருவானதாக எடுத்துக் கொண்டனர். அன்றைய பொங்கல் பண்டிகையில் வினாயகருக்கு மஞ்சள் பிடித்து வைப்பதோ, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பதோ கிடையாது. மொத்தத்தில் கடவுள் சிலையே கிடையாது. அடுத்ததை தேடி அலைந்தனர். வட்டத்தின் சுழற்ச்சியில் ஒன்றை ஒன்று உணவுக்காக அடித்து கொன்று தின்னும் போழுது இயற்கையின் நியாயப்படி உயிரிணங்கள் குறைந்து அழிந்துதானே போகவேண்டும்.! ஆனால் இங்கு நடப்பதோ எதிர்மறையான உயிரிணங்கள் பெருகிக்கொண்டல்வா வருகிறது. இதற்கான சூட்சமத்தை ஆராய்ந்தனர். பெண்ணினத்திற்கு (மிருகங்கள் உட்பட) மட்டுமே உள்ள தாய்மையின் குணத்தை அறிந்து பெண்ணினத்திற்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தை அளித்தனர். அதன் தாக்கத்தை எந்த புஜையானாலும் காமாட்சி (பெண்பால்) விளக்கிள்ளாமல் நடைபெறாது. சாமி சிலைகளில் பெண் தெய்வங்கள் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நதிகளுக்கு பெண் பெயர் வைத்தனர். கங்கை, காவேரி, யமுனை எல்லாம் பெண் பெயர்கள். மழை இல்லாவிட்டால் தண்ணீர் கிடையாது, தண்ணீர் இல்லா விட்டால் செடி கொடி வளராது. சைவ உணவு மிருகங்கள் இருக்காது. ஈ, புச்சி, குருவி, குரங்கு இருக்காது. மகரந்த சேர்கையும் இருக்காது, மொத்தத்தில் இந்த உலகமே ஒரு மயான காடு. இன்று உலகில் ஆண்களின் கண்களுக்கு காம பொருளாகிவிட்ட பெண்களை, ஓர் உயர்ந்த அந்தஸ்து கொடுத்து அவர்களை மரியாதையாக முதன் முதலில் பார்த்த இனம் தமிழினமே. அதன் தாக்கத்தை இன்றும் பேச்சு வழக்கில் காணலாம். தாய் மொழி, தாய் வீடு, பாரத தேசம், 80 வயது முதியவர் 8 வயது கொண்ட பேரனும், பேத்தியும் திடலில் விளையாடி விட்டு சூரியன் மங்கிய பிறகு தாமதமாக வீடு வருபவர்களை அன்புடன் கடிந்து கொள்வார். பின் வரும் வசனங்களை பாருங்கள். ஏன்டா, மணி என்ன? ஏன் இவ்வளவு நேரம்?. என்று ட போட்டு பேசுவார். அதே தன் பேத்தியை ஏம்மா இவ்வளவு நேரம், இப்ப மணி என்னா? என்று மரியாதையாக பேசுவார். அப்படி மரியாதையாக பேசாதவரை நாம் மரியாதை கண்களோடு பார்ப்பதில்லை. அடுத்ததாக ஆணும், பெண்னும் காம இச்சைக்கு அடி பனிந்து, இணைந்து ஓர் புதிய உயிரிணத்தை இந்த மண்னில் தவழ விடும் போது, அதற்கு விவரம் தெரியும் வரை. ஆழாக்க வேண்டிய பொறுப்பை தானே முன் வந்து ஏற்றுக் கொள்கிறாள். பிறந்த அந்த உயிரிணம் அங்க வீணமாகவோ, வித்தியாசமாகவோ இருந்தாலும், நாமக்கு ஏற்பல்ல அதை அழித்து விடுவோம், என்று கணவரே சொன்னாலும், அந்த உயிருக்கு மற்றவர்களிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் போதும், சாந்தமாய் இருந்த அந்த பெண், சிங்கம் போல் வீறு கொண்டு எழுந்து தன் உயிரே போனாலும் பரவாய் இல்லை என்று அந்த சிசுவை காப்பாற்ற முற்படுவாள். இந்த இயற்கை குணம் பெண் இணத்திற்கு மட்டுமே உள்ளது. தாய்மையின் குணத்தால் வந்த இரக்க குணமே அவர்களுக்கு எதிரியானது. இந்த கிராமத்து, வழக்கிள் உள்ள பழமொழியை கவனியுங்கள். ” ஆம்பிள பாவம் பார்த்த கடன்காரனாயிடுவான், பொம்பள பாவம் பார்த்த புள்ளதாச்சியாகிடுவாள்.” இந்த இரக்க குணத்தினால்தான், வெளியில் செல்லும் பெண்கள் எங்கே தன் வாழ்கையை தொலைத்துவிடுவார்களோ என்று, அவர்களை வெளியில் விடாமல் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். அவர்களும் தன் நிலையுனர்ந்து ஆண்களின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்தனர். அந்த தாய்மை குணம், டைனோசர் காலத்திலிருந்து வருவதை குறிப்பதற்காக அம்மன் டைனோசர் சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பார். அம்மன் கோவில் மண்டபங்களில் இன்றைய கால சிங்கங்களும், அன்றைய கால சிங்கங்களும், இன்றைய கால யானை , அன்றைய கால யானை சிற்ப்பங்கள் இருப்பது இதை உணர்த்தவே. மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தனர். ஆறாவது அறிவான சிந்தனை என்ற மனம் ஒன்று இருப்பதால் அதனை எப்படி கையாள வேண்டும் என்று அன்றைய காலகட்டத்தில் மொழி வளராத காலத்தில் கருத்துக்களை பறிமாறிகொள்ள ஓவியங்கள்,பொருள்கள், சிலைகள் பயன்பட்டன. உதாரணம் கல்யாணத்தின் போது அம்மிக்கல்லும் குழவிக்கல்லும் இருப்பது வாழ்க்கை என்ற பயணத்தில் ஊடலும், கூடலும் (இன்பம் துன்பம்) கலந்தே வரும் அதனை எதிர் கொள்ள உறுதியான மனம் வேண்டும் என்று எடுத்துக் காட்டவே. ஆனால் இன்றைய நிலை காலில் மிஞ்சி அணிய குழவிக் கல் மட்டும் போதும். சரி தொடர்வோம். இன்றும் வழக்கத்தில் உள்ள சில சொற்றொடர்களை ஆராய்வோம் முருகன் தழிழ் கடவுள். முருகு என்றால் அழகு. சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?. இந்த சொற்றொடர் அறிவின் திறமையை குறிக்கின்றது அதாவது புத்தி கூர்மை. அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா. இங்கேயும் அதே புத்தி கூர்மையை குறிக்கின்றது. மலையில் முருகன் ஆண்டியாய் நின்றான். ஆண்டி என்ற வார்த்தை பிச்சக்காரரை குறிக்கும். ஒன்றும் இல்லாதவர். ஒரு சொத்து பத்து இல்லாதவர். மொத்தத்தில் அங்கு ஒன்றுமே இல்லாத காலியான இடம். ஆரம்பத்தில் முருகன் குழந்தை வடிவம். இன்றும் முருகன் சிலையில் காணப்படுபவை ”வேல், மயில் சேவல், கருநாகம். முருகன் குழந்தை வடிவம்”. இதன் தன்மைகளை ஒவ்வொன்றாக அலசி ஆராய்வோம். ஆதி மனிதர்கள் மிருகங்களை வேட்டையாட பயன் படுத்திய மூன்று ஆயுதங்கள், 1-கல்லினால் செதுக்கப்பட்ட கத்தி, 2- ஒரு தடியில் (கம்பு) ஒரு முனையில் கல்லை கட்டி சுத்தியலாக பாவித்தது, 3- ஒரு தடியில் ஒரு முனையில் கூர்மையாக தீட்டி ஈட்டியாக பாவித்தது. இன்றும் நடைமுறையில் உள்ள வார்த்தை ” ஏன்டா நான் என்ன சொன்னாலும் உன் மண்டையில் ஒரு எழவும் ஏறமாட்டேங்குதே, உம் புத்தி என்ன மழுங்கி போச்சா”? மழுங்கி எதிர்பதம் கூர்மை. (புத்தி கூர்மை) அந்த ஈட்டிதான் இன்று வேலாக மாற்றப்பட்டு விட்டது. ஆள்தான் வளர்ந்திருக்கியோ தவிர புத்தி வளரலியே? பாலகன் வடிவில் முருகன், பாடல் பட்டக்கோட்டை ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி. பாலகனாக காட்சி தருவதை மேல் காணும் வாக்கியத்துடன் ஒப்பிடலாம். சேவல் உலகம் விடிவதற்கு முன்பாக முந்திக்கொண்டு கூவுவது. உனது அறிவும் சிந்தைனையும், எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்னும், மூடனாக செயல் படாமல் அறிவுக்கு வேலை கொடுத்து புத்திசாலியாக செயல்படனும். மயில் அதன் தோகை விரித்தாடும் போழுது, அழகே ஒரு அழகு, எல்லோரும் விரும்புவர். மக்கள் எல்லோரும் அசிங்கத்தை விட, அழங்கோலத்தை விட, அழகையே விரும்புவர். அறிவுப்புர்வடுன் செய்யும் எந்த ஒரு செயலும் மக்கள் மெச்சும் படி, விரும்பும்படி இருக்க வேண்டும். கருநாகம், பாம்பு என்றாலே மக்கள் ஒதுங்குவர். அதிலும் விசம் கொண்ட கருநாகம் என்றால், ஒன்று ஒதுங்கி விடுவர் அல்லது அதனை அழித்துவிடுவர். உனது அறிவால் தீய செயலை ஒடுக்கிவிடு அல்லது அழித்து விடு. மக்களால் போற்றப்படுவாய் அல்லது விரும்பப் படுவாய். மற்ற கடவுள்களை விட உயரத்தில் இருப்பது. உனது அறிவைக் கொண்டு செயல் படும் எந்த ஒரு செயலும், மற்றவர் மெச்சும் படி (உயர்ந்தவர், மேன்மையானவர்) இருக்க வேண்டும். ஆண்டி, ஒன்றுமில்லாதவன். பிறந்த எந்த ஒரு குழந்தைக்கும், அறிவு என்று சொல்லக்கூடிய மூளையில், எந்த ஒரு செயலோ, சிந்தனையோ இருக்காது. காலியாகவே இருக்கும். அதுவே ஆண்டி என்று உருமாறிற்று. அன்றைய தமிழர்கள் கண்னுக்கு தெரியாத இறை சக்திக்கு முதன்மை அழிப்பதை விட, கண்னுக்கு தெரிந்த அறிவு சிந்தனைக்கே முதன்மை அழித்தனர். அதனால்தான் அவர்களால் பல கண்டுபிடிபு்புகளை கண்டு பிடிக்க முடிந்தது. இன்றும் தென்நாட்டில் அந்த நாள் தொட்டு, பழமையான, அதிகமான அம்மன் கோவில்களும், முருகன் கோவில்களுமே இருக்கும். வாசகர்களே, முருகன் எப்படி தமிழ் கடவுள், யார் முதல் நாகரீகம் என்று இப்போழுது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அன்பான செம்பருத்தி வாசகர்களே குறை நிறைகளை சுட்டிக்காட்டுங்கள் அப்போழுதுதான் நான் என்னையே திருத்தக் கொள்ள முடியும். அல்லது உற்சாகமாக மற்றதை எழுத முடியும். தாங்கள் அழிக்கும் ஆதரவை வைத்தே, பெண்களுக்கு தாலி வந்த விதம். விதவை ஆன பெண்களுக்கு புவும் பொட்டும் எடுக்க சொல்லும் காரணம். நழுங்கு, சடங்கு, எந்த கோயிலாயிருந்தாலும் வினாயகருக்குதான் முதல் புஜை அதன் காரணம், தென்நாட்டுடனே சிவனே போற்றி, அப்படி என்றால் வட நாட்டுக்கு ஒரு சிவனா? இன்னும் நிறைய விசயங்கள் உள்ளன. உங்கள் ஆதரவே எனக்கு உற்சாகம். மௌனம் காத்தது போதும். மௌனம் காத்து மௌனம் காத்து இழந்தது போதும். நமக்கிருந்த கடைசி ஈழ மண்ணையும் இழந்து விட்டோம். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று நாம் கடலில் விழ வேண்டியதுதான் பாக்கி.
அன்பான உழவரே, தங்கள் கருத்தைப் படித்தேன். புரிந்துக்கொண்டேன். இந்திய தென்னாட்டில் குறிஞ்சி நில மக்கள் முருகனை தமது தெய்வமாக வழிபட்டு வாழ்ந்தனர் என்பது சங்க இலக்கிய வரலாறு. பின்னாளில் பாரதம் மொழி மற்றும் இன அடிப்படையைக் கொண்டு மாநில வாரியாக பிரித்ததின் விளைவு கன்னடத்தவர், மலையாளி, தெலுங்கர், தமிழர் என்று வந்தாச்சு. இந்தியாவில், இவர்கள் தம்மை வெவ்வேறு இனமாகவே நினைத்துக் கொண்டே வாழ்கின்றனர். ஏதோ, இந்தியா என்று ஒரு பெரிய வட்டத்துக்குள் வரும்போது மட்டும் தம்மை இந்தியர் என்று கூறிக் கொள்கின்றனர். இங்கோ, வந்த நாள் முதல் இந்த நாள் வரை நாம் மாறாமல் இந்தியர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தோம். ஆனால், தெலுங்கரும், மலையாளிகளும் என்று தம்மை வேற்றுமைப் படுத்தி நினைத்து செயல்பட ஆரம்பித்தார்களோ அன்றே தமிழனும் விழித்துக் கொண்டான். அதன் விளைவுதான் இன்று முருகன் தமிழர் தெய்வம் என்று பேர் கொண்டான். தொடரும்.
இதற்க்கு முன்னர் மங்கை கேட்ட கேள்விக்கு யாம் பதில் அளிக்காமல் மௌனம் சாதித்தது வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதனால்தான் என்று அறியவும். தமிழ்நாட்டில், சென்னையில் வாழும் இந்தியர்களில் இன்றும் 50% -க்கு குறையாத மக்கள் ஆந்திர பிரதேச மக்களே. அவர்கள் தமிழர்களோடு கலந்து ஒன்றாகி இன்று பல்லோர் தமிழர்களாகவே வாழ்கின்றனர். அவர்களிடம் முருகன் தமிழர் கடவுள் என்றால் சிரிப்பார்கள். காரணம் அவர்களால் அவ்வாறு பிரித்துப் பார்க்க இயலாத வகையில் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டார்கள். ஆனால், இந்தியாவில் வேறு மாநிலங்களில் வாழும் தமிழரல்லாதோர், முருகனை அறிந்திருப்பதே குதிரைக்கொம்பாக இருக்கின்றது. அவர்களுக்கு முருகனின் அருமையும் பெருமையும் புரியவில்லை. மங்கையும் இதேப் பாடலைத்தான் வேற்றொரு பகுதில் முன்பு பாடியிருந்தார். மலையாளிகள் முருகனுக்கு காவடி எடுப்பதில்லை, தெலுங்கர்களோ அறியாமல் தைபூசத்திற்கு பால் குடம் ஏந்துகின்றனர் என்று உளறி இருந்தார். ஆதாலால்தான், முருகன் தமிழர் கடவுளா என்று மங்கை கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை என்று எச்சரித்தேன். இன்று வரலாற்றின் நிலை என்ன? முருகனைப் பற்றி புராணக் கதைகளோ, கந்தர் சஷ்டி கவசமோ, போற்றியோ அல்லது அவரின் அருமை பெருமைகளையோ தமிழ் அல்லாது வேற்று மொழிகளில் உருவாகவில்லை. சமஸ்கிருதத்தை தவிர்த்து. அவ்வராகையில், முருகன் தமிழர் தெய்வம் என்பதில் எவ்வொரு தப்பும் இல்லை. ஆனால், முருகனை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கி முருகன் தமிழரின் தெய்வம் என்பது நமக்கு பெருமையாகுமோ? உலகமே முருகன் எமது தெய்வம் என்று போற்றுவதில் நம்மை அற்று வேறு யார் பெரு மகிழ்ச்சி அடைய முடியும். வரலாற்று அடிப்படையை வைத்து நாம் முருகனை என்னவர் என்று கொண்டாடலாம். ஆனால் அதற்காக தெய்வத்துக்கே நாம் “Copyright” அடிப்பது என்பதெல்லாம் உதவாத காரியம். இந்நாட்டில், முருகனை தமிழர் தெய்வம் என்று கூறுவதை எதிர்த்து போர் கொடி தூக்க வரும் தெலுங்கு மற்றும் மலையாளி நண்பர்களுக்கு, நீங்களும் கொஞ்சம் தத்தம் இன வேற்றுமை விட்டு நாம் எல்லோரும் இந்தியர்களே என்று சொல்ல முன்வருவது மட்டும் அல்லாமல் அதை செயலிலும் காட்டுங்கள் எல்லாம் நல்வழிக்கே என்று நம்புவோமாக.
உழவன் அருமையான பதிவு…
உழவன் அவர்களின் கடைசி வரிகள் மனம் ஒப்பா வரிகள், ஈழம் இழந்த மண்ணல்ல , சுதந்திர மண்ணாக மாற விடுதலை போராடகளத்தினில் உள்ள மண் ,உலகம் பரவிய போராட்டங்கள் நடக்கும் வேளையில் ,சூரனை வதம் செய்த முருகனின் பெருமை பேசும் நாம்,இழந்து விட்டோம் என்ற வார்த்தைகள் நமக்கெதற்கு ,விழித்தெழு தமிழா ,விழித்தெழு தமிழா ,ஈழத்தின் விடியலுக்கு நித்தம் ஒரு பணிசெய்வோம் என்று , வரும் போராட்டகளங்களில் உலகம் முழுவதும் இணைவோம், ஈழத்தின் விடுதலை போராளிகளாக ,முன்னேறுவோம் ஈழம் நோக்கி ,[ மலரட்டும் தமிழ் ஈழம் ] . முருகபெருமான் தமிழ்கடவுள், ஆம்,முருகபெருமான் தமிழர் கடவுள், ஆம் , ஆனால் தமிழர்களுக்கு மட்டும் கடவுள் அல்ல , மொழி, இனம் ,அனைத்துக்கும் அப்பாற்பட்ட,தன்னை வணங்கும் அனைவருக்கும் உரிய கடவுள் ,கடவுள் தன்னை கையெடுக்கும் அனைவருக்கும் சொந்தமே , முருககடவுளின் புகழ் திசையெங்கும் பரவட்டும் , மடமைகள் அகன்று ,ஆன்மீகம் தழைக்கட்டும் , இணைவோம் தமிழர்களாக ,இணைவோம் இந்தியர்களாக ,வென்றெடுப்போம் தமிழ் ஈழத்தை , [ இந்தியர்களே ஆதரவு கொடுங்கள் மலரட்டும் தமிழ் ஈழம் ].
“Theni , நல்ல விளக்கம்! தமிழ் மொழி எந்த வகையிலும் குறைவான மொழி இல்லை!