தமிழகத்தின் மெகாஹிட் படமான “மைனா” மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய சாட்டை போன்ற படங்களை இயக்குனர் பிரபு சாலமன் உடன் இணைந்து தயாரித்தவர் ஜான்மேக்ஸ்.
பிரபு சாலமன் பிரிந்து சென்ற பிறகு தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ் தனியாக தயாரிக்கும் அடுத்த படம் “மொசக்குட்டி”. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் எம்.ஜீவன். இவர் ஏற்கெனவே மயிலு, ஞாபகங்கள் ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் கூத்து பட்டறையில் நடிப்பு பயின்றவர். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள் , யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய படத்துக்கு ரமேஷ் விநாயகம் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் எம்.ஜீவன்….
என் கதைகளில் வாழ்கையின் பதிவுகள் இருக்க வேண்டு என்று நினைக்கிறன். எனவே எங்கள் ஊரில் நான் கண்ட மனிதர்களையும் அவர்கள் மூலம் நடந்த சம்பவங்களையும்,சுக துக்கங்களையும் சுவாரஸ்யமான நகைச்சுவை உணர்வுகளையும் திரைக்கதையாக பதிவு செய்திருக்கிறேன்.
நான் பார்த்த மனிதர்களில் மொசக்குட்டி என்ற பாலா கதாபாத்திரத்தை வீர என்ற நாயகனை கொண்டும், கயல் என்ற கயல்விழி கதாபாத்திரத்தை மகிமா என்ற நாயகியைக் கொண்டும் உருவாக்கி இருக்கிறேன். உப்புத்தரை காசியாக பசுபதியும்,விருமாண்டியாக ஜோமல்லூரியும் இந்த கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். மற்றும் எங்கள் ஊரில் சினிமா வாசனை இல்லாத மனிதர்களையும் இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர்.