தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை

uday-kiran-telugu-actorதெலுங்கு நடிகர் உதய்கிரண் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவருக்கு வயது 36 இவர் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரின் தற்கொலை சம்பவம் தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.